சச்சின் சினிமாஸோடு இணைந்து ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக உருவாகி வரும் ‘அக்யூஸ்ட்’ படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து அவர் நடிக்கிறார். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார். ‘அக்யூஸ்ட்’ படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகவும் திரைக்கதையின் முக்கிய அங்கமாகவும் திகழக்கூடிய பரபரப்பான சண்டைக்காட்சி ஒன்று கடந்த ஒரு வாரமாக பூந்தமல்லிக்கு அருகே உள்ள குத்தம்பாக்கத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. ஆக்ஷன் டைரக்டர் ஸ்டண்ட் சில்வா அதிக பொருட்செலவில் இந்த சண்டைக்காட்சியை வடிவமைத்து இயக்கி வருகிறார். முழுக்க பேருந்தில் நடைபெறும்…
Read MoreDay: February 26, 2025
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் ‘திரௌபதி 2’!
சிவாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்கரவர்த்தி, ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும், ‘திரௌபதி’யை பெரிய திரைகளில் வரவேற்கும் நேரம் இது. இயக்குநர் மோகன் ஜி மற்றும் நடிகர் ரிச்சர்ட் ரிஷி ஆகியோர் இணைந்த ‘ருத்ர தாண்டவம்’ மற்றும் ‘திரௌபதி’ படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்றது. இப்போது இவர்கள் மீண்டும் ‘திரௌபதி 2’ படத்தில் இணைந்துள்ளனர். இம்முறை, 14 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றின் பக்கங்களில் இருந்து ஒருபோதும் மறைந்துவிடாத தீவிரமான போர்வீரர்களைச் சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து சிவாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டும் வெளியான சிறிது நேரத்திலேயே ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் கவனத்தைக் கவர்ந்தது. இதுபற்றி இயக்குநர் மோகன்…
Read More