தமிழ் சினிமா நடிகர்கள் நடிக்கும் படங்களின் தகவல்களை சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்கும் வெளிநாட்டு மைதானங்களில் பேனர் வைத்து கேட்டு அசரடித்தார்கள் நடிகர் சிலம்பரசன் நடித்த படங்களின்தயாரிப்பாளர்கள், நடிப்பதற்காக முன்பணம் கொடுத்த தயாரிப்பாளர்கள், படவெளியீட்டுக்காக ராஜேந்தர்கை நீட்டி வாங்கிய கடன் இவற்றின் மொத்த மதிப்பு 10 கோடி ரூபாய் சிலம்பரசன் ஒரு படத்தில் நடிப்பதற்காக தற்போது வாங்கும் சம்பளம் எட்டு கோடி ரூபாய் பாதிக்கப்பட்டவர்கள், கடனை திருப்பிக்கொடுக்க வேண்டியவர்களிடமும் தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உஷா ராஜேந்தர் அவர்களை அழைத்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் முடிவு எட்டப்படாமல் இடியாப்ப சிக்கலாக நீடிக்கிறது இந்த சூழ்நிலையில் சிலம்பரசன் நடிக்கும் படங்களுக்கு இடையூறு செய்தால் இந்திய பிரதமரிடம் முறையிடுவேன் என கூறி தமிழ் சினிமா வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார் சிலம்பரசனின் தயார் உஷா ராஜேந்தர் தொழில்சார்ந்த சிக்கல்களை சம்பந்தபட்ட சங்கங்களில் பேசி…
Read Moreமாயன் படத்தில்கதையின் நாயகனாக சிவபெருமான்
தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்குப் பிறகு சிவபெருமானை கதையின் நாயகனாக கொண்ட படமாக ‘மாயன்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்த பிரம்மாண்டமான பேன்டஸி த்ரில்லர் படத்தை ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜே.ராஜேஷ் கண்ணன் தயாரித்துள்ளார். முதல் இந்திய கமர்சியல் ஆங்கில திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஆஸ்திரேலிய ஆங்கில படத்திலும், மலேசிய தமிழ் படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ள வினோத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதையின் நாயகிகளாக பிரியங்கா மோகன், பிந்து மாதவி மற்றும் பியா பாஜ்பய் மூவரும் நடித்துள்ளனர். மேலும் ஜான் விஜய், தீனா, கஞ்சா கருப்பு, ‘ஆடுகளம்’ நரேன், கே.கே.மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆங்கில பதிப்பில் இவர்கள் அனைவருமே சொந்தக் குரலில் பேசியிருக்கிறார்கள். பின்னணி இசை – ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவு – அருண் பிரசாத், கலை இயக்கம் – வனராஜ், வி.எஃப்.எக்ஸ். – ரமேஷ்…
Read Moreதோனி பிரதமர் விஜய் முதல்வர் மதுரையில் பரபரப்பு
நடிகர் விஜய்யை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான தோனி இன்று சந்தித்துப் பேசினார். நடிகர் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ‘கோகுலம் ஸ்டூடியோ’வில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஷூட்டிங்கில் விஜய்யுடன் யோகிபாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இன்று இந்த ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்தார். அங்கே அவர் நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியிருக்கிறார். சந்திப்பு முடிந்த பிறகு தோனியை விஜய் காரவன் வரையிலும் உடன் சென்று வழியனுப்பி வைத்திருக்கிறார். இந்தச் சந்திப்பு எதற்காக என்று தெரியவில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் இப்போது எதற்கு என்ற கேள்வியும் எழுகிறது. விரைவில் இதன் காரணம் தெரிய வரலாம்..! ஆனால் இப்போது இதுவல்ல பிரச்சினை.. இந்தச் சந்திப்பு முடிந்ததும்…
Read Moreகடற்படை ஆபரேஷனை கதைகளமாக கொண்ட ஆபரேஷன் அரபைமா
முன்னாள் கடற்படை வீரர் பிராஷ் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு படத்திற்குப் பின் கடற்படை அதிகாரியாக ரகுமான் நடித்திருக்கும் படம் ஆபரேஷன் அரபைமா இந்தியநாட்டை அந்நிய ஆபத்துகள் சூழும் நேரங்களிலும், தீயவர்கள் நம் நாட்டிற்குள் கொடுஞ்செயல்கள் செய்யும் நோக்கத்துடன் நுழையும் நேரங்களிலும், நமது இராணுவ வீரர்கள் எதிரிகளிடம் இருந்து நம்மைக் காக்கின்றனர். அதற்காக பல ஆபரேஷன்களை நம்நாட்டு வீரர்கள் செய்திருக்கின்றனர். அப்படி நடுக்கடலில் நடந்த ஒரு உண்மையான இராணுவ ஆபரேஷனை தழுவி எடுக்கப்பட்ட படம் தான், “ஆபரேஷன் அரபைமா”.என்கிறார் இயக்குநர் பிராஷ் தமிழ்நாடு, கேரளா, அந்தமான், கோவா, துபாய் உள்பட பல இடங்களில், பல கடல்களில் இப்பபடத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தின் இயக்குநர் பிராஷ் முன்னாள் கடற்படை வீரர் என்பதால், கடலில் நடைபெறும் ஆபரேஷன் உண்மையான ஆபரேஷன் போல இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய உழைத்ததாககூறுகிறார்…
Read Moreசொடக்கு மேல சொடக்கு 100 மில்லியனை கடந்தது
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டில் வெளிவந்த படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. அப்படத்தில் மணியமுதவன், விக்னேஷ் சிவன் எழுதி, அந்தோணி தாசன் எழுதிய ‘சொடக்கு மேல சொடக்கு’ பாடல் அப்போதே சூப்பர் ஹிட்டானது. யு டியூபில் அந்த வீடியோ பாடல் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அப்பாடல் தற்போது 100 மில்லியனைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், யு டியூப் தளத்தில் இன்னும் சில ஆயிரங்கள் பார்வை அதற்குக் குறைவாக உள்ளது. இப்பாடல் 100 மில்லியனைக் கடந்த 26வது தமிழ் சினிமா பாடல். நேற்றுதான் ‘விஸ்வாசம்’ படத்தின் அடிச்சி தூக்கு பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 25வது பாடலாக பட்டியலில் இடம் பிடித்தது. சூர்யாவின் இரண்டாவது 100 மில்லியன் பாடல்…
Read Moreவதந்தியாகி போன வடிவேலுவின் நேசமணி
சமீபகாலமாக நடிகர் வடிவேலு புதிய படங்களில் நடிக்கவில்லை என்றபோதும் அவ்வப்போது படங்கள், வெப்சீரிஸ்களில் அவர் நடிப்பது போன்ற வதந்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களாக டிடெக்டிவ் நேசமணி என்ற படத்தில் வடிவேலு நடிக்க போவதாகவும், அந்த படத்தை சி.வி.குமார் தயாரிப்பதாகவும் சமூகவலைதளத்தில் வடிவேலு போஸ்டருடன் ஒரு செய்தி வைரலானது. இதை தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது டுவிட்டரில் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛பொய் செய்தியாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாப்பா… ஆனா தலைவர் டிசைன்ல சூப்பர்ப்பா. என்று பதிவிட்டுள்ளார். ஆக, வடிவேலுவின் புதிய படம் குறித்த இந்த செய்தியும் வதந்தியாகி விட்டது.
Read Moreதிருடர்கள் கதையை படமாக்கும் தெலுங்கு திரையுலகம்
தமிழில் மலையூர் மம்பட்டியான், கும்பக்கரை தங்கய்யா, சந்தன கடத்தல் வீரப்பன் போன்று நெகட்டிவ் ஹீரோக்களின் கதை சினிமா ஆகியிருக்கிறது. தெலுங்கில் அதுபோன்ற புதிய போக்குதற்போது உருவாகி உள்ளது. தெலுங்கு சினிமாவில் வளர்ந்து இளம் ஹீரோ பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் தற்போது நடிக்க இருக்கும் புதிய படத்தின் பெயர் ஸ்டூவர்புரம் டோங்கா. இந்த படம் 1970 களில் ஸ்டூவர்புரத்தின் பிரபல திருடனான டைகர் நாகேஸ்வர ராவின் வாழ்க்கை கதை. எத்தனை முறை, எந்த மாதிரியான சிறையில் அடைத்தாலும் அதிலிருந்து தப்பித்து விடுவது நாகேஸ்வரராவின் ஸ்டைல். ஜெயிலில் இருந்து தப்பித்த வழிமுறைகளை வைத்தே சிறையின் பாதுகாப்பை டிசைன் செய்ததாக கூறுவார்கள். அடிக்கடி சிறையில் இருந்து தப்பித்ததால் அவரது பெயருக்கு முன்னால் டைகர் என்ற பட்டமும் சேர்ந்து கொண்டது. 1987ல் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். படத்தை பெல்லம்கொண்டா, ஸ்ரீ லக்ஷ்மி…
Read Moreகங்கணா ரணாவத் வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள்
ஹிந்தித் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கங்கனா ரணவத். அடிக்கடி சர்ச்சைக் கருத்துக்களைப் பதிவிட்டு செய்திகளில் பரபரப்பாக அடிபடுபவரும் கூட. தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் கங்கனா. அடிக்கடி அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் விதவிதமான புகைப்படங்களைப் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால், இதுவரையில் இல்லாத அளவிற்கு இரண்டு கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மெல்லிய மேலாடை அணிந்து அவர் பதிவிட்டுள்ள போட்டோக்கள் எட்டு லட்சம் லைக்குகளைக் கடந்து கொண்டிருக்கின்றன. அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து, “வாழ்வதற்கும் இறப்பதற்கும் இடையில் காதலில் எந்த வித்தியாசமும் இல்லை, நம்பிக்கையில்லாமல் இறக்கும் ஒருவரை மட்டுமே பார்த்து நாம் வாழ்கிறோம் – காலிப்,” என்றும் பதிவிட்டுள்ளார்.
Read Moreதிரையரங்குகள் வரி ஏய்ப்பு தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர்சுப்பிரமணி வலைத்தள சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போதுதமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு தற்போதைய சினிமா நிலவரம்பற்றி தெரியவில்லை நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் தற்போது படங்கள் தயாரிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என கூறியிருந்தார் தேர்தல் மூலம் வெற்றிபெற்று பொறுப்புக்கு வந்தவர்கள் பற்றி தொடர்ந்து திருப்பூர் சுப்பிரமணி அவதூறாக பேசி வருவது பற்றி விவாதிக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கஉறுப்பினர்கள் கூட்டம்கடந்தவெள்ளிக்கிழமை மாலை(30.07.2021)சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் சம்பந்தமாக அதிகாரபூர்வமாக செய்திகுறிப்பை சங்கத்தின் சார்பில் இன்றுவரை வெளியிடப்படவில்லை இதுசம்பந்தமாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் இராதாகிருஷ்ணனிடம் பேசியபோது திரையரங்குகள் சம்பந்தமாக ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் தற்போதைய நிலைமை…… சினிமா தயாரிப்பு தொழில் கடந்த பத்தாண்டுகளாகவே கடுமையான…
Read Moreபெப்சி தொழிலாளர் அமைப்புக்கு முடிவுகட்டிய தயாரிப்பாளர்கள் சங்கம்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று 40 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்திருப்பவர் நடிகர் சிலம்பரசன் இவர் நாயகனாக நடித்து வெளியான திரைப்படங்களின் படப்பிடிப்பு, படம் வெளியீடு, சம்பள பஞ்சாயத்து என ஏதாவது ஒன்று இல்லாமல் இருந்தது இல்லை படப்பிடிப்புக்கு நேரம் தவறி வருவது அல்லது வராமல் இருந்து கொள்வது போன்ற காரணங்களால் தமிழ்சினிமா தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது இவற்றை எல்லாம் தெரிந்துகொண்டபின்னரும் சிலம்பரசன் நடிக்கும் படங்களை தயாரிப்பது ஏன் என்கிற கேள்விகளை எழுப்புகிறபோது கதாநாயகன் பஞ்சம்தான் காரணம் என்கின்றனர் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் இவரை வைத்து படம் தயாரித்த பல தயாரிப்பாளர்கள் இப்போது சினிமாவிலேயே இல்லை என்கின்றனர் நீண்ட நாட்களாக படங்கள் எதுவும் இன்றி வீட்டில் முடங்கிகிடந்த சிலம்பரசன் மாநாடு படம் மூலம் தமிழ் சினிமாவில் மறுபிரவேஷத்திற்கு தயாரானார் அதனைத் தொடர்ந்து பல்வேறு…
Read Moreராகவா லாரன்சின் புதிய பட அறிவிப்பு ஏன்?
நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது, சந்திரமுகி 2, ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன் ” படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன் இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் “அதிகாரம்” ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவருடைய தயாரிப்பில் ஒரு படம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது சம்பந்தமாக ராகவேந்திராலாரன்ஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் காஞ்சனா பெயரில் வெளிவந்த அனைத்துப் படங்களுமே வெற்றிவாகை சூடி சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. அந்தப் படங்களின் மூலம் குழந்தைகளாக இருப்பவர்கள் முதல்கொண்டு பெரியவர்களையும் குழந்தைகள் மனநிலைக்குக் கொண்டு சென்று ரசிக்கச் செய்த பெருமை ராகவா லாரன்ஸுக்கு உண்டு. பேய்ப் படங்களின் வித்தியாச முயற்சிகளுக்கு அடித்தளமிட்டவர் ராகவா லாரன்ஸ்.அவர் அடுத்ததாக தனது…
Read Moreஎன்திரை வாழ்க்கையில்ரங்கன் முக்கியமானவன்-பசுபதி நெகிழ்ச்சி
என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன், நெருக்கமானவன் என்று பசுபதி தெரிவித்துள்ளார். பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் சார்பட்டா பரம்பரை அமேசான் வலைதளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதுஇதில் ரங்கன் வாத்தியாராக படத்தின் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பசுபதி. அவருடைய நடிப்பைப் பலரும் பாராட்டினர். மேலும், சமூக வலைதளத்தில் தன்னைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி என்று பசுபதி பெயரில் போலியாகதொடங்கப்பட்ட ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டு இருந்தார்கள். தற்போது சார்பட்டா பரம்பரை படத்துக்கு நன்றி தெரிவித்தும், தான் சமூக வலைதளத்தில் இல்லை என்பதையும் பசுபதி அறிக்கை மூலமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பாக பசுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக…
Read Moreவெப்சீரிஸ் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் நபா நடேஷ்
தென்னிந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகைகளான பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, ராகுல் பிரீத் சிங் , ஆகியோர் ஏற்கனவே இந்தி திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளனர் தற்போது தெலுங்கில் இளம் நடிகையாக வலம்வரும் நபா நடேஷ் அவர்களைப் போன்று இந்தி வலைதள தொடர் ஒன்றில் ஹிருத்திக் ரோசன் ஜோடியாக நடிக்க உள்ளார் கன்னடத்தில் கடந்த 2015ல் வஜ்ரகயா என்கிற படம் மூலம் அறிமுகமான நபா நடேஷ். அதை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக தெலுங்கில் முக்கிய படங்களில் நடித்து வருகிறார். புகழ்பெற்றநடிகர் பிரகாஷ் பெலவாடியின் தியேட்டர் குரூப் வழியாக முறைப்படி நடிப்பு கற்றுக்கொண்டு நடிக்க வந்ததால் தெலுங்கு படவுலகில் சிறந்த பெர்பார்மர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். . கடந்த இரண்டரை வருடங்களில் தெலுங்கில் அவர் நடித்த படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் மட்டும்275 கோடி ரூபாய்…
Read Moreநம்பிக்கைக்கு நயன்தாரா தந்த கௌரவம்
தமிழ் சினிமா நடிகைகளில் நடிகர்களை நம்பி மனதையும், பணத்தையும் அதிகமாக இழந்த நடிகை நயன்தாரா என்பார்கள் அதனால் ஏற்பட்ட ஏமாற்றம், வலிகளை கடந்து தன்னை தேடி வரும் நாயகியாக தன்னைமறுசீரமைப்புசெய்துகொண்டவர் நடிகை நயன்தாரா ஐயா படத்தில் நாயகியாக அறிமுகமான நயன்தாராவின் மேக்கப்மேன் மட்டுமே இன்றுவரை அவருடன் பயணிக்க முடிந்திருக்கிறது காதலர்களாக அவர் நேசித்த சிலம்பரசன், பிரபுதேவா ஆகிய இருவரையும் தூக்கி எறிந்திருக்கிறார் அதன் பின் இயக்குநர்விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு இன்றுவரை தொடர்கிறது இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருமே அவ்வப்போது வெளியிட்டு விவாதங்களை ஏற்படுத்துவது உண்டு வழக்கம்போல சிலம்பரசன், பிரபுதேவா போன்று விக்னேஷ் சிவன் கழட்டிவிடப்படுவார் என்று ஆருடங்கள் கூறப்பட்டு வந்தன ஆனால் தன்னை ஏமாற்றாமல், தன்னை நேசிக்ககூடியவர்களை எந்த நிலையிலும் நயன்தாரா விலகி போகமாட்டார் என்பார்கள்…
Read Moreமத்திய அரசை விமர்ச்சித்த 2000ம் படத்துக்கு தணிக்கையில்165 இடங்களில் வெட்டு
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று 1000ம், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீர் என்று இரவில் மத்திய அரசு அறிவித்தது. இதனால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகளை கருவாக வைத்து, ‘2000’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி இருக்கிறது. தயாரிப்பாளர் கோ.பச்சியப்பன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் ருத்ரன் பராசு நாயகனாகவும் சர்னிகா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் ‘கராத்தே’ வெங்கடேசன், மூர்த்தி, பிர்லா போஸ், ரஞ்சன், தர்சன், கற்பகவல்லி, பிரியதர்சினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படம் இந்திய ஒன்றிய அரசை நேரடியாக விமர்சிப்பதாக கூறி, சான்றிதழ் வழங்க மறுத்து விட்டனர். இதனால்இத்திரைப்படம் மறுபரிசீலனை குழுவினருக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. நடிகை கவுதமி தலைமையிலான மறுபரிசீலனை குழுவினர் இப்படத்தை பார்த்துவிட்டு, 105 இடங்களில் காட்சிகளை நீக்கும்படி தெரிவித்தனர்.…
Read Moreதிரையரங்குகள் 1000 ம் கோடி ரூபாய்வரிஏய்ப்பு செய்கின்றன கௌரவசெயலாளர் ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர்சுப்பிரமணி வலைத்தள சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போதுதமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு தற்போதைய சினிமா நிலவரம்பற்றி தெரியவில்லை நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் தற்போது படங்கள் தயாரிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என கூறியிருந்தார் தேர்தல் மூலம் வெற்றிபெற்று பொறுப்புக்கு வந்தவர்கள் பற்றி தொடர்ந்து திருப்பூர் சுப்பிரமணி அவதூறாக பேசி வருவது பற்றி விவாதிக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கஉறுப்பினர்கள் கூட்டம்கடந்தவெள்ளிக்கிழமை மாலை(30.07.2021)சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் சம்பந்தமாக அதிகாரபூர்வமாக செய்திகுறிப்பை சங்கத்தின் சார்பில் இன்றுவரை வெளியிடப்படவில்லை இதுசம்பந்தமாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் இராதாகிருஷ்ணனிடம் பேசியபோது திரையரங்குகள் சம்பந்தமாக ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் தற்போதைய நிலைமை…… சினிமா தயாரிப்பு தொழில் கடந்த பத்தாண்டுகளாகவே கடுமையான…
Read Moreவிஜய்சேதுபதி முடிவால்தமிழ் படங்கள் வெளிநாட்டு வியாபாரம் பாதிக்குமா?
அமேசான் வலைதளத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த வெப் தொடர் ‘த பேமிலி மேன்- 2 அத்தொடரில் இலங்கை இனப் போராட்டத்தையும், இலங்கைத் தமிழர்களைப் பற்றியும் பல தவறான, அவதூறான விஷயங்களை வைத்திருக்கிறார்கள் என தமிழர்களிடம் பெரும் சர்ச்சையும், கோபமும் எழுந்தது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக, நாம் தமிழர் கட்சி, மற்றும் பல தமிழர் அமைப்புகள், தமிழார்வலர்கள், இயக்குனர்கள் பாரதிராஜா, சேரன் உள்ளிட்டோர் அத்தொடருக்கு எதிராக குரல் எழுப்பினர். அத்தொடரைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசுக்கும் வைத்தனர். அமேசான் வலைதளத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். இலங்கைத் தமிழர்கள், இலங்கைத் தமிழர் கட்சிகள், அமைப்புகள் ஆகியவையும் அத்தொடருக்கு எதிராகவும், இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகேவுக்கு எதிராகவும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டனர். அப்படி தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதித்து வைத்துள்ள இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே…
Read Moreநடிகைக்கு எதிராக தேச துரோக வழக்கு ரத்து செய்ய மறுப்பு
கேரளா மாநிலம் அருகே அரபிக்கடலில் உள்ளது லட்சத் தீவுகள். இதன் தற்காலிக நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பாஜகவை சேர்ந்தபிரபுல் கோடா பட்டேல் கொண்டு வரும் சில நிர்வாக மாற்றங்களுக்கு அத்தீவு மக்களும், அரசியல் கட்சிகளும்எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் லட்சத்தீவை சேர்ந்த நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா தனியார்தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கொரோனாவை உயிரி ஆயுதமாக அரசும், லட்சத்தீவு நிர்வாக அதிகாரியும் பயன்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டினார். இதற்காக, அவர் மீது லட்சத்தீவு போலீசார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்தனர். இதை ரத்து செய்யும்படி கேரள உயர் நீதிமன்றத்தில் சுல்தானா தாக்கல் செய்த மனு (02.07.2021)விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே வழக்கை ரத்து செய்யக்…
Read Moreகைதி படத்தை ரீமேக் செய்ய தடைவிதித்தது நீதிமன்றம்
தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு தயாரிப்பில்2019ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று வெளியான படம் கைதி இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்திருந்தார் 20 19 தீபாவளி அன்று விஜய் நடித்து வெளியான பிகில் படத்துடன் திரையரங்குகளில் வெளியான இப்படம் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் வெற்றிபெற்றது அதன் காரணமாக வேறு மொழிகளில் கைதி படத்தை ரீமேக் செய்யும் உரிமையை வாங்குவதற்கு போட்டி ஏற்பட்டது இந்திமொழியில் கைதி படத்தை ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது கைதி படத்தை ரீமேக் செய்வதற்கும், அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கும் கேரளநீதிமன்றம் தடை விதித்துள்ளது. காரணம், கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ்…
Read Moreடாப்ஸியுடன் மோதும் கங்கணா ரணாவத்
இன்றைக்கு இந்தியாவிலேயே மிகவும் பரபரப்பான நடிகையென்றால் அது கங்கனா ரணாவத்துதான். சாதாரணமானகருத்துவேறுபாட்டைக்கூடகலவரமானசண்டையாக மாற்றிவிடுவார். அவரும், அவரது சகோதரியும்தான் இன்றைக்கு இந்திதிரையுலக நடிகர் நடிகைகளுக்கு பயத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக மாறி இருக்கிறார்கள் அக்கா ஒன்று சொல்வதும், தங்கை அதற்கு ஒத்து ஊதுவதும், தங்கை குற்றம்சாட்டினால் அக்கா அதை எடு்த்துக் கொடுப்பதுமாக சில வருடங்களாக இந்த சகோதரிகளால் இந்தி திரையுலகம் பரபரப்பாகவே இருந்து வருகிறது இப்போது இவர்களின் தாக்குதல்நடிகை டாப்ஸி மீது. டாப்ஸிக்கும் இந்த சகோதரிகளுக்கும் இடையில் நல்லுறவே கிடையாது. கங்கனாவின் நடிப்பு ஸ்டைல், டிரெஸ்ஸிங் சென்ஸ், பேச்சு.. இதையெல்லாம் அப்படியே அச்சு பிசகாமல் காப்பியடித்து செய்கிறார் டாப்ஸிஎன்று கங்கனாவின் சகோதரி ஒரு முறை குற்றம்சாட்டி எழுதியிருந்தார். அப்போது டாப்ஸிக்கு இந்த இரண்டு சகோதரிகளும் சேர்ந்து ‘சீப்பான காப்பி’ என்று பட்டப் பெயர் சூட்டி அழைக்க ஆரம்பித்தார்கள். அன்றில் இருந்து…
Read Moreஅமீர்கான் இரண்டாவது முறையாக விவாகரத்து பெற்றார்.
பிரபல இந்தி நடிகர் அமீர்கான் முதலில் ரீனா தத்தாவை திருமணம் செய்து இருந்தார். 16 வருட திருமண பந்தத்திற்குப் பிறகு 2002 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றார். லகான் இந்திப்படம் படம் தொடங்கிய போது அதில் உதவி இயக்குநராகப் பணி புரிந்த கிரண்ராவைக் காதலித்து டிசம்பர் 28, 2005 அன்று திருமணம் செய்து கொண்டார். மகன் ஆசாத் ராவ் கானை டிசம்பர் 5, 2011 அன்று வாடகை தாய்மூலம் பெற்றுக் கொண்டனர். நடிகர் அமீர்கான் மற்றும் கிரண் ராவ் ஆகியோர் இன்று ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். அதில் கூறி இருப்பதாவது இந்த அழகான 15 ஆண்டுகளில் நாங்கள் வாழ்க்கை அனுபவங்களையும், மகிழ்ச்சியையும், சிரிப்பையும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுடைய உறவு நம்பிக்கையாலும், மதிப்பினாலும், காதலினாலும் வளர்ந்திருக்கிறது. இப்போது நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க…
Read Moreஒளிப்பதிவு மசோதாவை கண்டிக்கும் கலைஞர்களுக்கு எதிராக பாஜக கலைஞர்கள்
2019 ஆம் ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்தமசோதாஅறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் 2021-இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். இதனையடுத்து ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐ பொதுமக்கள் கருத்திற்காக மத்திய அரசு கடந்த சூன் 18 அன்று வெளியிட்டு அது சம்பந்தமாக ஜூலை 2 வரை பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது வழக்கம்போலவே தமிழ்சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் இதை பற்றிய புரிதல் இல்லாமை, இதனால் நமக்கு என்ன நஷ்டம் என்கிற மனநிலையில் இருந்ததாகவே தெரிகிறது பொதுவாக தமிழ் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இது போன்ற அறிவுசார்ந்த விஷயங்களில் செயல்பட யாராவது ஒருவர் தூண்டும் சக்தியாக இருக்க…
Read Moreகமல்ஹாசனுடன் திரிஷ்யம் – 2 ல் நதியா இணைந்து நடிப்பாரா?
கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமா செய்திகளை மட்டுமே வெளியிட்டு வரும் ஊடகங்களுக்கு செய்தி பஞ்சம் அப்போது திரிஷ்யம்-2 படம் சம்பந்தமான யூகங்கள் அதிக நாட்கள் செய்திகளாக வெளியிடப்பட்டன கௌதமிக்கும் – கமல்ஹாசனுக்கும் பிரிவு ஏற்பட்டதால் இணைந்து நடிக்க வாய்ப்பு இல்லை அந்தப்படம் தமிழில் ரீமேக் செய்யும் முடிவு கைவிடப்பட்டது என்றெல்லாம் செய்திகள் வெளியானது இப்போது இரண்டாவது சீசன் தொடங்கியிருக்கிறது திரிஷியம் – 2படம் தமிழில் ரீமேக் செய்யப்படுமா…? அதில் கமல்ஹாசன் நடிப்பாரா..? எப்போது படம் துவங்கும்..? என்பதெல்லாம் பின்னுக்குப் போய் தற்போது “நடிகை நதியா கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கப் போகிறாரா..?” என்கிற கேள்விதான் தமிழ் சினிமாவில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. நடிகை நதியா 1985-ம் ஆண்டு பூவே பூச்சூட வாபடத்தின் மூலமாக தமிழ்சினிமாவில்கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்பு ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டார். சிவாஜி கணேசன், …
Read Moreகலைஞரின் கடின உழைப்பை நினைவுபடுத்தும் மு.க.ஸ்டாலின்
கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக திரையுலகினர் பலரும் முதல்வரின் பொது நிவாரணத்திற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன், இவரது மகனும், நடிகருமான பிரசாந்த் ஆகிய இருவரும் சென்னையில் இன்றுமுதல்வர் ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தியாகராஜன் முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் கொரோனா தொற்றை தடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு கடுமையாக போராடி வருகிறது முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளோம் முதல்வரின் வேகம் சிறப்பாக உள்ளதுடன் செயல்பாடுகள் பெருமைக்குரியதாக, சிறப்பாக இருக்கிறது கலைஞர் அவர்களுடன் படத்தில் பணியாற்றியிருக்கிறேன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிகள் கலைஞர் கருணாநிதியை எனக்கு நினைவூட்டுகிறது என்றார்
Read Moreஇயக்குநர்ஷங்கருக்கு கால அவகாசம் வழங்கிய நடிகர் ராம்சரண்
தமிழ்த்திரையுலகில்தயாரிப்பாளர், நடிகர் என இரு தரப்படையும்தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துபடங்களை இயக்கியவர் இயக்குநர் ஷங்கர் படத்தின் கதை, பட்ஜெட், என்று எந்த கேள்வியும் தயாரிப்பாளர்கள் இவரிடம் கேட்க முடியாது தமிழ்சினிமாவின் பாரம்பர்யமான தயாரிப்பு நிறுவனம், தமிழ் திரையுலகின் அடையாளமான ஏவிஎம் நிறுவனம் இவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தை தயாரித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் இனிமேல் படங்கள் தயாரிப்பது இல்லை என்கிற முடிவுக்கு வந்தது ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தை ஷங்கர் இயக்கிய போது அவரது கட்டுப்பாடு அற்ற சுதந்திரத்திற்கு கடிவாளம் போட்டது படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் என்னவேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிவிக்கவேண்டும் அது தேவையா இல்லையா என்பதை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும் என்று ஷங்கருக்கு கூறப்பட்டது அதன் பின் அவரால் தன் இஷ்டப்படி படங்களை இயக்க முடியாமல் போனது லைகா நிறுவனம் தயாரித்த 2.0…
Read Moreவலிமை இந்திய அளவில் இரண்டாம் இடத்துக்கு முன்னேற்றம்
தமிழ் சினிமாவில் வசூல் வியாபாரம் இந்த இரண்டிலும் முதல் இடத்தில் நடிகர் விஜய் உள்ளார் நடிகர் அஜீத்குமார் ரசிகர்மன்றத்தை அமைப்புரீதியாக கலைத்துவிட்டார் இருந்தபோதிலும் அவருக்கான ரசிகர் கூட்டம், ஆதரவு நிலைகுலையாமல் தொடர்கிறது அஜீத்குமார் புதிய படங்களில் நடிக்கும்போது அதனை சமூக வலைதளங்களில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விளம்பரம் செய்யும் பணிகளை இன்றுவரை தொடர்கின்றனர் அஜித் குமார்தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத், அஜித்குமார் கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்துள்ளனர். அஜித்குமார் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மே 1-ம் தேதியே வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இருந்ததால் மக்கள் அல்லல்படும்…
Read Moreசாணிக் காயிதம் படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்பு
நடிகை கீர்த்தி சுரேஷ், மூத்த நடிகை மேனகாவின் மகள். தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து தொடரி, பைரவா, ரெமோ, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘நடிகையர் திலகம்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருதை பெற்றார். இதையடுத்து ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துவிட்டார். தொடர்ந்து அருண் மாதேஷ் இயக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்து சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார் கொரோனா ஊரடங்குகாரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.தற்போது படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் தான் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான கதாபாத்திரத்தில்…
Read Moreகமல்ஹாசன் – வெற்றிமாறன் சந்திப்பு எதற்காக நடைபெற்றது
வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கப்போவதாக யூகத்தில் வெளியிடப்பட்ட செய்தி உலகம் சுற்றும் வாலிபனாக அனைத்து ஊடகங்களிலும் அவரவர் வசதிக்கு ஏற்ப மிகைப்படுத்தப்பட்டு செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது ஆனால் வெற்றிமாறன் தரப்பு அப்படியெல்லாம் இல்லை என்று கூறுகிறது அண்மையில் இயக்குநர் வெற்றிமாறன் கமல்ஹாசனை சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்புக்குக் காரணம், மத்திய அரசாங்கத்தால் திரைப்படத்துறைக்கு வரவிருக்கும் ஆபத்து ஒன்றைத் தடுத்து நிறுத்த அனைவரும் இணைந்து போராடவேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகவே கமலஹாசனை வெற்றிமாறன் சந்தித்திருக்கிறார் கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமா துறை சம்பந்தபட்ட தீர்ப்பாயத்தை திரைத்துறையினரின் கருத்துக்கூட கேட்காமல் ஒரு அவசர சட்டத்தின் மூலம் கலைத்துவிட்டது சினிமா என்கிற காட்சி ஊடகம் வலிமையானது சர்வாதிகார, மக்கள் நலனுக்கு எதிரான ஆட்சிகளுக்கு எதிராக சினிமா என்கிற காட்சி ஊடகம் இந்தியாவில் வலிமையாக பயன்படுத்தப்பட்டு வெற்றி கிடைத்திருக்கிறது அதனால் தணிக்கை முடிந்து தியேட்டர்கள்,OTT…
Read Moreநடிகர் R.K.சுரேஷ் மீது ஒரு கோடி ரூபாய் மோசடிக்குற்றசாட்டு
சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவி வீணா(45) என்பவர் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர், பாஜக நிர்வாகி என பன்முக தன்மை கொண்ட ஆர்.கே.சுரேஷ் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது…. என் கணவர் ராமமூர்த்தி எஸ்பிடி என்ற பெயரில் எர்த்மூவர்ஸ் நடத்தி வந்தார். தொழிலில் எற்பட்ட இழப்பைச் சரி செய்ய 2018 ஆம் ஆண்டு 10 கோடி கடன் வாங்கித் தருவதாக சென்னையில் உள்ள கமலகண்ணன் கூறினார். அதன் பேரில் திரைப்பட நடிகரான ஆர்.கே. சுரேஷை, கமலகண்ணன் எனக்கும் என் கணவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஆர்.கே.சுரேஷ் தனக்குத் தெரிந்த வங்கி மேலாளர் மூலமாக கடன் எற்பாடு செய்து தருவதாகவும் அதற்கு கமிஷனாக 1 கோடி கொடுக்கும்படியும் கூறினர். அவரை நம்பி…
Read Moreதனுஷ்ன் அடுத்த நகர்வு என்ன?
அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதியை தனுஷ் முந்திவிடுவார் போல தெரிகிறது. அந்த அளவுக்கு மாதத்துக்கு ஒரு பட அறிவிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தனுஷின் ஒவ்வொரு புது அறிவிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. சமீபத்தில், தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தனுஷுக்கு நீண்ட நாளாக தெலுங்கில் நடிக்க வேண்டுமென்பது ஆசை. இவரின் தாய்மொழி தெலுங்கு. ஆனால், தனுஷ் படங்கள் தெலுங்கில் பொதுவாக டப்பாகி வெளியாகும். இது, முதல் நேரடித் தெலுங்குப் படமாக உருவாகிறது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ் மற்றும் இந்தியிலும் என PAN இந்தியா ரிலீஸாகப் பெரும் பொருட்செலவில் உருவாக இருக்கிறது. நூறு கோடி பட்ஜெட்டில் படம் உருவாவதாகவும் தகவல். மேலும், தனுஷுக்கு அதிக சம்பளம் பெரும் படமாகவும் இது இருக்கும்…
Read Moreகுடும்பத்தலைவிகளுக்கு 1000ம் ரூபாய் எப்போது?
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். திமுக தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அதிமுக குடும்பத் தலைவிகளுக்கு 1,500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்தச் சூழலில் திமுக ஆட்சி பொறுப்பேற்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது. ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று அறிவிக்கப்படவில்லை. ஆளுநர் உரையில்கூட இத்திட்டம் குறித்த அறிவிப்பு இடம் பெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், நேற்று (ஜூன் 28) திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, “தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக…
Read Moreதிமுகவின் பிடீம் காங்கிரஸ்-அண்ணாமலை
தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ், பிராந்திய கட்சியாக மாறிவிட்டதாகவும், திமுகவின் பி-டீம் ஆகவும் செயல்படுகிறது எனவும் பாஜக மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட பாஜக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வி.வி.செந்தில்நாதன் தலைமையில் கரூர் வெங்கமேடு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஜூன் 28) நடைபெற்றது. இதில் பாஜக தமிழக மாநிலத் துணைத்தலைவர் கே.அண்ணாமலை பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை, “புதுச்சேரியில் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ஆர்டிகிள் ஒன்றில் இடம்பெற்றுள்ள ’யூனியன் ஆஃப் இந்தியா’ என்ற வார்த்தைகளையே அம்மாநில ஆளுநர் தமிழிசை பயன்படுத்தியுள்ளார். அதற்கான விளக்கத்தையும் அவரே தெரிவித்திருந்தார். ஒன்றிய அரசு என்பதன் மூலம் திமுக சொல்ல வருவது என்ன? அதன் உள்ளர்த்தம் என்ன? 2004ஆம் ஆண்டு முதல் 10…
Read Moreகைபேசியில் கதைசொல்லி மோகன்லாலிடம்கால்ஷீட் வாங்கிய இயக்குனர்
மோகன்லால் நடித்த லூசிபர் படத்தின் மூலம் இயக்குனர் ஆனார் மலையாள நடிகர் பிருத்விராஜ். இந்த படத்தின் 2ம் பாகம் இயக்கும் நோக்கத்துடன்தான் படத்தின் கதையை முடித்திருந்தார். இரண்டாம் பாக கதை வெளிநாட்டில் நடப்பதால் கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த படத்தை தொடங்க முடியவில்லை. இந்த நிலையில்தான் மீண்டும் மோகன்லாலுடன் இணைந்து புரோ டாடி என்ற படத்தை இயக்குகிறார். இது மிகவும் ஜாலியான படம் என்று அவர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மலையாள சினிமாவில் கொண்டாட்டமான, ஜாலியான படங்கள் வெளிவந்து ரொம்ப காலமாகி விட்டது. அதுமாதிரியான படங்களுக்கு நிறைய நடிகர்கள், சிரிப்பு, சந்தோஷம், நகைச்சுவை, இசை என்றெல்லாம் யோசிக்கும்போது, அய்யோ இது பெரிய படம், நிறைய இடங்களில், நிறைய மனிதர்களை வைத்து எடுக்க வேண்டும் என்று யோசிப்போம். எனவே அதை ஒதுக்கி வைத்துவிடுவோம். அதனால்தான் மலையாளப் படங்கள்…
Read Moreபோனி கபூரின் மொழி மாற்று மோகமும் தொலைநோக்கு பார்வையும்
இந்திய சினிமாவில் எந்த திட்டமிடலும் இல்லாமல் தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி மொழிகளில் வெற்றிபெற்ற, அல்லது படைப்புரீதியாக பாராட்டுக்களை பெற்ற படங்களின் மொழிமாற்று உரிமையை பைனான்சியர்கள், பிரபல தயாரிப்பாளர்கள் வாங்கும் வழக்கம் நீண்டகாலமாக உள்ளது ஒரு படம் இறுதிகட்ட பணிகளில் இருக்கும்போது நிதி நெருக்கடி ஏற்படும் அந்த நிலையில் மொழிமாற்று உரிமை, தொலைக்காட்சி உரிமைகளை விற்பனை செய்யவேண்டிய சூழல் தயாரிப்பாளருக்குஏற்படும் அப்போது முடிந்தவரை குறைந்த விலைக்கு அந்த உரிமையை வாங்க பைனான்சியர்கள், தயாரிப்பாளர்கள் முயற்சி எடுப்பார்கள் தனுஷ் நடித்து வெளியான ” துள்ளுவதோ இளமை” படம் திட்டமிட்ட அடிப்படையில் வெளியிடுவதற்கு நிதி நெருக்கடி அப்போது அந்தப் படத்தை ஒரு படமாகவே மதிக்கவில்லை இருந்தபோதிலும் அப்படத்தின் மொழிமாற்று உரிமையை இரண்டு லட்ச ரூபாய்க்கு முதல்வன் பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மாதேஸ் வாங்கினார் அந்தப் படம் வெளியாகி பாக்ஸ்ஆபீஸ் சாதனையை நிகழ்த்தியது…
Read Moreநடிகர் சங்க தேர்தலை அரசியலாக்கிய நடிகை விஜயசாந்தி
சென்னை மகாணம் என்று இருந்தபோதுதென்னிந்திய நடிகர் சங்கம் என்கிற அமைப்புசென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கியது தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னட மொழி படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் சென்னையிலேயே நடைபெற்று வந்தது மொழி அடிப்படையில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது தமிழ் சினிமாவை தவிர்த்து மற்ற மொழிகளுக்கான சினிமா சங்கங்கள், படப்பிடிப்புகள் அந்தந்த மாநிலங்களில் செயல்பட தொடங்கியதுஆனால், தமிழில் மட்டும்தான் இன்னமும் தென்னிந்திய நடிகர் சங்கம் என இருக்கிறது. இந்த சங்கத்தில் போட்டியிட மொழி, இனம் எப்போதும் தடையாக இருந்தது கிடையாது அரசியல்வாதிகள் ஆதிக்கமும் இருந்தது இல்லை அதேபோன்றுதான் பிற மாநிலங்களில் நடிகர் சங்க அமைப்புகள் இயங்கின ஆனால் பிறமொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் தலைமைப் பொறுப்புக்கு போட்டியிட்டு வெற்றிபெற முடியாத சூழ்நிலை இன்றுவரை தொடர்கதையாக இருந்து வருகிறது தாங்கள் நடிக்கும் படங்களில் சாதி,மொழி, இன வேறுபாட்டுக்கு எதிராக…
Read Moreசினிமா தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் மாற்றங்கள்
இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் சுதந்திர போராட்ட காலத்தில் நாடகம், சினிமா இவற்றுக்கு சட்டத்தை அமுல்படுத்தியது இந்தியா சுதந்திரம் அடைந்தபின் அதில் சில மாற்றங்களை செய்து 1952ம் ஆண்டு சினிமாட்டோகிராப் சட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தியது அதன் அடிப்படையில் சினிமா தியேட்டர்களில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு மத்திய திரைப்பட தணிக்கைத் துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும் தணிக்கை குழு படத்தை பார்த்து அவற்றிற்கு U, UA,Aஎன படத்தின் தன்மைக்கு ஏற்ப சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இப்போது இந்த சான்றிதழ் முறையில் சிறு மாற்றங்களைச் செய்ய மத்தியஅரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அதற்காக1952ம் ஆண்டு சினிமாட்டோகிராப் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி திரைப்படத் தணிக்கைத் துறையால் நிராகரிக்கப்படும் படங்களை திரைப்படத் தணிக்கை டிரிப்யூனலில் முறையிடும் வாய்ப்பு இருந்தது. ஆனால், தற்போது இந்த டிரிப்யூனல்…
Read Moreரஜினிகாந்த் அமெரிக்க பயணம் கேள்வி எழுப்பும் நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி அரசியல், சினிமா, பொது விஷயங்களில் கருத்துகளை கூறுவது, விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் தொலைக்காட்சி விவாதங்களில் கட்சி சார்பற்றவராகவும் கலந்துகொள்வார் நடிகை கஸ்தூரி தற்போதுநடிகர் ரஜினிகாந்த் அமெரிக்க சென்றது குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் ஊடகங்கள் ரஜினிகாந்த் எப்போது அமெரிக்கா செல்வார், உடன் செல்லப்போவது யார், எப்போது திரும்புவார் என்று கிடைத்த இரண்டு புகைப்படங்களை வைத்து கொண்டு செய்திகளை வெளியிட்டு வரும் சூழலில்நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள கேள்வி விவாத பொருளாக மாறும் சாத்தியம் உள்ளது அவர் ட்விட்டரில் எழுப்பியுள்ள கேள்வியில் கொரோனா தொற்று காரணமாக மே முதல் இந்தியர்கள் அமெரிக்கா வர அந்த நாடு தடை விதித்துள்ளது. யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படாத நிலையில் ரஜினி மட்டும் எப்படி அமெரிக்காவிற்கு சென்றார். இதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். நான் இப்படி கேட்க காரணம், அமெரிக்காவில் பணிபுரியும்,…
Read Moreஷங்கர் மகள் திருமணமும் முதல்அமைச்சரின் பெருந்தன்மையும்
தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றபிறகு ஆட்சி நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டது.அது மட்டுமல்ல அரசியல் நாகரிகத்தில், தன்னை ஜென்ம விரோதியாக பார்ப்பவர்களிடத்திலும் மு.க.ஸ்டாலின் அணுகுமுறை எதிரிகளையும் வெட்கப்பட வைத்திருக்கிறது நாம் தமிழர் கட்சியின் தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை கடுமையாக விமர்சிக்கப்படும் கட்சி திமுகவும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும்தான் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைவர்களை காட்டிலும் மு.க.ஸ்டாலினை தன் தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக கழுவி ஊற்ற தவறவில்லை சீமான் அந்த ஈரம் காய்வதற்குள் அவரது தந்தை காலமானார் அந்த செய்தியறிந்த மு.க.ஸ்டாலின் கட்சித் தலைவர், முதல்வர் என்கிறமுறையில் அனுதாபச்செய்தி வெளியிட்டதே போதுமானது அதிகபட்சமானது ஆனால் அதையும் கடந்து சீமானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு துக்கத்தை பகிர்ந்து கொண்டு ஆறுதல் தெரிவித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது…
Read Moreதெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் இன பிரச்சினையை கிளப்பிய நடிகர்கள்
தெலுங்கு திரையுலகின் நடிகர் சங்கத்திற்கு இந்தாண்டு தேர்தல் நடத்தப்படவுள்ளது. Telugu Movie Artistes Association எனப்படும் தெலுங்கு நடிகர்கள் சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். தற்போது அங்கே நடிகர் நரேஷின் தலைமையில் சங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. செப்டம்பர் மாதம் சங்கத்திற்கு புதிதாகத் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட இருப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜ் முதல்நபராக அறிவித்தார். தனக்கு நடிகர்சிரஞ்சீவியின் ஆதரவும் இருப்பதாக பிரகாஷ்ராஜ் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில்மூத்த நடிகரான மோகன் பாபுவின் மகனும், நடிகருமான விஷ்ணு மஞ்சு தானும் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்து பரபரப்பையூட்டினார். ஏனெனில் கடந்த இரண்டு முறைகளும் நடிகர் சங்கத்தில் பலத்த போட்டிகள் ஏற்பட்டு பலவித சர்ச்சைகள் எழுந்தன. இதனால் இந்த முறை அப்படி…
Read Moreதயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய வேலை நிறுத்தம் தவறானது
திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடும் தொழில் நுட்பப் பணிகளைச் செய்து வரும் கியூப் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று கோரி 2018, மார்ச் 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் படங்களை வெளியிடப் போவதில்லை என்று தென் மாநிலங்களை சேர்ந்த அனைத்து திரைப்பட அமைப்புகளும் முடிவு செய்து அறிவித்தன. இரண்டு முறை டிஜிட்டல் நிறுவனங்களுடன் தமிழ், தெலுங்கு,மலையாள, கன்னடசினிமா அமைப்புகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, இந்த முடிவை அவர்கள் எடுத்தனர். ஆனால் மறுநாளே மார்ச் 2-ம் தேதியன்று மலையாளத் திரையுலகமும், கன்னடத் திரையுலகமும் இந்த ஸ்டிரைக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தனர் இதற்கடுத்து மீண்டும் டிஜிட்டல் நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சில சமரசங்களுடன்தெலுங்கு திரையுலகத்தினர் மார்ச் 8-ம் தேதியன்றுவேலைநிறுத்தத்தில் இருந்து விலகிக் கொண்டனர். ஆந்திரா, மற்றும் தெலுங்கானாவில் தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியாகத் தொடங்கின.…
Read Moreதெலுங்கில் இயக்குநர் லிங்குசாமி படம் இயக்க தமிழ் தயாரிப்பாளர் எதிர்ப்பு
பிரபல தயாரிப்பாளரான ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா, இயக்குநர் லிங்குசாமி மீது தெலுங்கு திரைப்பட சம்மேளனத்தில் புகார் செய்திருக்கிறார் தெலுங்கு நடிகர்களான அல்லு அர்ஜூன் மற்றும் அல்லு சிரீஷின் நடிப்பில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகும் ஒரு படத்தைத் தயாரிக்க முன் வந்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்குவதாக இருந்தது. இந்தப் படத்தின் பூஜை கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதியன்று சென்னையில் கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவின்போது நடிகர் சிவக்குமார்தான் குத்துவிளக்கேற்றி இந்தப் படத்தைத் துவக்கி வைத்தார். அதன் பிறகு இந்தப் படம் சம்பந்தமான எந்த வேலைகளும் நடைபெறவில்லை லிங்குசாமி பல்வேறு பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு தவித்ததால் இந்தப் படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் ஞானவேல்ராஜா. இந்தப் படம் நின்றுபோனதால் வேறொரு படத்தை…
Read Moreஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் 3 கோடி ரூபாய் பரிசு
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்பவருக்கு 3 கோடியும், வெள்ளி பதக்கம் வெல்பவருக்கு 2 கோடியும், வெண்கல பதக்கம் வெல்பவருக்கு 1 கோடியும் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமை இன்று(ஜூன் 26) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, மெய்யநாதன், எம்எல்ஏக்கள் உதயநிதி ஸ்டாலின், பரந்தாமன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில் மீதமுள்ளவர்களுக்கு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஏற்கனவே வாள் வீராங்கனை பவானி தேவிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மீதமுள்ள 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகையை…
Read Moreபொதுசெயலாளரும் நானே கமல்ஹாசன் அறிவிப்பு
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அதன் துணைத் தலைவர் மகேந்திரன்,பொதுச் செயலாளர்கள் சந்தோஷ்பாபு, குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக கட்சியில் இருந்து விலகிச் சென்றனர். அவர்களில் பலரின் புகாரே, ‘கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை’என்பதுதான். இந்த நிலையில் இன்று (ஜூன் 26) காணொலி வாயிலாக மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திய கமல்ஹாசன், அக்கட்சியின் தலைவர் பதவியோடு பொதுச் செயலாளர் பதவிக்கும் தன்னையே அறிவித்துக் கொண்டிருக்கிறார். இது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நடந்த காணொலிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், “கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழுக்கவனம் செலுத்தவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்”என்று சொல்லிவிட்டு கட்சி விஷயங்களைப் பேசினார். “ மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட…
Read Moreதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது என்ன?
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கடந்த 21 ஆம் தேதி சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில், “உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சிக் கொள்கை மீது இந்த அரசு உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் மாநிலத்திலுள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த அரசு புத்துயிர் அளிக்கும். 2016 ஆம் ஆண்டு நடைபெற இருந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள் ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக அமைப்புகளிலும், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறவில்லை. முன்னர் மேற்கொள்ளப்பட்ட எல்லை வரைவு அனைத்து வகைகளிலும் முறையாக இருப்பதை உறுதி செய்த பின்னர், கோவிட் பெருந்தொற்றின் தீவிரம் குறைந்த பின் இந்தத் தேர்தலை…
Read Moreராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம் அதிகாரபூர்வ அறிவிப்பு
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் புதியபடத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில்…. வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’ , ‘ஆடுகளம்’ படங்களை ஃபைவ்ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் எஸ்.கதிரேசன்.இவற்றில், ‘ஆடுகளம்’ படம் 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது. இதேபோல், இயக்குநர் வெற்றிமாறனின், ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனம் சார்பில், ‘உதயம்’, ‘காக்காமுட்டை’, ‘விசாரணை’, ‘வட சென்னை’ போன்ற நல்ல படங்களைத் தயாரித்தார்.’காக்கா முட்டை’ தேசிய விருது உள்பட பல விருதுகளைப் பெற்றது. ‘விசாரணை’ தேசிய விருது பெற்றதுடன் அகடமி விருதுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்படும் படமாகத் தேர்வானது. இப்போது இந்த ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் – கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு “அதிகாரம்” என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை ,திரைக்கதை அமைத்து…
Read Moreகொரோனா இரண்டாம் அலைக்கு சட்டமன்ற தேர்தலே காரணம்
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் பரவலுக்குச் சட்டமன்றத் தேர்தலே காரணம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 2016 முதல் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது மாநகராட்சி, நகராட்சிகள்தான். எனவே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்குத் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் எஸ்.ஆனந்தி அமர்வில் நேற்று (ஜூன் 23) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி , பேரூராட்சி தேர்தல்கள் 21 முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா நிபந்தனைகளைப் பின்பற்றித் தேர்தலை நடத்த…
Read Moreஆளுநர் உரை முன்னோட்டம் மட்டுமே – மு.க.ஸ்டாலின்
ஆளுநர் உரை வெறும் ட்ரெயிலர் தான் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார். ஜூன் 21ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தினார். அவரது உரையில், விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும், நீட் தேர்வுக்குச் சட்ட முன்வடிவு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றன. ஆனால், ஆளுநர் உரை ஏமாற்றமளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பயிர்க் கடன், கல்விக் கடன், நகைக் கடன் தள்ளுபடி உள்ளிட்டவை ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில், 16 ஆவது சட்டப்பேரவையின் ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 24) உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கடந்த 2 நாட்களில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் ஆளுநர் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். உரையாற்றியவர்களின் கருத்துகளை அரசுக்கு…
Read Moreராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜரானார்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 24) ஆஜரானார். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் ஏன் மோடி என்ற பெயர் வருகிறது. நீரவ் மோடி, லலித் மோடி நரேந்திர மோடி” என்று குறிப்பிட்டுப் பேசியதாகச் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் மோடி சமூகத்தையே இழிவுபடுத்திப் பேசியதாக ராகுல் காந்தி மீது சூரத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தனது இறுதி வாக்குமூலத்தைச் சமர்ப்பிப்பதற்காக ஜூன் 24ஆம் தேதி ராகுல் காந்தி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஏ.என்.தவே உத்தரவிட்டிருந்தார். ஏற்கனவே…
Read Moreஅதிமுக அரசு தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் ரத்து- மு.க.ஸ்டாலின்
மீத்தேன், நியூட்ரினோ, எட்டு வழிச்சாலை எதிர்ப்புப் போராட்டத்தின்போது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகச் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 2 தினங்களாக நடைபெற்றது. கடைசி நாளான இன்று (ஜூன் 24) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், முதல்வர் ஸ்டாலின் பதில் உரையாற்றினார். அப்போது, “நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர், கலைஞரின் தொடர்ச்சி நான், இந்த அரசு. நான் அண்ணாவின் அரசியல் வாரிசு, கலைஞரின் கொள்கை வாரிசு. தமிழினத்தை நம்மால் தான் வளர்ச்சி பெற வைக்க முடியும் என மக்கள் நம்மை ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள்” என்று பேசிய முதல்வர் ஸ்டாலின், கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட…
Read Moreபீஸ்ட் தலைப்பு மட்டும் காப்பியா கதையும் காப்பியா?
