“எனை சுடும் பனி” படத்தின் “தீராத ஆசையே…” பாடல் வெளியீடு

21ம் தேதி வெளியாகும் உண்மை சம்பவம்!

https://youtube.com/watch?v=WHwD0EUAmCs%3Fsi%3D6SApsSNZNbt1Yy1a

“எனை சுடும் பனி” திரைப்படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் நட்ராஜ் சுந்தர்ராஜ் கதாநாயகனாகவும், உபாசனா ஆர்.சி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். மற்றும் கே.பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா, தலைவாசல் விஜய், முத்துக்காளை, சிங்கம்புலி, கூல் சுரேஷ், தானீஷ், சுந்தர்ராஜ் , பில்லி முரளி, பழனி சிவபெருமாள் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது.

எஸ்.என்.எஸ். பிக்சர்ஸ் சார்பில் ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரித்துள்ளார்.

சாண்டி மாஸ்டர் ஒரு பாடலுக்கு நடனமாடியதோடு, நடன இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

கதை திரைக்கதை வசனம் எழுதி, ராம் சேவா இயக்கியுள்ளார். அருள் தேவ் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு வெங்கடேஷ், சண்டைப் பயிற்சி டேஞ்சர் மணி, எடிட்டிங் சி.எம்.இளங்கோவன், கலை சோலை அன்பு, நடனம் சாண்டி மாஸ்டர், ராதிகா, பாடல்கள் ராம் சேவா, சரவெடி சரண், வசந்த். தயாரிப்பு நிர்வாகம் ஜீவா, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரித்துள்ளார்!

சென்னை, பொன்னேரி, மறையூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதிக பொருள் செலவில் உருவாக்கப்பட்ட “எனை சுடும் பனி” இம்மாதம் 21ஆம் தேதி திரைக்கு வருகிறது!

@GovindarajPro       

Related posts

Leave a Comment