மேலோட்டமாக படத்தின் ட்ரைலரை மட்டும் வைத்துப் பார்த்தால் குறட்டை தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்வதில் இருக்கும் சிக்கல் தான் இத்திரைப்படம் என்று தோன்றும். ஆனால் திரைப்படம் அதையும் தாண்டி குடும்பம் என்னும் அமைப்புக்குள் இருக்கும் ஆண்களின் பல்வேறுபட்ட குறைபாடுகளையும் ஓரளவிற்குப் பேசி இருக்கிறது. தீபீகாவான ஐஸ்வர்யா ராஜேஸுக்கு சிறுவயதில் இருந்தே குறட்டை விடும் பிரச்சனை இருந்து வருகிறது. இதை வெளிப்படையாக அவர் தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளிடம் தெரிவிக்க, அவரின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதனால் ஒருகட்டத்தில் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி, தன் குறையை மறைத்து, பெண் பார்க்க வந்த அர்ஜூனாகிய ஜி.வியை மணமுடிக்கிறார். முதலிரவன்றே ஐஸ்வர்யாவின் குறட்டைப் பிரச்சனை வெளியே தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளுமே DeAr திரைப்படம். படத்திற்கு மிகப்பெரிய பலமே நடிகர் நடிகைகள் தேர்வு…
Read MoreTag: இளவரசு
சமுத்திரக்கனி, யோகி பாபு நடிப்பில் ’யாவரும் வல்லவரே’ படம் டிசம்பர் 29, 2023 அன்று வெளியாகிறது
11:11 புரொடக்ஷன் டாக்டர். பிரபு திலக் வழங்கும், தீ கமிட்டி பிக்சர் சார்பில் கி. ஆனந் ஜோசப் ராஜ் தயாரிப்பில், சமுத்திரகனி மற்றும் யோகி பாபு இணைந்து நடித்திருக்கும் ‘யாவரும் வல்லவரே’ திரைப்படம் டிசம்பர் 29,2023 அன்று வெளியாகிறது! ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ‘வால்டர்’, ’பாரிஸ் ஜெயராஜ்’ போன்ற வெற்றிப்படங்களை தந்தவர் 11:11 புரொடக்ஷன் டாக்டர். பிரபு திலக் அவர்கள். தற்போது N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ எனும் புதிய படத்தை வழங்கவுள்ளார். இப்படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்க, அவர்களுடன் தமிழின் பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 11:11 புரொடக்ஷன் சார்பில் டாக்டர். பிரபு திலக் படம் குறித்து பகிர்ந்து கொண்டதாவது, “’வால்டர்’, ’பாரிஸ் ஜெயராஜ்’ படங்களின் பிரமாண்டமான வெற்றியை அடுத்து எங்களின் ’யாவரும் வல்லவரே’…
Read Moreதென்னிந்திய திரைப்படம், டி.வி. மற்றும் டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம். 50வது ஆண்டு பொன்விழா |
தென்னிந்திய திரைப்படம் , டி.வி. மற்றும் டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் 50வது ஆண்டு பொன்விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடை பெற்றது. விழாவினை குஷ்பு சுந்தர் மற்றும் தேவயாணி இருவரும் குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தனர். விழாவில் ராமதுரை, ஜே.துரை, தேனப்பன், எம். கபார், நாச்சியப்பன், உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுக்கு நினைவுக்கேடயங்கள் வழங்கப்பட்டது. சங்கத்தை பற்றிய 50 வருட நிகழ்வுகள் ஆவணப்படமாக காட்டப்பட்டது. முல்லை – கோதண்டம் இருவரின் ஓரங்க நாடகம் மூலம் தயாரிப்பு நிர்வாகிகள் பற்றிய வேலை விவரங்கள் நகைச்சுவையாக நடித்துகாட்டப்பட்டது. 50 வருட பொன்விழா நினைவை குறிக்கும் புத்தகத்தை எஸ்.ஆர்.எம். யுனிவர்சிட்டி வேந்தர் பாரிவேந்தர் வெளியிட, , வேல்ஸ் யுனிவர்சிட்டி வேந்தர் ஐசரி கணேஷ் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என். இராமசாமி, துணைத்தலைவர்…