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில்விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு பீஸ்ட் என்று பெயர் சூட்டப்பட்டு(21.06.2021) நேற்று மாலை 6 மணிக்கு அதன் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார், பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்அனிருத் இசை அமைக்கிறார்.ரசிகர்களுக்காக இரண்டாவது பார்வை போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பீஸ்ட் என்ற தலைப்பில் பல மொழிகளில் படங்கள் தயாராகி உள்ளன. அவைகள் அனைத்தும் பெரும்பாலும் க்ரைம் த்ரில்லர் மற்றும் சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகை படங்கள் என்கிற தகவல்கள் சமூகவலைதளங்களில் சினிமா விமர்சகர்களால் பதிவு செய்யப்பட்டு வருகின்றன பீஸ்ட் என்பதற்கான பொருளை கூகுளில் அதிகமானவர்கள் அறிய முற்பட்டுள்ளனர் பீஸ்ட் என்றால் மிருகத்தனமானவன், மிருக குணம் என்ற பொருள் இருப்பதால் சைக்கோ த்ரில்லர், க்ரைம் த்ரில்லர் வகை படங்களுக்கு இந்த டைட்டில் வைப்பது எல்லா மொழியிலும் நடக்கிற…
Read Moreமாநாடு நேரடியாக திரையரங்கில்-தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
வி.ஹவுஸ் புரொடக்க்ஷன் சார்பில் சுரேஷ்காமாட்சி தயாரிப்பில்வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.மதன்கார்க்கி பாடல்கள் எழுதியிருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு, கே எல் பிரவீண் படத்தொகுப்பு, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகள், உமேஷ் ஜே குமார் கலை இயக்கத்தையும் செய்துள்ளனர். அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது இந்தப்படத்தில் இடம்பெறும் ’மெர்ஸைலா’ என்கிற பாடல் வெளியாகி உள்ளது.…
Read Moreமோகன்லால் நடித்துள்ள மரைக்காயர் படத்துக்கு எதிர்ப்பு
கேரளத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், கேரளத் திரையரங்க உரிமையாளர் சங்கம் என இரு தரப்புக்கும் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி ஆகஸ்ட் 12ஆம் தேதி, 600 திரைகளில் இந்தப் படம் வெளியிடப்பட்டு மூன்று வாரங்கள் மட்டும் ஓடும். கொரோனா நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மலையாளத் திரையுலகை மீட்டெடுக்கும் முயற்சியாக இது கூறப்பட்டது கொரோனா பயம் தெளிந்து, தன்னம்பிக்கையுடன்ஒரு பிரம்மாண்டமான படத்தைப் பார்க்க ரசிகர்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் ’மரைக்காயர்’ திரைப்படம் ஓடும் 3 வாரங்களுக்கு வேறெந்த திரைப்படங்களையும் வெளியிட வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது .100 கோடி ரூபாய் செலவில் இந்தப் படம் தயாரிக்கபட்டுள்ளதுஇந்த படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இதன் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டிலேயே முடிந்து கொரோனா பரவலால் முடங்கியது. இதுபோல் திரைக்கு வர தயாராக இருந்த…
Read Moreகடைசி நாளில் நிகழ்ந்த அதிசயம் நியூசிலாந்து முதன்முறையாக உலக சாம்பியன்
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக ஐந்துநாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் 4 நாட்களில் 2 நாள் ஆட்டம் மழையால் முழுமையாக இரத்து செய்யப்பட்டது. இதற்கு மத்தியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களும், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 249 ரன்களும் எடுத்தன. 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 5 ஆவது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. அணித்தலைவர் விராட் கோலி (8 ரன்), புஜாரா (12 ரன்) களத்தில் இருந்தனர். மழை மற்றும் மோசமான வானிலையால் ஏறக்குறைய 2½ நாள் ஆட்டம் பாதிப்புக்குள்ளானதால் மாற்று நாளாக அறிவிக்கப்பட்டிருந்த 6 ஆவது நாளுக்குப்…
Read Moreகவர்னர் உரை ஏமாற்றமளிக்கிறது – எடப்பாடி கே.பழனிச்சாமி
சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரைக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- சட்டப்பேரவைத் தேர்தலின்போது 505 அறிவிப்புகளை திமுக வெளியிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்படும் என்றனர். அதில் முக்கியமான வாக்குறுதிகள் கூட கவர்னர் உரையில் இல்லை. இது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்தார்கள். சட்டப்பேரவையிலும் ஸ்டாலின் வலியுறுத்தினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். ஆனால், குழு ஒன்றை அமைத்துள்ளார்கள். நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளனர். அந்தக் குழு சமர்ப்பிக்கும் பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள். ஆனால், அவர்கள் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், தேர்தல் பிரச்சாரத்தின்போதும் பேசியது திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து…
Read Moreமுதல் அமைச்சருக்கு ஆலோசனை வழங்க பொருளாதார ஆலோசனை குழு
தமிழக சட்டசபையின் 16 வது கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக கலைவாணர் அரங்கின் மூன்றாம் தளத்தில் சபை நடக்கிறது. முதல் நாள் கவர்னர் உரையுடன் தொடங்கியது. சபைக்கு முன்னரே முதல்-அமைச்சர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் வந்துவிட, பின்னர் சபைக்கு வந்த கவர்னரை சபாநாயகர் அப்பாவு வரவேற்று சபைக்குள் அழைத்து வந்தார். பின்னர் கவர்னர் உரையை வாசித்தார். அதில் பல்வேறு சிறப்பம்சங்கள், அரசின் கொள்கை குறிப்புகள், எதிர்கால திட்டங்கள் இருந்தாலும் முக்கியமான பல அமசங்கள் இருந்தன. அதில் முக்கிய அம்சமாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்-அமைச்சருக்கு ஆலோசனை வழங்க முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவில் உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கவர்னர் உரையில் கூறி இருப்பதாவது:- வரும் சில…
Read Moreநீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டமுன்வடிவு
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க புதிய சட்ட முன்வடிவு நிறைவேற்றப்படும் என்று சட்டப் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார். நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்த தேர்வைக் கொண்டு வந்தது முதலே தமிழகத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், 2017 முதல் தொடர்ந்து நீட் தேர்வு மூலமே மருத்துவ சேர்க்கை நடந்து வருகின்றன. இதன் காரணமாகக் கிராமப்புற மற்றும் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வால் தங்களது மருத்துவ கனவு வெறும் கனவாகவே இருந்துவிடுமோ, மருத்துவ படிப்பில் சேர முடியாதோ என்ற அச்சத்தில் மாணவி அனிதா தொடங்கி சுமார் 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில், ’நீட் தேர்வை ரத்து செய்யக் கழக அரசு அமைந்ததும் முதல் சட்டப் பேரவைக்…
Read Moreகுடும்ப அட்டை 15 நாட்களில் வழங்கப்படும் – சட்டப்பேரவையில் ஆளுநர் அறிவிப்பு
தமிழகத்தில் 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று நடைபெற்றது. தனது உரையில் ஆளுநர், ‘புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் செய்பவர்களுக்கு 15 நாட்களில் வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார். குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கப்பட்டால், விண்ணப்பித்த 30 நாட்களில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க வேண்டும். அல்லது குடும்ப அட்டை வழங்கப்படாததற்குக் காரணம் சொல்லவேண்டும். அதையும் மனுதாரருக்கு 60 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். ஆனால், இந்த காலகட்டத்திற்குள் குடும்ப அட்டை பெற முடியவில்லை என்றும் அதற்கு உரியக் காரணம் சொல்லப்படுவது இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதே சமயத்தில் குடும்ப அட்டை விண்ணப்பித்துப் பெறுவதற்குள் ஆயிரக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டி இருப்பதாகவும் புகார் கூறுகின்றனர். இந்த சூழலில் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரில், உரை…
Read Moreலோக் ஆயுக்தாவுக்கு புத்துயிர் – தமிழ்நாடுகவர்னர் உரையில் அறிவிப்பு
தமிழக ஆளுநர் உரையில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு புத்துயிர் அளிப்பது பற்றியும், ஊழல் ஒழிப்புத் துறை முடுக்கிவிடப்படுவது பற்றியும் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வர், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் பொது ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயக்தா அமைப்பு ஏற்படுத்த மத்திய அரசு 2014-ல் சட்டம் கொண்டுவந்தது. ஆனால் இந்தியாவில் 20 மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவியபோதும் கடந்த அதிமுக ஆட்சியில் அது தாமதப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதற்காக வழக்கும் தொடுக்கப்பட்டு நீதிமன்றமும் இது தொடர்பாக அப்போது அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு தமிழகத்தில் லோக் ஆயக்தா அமைப்பு நிறுவப்பட்டது. இதில் லோக் ஆயக்தா தலைவர் மற்றும்…
Read Moreதிரையரங்குகளை திறக்க அனுமதியுங்கள் தமிழ்நாடு அரசுக்கு பாரதிராஜா வேண்டுகோள்
தமிழக அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் சூழ்நிலையில் திரைப்படத்துறையில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கி உள்ளது இதற்கு நன்றி தெரிவித்துள்ள மூத்த இயக்குநரும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் மக்கள் தேவைகளறிந்து செயலாற்றுவதே சிறந்த அரசின் பணியாகும். அந்தவகையில் இந்த ஆட்சியானது தாய்ப்பறவை போல செயல்படத் தொடங்கியிருப்பதை அறிந்து மகிழ்கிறோம். நம் மண்ணின் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட சலுகைகள்… கொரோனா காலகட்டத்திலும் தீவிர செயலாற்றி அதன் எண்ணிக்கையை உதிர்த்தது, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முனைப்பெடுக்கும் இந்த அரசின் செயல்பாடுகளை மிகவே இரசிக்கிறோம். சீரிய வேகத்தில் செயலாற்றும் முதல்வருக்கும் துறைசார்ந்த அரசு இயந்திரத்திற்கும் எம் நன்றிகள். கட்டுப்படுத்தப்பட்ட இக்கொரோனா காலகட்டத்திலிருந்து மக்கள் இயல்பை நோக்கித் திரும்ப கவனமாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் வேளையில் திரைத்துறையும் மீள தளர்வுகள்…
Read Moreகட்டுப்பாடு கடைப்பிடிக்க திரைப்படதயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்
கொரோனா கால பொது ஊரடங்கின் தளர்வுகளின் ஒரு பகுதியாக, இன்று (ஜூன் 21) முதல் 100 நபர்களுக்கு மிகாமல் பணியமர்த்தி படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என்.முரளி @ராமநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து செயல்பட்டு வருவது எல்லோருக்கும் தெரியும். இந்த சூழ்நிலையில் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகளை துவக்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்து திரை உலகை காப்பாற்ற வேண்டி தமிழக முதல்வரிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்து மனு கொடுத்தோம். அதன் முதல்படியாக தமிழக முதல்வர் 100 நபர்களுக்குள் குழுவினரை வைத்து படப்பிடிப்பு துவக்கலாம். படப்பிடிப்பிற்கு பிந்தைய வேலைகளையும் நடத்தலாம் என ஆணை பிறப்பித்துள்ளார். தமிழக…
Read MoreFwd: தமிழ்நாடு அரசை முழுமையாக நம்புகிறோம் – இயக்குநர் பா.ரஞ்சித்
நீலம் பண்பாட்டு மையம் எனும் அமைப்பு மூலம் அரசியல், சமூகம், சினிமா சார்ந்த பிரச்சினைகளில் தனது கருத்துகளை சமூக வலைத்தளங்கள், அறிக்கைகள் மூலமாக தெரிவித்து வருகிறார் இயக்குநர் பா.ரஞ்சித் நீட் தேர்வு சம்பந்தமாக தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள், மற்றும் நீட் தேர்வு முற்றிலுமாக நீக்கப்பட்டு அடிப்படை கல்வி அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும் என்பது சம்பந்தமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சமுதாயத்தில் வர்க்கம், சாதி, பாலினம், இடம் சார்ந்து பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன இதன் காரணமாக எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை அதன் காரணமாகவே இந்திய அரசியல் சட்டம் இடஒதுக்கீட்டை உறுதிப் படுத்தியிருக்கிறது. ஆனால் நீட் தேர்வு அத்தகைய நோக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது சமமான வாய்ப்பைப் பெற இயலாதவர்களை வாய்ப்பு பெற்றவர்களுக்கு இணையாக நிறுத்துகிறது இது ஆரோக்கியமான போட்டியாக இருக்க முடியாது ஆனால், நீட் தேர்வை ஒன்றிய அரசு…
Read Moreஅடிமைகள் வாழ்க்கையை பேசும் மாடத்தி
தீண்டப்படாத சாதிகள் இருப்பதைப்போன்று காணக்கூடாதா சாதியினராக இருந்தவர்கள் புதிரை வண்ணார்கள் இவர்கள் பகலில் நடமாடக் கூடாது இரவில் மட்டும்தான் வர வேண்டும் பட்டியலின சாதியினரை ஆதிக்கசாதியினர் ஒடுக்கினார்களோ அதேப் போன்று பட்டியலின மக்களால் அடக்கி வேலை வாங்கப்பட்ட சமூகம் புதிரை வண்ணார் தாழ்த்தப்பட்ட மக்களின் துணிகளை துவைப்பதே இவர்களின் குலத்தொழில் இவர்கள் செல்லும் வழியில் மேல் சாதியினர் வந்துவிட்டால் அவர்கள் கண்களில் படாமல் மறைந்து கொள்ள வேண்டும்சுருக்கமாக கூறுவது என்றால் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமைகள் இவர்கள் இந்த சமூகத்தில் பதின்ம வயது பெண்ணின் பருவ வாழ்க்கையை பேசுவதுதான் மாடத்தி திரைப்படம்இயக்குநர் லீனா மணிமேகலை பல ஆவணப் படங்களை தயாரித்து, இயக்கியவர். ஏற்கெனவே ‘செங்கடல்’ என்ற படத்தையும் தயாரித்து, இயக்கியிருந்தார்.இப்போது தனது சொந்த நிறுவனமான கருவாச்சி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அவரே தயாரித்து எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம்தான் ‘மாடத்தி’.கூட்டு…
Read Moreதனுஷ் முதன்முறையாக நடிக்கும் தெலுங்குபடம்
ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துவிட்ட நடிகர் தனுஷ், நேற்று முன்தினம் தாயகம் திரும்பியுள்ளார்இதையடுத்து சில நாட்கள் ஓய்வெடுத்த பின் மீண்டும் அவர் ஏற்கனவே நடித்து வந்த கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதையடுத்து அண்ணன் செல்வராகன் இயக்கும் நானே வருவேன், ராம்குமார் இயக்கும் ஒரு படம் என தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் படங்களின் பட்டியல் நீள்கிறது இந்நிலையில் இன்று(ஜூன் 18) தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தயாரான ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் தனுஷ் நடிக்க உள்ள அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை பிரபல தெலுங்கு இயக்குனரும், தான் இயக்கிய முதல் படத்திலேயேதேசிய விருது பெற்றவருமான சேகர் கம்முலா இயக்குகிறார். நேரடி தெலுங்கு படமாக தயாராகும் இப்படம் தமிழ்,ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரே நாளில் வெளியிட…
Read Moreட்விட்டரில்அங்கீகாரம் பெற்ற அஞ்சலி
சமூக வலைதளங்களில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் இரண்டையும் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர் திரைப்பட நடிகைகள் இதன்மூலம் தங்களது புதிய புகைப்படங்களை வெளியிடுவதை பிரதான வேலையாக கொண்டுள்ளனர்பெரும்பான்மையான நடிகைகள் குஷ்பூ, கஸ்தூரி, காயத்திரி ரகுராம், நடிகை ராதிகா போன்ற தமிழ் நடிகைகள் அரசியல் ரீதியாகவும் ட்விட்டர் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர் நடிகைகளை அவர்கள் வெளியிடும் புது கிளாமர் புகைப்படங்களுக்காகபின்தொடரும்ரசிகர்கூட்டமே அதிகமாக இருந்து வருகிறது அந்த வகையில் தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அஞ்சலி. தமிழில் சில முக்கியமான படங்களில் கதாநாயகி என்கிற இமேஜை புறந்தள்ளி கதைக்குள் தன்னை வைத்து தனது யதார்த்த நடிப்பின் மூலம் தனி முத்திரையைப் பதித்தவர் நடிகை அஞ்சலி இவர்அறிமுமானகற்றது தமிழ் படத்திலேயே தனது நடிப்பால் யார் இவர் எனக் கேட்க வைத்தவர். அதனை தொடர்ந்து அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, இறைவி,…
Read Moreநடிகர் விஷால் புகாருக்கு ஆர்.பி.சௌத்ரி நீண்ட விளக்கம்
நடிகர் விஷால் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி இருவருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான பஞ்சாயத்து செய்திகள் தமிழ் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வந்தது இந்த நிலையில் உண்மையில் நடந்தது என்ன? என்பது குறித்து ஆர்.பி.சௌத்ரி நீண்ட விளக்கம் ஒன்றை அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்…. மூன்று வருடங்களுக்கு முன்பு நடிகர் விஷால் இரும்புத்திரைபடம் தயாரிக்க என்னிடம் பைனான்ஸ் வாங்கியிருந்தார் அந்த படத்திற்கு நானும் விநியோகஸ் திருப்பூர் சுப்பிரமணியும் சேர்ந்து பணம் கொடுத்தோம் இரும்புத்திரைபடம் வெளியீட்டில் விஷால் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் பாதி தொகையை சில தவணைகளில் கொடுப்பதாக கூறினார் நானும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் படம் வெளியாக வேண்டுமென்று ஒப்புக்கொண்டு கிளியரன்ஸ் கொடுத்தேன். இறுதியாக இருந்த பாக்கி தொகையை அவர் தயாரித்து நடிக்கும் ‘சக்ரா திரைப்படத்தின் வெளியீட்டில் தருவதாக கூறியிருந்தார். சக்ரா படத்தின் வெளியீட்டின்…
Read Moreயூடியூபர் மதனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
தலைமறைவாக இருந்த யூடியூபர் டாக்சிக் மதனை தர்மபுரியில் வைத்து தனிப்படை போலீசார் இன்று(ஜூன் 18) கைது செய்தனர். சேலத்தைச் சேர்ந்த மதன் என்பவர் TOXIC MADAN 18+ என்ற யூடியூப் சேனல் மூலம் 8 லட்சம் வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தி, பப்ஜி விளையாட்டு குறித்து லைவ் ஸ்ட்ரீமிங் செய்து பணத்தை அள்ளி வந்துள்ளார். அவருடன் ஆன்லைனில் விளையாடும் சிறுவர்கள் மற்றும் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசி வந்துள்ளார். இதுதொடர்பாக மதன் மீது அளிக்கப்பட்ட 167 புகார்களின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான தனிப்படை போலீசார் தலைமறைவான மதனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில் மதன்…
Read Moreசிவசங்கர்பாபா கைது- டோராடூன் முதல் செங்கல்பட்டு வரை
படிக்கும் மாணவிகளிடம் பாலியல் வன்முறை செய்த சிவசங்கர் பாபா சாமியாரை, தமிழக சிபிசிஐடி போலீஸார் டெல்லி சென்று ஜூன் 15ஆம் தேதி கைது செய்தனர். இந்த ஆபரேஷனை நடத்திய சிபிசிஐடி டீம் போலீஸார் நித்தியானந்தா ஸ்டைலில், வெளிநாடு தப்பிச்செல்ல இருந்த சிவசங்கர் பாபாவை அப்படி தப்பிக்க விடாமல் கைது செய்துள்ளனர். சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இருக்கிறது. இங்கு பயிலும் மாணவிகளிடம் சிவசங்கர் பாபா நடத்திய பாலியல் வேட்டை பற்றி, சில வாரங்களாக அப்பள்ளியின் பழைய மாணவிகள் பலர் புகார்களாக காவல்துறையிலும் சமூக தளங்களிலும் பதிவு செய்தனர். இந்த நிலையில் அப்பள்ளி மாணவிகளின் புகாரின் பேரில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.…
Read Moreசோனியா, ராகுலை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் டெல்லியில் இன்று (ஜூன் 18) காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியையும், ராகுல் காந்தியையும் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்தது. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று முதல் முறையாக நேற்று டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அவரிடம் தமிழ்நாட்டுக்கான 25 கோரிக்கைகள் அடங்கிய விரிவான மனுவை அளித்தார். சுமார் 25நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்புக்குப் பின் தமிழ்நாடு இல்லம் திரும்பினார் ஸ்டாலின். நேற்று இரவு டெல்லியில் தங்கிய ஸ்டாலின் இன்று (ஜூன் 18) காலை ஜன்பத் சாலையில் அமைந்திருக்கும் சோனியாகாந்தியின் இல்லத்துக்குச் சென்றார். ஸ்டாலினோடு அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றிருந்தார். சமீபகாலமாக காங்கிரஸ் தலைவர்கள் உட்பட எவரையும் நேரில் சந்திப்பதைத் தவிர்த்துவந்த…
Read Moreமணி இவ்வளவு சீக்கிரம் நீ போயிருக்ககூடாது-நடிகர் சத்யராஜ்
தமிழ்சினிமா எத்தணையோ படைப்பாளிகளைக் கடந்து வந்திருக்கிறது அப்படிப்பட்ட படைப்பாளிகளில் சிலரே மறைந்த பின்னரும் நினைவில் கொள்ளத் தக்க சாதனையோ, செயலோ செய்ததால் மனதில் வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட படைப்பாளிகளில்ஒருவரான மணிவண்ணன் நினைவுதினம் இன்று எல்லோருக்கும் ஒரு அரசியல் கொள்கை இருக்கும் என்றபோதும் சிலர் அதைத் தமது தொழில் தொடர்பான விஷயங்களில்வெளிப்படுத்துவது இல்லை.வேறு சிலரோ தமது தொழிலும் தமது அரசியல் வெளிப்படும்படி நடந்துகொள்வர். மணிவண்ணன் இரண்டாம் ரகம். அவரைப் பொறுத்தவரை அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கான அரசியல், ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியல். அவை தொடர்பான படங்களை உருவாக்குவதில் மட்டுமே மணிவண்ணனுக்கு நம்பிக்கை இருந்தது. மார்க்சிய சித்தாந்தம், தமிழ்த் தேசியம், தமிழீழ அரசியல் போன்றவற்றில் பிடிப்பு கொண்டிருந்த மணிவண்ணன் 50 படங்களை இயக்கியுள்ள மணிவண்ணனின் படங்களில் முப்பதுக்கும் மேற்பட்டவை வசூலைக் குவித்தவை. என்றபோதும், வெற்றியின்போது தலையில் கொம்பு முளைத்ததும் இல்லை, தோல்வியின் போதும்…
Read Moreமுதல்வரான மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்
தமிழ்நாடுமுதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். நாளை மாலை சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி செல்லும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் பின்னர் நாளை மறுநாள் (17-ந் தேதி) முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கும் அவர் தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை மறுநாள் காலை டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது 35 முக்கிய விஷயங்கள் பற்றி பிரதமருடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்.…
Read Moreதமிழ்நாடு அரசின் ஏழு இலக்குகள்
தமிழக அரசின் 7 இலக்குகளை எட்ட மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கொரோனா பரவல் தமிழகத்தில் 13 ஆயிரமாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணி தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 15) ஆலோசனை நடத்தினார். இதில் புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள மாவட்ட ஆட்சியர்களும் கலந்துகொண்டனர். அப்போது , கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுத்திட மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நோய்த் தொற்றுப் பரவல் எண்ணிக்கையை மேலும் குறைத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், கல்வியில் – வேலைவாய்ப்பில் – சமூகப் பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதிகாரத்தை, பதவியைப் பயன்படுத்தித் தங்களது கடமையை ஆற்ற வேண்டும். வளரும் வாய்ப்புகள் – வளமான தமிழ்நாடு! மகசூல் பெருக்கம்,…
Read Moreபன்னீர்செல்வம்தான் என் சாய்ஸ் – சசிகலா
சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசிய ஆடியோ சில வாரங்களாகவே வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில்… அவர்களில் 15 பேரை திடீரென அதிமுகவில் இருந்து நீக்கி நேற்று (ஜூன் 14) அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இன்று (ஜூன் 15) சசிகலாவின் இன்னொரு ஆடியோ வெளியாகியிருக்கிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியைச் சேர்ந்த சிவனேசன் என்ற அதிமுக நிர்வாகியுடன் சசிகலா பேசும் ஆடியோவில், ‘இனி என் முதுகில் குத்த இடமே இல்லை’என்று குறிப்பிட்டுள்ளார், ஓபிஎஸ்சைதான் நான் முதல்வராக தொடர வைக்க நினைத்திருந்ததாகவும் ஆனால் அவராகவேதான் ராஜினாமா செய்துவிட்டுச் சென்றுவிட்டதாகவும் தேனி சிவனேசனிடம் சொல்லியிருக்கிறார் சசிகலா. “அந்த சமயத்துல அவருதானப்பா போனாரு… இல்லேன்னா அவரைத்தானே நான்…’என்று சிவனேசனுக்கு பதில் சொன்ன சசிகலா தன்னுடன் பேசிய தொண்டர்களை கட்சியை விட்டு நீக்கியதையும் கண்டித்துள்ளார். “என்னோட பேசுறாங்க, நீங்க வாங்கம்மானு கூப்பிடுறாங்கன்றதுக்காக கட்சிக்காரவுங்களை…
Read Moreரைட்டர் திரைப்படம்உருவான கதை….
அட்டகத்தி,மெட்ராஸ்,கபாலி,காலா, படங்களின் மூலம் தலித் உரிமைகள் பேசும் இயக்குநராக கவனம் ஈர்த்தவர்பா.ரஞ்சித், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். அந்த ஆண்டு திரையரங்குகளில் வசூலைக் குவித்தபடங்களின் பட்டியலில் பட்ஜெட் அடிப்படையில் அதிக லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்று தந்த படங்களில் முதல் இடத்தை பிடித்தது பரியேறும் பெருமாள் தலித் உரிமை பேசும் படமாக இருந்தாலும் திரைமொழியில் அதனை கையாண்ட விதம் காரணமாகஅனைத்து சமூகத்தினரின்பாராட்டுக்களையும் பெற்ற படமாக இருந்தது அதனைத்தொடர்ந்துஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்றொரு படத்தை தயாரித்தார். சர்வதேச ஆயுத வியாபாரத்தை பற்றி பேசிய இந்த படம் வணிகரீதியாக தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய படமானது இந்த நிலையில் சில பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து தனது நீலம் புரடொக்ஷன்ஸ் சார்பாக மாரி செல்வராஜ், லெனின் பாரதி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஜேக்கப், சுரேஷ்…
Read Moreவிஷாலின் வேடிக்கையான புகாரும் உண்மைநிலவரமும்
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் விஷால் கிருஷ்ணன்இவர்,விஷால் ஃபிலிம் ஃபேக்டரி எனும் தயாரிப்பு நிறுவனம் மூலமாகப் படங்களையும் தயாரித்து வருகிறார். படத்தயாரிப்புக்காக விஷால் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் கடன் வாங்கி உள்ளார் இதற்காக தனது வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட சில உறுதிமொழி பத்திரங்களை ஆவணங்களாக அளித்து கடன் வாங்கியுள்ளார்பின்னர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகும் உறுதிமொழி பத்திரங்களைத் திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாகவும், இதுதொடர்பாக மேலும் மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் நேற்று (9.06.2021) புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஊரடங்கு காரணமாக கடந்த ஒருவருட காலமாக ஊடகங்களில் விஷால் என்கிற நடிகர் காணாமல் போயிருந்தார் ஏற்கனவே தனது அலுவலக பெண் ஊழியர் பணமோசடி செய்தார் என போலீசில் புகார் செய்து…
Read Moreமறைக்க சொல்லும் மத்திய அரசு மறுக்கும் தமிழ்நாடு அரசு
தடுப்பூசிகள் இருப்பு விவரத்தை வெளியிடக் கூடாது என ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஆனால், தடுப்பூசி குறித்து மக்களிடையே உண்மை நிலையைத் தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் குழந்தைகள் நல ஆலோசகா் பிரதீப் ஹல்தார், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”தடுப்பூசிகளின் இருப்பு, அவை பாதுகாக்கப்படும் வெப்பநிலை போன்ற தகவல்களை இ-வின் என்ற தளத்தில் மத்திய அரசு சேமித்து வைத்துள்ளது. இந்த மின்னணு அமைப்பில், கொரோனா தடுப்பூசி பற்றிய விவரங்களை மாநில அரசுகள் தினசரி பதிவேற்றம் செய்கின்றன. இதில் பதிவு செய்யப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை என்பதால், தடுப்பூசி திட்டத்தை மேம்படுத்த மட்டுமே அந்த தகவல்களை மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும். அந்த மின்னணு அமைப்பில்…
Read Moreஉயிர் பாதுகாப்பு கேட்கும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
அரசியலிலிருந்து விலகுவதாகத் தேர்தலுக்கு முன்பு சசிகலா அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், கடந்த மாதம் இறுதியிலிருந்து தொண்டர்களிடமும், கட்சி பிரமுகர்களிடமும் பேசும் ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்றும் கூட சசிகலா பேசும் மற்றொரு ஆடியோ ஒன்று வெளியாகி அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஆனந்தனிடம், சசிகலா பேசும் அந்த ஆடியோவில், சசிகலா: ஹலோ…ஆனந்தன் நல்லா இருக்கீங்களா… ஆனந்தன்.. ஆனந்தன்: நல்லா இருக்கேன்மா… நான் உளுந்தூர்பேட்டை ஆனந்தன்மா… சசிகலா: என்ன இப்படி சொல்றீங்க… உங்களை நல்லா தெரியும்… எப்படி மறக்க முடியும் ஆனந்தன்: தாயில்லா பிள்ளையாக தவிச்சுகிட்டு இருக்கிறோமா நாங்க, மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு… எங்களுக்காக வாங்க… சசிகலா: ஒண்ணும் கவலைப்படாதீங்க.. சீக்கிரமே நல்லது நடக்கும். ஆனந்தன்: அரசியலிலிருந்து விலகி போறேனு நீங்க சொன்னதுல இருந்து, நானும் அரசியலுக்கு முழுக்குபோட்டுட்டேன். அம்மாவுக்காகவும், இந்த…
Read Moreஅதிமுகவில் கொரடாவும் கொங்கு மண்டலத்துக்கா?
அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவர், அதாவது எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க கடந்த மே 10ஆம் தேதி, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடியது. அதில் பன்னீர்செல்வத்துக்கும் பழனிசாமிக்கும் இடையேயான கடுமையான வாக்குவாதத்துக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ஓபிஎஸ்ஸுக்கு வேண்டுகோள் வைக்கப்பட, அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அப்போது ஏற்பட்ட சலசலப்பால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா உள்ளிட்ட பதவிகளுக்கு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாமல் போனது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரைச் சந்தித்து அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடர்பாக ஆலோனை நடத்துகிறார் என்று தகவல்கள் வெளிவந்த நிலையில், திடீரென அதிமுக தலைவர்களுக்கு சட்டமன்றக் கட்சி துணைத் தலைவர், கொறடா பற்றிய கவலை ஏற்பட்டிருக்கிறது.…
Read Moreவடபழநி கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்த நபரை அடையாளம் காட்டாதது ஏன்?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையின் இந்த முதல் மாதத்தில் அடிக்கடி செய்திகளில், இடம்பெற்ற அமைச்சர்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் முக்கியமானவர். கடந்த ஜூன் 7 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெளியிட்ட அறிவிப்பும் மிக முக்கியமானது. திமுக ஆட்சி என்றால் இந்து கோயில்களை கவனிக்க மாட்டார்கள் என்ற பொதுவான ஒரு கருத்தை உடைக்கும் வகையில், வடபழனி முருகன்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 250 முதல் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை மீட்டுவிட்டதாக ஜூன்7 ஆம் தேதிதான் அறிவித்தார் அமைச்சர் சேகர்பாபு. அன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , “முதல்வரின் உத்தரவுப்படி சிதிலமடைந்திருக்கும் அனைத்து கோயில்களையும் புனரமைக்கும் நோக்கில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான கலைஞர் நகரில் உள்ள 5.5…
Read Moreதமிழ்நாடு முதல்சட்ட பேரவைக் கூட்டம் அறிவிப்பு
வரும் ஜூன் 21ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு நேற்று (ஜூன் 9) மாலை அறிவித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசினார். அப்போது, ஆளுநர் உரை நிகழ்த்தும் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து வரும் ஜூன் 21ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக சட்டப்பேரவை வரும் ஜூன் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும். அதன்பின் சட்டப்பேரவை அலுவல் கூட்டம் நடைபெறும். சட்டமன்றம் எத்தனை நாட்கள் நடைபெறும், என்னென்ன பணிகள் என்பதை அதில் முடிவு எடுப்போம். ஜனநாயக முறையில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும்.…
Read Moreபிருத்விராஜ் திருத்திய மிமிக்ரி கலைஞர்
மலையாளத்தில் பிரபலமான மிமிக்ரி கலைஞர் சூரஜ். இவர் கிளப்கவுஸ் என்ற இணையதள பக்கம் ஒன்றை தொடங்கி, அதில் மலையாள முன்னணி நடிகர்கள் போன்று பேசி வந்தார். இதனால் இந்த பக்கத்தை பின் தொடர்கிறவர்கள் கணிசமாக அதிகரித்து வந்தார்கள். சமீபத்தில் இவர் பிருத்விராஜ் போன்று பேசி வெளியிட்ட ஆடியோ பரவலாக பரவியது. இது பிருத்விராஜின் கவனத்துக்கும் சென்றது. உடனடியாக பிருத்விராஜ் கிளப்கவுஸ் பக்கத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டு இதில் பேசியிருப்பது நானல்ல என தெரிவித்தார். எதிர்விளைவுகள் தெரியாமல் சூரஜ் செய்த இந்த காரியத்தை சுட்டிக்காட்டி பிருத்விராஜ் அவருக்கு பக்குவமாய் ஒரு பதிவிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இது நீங்கள் விளையாட்டாக செய்தது என்று புரிகிறது. ஆனால், இதுபோன்ற விஷயங்களுக்கு தீவிரமான பின்விளைவுகளும் ஏற்படும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் பேசுவதை நான் பேசுவதாக நினைத்து கேட்டிருக்கிறார்கள். போனில் எனக்கு நிறைய…
Read Moreஷங்கர் இயக்கும் படத்தில் மாளவிகா மோகனன்
மலையாள சினிமாவில் அறிமுகமாகி ரஜினியின் பேட்ட படத்தில் தமிழுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். அதன்பிறகு விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தவர் தற்போது தனுசுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து தமிழில் புதிய படங்களில் கமிட்டாகாத நிலையில் தற்போது ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கும் படத்தில் மாளவிகா மோகனன் நடிப்பதாக ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. இதே படத்தில் பாலிவுட் நடிகை ஆலியாபட், ராம் சரணுக்கு ஜோடியாக நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், மாளவிகா மோகனன் இன்னொரு நாயகியாக நடிக்கிறாரா? இல்லை வேறு ஏதேனும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் வெகு விரைவிலேயே இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை டைரக்டர் ஷங்கரும், தயாரிப்பாளர் தில்ராஜூவும் வெளியிடப்போவதாக கூறப்படுகிறது.
Read Moreஇயக்குனர் லிங்குசாமிகனவு நிறைவேறுமா?
ஆனந்தம் படத்தின் மூலம் 2001ஆம் வருடம் இயக்குனராக அறிமுகமான லிங்குச்சாமிக்கு முதல் படமே 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படமாக அமைந்தது மாதவன் நடித்த ரன், அஜீத்குமார் நடித்த ஜீ, விஷால் நடிப்பில் சண்டைக்கோழி,விக்ரம் நடித்த பீமா என தொடர்ச்சியாக தமிழில் வியாபார முக்கியத்துவமுள்ள படங்களை இயக்கினார் அதேவேளை 11 படங்களை சொந்தமாக தயாரிக்கவும் செய்தார் ஆனந்தம் ரன், சண்டக்கோழி, பையா என மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லிங்குசாமி,அடுத்து அவர் இயக்கிய அஞ்சான், சண்டக்கோழி-2 படங்கள் தோல்வியை தழுவின இதனால் தமிழில் முன்னணி ஹீரோக்கள், தயாரிப்பு நிறுவனங்கள் இவரது இயக்கத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் தயக்கம் காட்டி வந்தனஇந்தநிலையில் தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோக்களில் ஒருவரான ராம் பொத்திநேனி என்பவரை வைத்து தெலுங்கிலேயே புதிய படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பை பெற்றுஉள்ளார் லிங்குசாமி.அடிதடி ஆக்சன் – மசாலாபடமாக…
Read MoreFwd: தி பேமிலிமேன் தொடருக்கு எதிராக பாரதிராஜா அறிக்கை
தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி திபேமிலிமேன் – 2 இணைய தொடர் ஒளிபரப்பபட்டு வருகிறது இத்தொடரின் மையக்கதையே விடுதலைப்புலிகளையும் அவர்களது விடுதலைப் போராட்டத்தையும் மலினப்படுத்தி அதற்கு தவறான உள்நோக்கம் கற்பிக்கும் விதத்தில் அமைந்துள்ளது இதனால் தமிழ் உணர்வாளர்கள் அத்தொடரை தடைசெய்ய வேண்டுமென தொடர்ந்து தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு குரல்கள் வலுத்துவருகின்றது தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் எங்கள் இனத்திற்கு எதிரான தி பேமிலி மேன் 2 இணையத் தொடரைநிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசுஅத் தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனைஅளிக்கிறது. தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும்,அவர்களின் வரலாற்றையும் அறியாத ,தகுதியற்ற நபர்களால்,தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள்…
Read Moreகொரோனா நிவாரண நிதிதிரட்டும் இசையமைப்பாளர் ஜிப்ரன்
இசையமைப்பாளர் ஜிப்ரான், தமிழ் சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்தியிருக்கும் மிக முக்கியமான இசையமைப்பாளர். பல்வேறு புதுவிதமான இசை முயற்சிகளால், ரசிகர்களின் ஆதரவு இவருக்கு அதிகரித்து வருகிறது தெலுங்கில் பிரபாஸ் நடித்து வெளியானசாஹோபடத்தின் இசையால் இந்திய அளவில் கவனம் பெற்ற ஜிப்ரன் தற்போது அப்படத்தில் இருந்து வெளிவராத ஒரு பின்னணி இசை தொகுப்பினை, இதுவரையிலும் இல்லாத வகையில் NFT(Non Fungible Token) என்னும் முறையில் ஏலத்தில் வெளியிடவுள்ளார். இம்முறையில் மிக உயரிய விலைக்கு இந்த இசைத் தொகுப்பினை எவர் வேண்டுமானாலும் வாங்க முடியும். அந்த வகையில் இதன் மூலம் கிடைக்கும் நிதி, நமது தமிழக முதல்வர் நிவாரண நிதி அமைப்பிற்கும், இக்காலகட்டத்தில் பணியின்றி தவிக்கும் இசைத் துறை சார்ந்தோருக்கும் பிரித்து அளிக்கப்படவுள்ளது. இது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசும்போது, “சாஹோ’ படத்தில் இடம் பெறாத ஹீரோவின் தீம் இசையை,…
Read Moreலைகா நிறுவனத்தை விலக சொல்லும் அமேசான் பிரைம்
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்என்பார்கள் என்பது பழமொழி இது யாருக்குபொருந்துகிறதோ இல்லையோ தமிழ் சினிமாவில் கோடிகளை முதலீடாக்கி படத்தயாரிப்பில் ஈடுபட்டுவரும் லைகா நிறுவனத்திற்கு பொருந்தும் ஐரோப்பிய நாடுகளில் தொலைதொடர்பு தனியார் நிறுவனங்களில் முதல் இடத்தில் இருப்பது லைகா நிறுவனம் இதன் தலைவர் சுபாஷ்கரண் அல்லிராஜா யாழ்பாண தமிழர் தமிழ் சினிமாவின் மீது தீராத காதல் கொண்ட இவரை இந்திய சினிமாவிற்கு அழைத்து வந்தவர் லண்டன் கருணாமூர்த்தி இந்தியா தவிர்த்து வெளிநாட்டில் தமிழ் படங்களை வியாபாரம் செய்வது அல்லது நேரடியாக திரையரங்குகளில் திரையிடுவது என்பதை ஐங்கரன் இண்டர்நேஷனல் தலைவர் கருணாமூர்த்தி தயவு இல்லாமல் செய்ய முடியாது மொபைல் ,மென்பொருள், மருத்துவ துறைகளில் கோடிகளை தினந்தோறும் லாபங்களை குவிக்கும் லைகாவை முதலில் தமிழ் படங்களை தயாரிக்க அறிவுறுத்திய கருணாமூர்த்தி அதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தார் தமிழ் சினிமாவின்…
Read Moreகைதி – 2 எப்போது வரும் ?
தமிழ் சினிமாவில்150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான பிகில் படம் வெளியான அன்று 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான கைதி படமும் வெளியானது பிகில் படத்தின் மொத்த வெற்றியும், வசூலும் படத்தின் கதாநாயகன் விஜய் என்கிற ஒற்றை நபரை நம்பி இருந்தது மாநகரம் படத்தின் வெற்றி, அடுத்து விஜய் படத்தை இயக்கபோகும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் தேசிய அளவில் கவனம் பெற்ற, விருதுகளை வென்றஜோக்கர், அருவி படங்களை தயாரித்த டிரீம் வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பு என்கிற எதிர்பார்புடன் சினிமா ரசிகன் எதிர்பார்த்த படம் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி கைதி வெளியாவதற்கு முதல் நாளே வியாபார அடிப்படையில் சுமார் 25 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியிருந்தது பிகில் படத்துக்கு போட்டியாக கைதி படம் தாக்கு பிடிக்குமா என்று அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான S.R.பிரபுவிடம்…
Read Moreசிரஞ்சீவியின்ஆக்சிஜன் வங்கி விநியோகத்தை தொடங்கியது
கொரோனா இரண்டாவது அலையில் தடுப்பூசிக்கு அடுத்தபடியாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி இன்றியமையாதஒன்றாகமாறியுள்ளது திரைப்பட துறையினர் அவரவர் வசதிக்கேற்ப அரசிடம் நன்கொடையும், நேரடியாக நோயாளிகளுக்கு சூழலுக்கு ஏற்ப உதவிகள் செய்து வருகின்றனர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி செய்ய விரும்பும் நிவாரணம், உதவிகளை அவரே நேரடியாக செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் இரத்த சேமிப்பு வங்கி மூலம் சேவை செய்து வரும் நடிகர் சிரஞ்சீவி கொரோனா முதல் அலையில் தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவிட கொரோனா நெருக்கடி எனும் பெயரில் தொண்டுநிறுவனத்தை தொடங்கி உதவி செய்தார் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அமுலுக்கு வந்தபோது தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை ஏப்ரல் 22ம் தேதி தொடங்கியவர் 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள் தங்கள் மனைவியையும் அழைத்து வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியதுடன் அதற்கான…
Read Moreதுக்ளக் தர்பார்சன் டிவி நிபந்தனை
கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்கே ஒரு கொடுமை குத்தவச்சு உட்கார்ந்திருந்ததாம் – நெருக்கடியில், கஷ்டப்படுகிறவர்கள் மத்தியில் அடிக்கடி கூறப்படும் பழமொழி இது தமிழ் சினிமாவில் எந்த நிர்வாக தயாரிப்பாளரும் இம்புட்டு பொறுமையாக இருந்து பொருளாதாரநெருக்கடி, விநியோகஸ்தர்களின் நம்பிக்கை துரோகம், நாணயம் இன்மை என அனைத்தையும் சமாளித்து”மாஸ்டர்” படத்தை திரையரங்குகளில் ரீலீஸ் செய்து வெற்றியை ருசித்த சூத்திரதாரி தயாரிப்பாளர் லலித்குமார் 10 க்கும் மேற்பட்ட படங்கள் இவரது தயாரிப்பில் உள்ளது சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு இந்த படங்களில் முடங்கியுள்ளது இத்தனை சிறப்புகள் இருந்தும் சன் தொலைக்காட்சியிடமிருந்து தடையில்லா கடிதம் ஒன்றை வாங்க முடியாமல் தவித்து வருகிறார் லலித்குமார விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளதுக்ளக் தர்பார்படத்தைலலித்குமார் தயாரித்திருக்கிறார் கொரோனா ஊரடங்கு காரணமாக நேரடியாக இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது படத்தை வியாபாரம்…
Read Moreரத்தம் ரணம் ரௌத்திரம் சாதிக்குமா?
இந்திய சினிமாவில் குறிப்பிட்ட ஒரு மொழி திரைப்படங்களில் சராசரியான ஹீரோக்களாக நடித்து கொண்டிருந்த நடிகர்களை வைத்து முதல் படத்தில் அகில இந்திய ரீதியிலும், அதன் இரண்டாம் பாகத்தில் சர்வதேச ரீதியில் மிகப்பெரிய வெற்றியையும் பெற்ற படமான பாகுபலி, பாகுபலி-2 படங்களை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமெளலி சர்வதேச சினிமா படைப்பாளிகளும், வியாபாரிகளும் ராஜமெளலியின் அடுத்த படம் எது என ஆவலுடன் எதிர்பார்பார்த்திருந்தனர்300 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ரத்தம் ரணம் ரெளத்திரம்( RRR) இப்படத்தை DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்கி முடித்திருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆந்திராவின் இரண்டு புகழ் பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீத்தாராம், கோமரம் பீம்மா இருவரின் வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டு 1920-களின் பின்னணியில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் அல்லூரி சீதாராமாக நடிகர் ராம் சரணும், கோமரம் பீம்மாக நடிகர் ஜுனியர் என்.டி.ஆரும் ‘ஆர்.ஆர்.ஆர்’…
Read Moreவைரமுத்துவுக்கு விருது வழங்க நடிகை பார்வதி எதிர்ப்பு
கேரள மாநிலம் இந்தியாவின் பிற மாநிலங்களில்இருந்து வித்தியாசமானது கலை, பண்பாடு, கலாச்சாரம், அரசியல் முடிவு என அனைத்திலும் தனித்தன்மையை இழக்காமல் பாதுகாக்க போராடும் போர்க்குணமிக்கவர்கள் மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட மலையாளிகள் இந்த விஷயத்தில் போராடக்கூடியவர்களை அந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும் எந்த வகையிலும் பழிவாங்கவோ, தொழில்முறையில் இடையூறு செய்வதோ கிடையாது அதனால்தான் கலை, கலாச்சாரம், பண்பாடு, மொழி இது சம்பந்தமான நிகழ்வுகள், முடிவுகளில் நியாயமான கலகக்குரல் எழுப்ப திரைப்பட துறையினர்தமிழகம் போன்று பதுங்குவதும் இல்லைபயப்படுவதும் இல்லை தமிழ் திரைப் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவுக்கு விருது அறிவித்ததற்காக தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்த மலையாள நடிகை பார்வதி எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளார் ஞானபீட விருது பெற்றவரும்பிரபலமலையாள கவிஞரும், பாடலாசிரியருமான ஓ.என்.வி.குறுப் அவரின் பெயரில் 2017ம் ஆண்டு முதல் ஓ.என்.வி. இலக்கிய விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது…
Read Moreநடிகர் சங்கத்துக்கு உதவுங்கள்- பூச்சி முருகன்
இந்திய சினிமாவில் இந்தி, தெலுங்கு மொழி சினிமா துறைக்கு அடுத்தபடியாக அதிக முதலீடு செய்யக்கூடியது தமிழ் திரைப்படத்துறை வருடந்தோறும் படங்கள் தயாரிப்பு செலவில் 60% சதவீதம் நடிகர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. பிற மொழிகளில் அந்தந்த மாநிலங்களில் சங்கங்கள் தொடங்கப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கட்டிடங்கள், வருமானம் வரக்கூடிய வணிக வளாகங்கள் உள்ளன. இது போன்ற பேரிடர் காலங்களில், வேலைவாய்ப்பு இல்லாத நாட்களில் வெளியார் நன்கொடை, உதவிகளை எதிர்பார்க்காமல் தனது உறுப்பினர்களை பாதுகாக்கின்றனர் பாரம்பர்யம் மிக்கதென்னிந்திய நடிகர்கள் சங்கம் மட்டுமே இது போன்ற பேரிடர் காலங்களில் தங்கள் உறுப்பினர்களுக்கு உதவ கௌரவ பிச்சையாக நன்கொடை, உதவிகளை எதிர்பார்க்கும் நிலையில் உள்ளது பெயரளவில் தென்னிந்திய நடிகர்கள் சங்கமாக இருக்கின்ற இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் நாடக நடிகர்களும், தமிழ் படங்களில் நடிக்கும் நடிகர்கள் மட்டுமே. தெலுங்கு,மலையாள, கன்னட படங்களில் நடிக்கும்…
Read Moreசினிமா படப்பிடிப்புகள் ஒத்திவைப்பு?
தமிழ் சினிமாவில் படப்பிடிப்பை நடத்தலாம் என நடிகர்களை அழைத்தால் கொரோனா முழுமையாக முடிவுக்கு வரட்டும் என்று முன்ணனி நடிகர் நடிகைகள் மறுத்து விட்டனர் புதிய படங்களின் படப்பிடிப்பை தொடங்கலாம் என தயாரிப்பாளர்கள் முயற்சி எடுத்தால் பைனான்சியர்கள் கடன் தரதயாராக இல்லை பணம் திரும்ப கிடைப்பதற்கான எந்த வழிவகையோ, உத்திரவாதமோ இங்கு இல்லை இது தான் தமிழ்சினிமா தயாரிப்பு பிரிவின் உண்மைநிலை தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகள் மட்டுமே எல்லா தரப்புக்கும் லாபகரமான இருந்து வருகிறதுகொரோனா இரண்டாம் அலை தீவிரமானதால்தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இன்று முதல்(15.05.2021) மேலும் சில கட்டுப்பாடுகளைதீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே படப்பிடிப்புகளுக்கு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தி கொள்ள அதிமுக ஆட்சிகாலத்தில் அனுமதி வழங்கப்பட்டு இருந்ததுஇந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்படிப்புகள் வரும் மே 31ஆம்தேதிவரைரத்துசெய்யப்படுவதாக தென்னிந்தியதிரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவரும், இயக்குநருமான…
Read Moreகொரோனா நிவாரண நிதி வழங்கிய சூர்யா, அஜீத்குமார், உதயநிதி
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவிட் தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது, அதற்காக அனைவரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாரளமாக நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பேரிடர் காலத்தில் பொதுமக்கள் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப்பயன்படுத்தப்படும். மேலும், மேற்கூறிய நடவடிக்கைகளுக்காக பெறப்பட்ட நன்கொடை விவரங்கள் மற்றும் இந்த நிதியிலிருந்து…
Read Moreஇந்தியன் – 2 பஞ்சாயத்து உண்மை நிலவரம் என்ன?
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 1996-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி”_பெற்ற திரைப்படம் ‘இந்தியன் 21 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்எடுப்பது என முடிவெடுக்கப்பட்டது. 2017 பிக்பாஸ் இறுதிநாள் நிகழ்ச்சியின்போது மேடையில் வைத்து இதனை அறிவித்தார் கமல்ஹாசன். இந்த அறிவிப்பின்போது இயக்குநர் ஷங்கர் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு உடன் இருந்தார்கள். ஆனால், படத்தின் பட்ஜெட் அதிகமாக இருப்பதாக கூறி தில் ராஜு தயாரிப்பில் இருந்து ஒதுங்கிகொண்டார் சுபாஸ்கரனின் லைகா நிறுவனம் ‘இந்தியன் – 2’ படத்தைத் தயாரிக்க முன்வந்தது பட்ஜெட் அதிகம் என கூறி எந்த தயாரிப்பாளர் இந்தியன்-2 தயாரிப்பில் இருந்து விலகி கொண்டாரோ அதே தில்ராஜு தயாரிக்கும் தெலுங்கு படத்தை இயக்குவதற்கு நான்கு வருடங்கள் கழித்து ஒப்பந்தம் செய்து ஷங்கர் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது இதனால் இந்தியன்-2 படத்தை முடித்துக் கொடுக்காமல் ஷங்கர்…
Read Moreமதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அறிக்கை
மதுரைத் தொகுதியில் 30 ஆயிரம் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த எனது தொகுதி நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிவித்துள்ளார். இதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மத்திய சுகாதார செயலாளருக்கு சு. வெங்கடேசன் எம்.பி.எழுதியுள்ளகடிதம் வருமாறு முதலில் நாடு முழுமையும் உச்சபட்ச அர்ப்பணிப்போடும், கடும் உழைப்போடும் கோவிட்டை எதிர்த்து களத்தில்போராடி வரும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக் கள். அவர்களின் முயற்சிகள், அமைதியையும் நிம்மதியையும் மக்களின் வாழ்வில் விரைவில் கொண்டு வருமென்று நம்புகிறேன். கோவிட் பேரிடர் இரண்டாம் அலை 18-45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை அதிகமாகப் பாதிக்கும் என பலரும் எச்சரித்து வருகின்றனர். இதை மனதில் கொண்டு ஒன்றிய அரசாங்கம் இந்த வயது அடைப்பிற்குள் வரக்…
Read Moreநடிகர் சென்ராயனுக்குகொரோனா
மூடர்கூடம், மெட்ரோ, அல்டி, பஞ்சுமிட்டாய், லொடுக்கு பாண்டி, தண்ணில கண்டம், கொளஞ்சி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் சென்ராயன் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்இந்நிலையில் சமீபத்தில் தான் விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் என்ற புது ஷோவில் பங்கேற்றார் அவர். அதில் அவர் ஜூலி உடன்சேர்ந்துநடனம்ஆடிஇருந்தார். நேற்றைய (12.05.2021) தினம்தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுஅறிவித்து உள்ளார் நடிகர்சென்ட்ராயன் அதில் அவர் மக்களே.. வணக்கம் மக்களே.. உண்மையிலேயே நடிக்கல ஆவி புடிச்சிட்டு இருக்கிறேன்.வாழ்க்கையில் நான் அனைத்தையுமே பாசிட்டிவ் ஆக தான் எடுத்துக்கொள்வேன். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும், சினிமாவில் ஜெயிக்க வேண்டும், உடலஆரோக்கியமாகவைத்துக் கொள்ள வேண்டும் என நான் பாசிட்டிவ் ஆக தான் பார்ப்பேன். இப்போ எனக்கே கொரோனா பாசிட்டிவ் ஆகி போச்சு. ஆரம்பத்தில்…
Read Moreசிவக்குமார் – அனுஷ்கா கூறும் தற்காப்பு நடவடிக்கை
கொரோனா தொற்றின் மீது. மக்களுக்கு இருக்கும் பயத்தை காட்டிலும் அது பற்றிய செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வருவது மக்களின் மனநிலையை பாதிக்கிறது என சமூக பொதுவெளியில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது இவற்றில் இருந்து நேர்மறையான, மனோநிலை, சிந்தனைகளுக்கு மக்களை மாற்ற வேண்டும் என்கிறார் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா கொரோனா பயத்தை போக்கும் விதமாக சில வழிமுறைகளை சொல்லி இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவுவதால் மக்கள் பீதியில் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா மீதுள்ள பயத்தை போக்கி தைரியப்படுத்துவது அவசியம்.இங்கு 10 பேர் செத்தனர். அங்கு 50 பேர் செத்தனர் என்றெல்லாம் பயமுறுத்தி இருக்கிற தைரியத்தை போக்குவதை விடுத்துகொரோனாவை எதிர்கொள்ள நாம் எப்படி இருக்க வேண்டும். நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி கொடுக்க வேண்டும்.இந்த…
Read Moreஅமைச்சரிடம் உதவி கேட்ட நடிகர் சங்கமும் முதல்வர்நிவாரண நிதி வழங்கிய நடிகர்களும்
தமிழ் சினிமா பிரமுகர்களால் நேற்றைய(12.05.2021) இருவேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், இயக்குனர்கள் உறுப்பினர்களாக இருக்ககூடிய தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினரான பூச்சி எஸ்.முருகன் செய்தி விளம்பர துறை அமைச்சரிடம் நடிகர் சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரம் அழிந்துவருகிறது இதில் இருந்து அவர்களை காப்பற்ற அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் தமிழ் சினிமாவில் வியாபார முக்கியத்துவமுள்ள நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோருடன் நடிகர் சிவக்குமார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து முதல்வர் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்கினார் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், புதிய படுக்கைகள் அமைக்க முதல்வர் தாராள நிதி வழங்குமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினரான பூச்சி…
Read Moreபெண்கள் உரிமையை பேசும் காயல்
ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கும் புதிய படம் காயல். இப்படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ் , காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ்திலக், ரேடியோ சிட்டி பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். அனுமோள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாதி மாற்று திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் படமாக உருவாகி இருக்கும் காயல் திரைப்படம் காதலும் பயணமும் கலந்த ஒரு திரைவடிவம். ஒரு பெண்ணுடைய தேர்வை அங்கீகரிக்காத சமூகத்தை நோக்கி கேட்கப்படும் கேள்வியே இத்திரைப்படத்தின் ஆணிவேராக உருவாக்கி இருப்பதாக கூறுகிறார்இயக்குனர் தமயந்தி. முழுக்க முழுக்க கடல் சார்ந்த இடங்களான பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது கார்த்திக் சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில், பி.பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பில், ஜஸ்டின் கெனன்யாவின் இசையமைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த…
Read Moreசினிமாவில் என்னை அரங்கேற்றம் செய்தவர் இப்ராஹிம் – T.ராஜேந்தர் உருக்கம்
இயக்குனர் டி.ராஜேந்தரை, இயக்குனராக ‘ஒருதலை ராகம்’ படத்தில் அறிமுகம் செய்த, தயாரிப்பாளர் இப்ராஹிம் வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளார். இவரது மறைவிற்கு டி.ராஜேந்தர் அறிக்கை மூலம் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இயக்குனர் டி.ராஜேந்தர் ‘ஒருதலை ராகம்’ படத்தின் கதையை கையில் வைத்து கொண்டு, தயாரிப்பாளரை தேடி அலையாத இடங்கள் இல்லை. ஏறி இறங்காத தயாரிப்பு கம்பெனிகள் இல்லை. இவரை நம்பி பணம் போட தயாரிப்பாளர்கள் முன்வராத நிலையில், மயிலாடுதுறை அருகே உள்ள வடகரையில் உள்ள முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த வசதி படைத்தவரான இப்ராஹிம் டி.ராஜேந்தருக்கு அறிமுகமானார். டி.ராஜேந்தர் கூறிய கதை பிடித்து போனதால், ‘ஒருதலை ராகம்’ படத்தை தயாரிக்கவும் ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் சில நிபந்தனைகளும் டி.ராஜேந்தருக்கு விதிக்கப்பட்டது. கதை, திரைக்கதை, வசனம், இசை போன்ற பணிகளை டி.ராஜேந்தர், செய்தாலும் படத்தை நான்தான் இயக்குவேன் என்றார் இம்ராஹிம்.…
Read Moreகுணச்சித்திர நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு இன்று காலை சென்னையில் காலமானார் இடிச்சபுளி செல்வராஜின் சகோதரரான இவர் 1989ம் ஆண்டு பிரதாப்போத்தன், ஸ்ரீப்ரியா ஜோடி நடித்து G.N.ரங்கராஜன் இயக்கத்தில் வெளியானகரையெல்லாம் செண்பகப் பூபடத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சுமார் 180க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணசித்திரபாத்திரங்களில் நடித்திருக்கிறார்ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், மோகன்,அஜீத், விஜய், சரத்குமார் மற்றும் இன்றைய இளம் நடிகர்கள் நடித்த படங்களில் நகைச்சுவை, குணசித்திரபாத்திரங்களில் தனது நடிப்பு ஆளுமையை அழுத்தமாக பதிவு செய்தவர் நடிகர் பாண்டு சின்னத் தம்பி,திருமதி பழனிசாமி, உள்ளத்தை அள்ளித்தா, காதல் கோட்டை,ஏழையின் சிரிப்பில், பணக்காரன், பாட்டுக்கு நான் அடிமை, இதயவாசல், நாளைய தீர்ப்பு, வால்டர் வெற்றிவேல், நாட்டாமை, பம்மல் கே.சம்பந்தம், வரலாறு, வில்லு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பாண்டு வயது முதுமையின் காரணமாக நடிப்பதை குறைத்துக்கொண்டு ஓய்வில்…
Read Moreநடிகை நமீதாவின் புதிய தொழில்
தமிழ் சினிமாவில் 2004ல் விஜய்காந்த் நடித்து வெளியான எங்கள் அண்ணா படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நமிதாகதாநாயகி, குணசித்திர, பாத்திரங்கள்என 34 படங்களில் மட்டுமே நடித்துள்ள நமீதா தமிழகத்தின் ஷகீலாவாகவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தபின் அதிமுகவில் இணைந்தார் சிலகலம் கழித்து பாஜகவில் சேர்ந்தார் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தார் நமீதா கொரானா ஊரடங்கு காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால் புதிய திரைப்படங்களை வியாபாரம் செய்யவும், வெளியிடவும்OTT தளங்கள் பிரபலமானது நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என தனிதனி OTT தளங்களை தொடங்கி புதிய படம்,பழைய படங்கள், குறும்படங்கள் என வெளியிட்டு வருகின்றனர் தமிழகத்தில் மட்டும் 100 க்கும் மேற்பட்டOTT தளங்கள் இயங்கிவருகின்றன. இந்த குடிசை தொழிலில் நடிகை நமீதாவும் இணைந்திருக்கிறார் தரமான OTT தளங்களின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது “நமீதா தியேட்டர்ஸ்”…
Read Moreசன் தொலைக்காட்சியும் – துக்ளக் தர்பார் படமும்
விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் துக்ளக் தர்பார்.டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கியுள்ள இந்தபடத்தைதமிழ் சினிமாவில் முன்ணனி தயாரிப்பாளரான லலித்குமார்தயாரித்துள்ளார். இந்த வருட தொடக்கத்தில் தமிழ் சினிமாவிற்கு புத்துணர்ச்சி தந்த மாஸ்டர் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் இவர் என்பதும், தற்போது விக்ரம், துருவ் விக்ரம் நடித்து வரும்படங்களை தயாரித்து வருகிறார் துக்ளக் தர்பார்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகிறது என நீண்டகாலமாகதகவல்கள்கசிந்து வருகிறதுஅப்பேதெல்லாம்இத்தகவலைதயாரிப்புத்தரப்பில்உடனடியாக மறுத்துவிடுவார்கள் கொரானாஇரண்டாம் பரவல் காரணமாகதிரையரங்குகளை மீண்டும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை அதனால் தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்களைOTT நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான முயற்சிகளை தயாரிப்பாளர்கள்மேற்கொள்ள தொடங்கியுள்ளனர் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் தமிழ்சினிமாவுக்கு எந்தளவுக்கு நன்மைகளை வழங்கபோகிறது என்கிற எதிர்பார்ப்பு திரை துறையினர் மத்தியில்ஏற்பட்டுள்ளதுஅதேவேளையில்தயாராகிவெளியீட்டுக்குகாத்திருக்கும் சிலபடங்களுக்குநெருக்கடியையும் ஏற்படுத்தி உள்ளதுஅவற்றில் விஜய்சேதுபதி நடித்துள்ள…
Read Moreஇயக்குனர் முருகதாஸ் கனவு நிறைவேறுமா?
