மோசடி – விமர்சனம்!

2017-ஆம் ஆண்டு டிமானிடேசன் என்ற ஒன்று நாட்டை அதகளப்படுத்தியது. அந்த மேட்டரை கதையோடு கோர்த்து விட்டதில் மோசடியின் இயக்குநர் ட்ராஸடி இல்லா பயணத்தைத் தொடங்கி விட்டார். படத்தின் ஆரம்பக் காட்சிகள் சதுரங்கவேட்டை படத்தை கண்முன் கொண்டு வந்து காயப்படுத்தினாலும் நாயகன் போலீஸ்டேசனில் தான் மக்களை ஏமாற்றுவதற்கான காரணத்தைச் சொல்லும் இடம் ஆறுதலைத் தருகிறது. போகிற போக்கில் இதுவும் ஒருபடம் என்ற அலுப்பைத் தரும் விசயங்கள் படத்தில் இல்லாமல் இல்லை. அதே சமயம் வொர்த்தான சில விசயங்களும் படத்தில் இருக்கவே செய்கறது. முக்கியமாய் கருப்புப் பணத்திற்கு எதிராக நாயகன் க்ளைமாக்ஸில் சொல்லும் விசயங்கள் எல்லாம் யோசிக்கக் கூடியவை. நடிகர்களின் நடிப்பு உள்பட பின்னணி இசை, டப்பிங், சவுண்ட் எஃபெக்ட் போன்ற விசயங்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். கூடுமான வரை இடைவேளைக்குப் பிறகான காட்சிகள் படத்தைக் காப்பாற்றி…

Read More

காங்கிரஸைக் கழட்டி விட்டு விட்டு தனித்து போட்டி! – திமுக வில் கோஷம்!

காங்கிரஸூக்கு இன்னும் எத்தனை காலம்தான் பல்லாக்கு தூக்குவது.. வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு  பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.. தமிழ் நாட்டில் தற்போது  நிலவும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக சார்பில் இன்று (ஜூன் 22) ஆர்பாட்டம் நடைபெற்றுவருகிறது. திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே திமுக மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நேரு, கூட்டணி குறித்தும் காரசாரமாக கருத்து தெரிவித்தார். “உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும். இது கட்சியின் கருத்தல்ல. என்னுடைய தனிப்பட்ட கருத்து. தற்போது கூட்டணி இணைந்து அனைவரும்…

Read More

தண்ணீர் தட்டுப்பாடு: ஓட்டல்களில் உணவுப் பொருட்கள் விலை ஏற்றம்?

நாடெங்கும் தண்ணீர் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்து வருவதாலும், காய்கறிகளின் விலை யேற்றத்தாலும், ஓட்டல் உரிமையாளர்கள், உணவு பண்டங்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில், பல மாவட்டங்களில், தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஓட்டல்களில் உணவு சமைக்கவும், குடிநீர் வழங்கவும், பாத்திரங்களை கழுவவும், அதிக தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் ஓட்டல்களும் பாதிக்கப்பட்டுள்ளன.தண்ணீருக்கான செலவு வழக்கத்தை விட 30 சதவீதம் மேல் அதிகரித்துள்ளது. அதனால், பல ஓட்டல்களில் தண்ணீர் அதிகம் தேவைப்படக்கூடிய சாப்பாடு வகைகள் நிறுத்தப்பட்டன. மேலும், ‘கேன் வாட்டர்’ விலையும், காய்கறிகளின் விலையும், பலமடங்கு உயர்ந்து விட்டன. இதனால், கூடுதல் செலவை சமாளிக்க முடியாததால், பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், வியாபார போட்டியால் வாடிக்கையாளர்களை இழக்க விரும்பாத, பல ஓட்டல் உரிமையாளர்கள், தண்ணீரால் ஏற்படும் கூடுதல் செலவை சமாளிக்க…

Read More

கூர்கா படம் ரிலீஸுக்கு முன்பே லாபகரமான படமாக அமைந்து விட்டது!