Read More’பார்க்கிங்’ வி.ஐ.பி-க்கள் கணித்தபடியே நடந்தது
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஸ்ரீனீஸ், “நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் செலவுகளை கவனித்து வந்த என் பள்ளி நண்பர்களுக்கு நன்றி. என் ஸ்கூல்மேட் தான் இயக்குநர் நெல்சன். அவரை டார்ச்சர் செய்துதான் அவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அவருக்கு நன்றி. நான் தனியாக படம் எடுக்க வேண்டும் என நினைத்தபோது உதவிய அருண் பாலாஜி, நந்தகுமார் இரண்டு பேருக்கும் நன்றி. நான் செய்த ‘பலூன்’ திரைப்படம் எனக்கு திருப்தியாக இல்லை. அந்த சமயத்தில் விஜய்சேதுபதி, திலீப் சுப்பராயன் என்னை தயாரிப்பு நிறுவனம்…
Read Moreபார்க்கிங் சினிமா விமர்சனம் :
இரு குடித்தனங்கள் வசிக்கும் ஒற்றை மாடி அடுக்கக குடியிருப்பில் இருக்கும் சிறிய பார்க்கிங் ஏரியாவில் தங்கள் வாகனங்களை நிறுத்துவது தொடர்பான பிரச்சனையால் இரு நல்ல மனிதர்கள் எப்படி மிக மோசமான மிருகங்களைப் போல் மாறுகிறார்கள் என்பதும், அவர்கள் தங்கள் ஈகோவை விட்டுவிட்டு தவறை உணர்ந்து திருந்தினார்களா..? இல்லை அந்த ஈகோவிற்கு தங்களை பலி கொடுத்தார்களா..? என்பதை விறுவிறுப்புடனும் சுவாரஸ்யத்துடனும் பேசி இருக்கும் திரைப்படம் தான் “பார்க்கிங்”. ஒற்றை மாடி அடுக்கக குடியிருப்பின் கீழ் தளத்தில் 10 ஆண்டுகளாக குடியிருந்து வரும் அரசாங்க ஊழியர் இளம்பரிதி (எம்.எஸ்.பாஸ்கர்). நகராட்சி அலுவலகத்தில் வி.ஏ.ஓ வாக பணிபுரியும் அவர் நேர்மைக்குப் பெயர் போனவர், அதே போல் தனக்கு இருக்கும் ஒற்றை மகளை செல்வ செழிப்புடன் கட்டிக் கொடுக்க வேண்டும் என்கின்ற கனவிற்காக சிறுக சிறுக பணத்தைச் சேர்த்து, பார்த்துப் பார்த்து செலவழித்து,…
Read More”குய்கோ” சினிமா விமர்சனம்
தனது 30 வருட பத்திரிக்கைத் துறைப் பணி மற்றும் அனுபவத்தை தொடர்ந்து அருள் செழியன் முதன்முறையாக இயக்கி இருக்கும் திரைப்படம் “குய்கோ”. அருள் செழியன் 2016ம் ஆண்டு வெளியான ‘ஆண்டவன் கட்டளை” திரைப்படத்தின் கதாசிரியராக பணியாற்றியவர் என்பது நினைவு கூறத்தக்கது. ’ஆண்டவன் கட்டளை’ திரைப்படம் எப்படி அனைத்து தரப்பு மக்களையும் கவரும் திரைப்படமாக இருந்ததோ அதே போன்று “குய்கோ” திரைப்படமும் ஒரு வித்தியாசமான காண்பனுவத்தைக் கொடுக்கும் படமாக அமைந்திருந்தது என்பதிலும் கண்டிப்பாக கொண்டாட்டத்திற்கான படமாக “குய்கோ” இருக்கின்றது என்பதிலும் படம் பார்த்த யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இயக்குநருக்கு பழைய தமிழ் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் போல் தெரிகிறது. தான் கதை எழுதிய திரைப்படத்திற்கு ஆண்டவன் கட்டளை என்ற பெயரை அவர்தான் சிபாரிசி செய்தாரா..? என்பது தெரியவில்லை. அல்லது அப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன…
Read More