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனர், இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் கதை திருட்டு குற்றசாட்டுக்கு உள்ளாகும், தமிழ்சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் என மறைந்த இயக்குனர் பாலசந்தரால் பாராட்டப்பட்டவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் நட்சத்திர நடிகர்கள் கால்ஷீட்டுக்காக காத்துகொண்டிருக்கிறார் இல்லை இனி அப்படி ஒரு வாய்ப்பு A.R.முருகதாஷ்க்கு கிடைப்பது அரிதுஎன்கின்றனர் தமிழ் சினிமா வட்டாரத்தில்.ரஜினி நடித்த தர்பார் படம்தான்A.R.முருகதாஸ் கடைசியாக (2020 ஜனவரி) இயக்கிய படம் அதன்பின்,விஜய்யின் 65 ஆவது படத்தைஇயக்கஒப்பந்தமாகியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த படத்தை இயக்கும் பொறுப்பிலிருந்து விலகினார்.அதைத் தொடர்ந்து அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.பல நாட்கள் பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு அனிமேஷன் படமொன்றை இயக்குவதுஎன்றுமுடிவெடுத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் என்கின்றனர் அவரது வட்டாரத்தில் இந்தப்படத்தில் முதன்மைப் பாத்திரம் ஏற்கவிருப்பது…
Read Moreஅப்துல்கலாம் வழிகாட்டலால் கலைதுறையில் இருந்து கல்வி துறைக்கு மாறிய நடிகர் தாமு
கே.பாலச்சந்தரின் வானமே எல்லை திரைப்படத்தின் மூலம் 1992ல் நடிகரானவர் தாமு. அதன்பின் இருபது ஆண்டுகள் முழுநேர நகைச்சுவை நடிகராக ஏராளமான படங்களில் நடித்தார். திடீரென அவரைத் திரைப்படங்களில் காணமுடியவில்லை. அதற்கு என்ன காரணம்? என்பதைப் பத்தாண்டுகளுக்குப் பின்னர் அவரே வெளிப்படுத்தியிருக்கிறார். திரைப்படங்களில் இருந்து விலகி கடந்த பத்து ஆண்டுகளாக, நடிகர் தாமு கல்விச்சேவைஆற்றிவருகிறார். இதுமக்களுக்குத் தெரியாமல் இருந்தாலும் அரசாங்கத்துக்கு அது தெரிந்திருக்கிறது. இதனால்,கல்வித்துறையில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் (CEGR National Council) சார்பில் “ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021” என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது கிடைத்துள்ளது. ஏப்ரல் 19, அன்று, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக காணொளி மூலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வித்துறையில் நடிகர் தாமு செய்த பங்களிப்புக்காக, அவருக்கு ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புராஸ்கர்…
Read Moreஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த தயாராகும் தமிழ் திரையுலகம்
இந்திய அரசியலில் தமிழக அரசியலும், சினிமாவும் வேறுபட்டது பிற மாநிலங்களில் சினிமாவும் அரசியலும் நீரும் எண்ணையுமாகவே இருந்து வருகிறது தமிழகத்தை கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆண்ட கட்சிகளின் தலைவர்கள் சினிமாவில் பிரபலமாகி அரசியல் தலைவர்களாக வளர்ந்தவர்கள் அதனால் சினிமா அவர்களின் தாய் வீடாக மாறிப்போனது இதன் காரணமாக எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உடனடியாக திரையுலகினர் சார்பில் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவது வாடிக்கையாகி போனது அப்படி நடத்தாத சூழ்நிலையில் ஆளுங்கட்சியே விழாவை நடத்துமாறு அறிவுறுத்துவதும் உண்டு கடந்த ஒரு வருடகாலமாக கொரானா காரணமாக சினிமா தொழில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுவருகிறது. பிற தொழில்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் போன்று சினிமா தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கவில்லை இந்தியா முழுவதும் திரையரங்குகளில் விற்கப்படும் டிக்கட்டுகளுக்கு GST மட்டுமே செலுத்தும் நடைமுறை உள்ளது தமிழகத்தில் உள்ளாட்சி வரி 8% விதிக்கப்படுகிறது.…
Read Moreகமலஹாசனை இறுதி சுற்றில் வீழ்த்திய பாஜக வானதி சீனிவாசன்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எல்லா கட்சியினராலும் கவனிக்கப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகோவை தெற்கு தொகுதிநடிகர் கமலஹாசன் சென்னை அல்லது அவரது பூர்வீக பூமியான சிவகங்கை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்த்து வந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தபோது தமிழக அரசியல் களம் ஆச்சர்யத்துடன் பார்த்தது பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் இங்கு போட்டியிடுவதால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கோவை தெற்குதொகுதிகமல்வருகையால்கூடுதல் அந்தஸ்து பெற்றது நேற்றைய தினம் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே குறைவான வாக்குகள் என்றாலும் கமல் முன்ணனியில் இருந்தார் ஆனால் கடைசி இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது கமலஹாசன் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம் கமல்ஹாசன் தோல்வியடைந்தார். மொத்தம் நடந்த 26 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், வானதி சீனிவாசன் 1,728…
Read Moreமு.க.ஸ்டாலின் ஆட்சி தமிழ் திரையுலகுக்கு பொற்காலம் – திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ராமசாமி @முரளிவெளியிட்டுள்ள அறிக்கையில் உதய சூரியன் பார்வையில் தமிழகம் இனி வீறுநடைபோடும்தமிழகஅரசியல் வரலாறு 58 வருடங்களுக்கு மேலாக அரசியலும் சினிமாவும் பின்னி பிணைந்தே வருகிறதுடாக்டர்கலைஞர் ஐந்துமுறை தமிழக முதல்அமைச்சராக பதவி வகித்தபோது தமிழகத்தை எல்லா துறைகளின் வளர்ச்சியிலும் அதிக அக்கறை கொண்டு செயல்படுத்தி வெற்றிகண்டார் அதிலும் தமிழ் திரையுலகம் மீது தனி கவனம் கொண்டு அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார் டாக்டர் கலைஞர் அவர்கள் திரை உலகிற்கு செய்த சாதனைகள் அதிகம் குறிப்பாக தமிழ் வார்த்தைகளில் படத்தலைப்பு வைத்தால் அந்த படங்களுக்கு கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்து செய்தார் அரசாங்க இடங்களில் நடைபெறும்படங்களின் படப்பிடிப்புக்கான கட்டணங்களை வெகுவாககுறைத்துதயாரிப்பாளர்கள்மனங்களை குளிர்வித்தார் சென்னை அருகே பையனூரில் தயாரிப்பாளர்கள் நடிகர் நடிகையர் இயக்குனர்கள் உட்பட தொழில்நுட்ப கலைஞர்கள் சின்னத்திரையினர் அனைவருக்கும் வீடு…
Read Moreமு.க.ஸ்டாலின் வெற்றிக்கு மனம் நிறை மகிழ்வுடன் வாழ்த்துகள்- இயக்குனர்பாரதிராஜா
தமிழ்திரைப்படநடப்புதயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும் இந்திய சினிமாவின் மூத்த இயக்குனருமான பாரதிராஜா தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைக்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த அனைத்து தமிழக மக்களுக்கும் நன்றிகள் பகிரும் வேளையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசுக்கும், முதல்வர் வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கும் நண்பர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மாநகர மேயராகப் பணியாற்றிய போது மிகச் சிறந்த நிர்வாகியைக் கண்டிருக்கிறோம். அதே போல் புதிய மாற்றங்களைக் கொண்டு வரும் நிர்வாகத்தை தங்களின் தலைமையில் அமைய உள்ள அரசிடமிருந்து எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். தந்தையின் வழியில் தமிழின் மேன்மைகளைப் பாதுகாத்து, தமிழக உரிமைகளை மீட்டெடுத்து, தமிழையும் தமிழர்களையும் காக்க வேண்டிய பொறுப்பை முதன்மையானதாக எடுத்துக் கொள்ள தங்களை…
Read Moreஅரசியல் ரீதியாக வாழ்த்திய A.R.ரஹ்மான் – சம்பிரதாயமாக வாழ்த்திய ரஜினிகாந்த்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல் முறையாக முதல்அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் அதில் சமூகநீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடுவரலாறுகாணாதவளர்ச்சி அடையஇந்தியாவின்ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, திமுக கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார் தேர்தல் அது சார்ந்த வெற்றிதோல்வி சம்பந்தமாக இதுவரைரஹ்மான் வாழ்த்து செய்திகள் தெரிவித்தது இல்லை முதல்முறையாக தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல் முறையாக முதல்வர் பொறுப்பு ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அரசியல் சார்ந்து வாழ்த்து செய்தியை வெளியிட்டிருப்பது திரையுலகில் மட்டுமல்லாது அகில இந்திய அரசியல் வட்டாரத்திலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தனக்கு என்று தனித்துவமான அரசியல் நிலை இருந்தாலும் பொதுவெளியில் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதில் நடிகர் ரஜினிகாந்த் எல்லா அரசியல் கட்சியினருக்கும் பொதுவானவராக…
Read Moreகலைப்புலி தாணு கனவை கலைத்த நடிகர் தனுஷ் – மாரிசெல்வராஜ்
தமிழ் சினிமாவில் இவர் நடித்து வெளிவரும் படங்கள் படைப்புரீதியாக அல்லது வசூல் அடிப்படையில் வெற்றிப்படங்களாகி வருகிறது அதனால் இவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் முட்டிமோதி வருகிறார்கள் ஆனால் அவரோ தான் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குனரை யாரும் எதிர்பாராத நிலையில்அறிவித்துஆச்சர்யத்தையும்அதிர்வுகளையும் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி வருகிறார் 40 படங்கள் வரை கதாநாயகனாக, கௌரவ தோற்றங்களில் நடித்திருக்கும் நடிகர் தனுஷ் இதுவரை இப்படி எந்த ஒரு இயக்குனருக்காகவும் அறிவிப்பை வெளியிட்டதில்லை முதன்முறையாக கர்ணன்படஇயக்குனர்மாரிசெல்வராஜ் உடன் இணைவதாக அமெரிக்காவில் இருந்து அறிவித்திருப்பதுமாரி செல்வராஜ்க்கே ஆச்சர்யம்தான் ஒரே இயக்குனரின் இயக்கத்தில் அடுத்தடுத்து தனுஷ் இதுவரை நடித்தது இல்லை அந்த அதிசயம் மாரிசெல்வராஜ் விஷயத்தில் நடந்திருக்கிறது இதற்கு காரணம் “கர்ணன்” பாக்ஸ்ஆபீஸ் வெற்றியா அல்லது படைப்பு ரீதியான விமர்சனங்களா என்றால் இல்லை என்கிறது தனுஷ் வட்டாரம் நடிகர் தனுஷ் ரஜினிகாந்த்…
Read Moreகுரங்கை நம்பி தயாரிப்புக்கு திரும்பிய தேனாண்டாள் பிலிம்ஸ்
இந்திய சினிமாவில் 36 வருடங்களில் ஒன்பது மொழிகளில் 125 படங்களை இயக்கி உலக சாதனையாளர் பட்டியலில் இடம்பெற்றவர் மறைந்த இயக்குனர் இராமநாராயணன் குறைந்தபட்ஜெட்டில் நடிகர்களின் கால்ஷீட், சம்பள பிரச்சினை இல்லாமல் விலங்குகளை வைத்து படம் தயாரிப்பதிலும், இயக்குவதிலும் வெற்றிகண்டவர் இராமநாராயணன் மறைவுக்கு பின் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் பொறுப்புக்கு வந்த அவரது மகன் முரளி@ராமசாமி பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரிக்க தொடங்கினார் 99 படங்களை தயாரித்திருந்த இந்த நிறுவனம் விஜய் நடித்த “மெர்சல்” படத்தை தயாரித்ததன் மூலம் பெரும் நிதி நெருக்கடிக்கு உள்ளானது தேனாண்டாள் பிலிம்ஸ் இதனால் தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட முடியாத நிலையில் இருந்தது தேனாண்டாள் பிலிம்ஸ் இராம நாராயணன் வெற்றி பார்முலாவைமீண்டும் கடைப்பிடிக்கும் வகையில்இந்திய திரை உலக வரலாற்றில் முதன்முறையாக அனிமேட்ரானிக்ஸ் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்ப முறையில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட ராட்சச குரங்கு…
Read Moreபாலசந்தர் – பாரதிராஜாவை இயக்கிய தாமிரா காலமானார்
கொரானா நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட ரெட்டைச் சுழி, ஆண் தேவதை படங்களின் இயக்குனர் தாமிரா@சேக்தாவூத்(53) இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானர் இயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக தொழில் கற்ற தாமிரா பின்னர் அவரையும், பாரதிராஜாவையும் இணைந்து நடிக்க வைத்து ரெட்டை சுழி படத்தை இயக்கினார் இயக்குனர் சமுத்திரகனியுடன் பாலசந்தர் குருகுலத்தில் இணைந்து பணியாற்றியவர் என்பதால் அவர் நடித்த ஆண் தேவதை படத்தையும் 2018 ல் இயக்கினார் ஜெமினி நிறுவனத்துக்காக படம் இயக்க கதை தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது கொரானா வால் பாதிக்கப்பட்டிருக்கிறார் தாமிரா இருவாரங்களுக்கு முன்பு சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டார் குணமாகி வருவார் என திரையுலகினர் எதிர்பார்த்து காத்திருந்தவேளையில் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்திருக்கிறது திருநெல்வேலி பூர்விகமாக கொண்ட தாமிராவுக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் முகநூல்…
Read Moreஆஸ்கர் விருது போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பெண்கள்
சினிமா ரசிகர்களால், திரைப்பட துறைசார்ந்தவர்களால் உயர்ந்த கௌரவமாக கருதப்படும் 93வதுஆஸ்கர் விருது ஏப்ரல் 25 அன்று அறிவிக்கப்பட்டதுஎப்போதும் வியாபார முக்கியத்துவமுள்ள ஆண்கள் அதிக அளவில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் 93வது ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் அதிகளவு பெண்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர் அதேபோன்று விருது வென்றவர்கள் பட்டியலிலும் பெண்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்கோல்டன் குளோப் விருதை வென்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “நோமேட்லேண்ட்” சிறந்த திரைப்படம், இயக்கம், நடிப்பு என பல பிரிவுககளில் விருதை பெற காரணமாக இருந்த இப்படத்தின் இயக்குனர் க்ளோயிஸாவ் பெண் என்பதுடன் ஆஸ்கர் விருதை பெறும் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்தப் படத்தின் கதையும் வேலை இழந்த ஒரு பெண் பற்றிய கதையாகும்நோமேட்லேண்ட் படத்தில் நாயகியாக நடித்துள்ள ஃபிரான்சிஸ் மெக்டார் மண்ட் மூன்றாவது முறையாக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெறுகிறார்தென் கொரிய…
Read Moreவீரப்பனின் கஜானாவில் மொட்டை ராஜேந்திரன் – யோகிபாபு
“காட்டுக்கும், மனிதனுக்கும் பிரிக்க முடியாத பந்தம் இருக்கிறது. ஆதி மனிதன் காட்டில்தான் வாழ்ந்தான். நாகரிகம் வளர்ச்சி அடைந்து கிராமம், நகரம் என்று மாறியது. என்றாலும் காட்டின் மீது மனிதனுக்கு மோகம் இருந்து வருகிறது. அந்த காட்டின் பெருமையை பேசும் படமாக, ‘வீரப்பனின் கஜானா’ தயாராகி இருக்கிறது” என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் யாசின்.காட்டுக்கும், மனிதனுக்கும் பிரிக்க முடியாத பந்தம் இருக்கிறது. ஆதி மனிதன் காட்டில்தான் வாழ்ந்தான். நாகரிகம் வளர்ச்சி அடைந்து கிராமம், நகரம் என்று மாறியது. என்றாலும் காட்டின் மீது மனிதனுக்கு மோகம் இருந்து வருகிறது. அந்த காட்டின் பெருமையை பேசும் படமாக, ‘வீரப்பனின் கஜானா’ தயாராகி இருக்கிறது” என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் யாசின். இவர் மேலும் கூறியதாவது:- “வீரப்பன் சம்பந்தமான காட்சிகள் படத்தில் முக்கிய இடம்பெற்றுள்ளன. குரங்கு, யானை, புலி என குழந்தைகளை குதூகலப்படுத்தும்…
Read Moreசன்னி லியோன் நடிக்கும் காமெடி தமிழ் படம்
நகைச்சுவை-திகில் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். நகைச்சுவை, திகில் இரண்டும் சரிசம விகிதத்தில் கலந்திருக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுள்ளன. அந்த வகையில், வரலாற்று பின்னணியில் ஒரு நகைச்சுவை-திகில் படம் தயாராகிறது.அதில், சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், சஞ்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். யுவன் டைரக்டு செய்கிறார். இவர், ‘சிந்தனை செய்’ படத்தை இயக்கியவர். டி.வி.சக்தி, கே.சசிகுமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். சென்னை, பெரம்பலூர் துறைமுகம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
Read Moreமகேஷ்பாபுவை இயக்கபோகும் லோகேஷ் கனகராஜ்
விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை டைரக்டு செய்தவர், லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்து கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அந்த படத்தை இயக்கி முடித்த பின், மீண்டும் அவர் விஜய் நடிக்கும் படத்தை டைரக்டு செய்யப்போவதாக பேசப்படுகிறது. இதற்கிடையில், தெலுங்கில் பிரமாண்டமான படங்களை தயாரித்து வரும் மைத்ரி மூவீஸ் என்ற பட நிறுவனம் லோகேஷ் கனகராஜை சந்தித்து தங்கள் நிறுவனத்துக்காக ஒரு தெலுங்கு படத்தை டைரக்டு செய்து தரும்படி, கேட்டுக் கொண்டிருக்கிறதாம். இதற்காக லோகேஷ் கனகராஜிடம் ஒரு பெரிய தொகையை அட்வான்ஸ் ஆக கொடுத்து இருக்கிறதாம். மேலும் பிரபாஸ், ராம் சரண் ஆகிய இருவரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்கள். இப்போது விஜய் நடிக்கும் 66-வது படத்தை முடித்த பின், மகேஷ்பாபுவை வைத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்க இருப்பதாக கூறப்…
Read Moreகொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட வலிமை
கொரோனா -2ஆவது அலை காரணமாக அஜித்தின் ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- “எங்கள் நிறுவனத்தில் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் மே 1ம் தேதி அஜித்குமாரின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவதாக கூறியிருந்தோம். அந்த அறிவிப்பு வெளிவரும்போது கொரோனா இரண்டாவது அலை வரும் என்றோ, அதன் தாக்கம் சுனாமி போல இருக்கும் என்றோ எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரத்தை இழந்து உற்றார், உறவினர் உயிரிழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்திருக்கின்றனர். மேலும், இந்த அசாதாரண சூழ்நிலையில் ஜீ ஸ்டுடியோஸ், பே வியூ புராஜக்ட்ஸ், படத்தில் நடித்துள்ள கலைஞர்கள், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்துள்ள…
Read Moreவிஷால், சிம்புவை நிராகரித்த கார்ப்பரேட் நிறுவனம்
தமிழில் திரைப்படங்கள் எடுக்க ஒரு பன்னாட்டு நிறுவனம் முன்வந்தது. அந்நிறுவனம் நேரடியாகத் தயாரிப்பில் இறங்காமல் ஏற்கெனெவே படத்தயாரிப்பில் இருக்கும் பெரிய நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிப்பதென முடிவு செய்ததாம். பன்னாட்டு நிறுவனம் பணம் போடும். தயாரிப்பு நிறுவனம் படத்தைத் தயாரித்துக் கொடுக்கவேண்டும் என்பது ஒப்பந்தம்.இவர்கள் முதலில் விஷாலை கதாநாயகனாக வைத்துப் படமெடுக்கலாம் என்று அவரை அணுகினார்களாம். தொடக்கத்தில் பேச்சுவார்த்தை நன்றாகப் போய்க்கொண்டிருந்ததாம். பெரிய சம்பளம் பேசி முன் தொகை கொடுக்கும் நேரத்தில் விஷாலின் சக்ரா படம் வெளீயீடு வேலைகள் வந்தன. படம் வெளியான பின்பு இந்தப்படத்துக்கு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என்று விஷால் சக்ரா பட வேலைகளில் இறங்கினாராம். படம் வெளியாகி சரியாகப் போகவில்லை என்றதும் பன்னாட்டு நிறுவனம் பின்வாங்கிவிட்டதாம்.விஷால் வேண்டாம் வேறு நாயகர்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். இங்குள்ள தயாரிப்பு நிறுவனம் சிம்புவைப் பரிந்துரை…
Read Moreகோப்ரா படப்பிடிப்பு பணிகள் தாமதம் ஏன்?
