சில கனவுகள் எளிமையானது. ஆனால், அந்த எளிய கனவுகள் மிகப்பெரும் அர்த்தம் கொண்டது. YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குமுதா ஏங்குவது எல்லாம் அன்பு, அமைதியான வீடு, அன்பான கணவர், அம்மா என்றழைக்க ஒரு குழந்தை இதெல்லாம்தான். ஆனால், இந்த கனவுகளுக்கும் சோதனை வருகிறது. இதனை அன்பு மற்றும் வலிமை மூலம் குமுதா எதிர்கொள்கிறாள். நம்பிக்கைக்கும் மனவேதனைக்கும் இடையில் சிக்கி தான் விரும்பிய வாழ்க்கைக்காக போராடுகிறாள். கனவு காணத் துணிந்து அதை விட்டுக்கொடுக்க மறுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுடைய கதை ஒரு சான்றாகும். தனது கதாபாத்திரம் பற்றி நயன்தாரா பகிர்ந்து கொண்டதாவது, “குமுதாவின் கனவு ஒரு வீடு, ஒரு குடும்பம் மற்றும் நீடித்த காதல் என்ற எளியதுதான். ஆனால், வாழ்க்கை அவள் எதிர்பார்க்காத விதத்தில் அவளை சோதிக்கிறது.…
Read MoreDay: March 14, 2025
“எனை சுடும் பனி” படத்தின் “தீராத ஆசையே…” பாடல் வெளியீடு
21ம் தேதி வெளியாகும் உண்மை சம்பவம்! https://youtube.com/watch?v=WHwD0EUAmCs%3Fsi%3D6SApsSNZNbt1Yy1a “எனை சுடும் பனி” திரைப்படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் நட்ராஜ் சுந்தர்ராஜ் கதாநாயகனாகவும், உபாசனா ஆர்.சி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். மற்றும் கே.பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா, தலைவாசல் விஜய், முத்துக்காளை, சிங்கம்புலி, கூல் சுரேஷ், தானீஷ், சுந்தர்ராஜ் , பில்லி முரளி, பழனி சிவபெருமாள் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது. எஸ்.என்.எஸ். பிக்சர்ஸ் சார்பில் ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரித்துள்ளார். சாண்டி மாஸ்டர் ஒரு பாடலுக்கு நடனமாடியதோடு, நடன இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். கதை திரைக்கதை வசனம் எழுதி, ராம் சேவா இயக்கியுள்ளார். அருள் தேவ் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு வெங்கடேஷ், சண்டைப் பயிற்சி டேஞ்சர் மணி, எடிட்டிங் சி.எம்.இளங்கோவன், கலை சோலை அன்பு, நடனம் சாண்டி மாஸ்டர், ராதிகா, பாடல்கள் ராம் சேவா, சரவெடி சரண், வசந்த்.…
Read More