4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டு, வாழ்த்தி பேசினார். கூர்கா இதுவரை பார்த்த வழக்கமான நகைச்சுவை படங்கள் போல இருக்காது. வித்தியாசமான படமாக இருக்கும். யோகிபாபு மிகச்சிறந்த நகைச்சுவையை கொடுக்கும் ஆற்றலை உடைய ஒரு நடிகர், சாம் ஆண்டன் நகைச்சுவைக்கென ஒரு தனி மீட்டர் வைத்திருக்கிறார் என்றார் நடிகர் சார்லி. காமெடியை எப்படி கொடுப்பது என்பதை மிகவும் அறிந்த ஒரு இயக்குனர் சாம்…

Read More

மக்களைவையை தமிழ் மொழியால தெறிக்க விட்ட புது எம்பி-க்கள்!

மக்களவையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வின் போது தமிழகத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 38 உறுப்பினர்களும் தாய்மொழியான தமிழிலேயே பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டதால் மக்களவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.. 17-ஆவது மக்களவையின் புதிய உறுப்பினர்கள் பங்கேற்ற முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் எம்பிக்கள் உள்ளிட்டோர் ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் பதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆங்கில எழுத்துகள் வரிசைப்படி மாநிலம் வாரியாக உறுப்பினர்கள் பதவியேற்றதால், செவ்வாய்க்கிழமை புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதவியேற்றனர். அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் அதன் கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள்…

Read More

ஒரு தூய்மையான பொழுதுபோக்கு படம் – தும்பா!

ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தும்பா’. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, தும்பா என்ற பெண் புலி முக்கிய கதாப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ஹரீஷ் ராம் LH இயக்கியிருக்கிறார். அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் மிக பிரமாண்டமாக வெளியிடும், இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். நாங்கள் வசனம் எழுதும்போது, எந்த கதாபாத்திரத்தில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. நான் எழுதிய வசனங்களை தர்ஷன், கீர்த்தி, தீனா…

Read More

குட்டி ரேவதி இயக்கிய ‘சிறகு’ ஆடியோ லாஞ்ச் ஸ்பாட் ரிப்போர்ட்!

பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் எடிட்டர் அருண்குமார் பேசியதாவது, “இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. பாட்டு ட்ரைலர் ரொம்ப நல்லா வந்திருக்கு. படமும் நல்லா வந்திருக்கு. எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க” என்றார் நடிகர் நிவாஸ் ஆதித்தன் பேசியதாவது “என்னுடைய பிலிம் கரியரில் இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். இதற்கு மேல் இப்படியொரு படம் அமையுமான்னு தெரியல. இந்தப்படம் வெளிவந்த பின் எனக்கு ஒரு பெரிய வாழ்க்கை காத்திருக்கிறது. வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மாலா மணியன் அவர்களுக்கும் இயக்குநர் குட்டி ரேவதி அவர்களுக்கும் நன்றி” என்றார். நடிகை…

Read More

ஸ்டால் ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்ட பிரதமர் மனைவி குற்றவாளி: இஸ்ரேல் நீதிமன்றம் தீர்ப்பு!

இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 2009 முதல் பதவி  வகித்து வருகிறார். இவர் மீது நிதி மோசடி, ஊழல் உள்ளிட்ட பல்வேறு  குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனிடையே, பிரதமருக்கான  அதிகாரப்பூர்வ இல்லத்தில் சமையலுக்கு முழு நேர தலைமை சமையல்காரர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் வரிப் பணத்தை பயன்படுத்தி, பல்வேறு உணவு வகைகளை பிரபல சொகுசு ஓட்டல்களில் இருந்து ₹70 லட்சத்துக்கு வாங்கி சாப்பிட்டதாக அவரது மனைவி சாரா நெதன்யாகு  மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டு குறைந்தப்பட்ச தண்டனை அளிக்கும்படி சாரா  கேட்டுக்  கொண்டார். இதையடுத்து, அவரை நேற்று குற்றவாளியாக அறிவித்த ஜெருசலேம் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு ₹1.95 லட்சம் அபராதம்  விதித்தார். மேலும், முறைகேடாக செலவு செய்த மக்களின் வரிப் பணமான ₹8.80 லட்சத்தை, 9 தவணைகளாக அரசு…

Read More