விக்ரம் இப்போது, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா.மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.கோப்ரா படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி,கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிகுமார், மிருணாளினி உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்துள்ளனர். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.இது விக்ரமின் 58 ஆவது படம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் , விக்ரமின் 59 ஆவது படம் என்கிறார்கள். இவ்விரண்டு படங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட படம் விக்ரம் 60. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகன் துருவ் விக்ரம் உடன் இணைந்து விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் படம் விக்ரமின் 60 ஆவது படம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் கோப்ரா மற்றும் விக்ரம் 60 ஆகிய இருபடங்களையும் லலித்குமார்…
Read Moreவிஜய்65 படப்பிடிப்பில் கொரானா தொற்று பாதித்த ஊழியர்
விஜய் நடிக்கும் புதிய படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசைய்மைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படம் விஜய் 65 என்று அழைக்கப்படுகிறது. இந்தப்படத்தில் நாயகியாக பூஜாஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கெனவே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படம் பற்றிய அறிவிப்பு டிசம்பர் 10,2020 அன்று வெளீயானது.ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்துவருகிறது. சண்டைக்காட்சி மற்றும் பாடல் காட்சி படமாக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.சுமார் நூறு பேர் கொண்ட படக்குழுவினர் இப்படப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்றுள்ளனர். அவர்கள் அனைவருக்குமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகுதான் விமானத்தில் ஏற்றினார்களாம். அங்கு போயும் பரிசோதனை செய்யப்பட்டதாம். அதன்பின் அனைவரும் படப்பிடிப்புப் பணியில் ஈடுபட்டனராம்.இவ்வளவுக்கும் பிறகு ஒளிப்பதிவு உதவியாளர் ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று…
Read Moreபாஜகவை வரலாறு மறக்கவும்,மன்னிக்கவும் செய்யாது – நடிகர் சித்தார்த்
வரலாறு உங்களை மறக்கவும் செய்யாது மன்னிக்கவும் செய்யாது என்று திரைப்பட நடிகர் சித்தார்த் மத்திய பாஜக அரசை விமர்சித்துட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கொரானா நோய்தொற்று இரண்டாவது அலை பரவி வரும் சூழலில், நோய்தொற்று பரவுவதை தடுக்க தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்த அவர் நெருக்கடியை சமாளிக்க ஐந்து விதமான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார் மன்மோகன்சிங் கடிதத்துக்குப் பதில் கடிதம் எழுதியிருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், அந்த கடிதத்தைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இணைத்து இது போன்ற கடினமான காலத்தில் உங்களுடைய கட்சிக்காரர்களுக்கு பொன்னான அறிவுரை வழங்கி ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நீங்கள் அளித்தால் வரலாறு உங்களிடம் கருணையுடன் இருக்கும் என்று பதிவிட்டிருந்தார் திரைப்படநடிகர்சித்தார்த் அமைச்சர்ஹர்ஷவர்தனுடைய பதிலை கடுமையாக விமர்சித்துள்ளார் அவரது ட்விட்டர் பக்கத்தில்” நீங்கள் கொரானாவுக்கு எதிராக…
Read Moreஅதிக கொரானபாதிப்புகளில் தமிழ்நாடு மத்திய அரசு எச்சரிக்கை
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் மத்திய அரசு மீதுகடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில்… இன்று (ஏப்ரல் 21) காலை வரை 13 கோடி பேருக்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இன்று (ஏப்ரல் 21) பகலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரங்களில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. “ கொரோனா தொற்றுக்கு எதிரான உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ், இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 13 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை 7 மணி வரை, 19,01,413 முகாம்களில் 13,01,19,310 பயனாளிகளுக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 29 லட்சம் டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 95-வது நாளான நேற்று (ஏப்ரல் 20, 2021), நாடு முழுவதும் 29,90,197 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24…
Read Moreதமிழக ஆக்ஸிசன் தட்டிப்பறிக்கப்பட்டது எப்படி
தடுப்பூசிகளை வீணடித்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதல் மாநிலம் என்ற அவல நிலையை அ.தி.மு.க. அரசு உருவாக்கியிருப்பதும், நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழலில் 9300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருப்பதும் பேரதிர்ச்சியளிக்கிறது”என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியா முழுதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மருத்துவமனைகளில் கடுமையாக இருக்கிறது. மருத்துவ ரீதியான ஆக்ஸிஜன் இல்லாமையால் கொரோனா நோயாளிகள் பலர் இறப்பதாக தகவல்கள் வருகின்றன. மேலும் வட மாநிலங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொள்ளையடித்துச் செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்துக்கும் ஆக்ஸிஜன் தேவை இருக்கும் நிலையில் தமிழகத்தில் இருந்து தமிழக அரசுக்கே தெரியாமல் ஆக்ஸிஜன் வெளி மாநிலங்களுக்கு மத்திய அரசால் அனுப்பப்பட்டுள்ளதாக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
Read Moreதேமுதிகவில் வேட்பாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி-அதிரடி மாற்றத்துக்கு தயாராகும் தலைமை
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பின் எல்லா கட்சி தலைமையும் எத்தனை இடங்களில் வெற்றிபெறுவோம் என்கிற ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் தலைமை தேர்தல் செலவுக்கும், வாக்களர்களுக்கும் என கொடுத்த பணம் கடைகோடி வரை செல்லாதவாறு கரன்சிகளை கவனமாக பதுக்கியவர்களை களை எடுக்கபட்டியல் தயாரித்து வருகின்றனர் விஜயகாந்த் செயல்பட இயலாத குழலில் கட்சி தலைமையை கைப்பற்றிய பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் இருவரும் தமிழக அரசியல் அரங்கில் மாத்தி யோசித்து செயல்படுபவர்கள் என கூறுவார்கள் தமிழகம் முழுவதும் 60 தொகுதிகளில் அமமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக தனது வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்கு எதையும் திட்டமிட்டு செய்யவில்லை பிரேமலதா விஜயகாந்த் தான் போட்டியிட்டவிருதாசலம்தொகுதிக்குள் முடங்கிபோனார். எல்.கே.சுதீஷ் கொரானாவால் முடக்கப்பட்டார் வேறுவழியின்றி விஜயகாந்த் மௌனமாக கை உயர்த்தி முரசு சின்னத்திற்கு தமிழகம் முழுவதும் பிரயாணம் செய்துவாக்கு கேட்டார் அவரது மகன் விஜய்…
Read Moreபுதிய அரசு பொறுப்பேற்கும்வரை திரையரங்குகளை மூடுவதில்லை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு காரணமாக திரையரங்குகளை தொடர்ந்து நடத்துவதில் நெருக்கடி ஏற்பட்டு உள்ளதுஇம்மாதம் இறுதியில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட பெரிய படங்களும் மறு தேதி குறிப்பிடபடாமல் பட வெளியீட்டை ஒத்திவைப்பதாக அறிவித்து உள்ளனர் தற்போது திரையரங்குகளில் சுல்தான்,கர்ணன் ஆகிய இரு படங்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கின்றன கொரானா பயம் காரணமாக குடும்பங்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வருவதில்லை அதன் காரணமாக 20% பார்வையாளர்கள் படம் பார்க்க வருவதே அபூர்வமாக இருக்கின்றது. தியேட்டருக்கு பழைய, புதிய படங்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது இது சம்பந்தமாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று முன்தினம் இணையவழி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது ஏதேனும் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தும்போது மட்டுமே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தியேட்டரை மூடுவதாக சங்கம் முடிவு எடுக்க முடியும் அப்படிப்பட்ட சூழல் இப்போது…
Read Moreஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை இதில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடு அலட்சியம் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை கடும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தியா வெகுவிரைவில் முதலிடம் பிடித்து விடும் என கணிக்கிறார்கள் நிபுணர்கள். மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை. ஆக்ஸிஜன் இல்லை. ரெம்டேஸீவர் மருந்து இல்லை. தடுப்பூசிகள் இல்லை. ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம். பெரிய பெரிய தலைவர்கள் முதல் கடைக்கோடி மனிதர்கள் வரை நாளுக்கு நாள் தொற்று காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இந்த இரண்டாவது அலையில் குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை. பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வருபவர்களிடம் மது, புகை போன்ற பழக்கம் இருக்கிறதா என்பது பற்றியோ,…
Read Moreசோனியா, பிரியங்காவை சந்திக்காத ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதுபற்றி இன்று (ஏப்ரல் 20) தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து வெளியிட்டிருக்கும் ராகுல் காந்தி, “லேசான அறிகுறிகளை அனுபவித்த பிறகு, நான் சோதனை செய்துகொண்டதில் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.. சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவருமே, தயவுசெய்து அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்திக்கு வயது 50. “ராகுல் காந்தி கடந்த 12 நாட்களாகவே சோனியா காந்தியை சந்திக்கவில்லை. மேலும் கடந்த 5 நாட்களாக தனது சகோதரியான பிரியங்காவையும் சந்திக்கவில்லை. மருத்துவர்களின் அறிவுரைப்படி தனது வீட்டிலேயே இருந்து வருகிறார். தனக்கு உள்ளூர காய்ச்சல் போல இருந்ததால்தான், ராகுல் முன்னெச்சரிக்கையாக மேற்கு வங்காளத்தில் தான் செய்ய இருந்த பிரச்சாரப் பயணங்களை ரத்து செய்துவிட்டார்” என்கிறார்கள் ராகுலுக்கு…
Read Moreதேர்தல் தொடங்கி வாக்கு எண்ணிக்கை வரை கமல் அடுக்கும் புகார்
ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு குறித்து திமுக கூட்டணிக் கட்சிகள் கடுமையான புகார்களை கூறி வருகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றி மர்ம கன்டெய்னர்கள், ஸ்ட்ராங் ரூம் அருகே வைஃபை வசதிகள் செய்யப்படுவது குறித்து திமுக தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. இந்த நிலையில் இந்த புகார்களை மக்கள் நீதி மய்யமும் முதல் முறையாக எழுப்பியிருக்கிறது. தேர்தல் முடிந்ததும் தனது வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடத்திய கமல்ஹாசன், இன்று (ஏப்ரல் 20) தமிழகத்தின் தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவை சந்தித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலின் போது தன் கவனத்திற்கு வந்த சில பிரச்சனைகள், வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பில்…
Read Moreதமிழக பாஜக தலைவர் மீது டெல்லிக்கு போன புகார்கள்
சட்டமன்றத் தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கைக்கான இடைவெளியில் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் களத்தில் தங்களது நிர்வாகிகள் செயல்பட்ட விதம் பற்றி ஆய்வு நடத்தி வருகிறார்கள். தலைமை ஆய்வு நடத்துவது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் கட்சி நிர்வாகிகளே தலைமைக்கு புகார்களை அனுப்பி வருகிறார்கள். இந்த வகையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகனைப் பற்றி அக்கட்சியின் தேசிய தலைமைக்கு தமிழக நிர்வாகிகள் புகார்களை அனுப்பி வருகிறார்கள். “தமிழக பாஜக தனித்து நின்றால் 60 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது என்று தேர்தலுக்கு அதிரடியாக பேட்டியெல்லாம் கொடுத்தார் எல். முருகன். ஆனால் அமித்ஷா வந்து பேசிய பிறகும் கூட தமிழகத்தில் பாஜகவுக்கு 20 தொகுதிகளைத்தான் அதிமுக கொடுத்தது. தேர்தலையும் சந்தித்து முடித்துவிட்ட நிலையில், தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்கள் டெல்லி தலைமைக்கு சரமாரியான புகார்களை அனுப்பியுள்ளனர். ’எல்.முருகன் தனக்காக…
Read Moreதேர்தல் முடிவில் முதல்வருடன் முரண்படும் அமைச்சர் தங்கமணி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஏப்ரல் 19) குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது ஏற்கனவே மருத்துவர்களின் ஆலோசனையோடு திட்டமிடப்பட்ட ஒன்று என்கிறார்கள் முதல்வர் வட்டாரங்களில். இதற்கிடையே தேர்தலுக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு தரப்பினரிடமும் பேசி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தரவுகளையும் கள அனுபவம் மூலம் கிடைக்கும் தகவல்களையும் பெற்று வந்தார். முதல்வரின் தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டுவரும் சுனில், “அதிமுக கூட்டணி 85-90 இடங்களில் வெற்றிபெறுவது உறுதி. மேலும் ஒரு 27 தொகுதிகளில் கடுமையான இழுபறி நிலவுகிறது. அதிலும் அதிமுகவுக்கே அதிக தொகுதிகள் கிடைக்கும்” என்று முதல்வரிடம் ஒரு ரிப்போர்ட் அளித்திருந்ததாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இதற்கிடையே முன்னாள் உளவுத்துறை ஐஜியும், முதல்வருக்கு நெருக்கமானவருமான சத்தியமூர்த்தி தனி…
Read Moreமன்மோகன்சிங்குக்கும் கொரானா
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், டெல்லியில் இருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து நேற்று (ஏப்ரல் 19) அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்க, தடுப்பூசி நிறுவனங்களுடன் பேசுதல், உற்பத்தியை அதிகரிக்க போதுமான நிதியுதவியை வழங்குதல், மத்திய அரசு அவசர தேவைக்கான 10 சதவிகிதத் தடுப்பூசியை வைத்துக் கொண்டு மீதி 90 சதவிகிதம் தடுப்பூசிகளை மாநிலங்களே கையாள வேண்டுமென்றும் வற்புறுத்தியிருந்தார். இதற்குப் பதிலளித்து நேற்று (ஏப்ரல் 19) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியிருந்தார். “இந்தக் கடிதம் உங்களை பூரண உடல்நலத்தோடு…
Read Moreபுதிய தமிழ்படங்கள் வெளியீடு ஒத்திவைப்பு
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தபடுகிறது அதன் காரணமாக திரையரங்குகளில் இரவு காட்சி இரவு நேர ஊரடங்கு விலக்கிகொள்ளப்படும்வரையில் நடைபெற வாய்ப்பு இல்லை கொரானா தொற்று இரண்டாம் அலை அச்சத்தின் காரணமாக கடந்த ஒரு வார காலமாக திரையரங்குகிளில் 10% பார்வையாளர்கள்தான் தியேட்டருக்கு வருகின்றனர் குடும்பத்துடன் படம் பார்க்க வருவது முற்றிலுமாக நின்றுபோனது இந்த நிலையில் திரையரங்குகளில் 3 காட்சிகள் மட்டுமே50%பார்வையாளர்களுடன் படங்களை திரையிட முடியும் வெளிநாட்டு உரிமம், கேரளா, கர்னாடகா உரிமைகளின் மூலம் தேவையான அளவு வியாபாரம் கொரானாவுக்கு பின் இல்லை முழுக்க தமிழக திரையரங்குகள் மூலம் படத்தின் முதலீட்டில் 60% அசலை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் இதன் காரணமாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள “டாக்டர்” சசிக்குமார் – சத்யராஜ் நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள” எம்.ஜி.ஆர் மகன் ஆகிய படங்கள் தேதி குறிப்பிடாமல்…
Read Moreமீண்டும்ஒத்திவைக்கப்பட்ட டாக்டர் பட வெளியீடு
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் டாக்டர். இந்தப் படத்தின் ரிலீஸில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் உருவாகிவருகிறது. இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் மற்றும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படங்கள் படமாக்கும் ஸ்டேஜில் இருக்கிறது. இந்நிலையில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் டாக்டர் படம் முழுமையாக முடிந்து ரிலீஸூக்குத் தயாராகிவிட்டது. சிவகார்த்திகேயனுடன் வினய், ப்ரியங்கா மோகன், யோகிபாபு, இளவரசு உள்ளிட்ட பலர் நடிக்க அனிருத் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களுமே செம வைரல். இந்நிலையில், இப்படம் கடந்த மார்ச் 26ஆம் தேதி வெளியாகியிருக்க வேண்டியது. தேர்தல் காரணமாகத் தள்ளிப் போனது. அதன்பிறகு, டாக்டர் படம் வருகிற மே 13ஆம் தேதியான ரம்ஜான் பண்டிகை சிறப்பாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்போது, ரம்ஜானுக்கும் டாக்டர் இல்லை…
Read Moreஎட்டாண்டுகளுக்கு பின் இணையும் மதயானை கூட்டணி
2013 ஆம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான படம் ‘மதயானைக் கூட்டம்’. மக்கள் வரவேற்பைப் பெற்ற அப்படத்தில் கதிர், ஓவியா, கலையரசன், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்தின் மூலம்தான் கதிர் கதாநாயகனாக அறிமுகமானார்.‘மதயானைக் கூட்டம்’ படம் வெளியாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதிர் நாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கவுள்ளார். இப்படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கிறார். இதுகுறித்த அறிவிப்பை ஏப்ரல் 14 அன்று விப்ரா ரவிச்சந்திரன்வெளியிட்டிருந்தார். இப்பட அறிவிப்புக்குப் பின்னால் பல செய்திகள் இருக்கின்றன. திரையுலகில் பேசப்படுகிற அச்செய்திகள் என்னென்ன? 2019 ஆம் ஆண்டு ‘இராவணக் கோட்டம்’ என்ற படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார் விக்ரம் சுகுமாரன். இப்படத்தில் நாயகனாக சாந்தனு நடிக்கிறார். அப்படத்தின் முதல்பார்வையும் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு இடைவெளி விட்டுவிட்டு நடந்து வந்தது.இடையில்…
Read Moreவிவேக்கின் வெற்றியும்… தமிழக மக்களின் விழிப்புணர்வும்…
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும் பெப்சி தொழிலாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான வி.சி.குகநாதன் மறைந்த நடிகர் விவேக் இறுதி ஊர்வலம், அதில் கூடிய கூட்டம், மக்களின் உணர்வுகள் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் வெறும்கூட்டத்திற்கும், விவரமான ஊர்வலத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.சின்னக் கலைவாணர் என விவேக் அழைக்கப்பட்டதற்கு காரணம் அவர் கலையுலகின் மூலமாகவும், சொந்த வாழ்விலும் ஆற்றி வந்த பகுத்தறிவு பிரச்சாரம், தமிழருக்கான சமுதாய வளர்ச்சிப் பணிகள்.குத்தாட்ட நடிகைக்கு கூடுகின்ற கூட்டம் வேறு… விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் கண் நிறைந்த கண்ணீரோடு, மிகுந்த கட்டுப்பாட்டுடன் ஜாதி, மத, கட்சி பேதங்கள் இன்றி இளைஞர் கூட்டம், கலைஞர்கள் கூட்டம், பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்… பிரதமரின், முதல்வரின், எதிர்க்கட்சி தலைவர்களின் அர்த்தமுள்ள இரங்கல் செய்திகள் அனைத்துமே உண்மையானவை. உணர்வுப்பூர்வமானவை. சென்ற தலைமுறையின் ஒரு மாபெரும் திரைப்பட கலைஞன் ரயில் நிலையங்களில்…
Read Moreதியேட்டர்களை மூடலாமா தியேட்டர் உரிமையாளர்கள் அவசர கூட்டம்
தமிழகம் மீண்டும் ஒரு ஊரடங்கை எதிர்கொள்ளபோகிறது மனதளவில் மக்களை தயார்படுத்துவதற்கான முன்னோட்டம்தான் இரவு நேர ஊரடங்கு என்கிற பேச்சு அதிகரித்து வருகிறது இரவு 9 மணிக்கு ஊரடங்கு நடைமுறை தொடங்குவதால் திரையரங்க தொழில் முடங்க கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் முழுமையான ஊரடங்கு மக்களை பாதிக்காது என்கிற நோக்கத்தில் அரசால் எடுக்கப்பட்ட இந்த முடிவால் பிற தொழில்களை காட்டிலும் மோசமான நஷ்டத்தை திரையரங்க தொழில் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்கின்றனர் திரையரங்க வட்டாரத்தில் கொரானா ஊரடங்குக்கு பின் ஜனவரி மாதம் திரையரங்குக்கு பொதுமக்கள் படம் பார்க்க வர தொடங்கினார்கள் திரையரங்குகள் ஓரளவு மீண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது ஜனவரியில் மாஸ்டர் படத்திற்கு பின் பெரிதாக படங்கள் வெளிவராததால் 100க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் மூடிவைக்கப்பட்டது ஏப்ரல் மாதம் வெளியான சுல்தான்,கர்ணன் ஆகிய இரு படங்களும்…
Read Moreவிவேக் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது- தமிழக முதல்வர் அஞ்சலி
மறைந்த நடிகர் விவேக்கின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள நீண்ட இரங்கல் செய்தியில், “விவேக், தலைமைச் செயலகத்தில் பணியாற்றி பின்னர் திரைத்துறையில் நாட்டம் கொண்டு ’மனதில் உறுதி வேண்டும்’ என்ற படத்தின் மூலம் நடிகராகத் தனது கலையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகில் சிறந்த நடிகராகத் தனது ஆளுமையைக் கோலோச்சியவர். விவேக் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தசமூகஆர்வலர்.இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். சுற்றுச்சூழல், மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாகத் திகழ்ந்தவர். அதுமட்டுமின்றி மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் வகையில் ‘க்ரீன் கலாம்’ என்ற அமைப்பின் மூலம் 1 கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக்…
Read Moreவைரலான விவேக்கின் ட்விட் – விவேக் நினைவுகள் – 3
மறைந்த நடிகர் விவேக்கிற்கு இணையதளத்திலும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில், #விவேக் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. நடிகர் விவேக் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்தவர். ஆன்மீக கருத்துக்கள், விவேகானந்தர், வள்ளலார் குறித்த கருத்துக்களை அவர் பதிவு செய்தது பலரையும் கவர்ந்தது.அதுபோன்று நடிகர் விவேக் கடந்த மாதம் பதிவிட்ட ட்வீட் ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது. “எளிய தன்னலமற்ற தூய வாழ்வும் ஓர் நாள் முடிந்துதான் போகிறது! எனினும் பலர் இறப்பர்; சிலரே, இறப்பிற்குப் பின்னும் இருப்பர்!!” என்று தா.பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விவேக் பதிவிட்ட ட்வீட்டை பலரும் சேர் செய்து வருகின்றனர். இதைப் பகிர்ந்து நீங்களும் இறப்பிற்குப் பின்னும் இருப்பீர்கள் விவேக் சார் என்று இணையவாசிகள் கண்ணீர் வடிக்கின்றனர். அதுபோன்று அவர் நட்ட மரங்கள் மூலம் என்றும் இயற்கையாய் நம்முடன் வாழ்ந்து…
Read Moreகாலன் விளையாடியது தெரியாமல் விளையாடும் குழந்தைகள் – விவேக் நினைவுகள் – 2
திரைக் கலைஞரான விவேக் 59 வயதிலேயே மாரடைப்பால் மரணம் அடைந்த தகவல் அவரது ரத்த சம்பந்தம் இல்லாதவர்களைக் கூட உலுக்கிக் கொண்டிருக்கிறது. அறிமுகம் இல்லாதவர்கள், அவரை திரையில் மட்டுமே ரசித்த கோடிக்கணக்கானோர் துயருற்றுக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில் தங்கள் அப்பாவை இழந்த அந்த இரு பிஞ்சுகள் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிற காட்சி விவேக்கின் குடும்ப நன்பர்களையும், உறவினர்களையும் மனதைச் சுட்டுக் கொண்டிருக்கிறது.தனது செல்ல மகன் பிரசன்ன குமார் 13 ஆவது வயதிலேயே 2015 ஆம் ஆண்டு மூளைக் காய்ச்சலால் இறந்துபோனது விவேக்கை மிகக் கடுமையாகத் தாக்கிவிட்டது., புத்திர சோகத்தில் இருந்து மீளமுடியாதவராக இருந்த விவேக்கிடம், அவரது மருத்துவ நண்பர்கள், ‘என்னப்பா… மருத்துவ அறிவியல் உதவியோட உனக்கு இன்னொரு ஆண் குழந்தையை பெத்துக்கலாம்’ என்று தைரியமூட்டினார்கள்.அவர்களின் ஆலோசனையின் பேரில் ஜிஜி செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் விவேக் தம்பதியினர் சிகிச்சை எடுத்துக்…
Read Moreஅறுபதுக்கு அப்புறம் பார்க்கலாம் – விவேக் நினைவுகள் – 1
விவேக் என்றால் விழிப்புணர்வு என்றே அவருக்கு அஞ்சலி செலுத்தும் பலரும் குறிப்பிட்டு நெகிழ்ந்து வருகிறார்கள். அதேநேரம் விவேக்கின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த நண்பர்கள் பலரும், ‘இப்படி விழிப்புணர்வு இல்லாமல் வாழ்வையே கோட்டை விட்டுட்டாரே?” என்று உரிமையோடு கண்ணீர் சிந்துகிறார்கள். எதில் விழிப்புணர்வு இல்லாமல் விட்டுவிட்டார் விவேக்? அவரது நண்பர்களிடமே பேசினோம். “பொதுவாகவே தன்னைச் சுற்றியுள்ள தனக்கு நெருக்கமான நண்பர்களின் உடல் நலம் மேல் அக்கறையும் ஆர்வமும் அதிகம் செலுத்துபவர் விவேக். தன் நண்பர்களுக்கு ஏதாவது என்றால் உடனே தனது டாக்டர் நண்பர்களின் நம்பரைக் கொடுத்து பேசச் சொல்லுவார். தானும் பேசி உடனே சிகிச்சை மேற்கொள்ள வலியுறுத்துவார். அதுவும் குறிப்பாக கொரோனா காலத்தில் கடந்த ஏழெட்டு மாதங்களாக விவேக்கின் வேலையே வீட்டில் இருந்தபடியே தனது நண்பர்களுக்கு போன் போட்டு, ‘ஜாக்கிரதையா இருங்க. வெளியில வராதீங்க. மாஸ்க் போட்டுக்கங்க’என்றெல்லாம் அக்கறை…
Read Moreகாவல்துறை மரியாதையுடன் காற்றில் கரைந்தார் நடிகர் விவேக்
நடிகர் விவேக் சமூக அக்கறையுள்ள கலைஞர். மக்கள் மீதான அக்கறை, சுற்றுச் சூழல், மரம் நடுதல் ஆகியனவற்றில் அவரது பங்களிப்பு வரவேற்கத்தக்கது. அவரது கடைசி நிகழ்ச்சி கொரோனா பரவலைத்தடுக்க மக்கள் தடுப்பூசி போடவேண்டும் என்பதற்காக, தானே தடுப்பூசி போட்டு வேண்டுகோள் விட்டார். அவரது கடைசி நிகழ்ச்சியாக அது அமைந்தது, அதன் பின்னர் நேற்று காலை வீட்டிலிருந்த அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். உடனடியாக அவருக்கு உயரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு எக்மோ கருவி மூலம் இதயத் துடிப்பு இயங்க வைக்கப்பட்டது. காலையில் மீண்டும் ஏற்பட்ட மாரடைப்பு அவர் உயிரைப் பறித்தது. அவரது மறைவு செய்தி கேட்டு திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. திரையுலகினர், இரசிகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அப்துல் கலாமின் பெயரால் ஒரு கோடி மரம் நடும் இயக்கத்தைத்…
Read Moreஅபாய கட்டத்தில் நடிகர் விவேக்
திடீர் மாரடைப்பால் இன்று காலை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நகைச்சுவை நடிகர் விவேக். தற்போது அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விவேக் நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டது பல தரப்பினரிடையேயும், சந்தேகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படவில்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவேக் உடல் நிலை குறித்து மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தனர். மருத்துவர்கள் கூறுகையில் “இன்று காலை மருத்துவமனைக்கு விவேக் குடும்பத்தினர் சுயநினைவின்றி அவரை அழைத்து வந்தனர். உடனடியாக எமெர்ஜென்சி குழுவும், இருதயநோய் மருத்துவ குழுவும் அவசர…
Read Moreஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா
தான் நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் தன்னை அழகுபடுத்திக்கொள்ளும் நடிகை ஐஸ்வர்யாராஜேஷ் தமிழ், தெலுங்குபடங்களில் நடித்து வரும் இவர்வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள “டிரைவர் ஜமுனா” படத்தில் நடிக்கவுள்ளார் இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக,பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான எஸ்.பி.செளத்ரி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் தயாரிக்கின்றார். இந்தப் படத்தின் கதையைக் கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், உடனடியாக இதில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதாக கூறினார் தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்திரி ‘டிரைவர் ஜமுனா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். கிரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார்படத்தின் ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், சண்டைக் காட்சிகளை அனல் அரசு, எடிட்டராக ‘அசுரன்’ எடிட்டர் ஆர்.ராமர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இன்றைய…
Read Moreபாரதியார் பேரன் இசையமைத்துள்ள வேதாந்த தேசிகர் படம்
தமிழ்சினிமாவில் பாரம்பரிய மிக்க தயாரிப்பு நிறுவனங்களில் தவிர்க்க முடியாத நிறுவனம் முக்தா பிலிம்ஸ் தயாரிப்பு துறையில் 60 வருடங்களை கடந்து நிற்கும் சில நிறுவனங்களில் முக்தா பிலிம்ஸ் நிறுவனமும் ஒன்று இந்நிறுவனத்தை தொடங்கிய முக்தா சீனிவாசன் இயக்கிய முதல் படம் “முதலாளி” ஜனாதிபதி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் அறிமுகமான தாமரைக்குளம் படத்தைதயாரித்த நிறுவனம் என்கிற பெருமைக்குரியது இந்நிறுவனத்தின் சார்பில் சிவாஜி கணேசன் நடித்த அந்தமான்காதலி, கமல்ஹாசன் நடித்த நாயகன், ரஜினிகாந்த நடிப்பில் சிவப்பு சூரியன் பொல்லாதவன் உட்பட 61 படங்களை தயாரித்து வெளியிட்ட முக்தா பிலிம்ஸ் நிறுவனம் தற்போது வேதாந்த தேசிகர் என்ற வராலாற்று பின்புலம் கொண்ட படத்தைத் தயாரித்துள்ளது. ஆன்மிக மகான்களில் தனித்துவமானவர் வேதாந்த தேசிகர். அவரது அறம் சார்ந்த ஆன்மிக சேவையை, வாழ்வை யாருமே இதுவரை திரைப்படத்தில் பதிவு…
Read Moreபுதிய தொழில்நுட்பத்தில் டைட்டில் வெளியான முதல் தமிழ் படம்”பார்டர்”
ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பார்டர்’. அருண் விஜய்,அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார்.’AV31′ என பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் மூத்த நடிகர் விஜயகுமார், தயாரிப்பாளர் டி. சிவா, இயக்குனர், அறிவழகன், நடிகர் அருண் விஜய், நடிகை ஸ்ஃடெபி பட்டேல், இசையமைப்பாளர் சாம் சி எஸ், பாடலாசிரியர் விவேகா, இயக்குனர் ஏ. எல் விஜய், இயக்குனர் கார்த்திக் நரேன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவின் தொடக்கமாக சென்னையின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ‘த பார்க்’ நட்சத்திர ஹோட்டலில்…
Read Moreஅந்நியன் மொழிமாற்றுக்கு எதிராக ஆஸ்கார் ரவிச்சந்திரன் நடவடிக்கை
இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. அதனால், இயக்குநர் ஷங்கர்,தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் 50 ஆவது படமாக அது உருவாகவிருக்கிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் அந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் தில்ராஜு இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 14,2021) வெளியான செய்திகளில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் இந்திப் படமொன்றை ஷங்கர் இயக்குகிறார்.இந்தப் படம் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அந்நியன்’ படத்தின் மொழிமாற்று என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. இதனைத்…
Read Moreதிருநங்கை தினத்தில் அவர்களுக்காக வெளியிடப்பட்ட” இலக்கணப்பிழை”
தமிழ் சினிமாவில் திருநங்கைகளை மையப்படுத்தி அவ்வபோது சில படங்கள் வெளிவருவதுண்டு. சில ஆண்டுகளுக்குமுன் விஜய்சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். இப்போது திருநங்கைகள் தினத்துக்காக ஒரு பாடல் உருவாகியுள்ளது. சமூகத்தில் தாங்கள் செய்யாத குற்றத்திற்காக ஏளனப் பார்வை, தீண்டாமை என்னும் தண்டனை அனுபவித்து வரும் பாவப்பட்ட ஜீவன்கள் திருநங்கைகள்தான். எனவே, அவர்களின் சமூகப் பாதுகாப்பைக் கருதி, அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் நாளை ‘திருநங்கையர் நாள்’ எனக் கொண்டாட தமிழக அரசு மார்ச் 11, 2011 அன்று அரசாணை பிறப்பித்தது. திருநங்கைகள் தினத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை இசையமைப்பாளர் டி.இமானால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடகர் திருமூர்த்தி உருக்கமான குரலில் பாடியுள்ளார். இவர் செவ்வந்தியே மதுவந்தியே பாடல்மூலம் புகழ் பெற்றவர். கொரானா பரவலால் பாடகர் திருமூர்த்தி சென்னை வர இயலாத சூழலில்…
Read Moreஇயக்குனர் ஹரிக்காக விட்டுக் கொடுத்த மிஷ்கின்
ஒரு படத்துக்கான அறிவிப்பு வெளியாவது எளிது. இந்த இயக்குநர் படத்தில் அந்த நடிகர் நடிக்கிறார் என்றெல்லாம் அறிவிப்பு வரலாம். ஆனால், அந்தப் படம் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டுமென்றால் தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். தயாரிப்பாளர் இல்லாமல் ஒரு படம் உருவாகாது. அப்படி, எத்தனையோ படங்கள் தயாரிப்பாளர் கிடைக்காமல் வெயிட்டிங்கில் இருக்கும்.சான்றாக, தனுஷ் நடிக்க செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் -2 படம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அந்தப் படத்துக்கான தயாரிப்பாளர் உறுதியாகவில்லை. தயாரிப்பாளர் கிடைத்தால் தான் ஆயிரத்தில் ஒருவன்-2 அடுத்த கட்டத்துக்கு நகரும். இன்னொரு சான்று கூட சொல்லலாம், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க அருவா படம் தயாராக இருந்தது. ஆனால், சூர்யாவுக்கு ஹரி சொன்ன கதையில் கருத்து வேறுபாடு இருந்ததால் அது இப்போதைக்கு நடக்காது என்றாகிவிட்டது. அதன்பிறகே, அருண்விஜய் நடிக்க ஹரி இயக்க…
Read Moreவாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு பலப்படுத்த மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அரசியல் கட்சியினர் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங்க் ரூம்களை ஊடுருவ முயற்சி நடப்பதாகவும், அதனை நிறுத்தக் கோரியும் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையரிடம் அந்த கடிதத்தை கொடுத்திருக்கின்றனர். அக்கடிதத்தின் முழு விவரம்… “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு 6.4.2021 அன்று நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குப் பதிவு முடிந்த பிறகு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்குச்சாவடியிலும் உள்ள கன்ட்ரோல் யூனிட்ஸ், பேலட் யூனிட்ஸ் ஆகியவை “சுவிட்ச் ஆஃப்” (பேட்டரிகளை எடுக்காமல்- செயலற்ற வடிவில்…
Read Moreஓய்வு எடுக்ககொடைக்கானல் சென்றார் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மாப்பிள்ளை சபரீசன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் இன்று (ஏப்ரல் 16) நான்குநாள் பயணமாக கொடைக்கானல் சென்றனர்.தேர்தல் பணிகளுக்குப் பிறகு சிறிது ஓய்வெடுத்துக் கொள்ள நினைத்த ஸ்டாலின், வெளிநாட்டுப் பயண திட்டங்களைத் தவிர்த்து தான் ஏற்கனவே வந்து சென்ற கொடைக்கானலையே மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் பிற்பகல் 12.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்டு கொடைக்கானல் தாம்ரா ஹோட்டலுக்கு 3.30க்கு சென்று சேர்ந்தனர் ஸ்டாலினும், குடும்பத்தினரும்.கொரோனா பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட பயணம் காரணமாக எந்த இடத்திலும் கட்சியினர் வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று ஏற்கனவே தெரிவித்துவிட்டார் ஸ்டாலின். எனவே வழக்கமான வரவேற்பு…
Read Moreநடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருப்பவர் நடிகர் விவேக். நடிப்பு மட்டுமின்றி சமூக விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். கொரோனா பரவும் சூழலில் மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வில் ஈடுபட்டார்.கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களுக்குத் தயக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில், நேற்று, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனா தடுப்பூசி குறித்து பலவித வதந்திகள் பொதுமக்களிடையே உலா வருகின்றன. தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நமக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. பாதுகாப்பு உண்டு. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மருத்துவமனையில் நான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். தடுப்பூசி மட்டும்தான் மருத்துவ ரீதியான ஒரேயொரு பாதுகாப்பு. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கொரோனா வராது…
Read Moreசீமானின் நாம் தமிழர் கட்சி எதிர்காலம்?
முத்துவேலர் கருணாநிதியை ஈன்றெடுத்த திருக்குவளைக்குப் பக்கத்து ஊர் அந்த 23 வயது இளைஞனுக்கு. பட்டயப்படிப்பு முடித்துவிட்டு, துபாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அந்த இளைஞன், விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தபோது, திருவாரூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்துக்குப் போய்விட்டு, இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த விபத்து நடந்தது. தலையில் பலத்த அடி. நினைவு போய் விட்டது. கை, கால்கள் எல்லாவற்றிலும் பலத்த காயம். கிட்டத்தட்ட கோமா நிலை. கடுமையான வறுமைக்கு உள்ளான குடும்பத்திலிருந்து தலையெடுத்து வந்த தலைமகன். தங்கைக்குத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு, தாய், தந்தைக்காக சின்னதாக ஒரு வீடும் கட்டிவிட்டு, பேருவகையோடு தன் இதயத்தை வென்ற தலைவனின் தன்னிகரற்ற பேச்சைக் கேட்டுவிட்டுத் திரும்பும்போதுதான் அந்த விபத்து. தஞ்சையில் சிகிச்சைக்குச் சேர்த்து, வீட்டை விற்று, சேமிப்பையெல்லாம் கரைத்து, தன் மகனைக் காப்பாற்ற அந்த தாயும் தந்தையும் போராடினர்.…
Read Moreமேற்குவங்க முதல்வர் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பிரச்சாரம் செய்யத் தேர்தல்ஆணையம்தடைவிதித்துள்ளது.மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளன. இன்னும் நான்கு கட்ட வாக்குப்பதிவுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா என மூத்த தலைவர்கள் வங்கத்தில் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடந்த பிரச்சாரத்தின்போது முதல்வர் மம்தா பானர்ஜி விதிகளை மீறி பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மத்திய பாதுகாப்பு படையினருக்கு எதிராக மக்களைப் போராடத் தூண்டியதாகவும், முஸ்லிம் வாக்குகள் குறித்து விமர்சித்ததாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.தேர்தல் ஆணையத்தில் பாஜக தரப்பினர் புகார் அளித்திருந்த நிலையில்,…
Read Moreபதட்டத்தில் கர்ணன் திரையிட்ட திரையரங்குகள்
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜீத்குமார், விக்ரம்,சூர்யா, தனுஷ் ஆகியோர் நடித்த படங்கள் திரைக்கு வருகிறபோது தியேட்டர்களில் ஒருநாளுக்குரிய மொத்த காட்சிக்கான டிக்கட்டுகளை கூடுதல் விலை கொடுத்து ரசிகர் மன்றங்கள் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது வழக்கம் குறிப்பாக தென்மாவட்டங்களில் இதனை எல்லா ரசிகர்மன்ற தலைவர்களும் தொழிலாகவே செய்து வருகின்றனர் வசதிபடைத்த, கடன் வாங்கும் தகுதி படைத்த ரசிகர்மன்ற தலைவர்கள் குறிப்பிட்ட ஊர்களில் உள்ள தியேட்டர்களில் அவர்களே மினிமம் கேரண்டி அடிப்படையில் விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்து படங்களை வாடகைக்கு திரையிடுவது உண்டு கர்ணன் படத்தின் முதல் மூன்று நாட்களுக்கான காட்சிகளுக்கான டிக்கட்டுகளைபல ஊர்களில் ரசிகர்மன்றத்தின் சார்பில் மொத்தமாக வாங்கியுள்ளனர் அதுபோன்ற நடைமுறைகளை அனுமதிக்க வேண்டாம் இயல்பாக தியேட்டருக்கு படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் வந்தால் போதும் என தயாரிப்பு தரப்பு கறாராக கூறியுள்ளதாம் இதற்கு காரணம்…
Read Moreதிரெளபதி பாணியில் சமூகம் கொண்டாடும் கர்ணன்
தமிழகம் முழுவதும் கர்ணன் திரையரங்குகளில் கொரானா பரவலை பற்றிய பயமின்றி இளைஞர்கள் கூடி கல்லாவை நிரப்பி வருகின்றனர் படம் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் அதேபோன்று படத்தை பாராட்டி விமர்சனங்கள் சம அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது அசுரன் படம் வணிகரீதியாக வெற்றிபெற்ற பின் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாஸ் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை கர்ணன் இந்த இரண்டு படங்களை காட்டிலும் அதிகபட்ச வசூலை குவித்து வருகின்றது சாதிக்கு ஆதரவான படம் கர்ணன் என்கிற குற்றசாட்டு,விவாதம் முதல் நாளே சமூக வலைதளங்களில் தொடங்கியது இதனை முறியடிக்கவும் சாதி உரிமை பேசும் படமாக கர்ணன்அடையாளப்படுத்தபட்டு விடக்கூடாது என்பதற்காக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சினிமா, அரசியல், பொதுவானவர்கள் என அனைத்து தரப்பு VIP க்களிடமும் படம் பற்றி பாசிட்டுவான விமர்சனங்களை பதிவு செய்யுமாறு தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் வைத்திருக்கிறார் ஆனால்களநிலவரம்…
Read Moreகதை எழுதியதும் – தயாரிப்பாளரான அனுபவமும்-ஏ. ஆர்.ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், முதன்முறையாக கதை எழுதி தயாரித்திருக்கும் படம் “99 சாங்ஸ்”.இப்படம் ஏப்ரல் 16 இல் தமிழ் தெலுங்கு இந்தி உட்பட பல மொழிகளில் உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்துக்கான கதை எழுதியது எப்படி? தயாரிப்பாளரானது எப்படி? என்பவை உட்பட படத்தைப் பற்றிய பல அனுபங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் ஏ.ஆர்.ரகுமான். 1. 99 சாங்ஸ் படம் பற்றி…? பழைய மற்றும் புதிய உலகங்களுடனான ஒரு மனிதனின் போராட்டமே 99 சாங்ஸ்-ன் மையக்கருவாகும். அதற்கான மாற்று மருந்தாக இசை அமைகிறது. இத்திரைப்படத்தின் இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திறமைமிக்க நடிகர்களான ஏஹன் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ் ஆகியோரை அறிமுகப்படுத்துவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். மனிஷா கொய்ராலா மற்றும் லிசா ரே போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்கள் மற்றும் ரஞ்சித் பாரோட் மற்றும் ராகுல் ராம் போன்ற இசை…
Read Moreபொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாமதமாவதை உறுதிப்படுத்திய கார்த்தி
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இந்திய சினிமா உலகம் எதிர்பார்க்கும் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், கலை இயக்குநராக தோட்டாதரணி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். கொரானா தொற்று அச்சத்தால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஐதராபாத்தில் பிரமாண்டஅரங்குகள் அமைத்து சில முக்கிய காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளது படக்குழு. அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது என்று அறிவிக்கப்படவில்லை இந்நிலையில், ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியான’சுல்தான்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் கார்த்தி – ராஷ்மிகா இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்கள். அப்போது ‘பொன்னியின் செல்வன்’ குறித்த கார்த்தியிடம் கேட்கப்பட்டது.அதற்கு, எனது அடுத்த…
Read Moreதமிழ் சினிமாவுக்கு நம்பிக்கையூட்டிய கர்ணன்
தமிழக அரசியல், சமூகத்தில், ஊடகங்களில், தயாரிப்பாளர்கள் மத்தியில் கர்ணன் படத்திற்கு தமிழகம் முழுவதும் கிடைத்த ஓபனிங் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது சில இடங்களில் மாஸ்டர் படத்தின் முதல்நாள் வசூலை முறியடித்து முன்னேறியிருக்கிறது வசூல் விபரங்களை கேட்டு தமிழ்சினிமா வட்டாரம்ஆச்சரியப்பட்டு போயிருக்கிறது.கர்ணன் படம் திருநெல்வேலிக்கு அருகில் கோவில்பட்டியில் படமாக்கப்பட்டது 9.04.2021 காலை 5 மணி காட்சிக்கு திருநெல்வேலியில் வேன், டிராக்டர்களில் தேவேந்திர வேளாளர்கள் அமைப்பின் கொடியுடன் திரையரங்குகளில் குவிந்து படத்தை கொண்டாடி தீர்த்தனர் மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூலை காட்டிலும் இங்கு கர்ணன் அதிகம் வசூல் செய்திருக்கிறது முதல் நாள்மொத்த வசூல் 74 லட்ச ரூபாய் ஆகியுள்ளது மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், இராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய விநியோக பகுதியில் 36 திரைகளில் திரையிடப்பட்ட கர்ணன் படத்துக்கான ஓபனிங் விஜய், அஜீத் படங்களின். ஒபனிங்கை முறியடித்திருக்கிறது 36 திரைகளில்…
Read Moreகட்சிக்கு விழும் வாக்கு கமலுக்கு கிடைத்த தகவல்
இந்தத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிக்குமா, அதிமுக ஆட்சியைத் தக்கவைக்குமா என்ற கேள்விக்கு இணையாக அல்லது அதற்கும் மேலாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம், கமலும், சீமானும், தினகரனும் எந்தெந்தக் கட்சியின் வாக்குகளை எவ்வளவுக்குப் பிரிப்பார்கள் என்பதுதான். மற்றவர்களை அப்புறம் பார்க்கலாம். உலக நாயகன் முதன்முறையாகக் களம் இறங்கியிருக்கும் சட்டமன்றத் தேர்தல் இது என்ற வகையில், அவருக்கு எவ்வளவு வாக்குகள் விழும், அது யாருடைய வெற்றியை பாதிக்கும் என்பதுதான் படித்த, மேல்தட்டு மக்களிடம் நடக்கின்ற பட்டிமன்றமாக இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, கோவையில் மையம்கொண்ட மய்யத்தின் புயல், வாக்குப்பதிவுக்குப் பின்புதான் சென்னையில் நிலை கொண்டிருக்கிறது. ஏற்கெனவே காலில் ஏற்பட்ட காயத்தோடு, களத்தில் கலக்கிக்கொண்டிருந்த கமல், இப்போதுதான் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும், நமக்கு எவ்வளவு வாக்குகள் விழும் என்று…
Read Moreதமிழகத்தில் திமுகவுக்கு எதிராக 50 சீட்டுகளில் வெற்றி கிடைக்கும்
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகள் மொத்தமாக 50 சீட்டுகளுக்குக் குறைவாகவே பெறும் என்று திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளரான ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். ஆங்கிலத் தொலைக்காட்சியான தி ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பிரசாந்த் கிஷோர் தமிழகம், மேற்கு வங்காளம் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். மேற்கு வங்காளத்தில் பாஜக 200 இடங்களைப் பெறும் என்று அமித் ஷா உள்ளிட்டோர் கூறி வருகிறார்களே என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரசாந்த் கிஷோர், “பாஜகவுக்கு பண பலம் இருக்கிறது, மத்திய அரசு என்ற ஆட்சி பலம் இருக்கிறது. டெல்லி தேர்தலில்கூட அவர்கள் பல்வேறு மாநில முதல்வர்களை பிரச்சாரத்துக்கு இறக்கினார்கள். அதேபோல மேற்கு வங்காளத்திலும் இப்போது பல்வேறு பிரச்சாரர்களை களமிறக்கியுள்ளனர். ஆனால், களம் வேறு மாதிரி இருக்கிறது.…
Read Moreசைதாப்பேட்டை தொகுதியில் இலையும் -சூர்யனும் கூட்டணி
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுதும் பல தொகுதிகளில் ஆளுங்கட்சியான அதிமுக கூட்டணியும், எதிர்க்கட்சியான திமுக கூட்டணியும் வாக்காளர்களுக்குபணம் கொடுத்திருக்கின்றனர் அதிமுக சார்பில் குறிப்பாக அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் ஓட்டுக்கு 1,000 முதல் 2,000 ரூபாய் மற்றும் பரிசுப் பொருட்கள் என்று அமர்க்களப்பட்டிருக்கிறது. சற்றும் சளைக்காமல் திமுகவினர் 200 ரூபாயில் ஆரம்பித்து 700 ரூபாய், ஆயிரம் ரூபாய் என்று வாக்குக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஏப்ரல் 4,5 தேதிகளில் இந்த பணப் பட்டுவாடா சம்பவங்கள் தமிழகம் முழுக்க நடந்திருக்கின்றன. குறிப்பாக மாநகரமான சென்னையிலும் பல தொகுதிகளில் பணப் பட்டுவாடா தடபுடலாகவே நடந்திருக்கிறது. சென்னையின் அடித்தட்டு மக்கள் வாழக் கூடிய பகுதிகளில் இந்த பண விநியோகம் அடர்த்தியாகவும் அதிகமாகவும் நடந்திருக்கிறது.அதேநேரம்… ஆச்சரியம் ஆனால் உண்மை என்ற வகையில் சென்னையின் முக்கியமான…
Read Moreவேட்பாளர்களை மிரட்டும் கொரானா ஸ்ரீவில்லிபுத்தூர் மாதவராவ் மரணம்
சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2 ஆம் தேதிக்காக அனைவரும் காத்திருந்த நிலையில்… விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளரான மாதவராவ் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இன்று (ஏப்ரல் 11) காலமானார். அரசியல் வட்டாரங்களில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1987 முதல் காங்கிரஸில் தீவிரமாக இருந்தவர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்லையா. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். அவரோடு சென்னை, டெல்லி என்று அரசியலில் பயணித்து பலரை சந்தித்த நிலையில் தனது செல்லையா என்ற பெயரை மாதவராவ் என்று மாற்றிக் கொண்டார். மத்திய அமைச்சர் அருணாசலத்தின் ஆதரவில் சமையல் எரிவாயு ஏஜென்சி எடுத்து நடத்தத் தொடங்கினார். பின் அதையே தொழிலாக செய்தார். காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸின் நெருங்கிய…
Read Moreஅரக்கோணம் இரட்டைக் கொலை உண்மையில் நடந்தது என்ன?
அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட சோகனூரில் இரண்டு இளைஞர்களின் படுகொலை அதற்குப் பிறகான போராட்டங்கள் தமிழகத்தையே பரபரப்பாக்கிவிட்டன.திருப்பத்தூர் மாவட்டம் அரக்கோணம் அருகில் பெருமாள் ராஜபாட்டை கிராமத்தைச் சேர்ந்த வன்னிய சமூகத்தின் இளைஞர்களுக்கும், சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தவர் சமூகத்தின் இளைஞர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மூவருக்குப் பலமான அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் தமிழகம் முழுவதும் சாதி கலவரம் அபாயம் புகைந்துகொண்டு வந்தது. தேர்தல் விரோதத்தால் நடந்த மோதல் என்றும், திட்டமிட்ட சாதி வன்கொடுமை கொலை என்றும், மணல் கொள்ளையில் ஏற்பட்ட மோதல்கள் என்றும் பலரும் பலவிதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களை மூன்று நாட்களாக வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் உறவினர்கள். அதனால், அந்த பகுதியில் மேலும் ஏதும் அசம்பாவிதங்கள்…
Read Moreசொன்னது சொன்னபடி கர்ணன் திரைக்கு வருவான்-தாணு அறிவிப்பு
தமிழ் சினிமா பத்து மாதவனவாசத்திற்கு பிறகு ஜனவரி மாதம் மாஸ்டர் படத்தின் மூலம் தன்னை புதுப்பித்து கொண்டது இருண்டு இருந்த திரையரங்குகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்து நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சினார்கள் தேங்கி இருந்த படங்கள் வெற்றிதோல்வியை பற்றி கவலைப்படாமல் ரீலீஸ் செய்யப்பட்டது எந்தப் படமும் படத்தின் முதலீட்டை மீட்டு கொடுக்கும் வகையில் திரையரங்குகளில் வசூல் ஆகவில்லை சோர்ந்து இருந்த திரையரங்குகள் “சுல்தான்” ஏப்ரல் 2 அன்று ரீலீசுக்கு பின் சுறுசுறுப்படைந்தன தமிழகத்தில் உள்ள 1100 திரைகளில் 600 திரைககள் வரை இந்தப்படம் வெளியானது எஞ்சிய திரைகளில் ஏப்ரல் 9 அன்று கர்ணன் படம் திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டு ஏப்ரல் 6 மாலையில் முன்பதிவு தொடங்கப்பட்டது கலைப்புலி தாணு தயாரிப்பில் தயாராகும் படங்கள் வெளியாகும் நேரத்தில் ஏதேனும் பிரச்சினையை எதிர்கொள்ளும் அதுவே அப்படத்திற்கு இலவச விளம்பரமாக அமைந்துவிடும்…
Read Moreதேர்தல் கமிஷனுக்கு உதயநிதி பதில் அனுப்பினார்
தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக எதையும் பேசவில்லை’ என தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ள இடைக்கால பதிலில்உதயநிதிதெரிவித்துள்ளார்.தி.மு.க. இளைஞர் அணி தலைவர் உதயநிதி மார்ச் 31ல் தாராபுரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது ‘மூத்த தலைவர்களை ஓரம்கட்டி விட்டு நான் குறுக்கு வழியில் அரசியலுக்கு வந்ததாக பிரதமர் பேசி உள்ளார். குஜராத்தில் முதல்வராக இருந்த மோடி தான் மூத்த தலைவர்களான அத்வானி முரளி மனோகர் ஜோஷி வெங்கையா நாயுடு ஆகியோரை ஓரம்கட்டி விட்டு குறுக்கு வழியில் முன்னுக்கு வந்தார்.மத்திய அமைச்சர்களாக இருந்த சுஷ்மா சுவராஜ் அருண் ஜெட்லி ஆகியோர் மோடியின் தொல்லை தாங்காமல் இறந்து விட்டனர்’ என்று பேசினார்.’இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது’ என பா.ஜ.கதரப்பில் தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக நேற்று மாலை 5:00 மணிக்குள் பதில் அளிக்கும்படி உதயநிதிக்கு தேர்தல் கமிஷன் ‘நோட்டீஸ்’…
Read Moreபெண் வாக்காளர்களை முறியடித்த திருப்பூர் ஆண் வாக்காளர்கள்
மாவட்டத்தில், பெண் வாக்காளர்கள் அதிகம் இருந்தாலும், நேற்று முன்தினம் நடந்த ஓட்டுப்பதிவில், பெண்களை காட்டிலும், 9,543 ஆண் வாக்காளர் அதிகம் ஓட்டளித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், ஆண்களை காட்டிலும் பெண் வாக்காளர் அதிகம். மொத்தம் உள்ள, 23 லட்சத்து, 59 ஆயிரத்து, 804 வாக்காளரில், 11 லட்சத்து, 93 ஆயிரத்து, 104 பெண் வாக்காளர்; ஆண் வாக்காளர், 11 லட்சத்து, 66 ஆயிரத்து, 417 பேரும், திருநங்கையர், 283 பேரும் உள்ளனர்.சட்டசபை தேர்தலில், பெண்களை காட்டிலும், ஆண் வாக்காளரே அதிக அளவு ஓட்டளித்துள்ளனனர். அதாவது, எட்டு லட்சத்து, 26 ஆயிரத்து, 798 ஆண் வாக்காளர் ஓட்டளித்துள்ளனர்; பெண்களில், எட்டு லட்சத்து, 17 ஆயிரத்து, 255 பேர் ஒட்டளித்துள்ளனர்.திருநங்கையர்மாவட்டத்தில் உள்ள, 283 திருநங்கையரில், 32 பேர் மட்டும் ஓட்டளித்துள்ளனர். அதாவது, திருப்பூர் வடக்கில், 14, காங்கயம், பல்லடத்தில் தலா ஆறு; திருப்பூர்…
Read Moreமதுரை மாவட்டத்தில் வாக்குபதிவு குறைய காரணம் என்ன?
மதுரை மாவட்டத்தில் கரோனா பரவல் அச்சம் மற்றும் பூத் சிலிப் வழங்கப்படாதது ஆகிய காரணங்களால், வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததாகத் தகவல் வெளி யாகி உள்ளது. மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் 2016-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 71.09 சதவீத வாக்குகள் பதிவாகின. நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் 10 தொகுதிகளிலும் 70.33 சதவீத வாக்குகளே பதிவாகின. இந்தத் தேர்தலில் கரோனா அச்சத்தால் பலர் வாக்களிக்க வராத நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் முறையாக பூத் சிலிப் வழங்கப்பாடத்தும் வாக்குப்பதிவு சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கும் பாகம் எண், வரிசை எண் மற்றும் வாக்களிக்க வேண் டிய இடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு பூத் சிலிப் வழங்கப்படுவது வழக்கம்.முன்பு பூத்சிலிப்புகளை அரசியல் கட்சியினரே வழங்கி வந்தனர். அந்த நேரத்தில்,…
Read Moreபரதநாட்டியத்திற்கு கமல்ஹாசன் துரோகம் செய்து விட்டார்-ஸ்ரீராம்
இயக்குநர் கே.ஸ்ரீராம் முழுக்க முழுக்க பரதக்கலையை மையமாக வைத்து குமார சம்பவம் என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார். படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள் , நடனம், தயாரிப்பு, இயக்கம் என்பதோடு மட்டுமில்லாமல் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். பரதம் சம்மந்தமான கதைக்கு இன்றைய அவசியம் என்ன என்பது பற்றி இயக்குநர் ஸ்ரீராம் கூறியதாவது நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டியத்துறையில் இருக்கிறேன். என்னுடைய அப்பா பி.கே.முத்து பரதக்கலைஞராக இருந்தவர். ஏழைபடும்பாடு, சுதர்ஸன், மக்களைப் பெற்ற மகராசி, மாங்கல்யம் போன்ற படங்களில் டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கிறார். சிவாஜிக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்திருக்கிறார். நானும் இதே துறைக்கு வந்து விட்டேன். இன்றைக்கு சினிமாவில் பரத நாட்டியத்தை மிகவும் மோசமாக சித்தரிக்கிறார்கள். பரதம் கற்றுக்கொண்டால் பெண் தன்மை வந்து விடும் என்ற தவறான ஒரு விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அஜித்…
Read Moreகர்ணன் முன்பதிவு இன்று தொடக்கம்
பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் 2-வது திரைப்படம் ‘கர்ணன்’. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்திருக்கிறார். உடன் ‘நட்டி’ நட்ராஜ், யோகிபாபு, ரஜிஷா விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் ஏப்ரல் 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்துள்ள சூழலில் அதே ‘அசுரன்’ படத்திற்கு தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருதும் கிடைத்துள்ளது என்பதால் படத்தின் தயாரிப்பாளரான தாணு மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். இந்தச் சூழலில் தாணுவின் அடுத்தப் படம்.. தனுஷின் அடுத்தப் படம் என்ற ரீதியில் வெளியாகவிருக்கும் ‘கர்ணன்’ திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மேலவளவு பஞ்சாயத்து யூனியன் தலைவர் முருகேசனின் கொலைச் சம்பவம்தான் இந்தப்…
Read Moreவிஜய் – அட்லி கூட்டணி இணையுமா?
நடிகர் விஜய் நடிக்கும் 65-வது படம் சம்பந்தமான செய்திகள் கொரோனா வைரஸைக் காட்டிலும் வேகமாகப் பரவி வரும் இந்த நேரத்தில் விஜய்யின் அதற்கடுத்தப் படத்தை இயக்குநர் அட்லீ இயக்க வாய்ப்பிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 2016-ம் ஆண்டு ‘தெறி’ என்ற படத்தையும் 2017-ம் ஆண்டு ‘மெர்சல்’ என்ற படத்தையும் விஜய்யை வைத்து இயக்கியிருந்தார் அட்லீ. இந்த இரண்டு படங்களுமே விஜய்யின் மார்க்கெட் மென்மேலும் உயர்வதற்கு பெரிதும் துணை புரிந்தன. ஆனால், இந்த இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களுமே அட்லீயின் அதீத பொருட் செலவினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் அட்லீயை புதிய படங்களுக்கு புக் செய்ய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களே பெரிதும் தயங்கினார்கள். இடையில் அட்லீ பாலிவுட்டுக்கு சென்று நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு ஹிந்தி படத்தை இயக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் இது அனைத்தும் பேச்சளவிலேயே இப்போதுவரையிலும் இருக்கின்றன.…
Read Moreசட்டபேரவை தேர்தலில் வாக்களித்த சினிமா பிரபலங்கள்
நேற்றுகாலை 7 மணி முதல் மாலை 7 மணிவரையிலும் நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலின் வாக்குப் பதிவில், சென்னையில் வசிக்கும் முக்கிய நடிகர், நடிகைகள் பலரும் தங்களது வாக்கினை செலுத்தியிருக்கிறா்கள். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், சிவக்குமார், சரத்குமார், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஆர்யா, சிம்பு, நாசர், பிரபு, விக்ரம் பிரபு, விக்ரம், சத்யராஜ், சிபிராஜ், விஜய் ஆண்டனி, விமல், ஜெயம் ரவி, அர்ஜூன், டி.ராஜேந்தர், ஆரி, அமீர், ஆனந்த்ராஜ், உதயநிதி ஸ்டாலின், ரகுமான், நகுல், அருண் விஜய், விஜயகுமார், ஜீவா, விஷ்ணு விஷால், பாபி சிம்ஹா, ஆர்.ஜே.பாலாஜி, சூரி, உதயா, அருள்நிதி, முண்டாசுப்பட்டி ராம்தாஸ், சந்தானம், பிரசன்னா, சசிகுமார், எஸ்.வி.சேகர், சின்னி ஜெயந்த், கருணாகரன், சித்தார்த், ஹரீஷ் கல்யாண், யோகிபாபு, அருண் பாண்டியன், வசந்த் ரவி, வெற்றி, செந்தில்,…
Read Moreஅஜீத்தை கோபப்பட வைத்த ரசிகர்கள்
ஒரு பக்கம் நடிகர் விஜய் தன் வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச் சாவடிக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது என்றால், அதற்கு முன்பாக நடிகர் அஜீத்தின் ரசிகர்கள் வாக்குச் சாவடியில் அவருடன் செல்பி எடு்க்க முற்பட்டு அவரைக் கோபப்பட வைத்ததும் இன்னொரு பரபரப்பையும் ஏற்படுத்தியது. காலை 7 மணிக்கு முன்பாகவே நடிகர் அஜீத்தும், அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினியும் வாக்குச் சாவடிக்கு வந்துவிட்டார்கள். வாசலிலேயே மறித்துவிட்ட அவரது ரசிகர்கள் அவரை செல்பி எடுக்கும் நோக்கில் முற்றுகையிட்டார்கள். போலீஸார் ஓடோடி வந்து அவர்களை விலக்கி அஜீத்தையும், ஷாலினியையும் பள்ளிக்குள் அழைத்துச் சென்றார்கள். அங்கேயும் ஒரு ரசிகர் விடாமல் செல்பி எடுக்க முயன்று கொண்டேயிருக்க.. ஒரு கட்டத்தில் கடும் கோபமான அஜீத் அந்த ரசிகரின் செல்போனை பிடுங்கி தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். அஜீத் போகும் இடமெல்லாம் ரசிகர்களும் கையில் செல்போனை…
Read Moreவாக்களித்த, வாக்களிக்காத சினிமா பிரபலங்கள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திரையுலக பிரபலங்கள் வாக்களிக்கும்போது சில சுவாரசியங்களும் நடைபெற்றன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 6) நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 7 மணிக்கு முடிந்தது. சின்ன பிரச்சினைகளைத் தாண்டி பெரிதாக எந்தவொரு பிரச்சினையுமின்றி இந்த வாக்குப்பதிவு முடிந்தது குறிப்பிடத்தக்கது. திரையுலக பிரபலங்கள் பலரும் காலையிலேயே முதல் நபராக வந்து தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தார்கள். ரசிகர்களால் டென்ஷனான அஜித் 7 மணியளவில் சென்றால் ரசிகர்கள் கூடுவார்கள் என்று காலை 6:30 மணிக்கு எல்லாம் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்துவிட்டார் அஜித் அங்கிருந்த ரசிகர்கள் பலரும் செல்ஃபி எடுக்க முற்பட்டனர். இதனால் அஜித் டென்ஷனாகிவிட்டார். ஒரு ரசிகரின் செல்போனைப் பறித்து வைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் ரசிகரிடம் செல்போனை மீண்டும் வழங்கினார். அதேபோல், அஜித் வாக்களிக்க வரும்போது கருப்பு,…
Read Moreகறுப்பு சிவப்பு சைக்கிளில் விஜய் ரசிகர்களுக்கான சமிக்கையா
தேர்தல் காலங்களில் வாக்குப் பதிவு நாளன்று ஊடகங்கள் கவனம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களை கடந்து சினிமா பிரபலங்களை மையம் கொண்டு இருக்கும் இன்றைய வாக்குப் பதிவிலும் அரசியல் தலைவர்களை கடந்து சினிமா நட்சத்திரங்கள் வாக்களிப்பது ஊடகங்களில் பிரதானமாக நீண்ட நேரமாக ஆக்கிரமித்து கொண்டது வாக்குசாவடியில் வாக்குபதிவு தொடங்கும் நேரத்திற்கு முன்னதாகவே மனைவி ஷாலினியுடன்வந்திருந்து வாக்களித்து சென்றார் நடிகர் அஜீத்குமார் ஆயிரம் விளக்கு தொகுதியில் 7 மணிக்கு பின்னர் வந்து வாக்கை பதிவு செய்தார் ரஜினிகாந்த் தாங்கள் போட்டியிடும் தொகுதிக்கு செல்லவேண்டும் என்பதால் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிக்கருமான கமலஹாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இருவரும் 8 மணிக்குள் தங்கள் வாக்கை பதிவு செய்து விட்டு புறப்பட்டு சென்றனர் அடுத்த கவனம் நடிகர் விஜய்யை நோக்கி திரும்பிய போது எந்த ஒரு நிகழ்வுக்கும்…
Read Moreசாதி மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – விஜய்சேதுபதி
தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தற்போது விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அதிகாலையிலேயே வாக்குச் சாவடிக்கு வந்து வாக்குகளை செலுத்தினர். நடிகர்கள் அஜித், விஜய், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, விக்ரம், சிவகார்த்திகேயன், சித்தார்த், யோகி பாபு, பிரபு, விக்ரம் பிரபு, நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் மக்களோடு மக்களாக வாக்குச்சாவடிகளில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை செலுத்தினார். அவரைக் காண்பதற்காக அங்கு அவரது ரசிகர்கள் கூடிய நிலையில், அவர்களுடன் இணைந்து செல்ஃபி புகைப்படம்…
Read Moreமதகராஜா எட்டு ஆண்டுகளுக்கு பின் வெளியாகிறது
நடிகர் விஷால் மற்றும் வரலட்சுமி முதன் முதலாக இணைந்து நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் 8 ஆண்டுகள் கழித்து வெளியாகிறது. இந்தப் படத்தில் விஷால், வரலட்சுமியுடன்சந்தனம், அஞ்சலி, நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ், சோனு சூட், மொட்டை ராஜேந்திரன், கலாபவன்மணி, மணிவண்ணன், சிட்டிபாபு ஆகியோர் நடித்துள்ள ‘மதகஜராஜா’ திரைப்படத்தை சுந்தர் சி குறிப்பிட்ட காலத்தில் இயக்கி முடித்தார் படத்தின் விளம்பரங்கள்ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது. படம் முடிவடைந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது தயாரிப்பு நிறுவனமான ஜெமினி பிலிம் சர்க்யூட்க்கு இருந்த பைனான்ஸ் பிரச்சினை, விஷாலுக்கு இருந்த பிரச்சினைகள் படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது படத்தின் பட்ஜெட்டுக்கு இணையாக வியாபாரம் இல்லை ஆனால் அதனை போன்று இரு மடங்கு பண பிரச்சினை இருந்தது அதன் காரணமாக மதகஜராஜா வெளியீட்டை பல முறை ஒத்திவைக்க வேண்டி இருந்தது ஒரு…
Read Moreஇயக்குனர் ஷங்கரை சுற்றி தொடரும் வழக்கு – சர்ச்சை
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்தே பல தடைகளைச் சந்தித்து வருகிறது. கொரானா பரவல், படப்பிடிப்பில் விபத்து, உயிரிழப்பு, காவல்துறை வழக்கு எனப் பல தடைகளைச் சந்தித்து இப்போது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியான அறிவிப்பில், இயக்குநர் ஷங்கர் – நடிகர் ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் புதிய படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது என்று சொல்லப்பட்டிருந்தது. இதனால் இந்தியன் 2 படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் இயக்குநர் ஷங்கருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில், தங்கள் நிறுவனத்தின் தயாாரிப்பான ‘இந்தியன் -2’ படத்தை…
Read Moreகர்னாடகாவில் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதித்தது அரசு
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரானாவின் பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில் இருந்ததுகொரானாவின் தாக்கம் குறைந்ததும், ஊரடங்குகள் தளர்த்தப்பட்டதின் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு அது 100 சதவிகித அனுமதியாக மாற்றப்பட்டது. தமிழ் படங்களுக்கு வியாபார ரீதியாகவும், பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பக்கபலமாக இருக்கும் மாநிலங்களில் கர்னாடகம் முக்கியமானது புதிய படங்கள் வெளியாகும்போது டிக்கட் கட்டணத்தை மாற்றியமைத்து கொள்ள அம்மாநில அரசு அனுமதிக்கிறது இந்த நிலையில் கொரானாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்கிற செய்தி பரவி வரும் சூழலில் கர்னாடக மாநிலத்தில்பெங்களூரு, மைசூரு, கலபுரகி, தட்சிண கன்னடா, உடுப்பி, பீதர் மற்றும் தர்வார் மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களில் 50…
Read Moreபேட்டி எடுக்கதேர்வு வைக்கும் ரஹ்மான் மேனேஜர் நேயல்
ஒரு பாடலோ, படமோ வெளிவரும் முன் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுவது ஊடகங்கள்தான் அதனால் அந்த படைப்பு வெளியிடுவதற்கு முன் பத்திரிகையாளர்களிடம் பணிவாகவும், எல்லா நேரங்களிலும் தொடர்பு கொள்ளும் எல்லைக்குள் இருப்பார்கள் படைப்புபெரும் வெற்றி அடைந்து விட்டால் பத்திரிகையாளர்களை கண்டு கொள்ளாத போக்கு சமீபகாலமாக சில நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில்மாஜா தளம் மூலம் வெளியிடப்பட்ட பாடல் ‛என்ஜாய் என்சாமி. பாடகி தீ மற்றும் அறிவு பாடிய இந்தப்பாடல் தான் இப்போது எங்கு பார்த்தாலும் ஒலிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த பாடலை ரசித்து வருகின்றனர். யு-டியூப்பில் மட்டும் இந்த பாடல் 98 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. திரை பிரபலங்கள் பலரும் பாடலை பாராட்டி டுவீட் செய்ததோடு, அந்த பாடலுக்கு நடனம் ஆடியும் சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இதனிடையே இப்பாடலுக்கான வரவேற்பு பற்றி…
Read Moreதமிழ் சினிமாவிற்கு சுவாசம் தந்த சுல்தான்
தமிழகத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான்கு படங்களுக்கு குறைவில்லாமல் வெளியானாலும் மாஸ்டர் படத்திற்கு பின் எந்த படமும் தியேட்டர்களில் கலகலப்பான கூட்டத்தையும்,கல்லாவை நிரப்புகின்ற நிலைமையை ஏற்படுத்தவில்லை இந்த சூழலில் திரையரங்குகள் நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருந்த படங்கள் சுல்தான், கர்ணன் இதில் சுல்தான் ஏப்ரல் 6 அன்று உலகம் முழுமையும் 2500 திரைகளில் திரையிடப்பட்டிருக்கிறது கார்த்தி, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்க பாக்யராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. தெலுங்கில் வெளியான நேரடிப் படங்களுடன் போட்டி போட்டு வசூலில் தன்னை தக்கவைத்துக்கொண்டுள்ளதுசுல்தான்’. வெள்ளிக்கிழமை நாகார்ஜுனா நடிப்பில் வெளியான நேரடி தெலுங்கு படமானவைல்டு டாக்’ படம் 1 கோடியே 20 லட்சம் வசூலித்த நிலையில், ‘சுல்தான்’ படம் 1 கோடியே 15 லட்சம் வசூலித்துள்ளதுஇதனிடையே, படத்திற்குக் கிடைத்த சில எதிர்மறை விமர்சனங்களை ஏற்பதாக படத்தின் தயாரிப்பாளர்…
Read Moreதேர்தல் களத்தில் வேட்பாளர்களாக தமிழ்சினிமா பிரபலங்கள்
தமிழ் சினிமாவும் – தமிழக அரசியலும் 1957 முதல் பிரிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பதை போன்றுதான் சினிமா மூலம் அரசியல் வளர்ச்சியா அரசியல் மூலம் சினிமா வளர்ச்சியா என்பதற்கு தெளிவான விடை இங்கு காணமுடியாது அரசியல்வாதியாக இருந்த மு. கருணாநிதி திமுகவின் கொள்கைகளை திரைமொழி மூலம் மக்களிடம் அடர்த்தியாக கொண்டு சென்றார் இதற்கு சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமசந்திரன் இருவர் நடித்த படங்களை முழுமையாக பயன்படுத்தினார் நாடாளுமன்ற, சட்டமன்ற பிரதிநிதிகளுக்கான தேர்தல்களில் பெயரளவில் சிலருக்கு போட்டியிடவும் வாய்ப்புகளை திமுக வழங்கியது அப்படித்தான் 1962 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜேந்திரன் , எம்.ஜி.ராமசந்திரன் ஆகியோர் 1962 முதல்தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்றனர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சியை தொடங்கி ஆட்சி அதிகாரத்தை…
Read Moreதிரையரங்குகள் எதிர்பார்த்த சுல்தான் 600 திரைகளில்
தமிழ் சினிமாவில் 2012ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியானசகுனி திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பில் டிரீம் வாரியர் நிறுவனம் தனது பயணத்தை தொடங்கியது அடுத்தடுத்து இந்நிறுவன தயாரிப்பில் வெளியான ஜோக்கர், காஷ்மோரா, கூட்டத்தில் ஒருவன், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, என்.ஜி.கே, ராட்சசி, கைதி ஆகிய படங்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமா தயாரிப்பு துறையில் தவிர்க்க முடியாத நிறுவினமானது டீரீம் வாரியர் கார்த்தி,ராஷ்மிகா,நெப்போலியன், லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான். பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படம் டிரீம் வாரியர் தயாரிப்பில் தமிழகத்தில் மட்டும் சுமார் 600 திரைகளில் இன்று வெளியாகியுள்ளது டிரீம் வாரியர் தயாரிப்பில் 2019ல் வெளியான “கைதி” படத்திலும் கார்த்திதான் காதாநாயகன் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் வெளியான என்று வெளியிடப்பட்ட கைதி தமிழ்சினிமாவில் வசூல், திரையிடல்,…
Read Moreரஜினிக்கு வாழ்த்து சொன்ன அமைச்சர் ஜெயக்குமார்
தமிழ்நாடு அமைச்சரும், ராயபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான ஜெயக்குமார் ரஜினிக்கு தாதாசாகேப் விருதி கிடைத்தமைக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் திரைத்துறையில் நெடுங்காலம் கடந்தும் ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள். எளிமையும், இனிமையும் கொண்ட அலட்டல் இல்லாத,குழந்தை மனம் கொண்ட குதூகலத்தோடு நிஜ வாழ்விலும் சரி,திரை வாழ்விலும் சரி உற்சாகத்தோடு வலம்வரும் நண்பர் ரஜினிகாந்துக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தமிழகம் தாண்டி உலகம் முழுக்க ரசிகர்களைக் கொண்டிருக்கும் தலைசிறந்த நடிகர் அவர்.எது வந்தாலும் கலங்காத மனமும், நல்ல குணமும் அவருக்கு இந்த விருதை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று நினைக்கிறேன். கடின உழைப்பு மிகப்பெரிய சாம்ராஜ்ய வெற்றியை தேடித்தரும் என்பதற்கு இந்த சாமானிய மனிதர் அடையாளமாய் நிற்கிறார். எனவே இவரை…
Read Moreமாரிசெல்வராஜுக்கு ஐ லவ் யு சொன்னதனுஷ் அனுப்பிய கடிதம்
தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார் . தனுஷ், ராஜிஷா விஜயன், லால், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இப்படத்திற்குசந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று காலைசென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது.நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசியதாவது உளப்பூர்வமான, உணர்ச்சிபூர்வமான திரைக்காவியத்தை எடுத்துள்ளார் இயக்குனர்மாரி செல்வராஜ். நீங்கள் படம் பார்த்துவிட்டு இருக்கையை விட்டு வெளியே வராமல் சிந்திக்கும் படி இருக்கும் இப்படம். அத்தனை வேலையகளையும் தன் தோள்மேல் சுமந்த உழைப்பாளி மாரி செல்வராஜ். பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் இல்லையே என்ற குறையை மாரி செல்வராஜ் போக்கி இருக்கிறார். வெற்றிமாறன் அவர்களை எப்படி பிடித்து வைத்திருக்கிறோமோ அதேபோல் மாரிசெல்வராஜ் அவர்களையும் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்…
Read Moreஇரண்டாவது முறையாக அபராதம் செலுத்திய சன் பிக்சர்ஸ் படக்குழு
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரானா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்துவருகிறது. கடந்த சில மாதங்களாகக் குறைந்த கொரானா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியஅளவில் நாள் ஒன்றுக்கு 60,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. அதனால், கொரானா தடுப்பு நடவடிக்கைகள் தற்போது மீண்டும் தீவிரமாக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்.ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தைச் சுற்றிய பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. பழனியை அடுத்த காரமடைப் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பு நடப்பதை அறிந்த மக்கள் அங்கு கூடினர். அதனால், காலை முதலே அங்கு பரபரப்பு காணப்பட்டது. இதற்கிடையில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர்கள், ஊழியர்கள் உரிய விதிகளைப் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. அதனையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட…
Read Moreஇரட்டை அர்த்த பேச்சை தொடரும் ராதாரவி
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் பிரபலமானவர் நடிகர் ராதாரவி. நடிகர் சங்க செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக இருந்த அனுபவம் உள்ளவர் திரைப்பட விழாக்களில் இவர் மைக் பிடித்தாலே நக்கல், நையாண்டி பேச்சுகளுக்கு குறையிருக்காது யாரை பற்றி பேசுகிறோம் அது சரியா தவறா என்பதை பற்றியெல்லாம் யோசிப்பது கிடையாது அந்த நேர கைதட்டலுக்கு பேசிவிட்டு கடந்து செல்வது இவரது வாடிக்கை இதுபோன்றுதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இருந்தபோது சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா நடித்திருந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை குறிப்பிடும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். ராதாரவியின் சர்ச்சை பேச்சு குறித்து திரையுலக சங்கங்கள் மௌனம்…
Read Moreரஜினிகாந்த்துக்கு தாதாசாகேப் விருது
இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு 70 வயது ஆகிறது. இவரின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது: “இந்தியத் திரைத்துறை வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியராக அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. நடுவர் குழுவில் இருந்த ஆஷா போன்ஸ்லே, சுபாஷ்கை, மோகன்லால், சங்கர், பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு நன்றி.” இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். முன்னதாக, பழம்பெரும் பாலிவுட் நடிகர்கள்…
Read Moreதமிழக கலைஞர்களின் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு
இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று (ஏப்ரல்1) மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் இதை அறிவித்திருக்கிறார். 2020 ஜூலை 17 ஆம் தேதி, தமிழ் சினிமாவில்இயக்குநர் இமயம் என்று புகழப்படும் மூத்தஇயக்குநர் பாரதிராஜாவின் 78 ஆவது பிறந்தநாள்.அதையொட்டி தமிழ்த்திரை உலகத்திலிருந்து தேசியவிருது பெற்ற அனைத்துக் கலைஞர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பினர். அதில்….. பெறுநர், திரு. பிரகாஷ் ஜவடேகர், மாண்புமிகு அமைச்சர், தகவல், ஒலிபரப்பு, இந்திய அரசு, புது டெல்லி. பொருள்: ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப் பால்கே விருது’ தர வேண்டும் – தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், எழுத்தாளர்களிடமிருந்து கோரிக்கை. மாண்புமிகு திரு ஜவடேகர் அவர்களுக்கு, பெருமைமிகு…
Read Moreதளபதி65 படப்பிடிப்புடன் இன்று தொடங்கியது
தமிழ் சினிமாவில் வசூலில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் விஜய். படத்துக்கு படம் வசூலில் சாதனை படைத்துவருகிறார். அந்த வரிசையில் இந்த வருடம் ரிலீஸான மாஸ்டரும் வசூலில் சாதனை படைத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியானது மாஸ்டர். இந்தப் படத்தைத் தொடர்ந்து, விஜய் நடிக்க இருக்கும் படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார். விஜய் 65 என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க இருக்கிறார். நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் நெல்சன். இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் ரிலீஸூக்குத் தயாராகிவிட்டது. கடந்த மார்ச் 26ஆம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய இப்படம், தேர்தல் காரணமாக தள்ளிப் போய் மே 13ஆம் தேதி ரம்ஜானுக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படம்…
Read Moreஅனுஷ்கா மீண்டு வருவாரா
நாயகன் முக்கியத்துவம் கொண்ட திரைப்படங்களைப் போலவே, கதாநாயகி முக்கியத்துவமுள்ள படங்கள் இப்பொழுது அதிகமாக வெளியாகிவருகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே அப்படி வெளியாகும். ஆனால் இப்பொழுது அதிகமாக வெளியாக தொடங்கிவிட்டது. ஹீரோக்களுடன் டூயட் பாடவும், லூசு ஹீரோயினாகவும் தோன்றும் கதாபாத்திரங்கள் இல்லாமல், நடிப்புக்கு ஸ்கோப் இருக்கும் படங்களை நம்ம ஹீரோயின்கள் தேர்ந்தெடுக்க தொடங்கிவிட்டனர். ஆனால் இன்றைய நாயகிகளுக்கு முன்னுதாரணமாக, கதாநாயகி முக்கியத்துவமுள்ளப் படங்களை முதலில் தேர்ந்தெடுத்து, ஹிட்டும் கொடுத்தவர் அனுஷ்கா தான். அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படம் பெரியளவில் வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. இப்படத்துக்குப் பிறகுதான், நடிகைகள் பலரும் ஹீரோயின் முக்கியத்துவம் கொண்டப் படங்களில் நடிக்கத் துவங்கினார்கள். அப்படியான பெருமைக்குரிய அனுஷ்காவுக்கு இப்போது பெரிதளவில் படவாய்ப்பே இல்லை என்பதே சோகமான செய்தி. அனுஷ்கா நடிப்பில் கடந்த 2015ல் வெளியான படம் இஞ்சி இடுப்பழகி.…
Read Moreநானே வருவேன் படப்பிடிப்பு எப்போது
தனுஷை நடிகராக ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவும், கொண்டாடித் தீர்க்கவும் மிக முக்கியக் காரணம் செல்வராகவன். தனுஷ் – செல்வா கூட்டணியில் வெளியான படங்களே அதற்கு உதாரணம். காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன ஆகிய மூன்று படங்களைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் – செல்வராகவன் கூட்டணி இணைந்திருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாக இருக்கும் படம் ‘நானே வருவேன்’. இந்தப் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் வைரலனது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக திரைக்கதை வசனத்தை எழுதிமுடிக்கும் வேலைகளில் இருந்தார் செல்வராகவன். தற்பொழுது படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் செல்வராகவன். திட்டமிட்ட தேதிக்கு முன்பாகவே படத்தை துவங்குகிறார்களாம். ஏனெனில், படத்தின் வேலைகள் வேகவேகமாக நடந்துமுடிகிறதாம். தற்பொழுது, ரூஸோ…
Read Moreஅஜீத்குமார் சம்பளத்துக்காக வியாபாரம் செய்யப்பட்ட வலிமை
நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஸ்பெயின் நாட்டில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்தால் ‘வலிமை’யின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பு வேலைகளும் முடிந்துவிடும் மே 1 ஆம் தேதி அஜித்தின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘வலிமை’ படத்தின் முதல் பார்வை வெளியாகும் என்றும், அதன் பின் படத்தின் வியாபாரம், புரமோஷன் வேலைகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் 29ஆம் தேதி இரவு வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எங்கள் வலிமை படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் மற்றும் மதுரை கோபுரம் சினிமாஸ் ஆகியோருக்கு கொடுத்திருக்கிறோம் என்று கூறியிருந்தார். நேர்கொண்ட பார்வை…
Read Moreநேர்கொண்ட பார்வை வக்கில் சாப் ஆக தெலுங்கில் ரீமேக்கானது
ஒரு மொழியில் பெரிய வெற்றியைப் பெரும் படங்கள் மற்ற இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படும். அப்படி, இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான திரைப்படம் பிங்க். பாலிவுட்டில் மிகப்பெரியளவில் கவனம் ஈர்த்தது. மிகப் பெரிய வெற்றியையும் பெற்றது. இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் இந்தக் கதையை தமிழுக்கு எடுத்துவந்தார். சர்ப்ரைஸ் விஷயம் என்னவென்றால், ஒரு ரீமேக் படத்தில் நடிக்க அஜித் ஒப்புக் கொண்டார். அதன்பிறகு, அஜித், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் நேர்கொண்டப் பார்வை திரைப்படம் உருவானது. வயதான லுக்கில் அஜித் நடித்திருந்தார். பின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜா மிரட்டியிருப்பார். படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். தமிழுலும் பெரிய வெற்றியைப் பெற்றது. பிங்க் படத்துக்கும் நேர்கொண்டப் பார்வைப் படத்துக்கும் இடையே திரைக்கதையில் சில வித்தியாசங்கள் இருந்தது. தமிழின் உச்ச நடிகர் அஜித் என்பதால், அவருக்கென ஒரு காதல்…
Read Moreவலிமை படத்தில் சில மாற்றங்கள்
அஜித் ரசிகர்கள் மத்தியில் வலிமை படம் குறித்த மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்திலிருந்து ஒரு ஸ்டில்லாவது வெளியாகிவிடாதா என தவியாய் தவித்து வருகிறார்கள். சமீபத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், அஜித் 50வது பிறந்த தினமான மே 1ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும். அதன்பிறகு, படம் குறித்த அப்டேட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக வரும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த தகவலுக்கு பிறகே, அஜித் ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். படத்துக்கான 90சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும், ஸ்பெயின் நாட்டில் எடுக்க வேண்டிய ஆக்ஷன் காட்சிகளை எடுத்துமுடித்துவிட்டால் மொத்தப் படமும் முடிந்துவிடும். இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளுக்கான ஃபைனல் எடிட்டையும் முடித்துவிட்டார்கள் படக்குழுவினர். சமீபத்தில், டப்பிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு செய்யப்படாத முழு படத்தையும் படக்குழுவினர்கள் பார்த்திருக்கிறார்கள். அதோடு, நெருங்கிய வட்டாரத்தினர் சிலரும் படத்தைப்…
Read Moreதேசிய விருதை எதிர்நோக்கும் நடிகை அபர்ணதி
தமிழ் சினிமாவில் விமர்சகர்களால் பாரபட்சம் இன்றி பாராட்டப்படும் படங்கள் எப்போதோ ஒரு முறைதான் வருகின்றன. அந்த விதத்தில் இந்த மாதம் வெளிவந்த ஒரு படம் ‘தேன்’. மலைக்கிராம மக்களின் வாழ்வியலைத் திரைக்கதையாகக் கொண்டு வெளிவந்த இந்தப் படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் அபர்ணதி நடித்திருந்தார். அவருடைய நடிப்பிற்கு விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். அப்படம் பற்றிய தனது அனுபவத்தை பத்திரிகையாளர்களிடம் அபர்ணதி பகிர்ந்து கொண்டார். ’ “தேன்” படத்திற்குக் கிடைத்து வரும் நேர்மறையான பாராட்டுக்கள் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அனைத்து பாராட்டுக்களும் இயக்குநர் கணேஷ் விநாயகன் மற்றும் ஒளிப்பதிவாளர் சுகுமாரன் அவர்களையே சேரும். இந்த கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்ய முழுக்காரணமும் அவர்கள் தான்.  மலைப்பகுதியில் வாழும் பெண்ணை தத்ரூபமாகப் பிரதிபலிக்கும் பொருட்டு, படப்பிடிப்பு முடியும் வரை ஷாம்பு, மேக்கப் என எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று…
Read Moreஎல்லாமே பாசிட்டிவா இருக்கு டி.எஸ்.கேவை அழைத்து பாராட்டிய தனுஷ்
தமிழ் திரையுலகில் நம்பிக்கை தரும் நகைச்சுவை நடிகராக முன்னேறி வருபவர் திருச்சி சரவணக்குமார் என்கிற டிஎஸ்கே.. சின்னத்திரையில் வளர்ந்து வந்த நேரத்தில், தமன்னா நடித்த காமெடி ஹாரர் படமான பெட்ரோமாக்ஸ் படம் மூலம் லைம்லைட்டுக்குள் வந்தார் டி.எஸ்.கே. தற்போது ஜி.வி.பிரகாஷ்-சரத்குமார் காம்பினேஷனில் அடங்காதே, சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவாவுடன் ஒரு படம், ராட்சசன் படத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் ராஜசரவணன் என்பவர் இயக்கும் படம் என அரை டஜன் படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இந்தநிலையில் எதிர்பாராத சர்ப்ரைஸாக நடிகர் தனுஷிடம் இருந்து டிஎஸ்கேவுக்கு அழைப்பு வந்தது. இன்னும் அதுகுறித்த பிரமிப்பு மாறாத நிலையில் இதுபற்றி டி.எஸ்.கே. கூறும்போது, “சூப்பர்குட் பிலிம்ஸ் படத்தில் ஜீவாவுடன் நடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென ஒருநாள் *அண்ணன்* ரோபோ சங்கரிடம் இருந்து போன் வந்தது. அப்போது அருகில் தனுஷ்…
Read Moreகோவை தெற்கில் கமல் போடும் கணக்கு – வெற்றி எளிதாகுமா?
பரம்பரை அடையாளம் தந்த பரமக்குடி, ஆளாக்கிய ஆழ்வார்பேட்டை என தமிழகம் முழுவதும் உள்ள 233 தொகுதிகளை விட்டு விட்டு, ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்’ என்பதைப் போல கோவை தெற்கிலே தேர்தல் களம் கண்டார் கமல். அவர் கோவையில் போட்டி போடுவதாகக் கூறியதும், அங்கே எதற்குப் போட்டியிடுகிறார் என்று கேள்விகளை அடுக்கினார்கள் பத்திரிக்கையாளர்கள். அவர்களிடம் ‘ஏன் போட்டியிடக் கூடாது’ என்று எதிர்க்கேள்வி கேட்டு வழக்கம்போல குறுக்கு சால் ஓட்டினார் கமல் அப்போது அந்தக் கேள்விக்கு சரியான விடை கிடைக்காவிடினும், அவர் களத்தில் இறங்கி வீதி வீதியாகவும் வலம் வந்தபோதுதான் அதற்கு தானாகவே விடை கிடைத்தது. எங்கே போனாலும் மக்கள் திரள்கிறார்கள்; செல்பி எடுக்கிறார்கள்; அவரிடமே உங்களுக்குத்தான் ஓட்டு என்று உறுதி கொடுத்து விட்டு நகர்கிறார்கள். நீங்க மட்டும் போட்டா போதாது; நீங்க ஒவ்வொருத்தரும் 10 பேர்ட்ட ஓட்டு வாங்கித்தரணும்…
Read Moreநீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த நடிகர் ஆர்யா
அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா ஆஜராகி மனுதாரரிடம் மன்னிப்பு கோரியதால் ‘அவன் இவன்’ பட வழக்கில் அவர் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறாகக் காட்சியில் நடித்ததாகக் கூறி சிங்கம்பட்டி ஜமீன் சார்பில் தொடர்ந்த வழக்கில் நடிகர் ஆர்யா மனுதாரரிடம் மன்னிப்பு கேட்டார். அந்தக்காட்சியில் நடித்ததற்காக நேரடியாக வருத்தம் தெரிவித்ததையடுத்து ஆர்யா மீதான வழக்கை அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முடித்து வைத்து வழக்கிலிருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டார். நடிகர் ஆர்யா 2011ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் நடிகர் விஷாலுடன் இணைந்து நடித்தஅவன் இவன் படம் வெளியானது. அந்தப் படத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறாக சித்திரித்து காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்து சிங்கம்பட்டி…
Read Moreசினிமா-அரசியல் என் இரு கண்கள் போன்றது – நடிகர் சுரேஷ்கோபி
அரசியலையும் , சினிமாவையும் கைவிட மாட்டேன் என நடிகரும் திருச்சூர் தொகுதி பாஜக வேட்பாளருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். கேரளாவில் வருகிற 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இத்தேர்தலில் பாஜக வேட்பாளராக மலையாள நடிகர் சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். டெல்லி மேல்சபை எம்.பி.யாக இருக்கும் நடிகர் சுரேஷ் கோபியின் பதவிக் காலம் முடிய இன்னும் ஓராண்டு உள்ளது. அதற்குள் கட்சி மேலிடம் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுமாறு அவரை கேட்டுக்கொண்டது. இதையடுத்து அவரும் திருச்சூர் தொகுதியில் களம் இறங்கியுள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் இவர் போட்டியிட்டார். அதில் திருச்சூர் தொகுதியில் கணிசமான வாக்குகளை வாங்கி இருந்தார். எனவே இந்த தேர்தலில் அவர் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெறுவார் என பாஜகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,…
Read Moreஆ.ராஜாவுக்கு கமல்ஹாசன் ஆதரவா?
முதல்வர் குறித்து ஆ.ராசா பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவிப்பதாக வெளியான தகவலுக்கு அக்கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் விளக்கமளித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் அரசியல் வளர்ச்சியை ஒப்பீடு செய்து ஆ.ராசா தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. ‘நான் பேசியது எல்லாம் அரசியலில் இருவருக்கும் இடையே உள்ள உயரம், ஒப்பீடு. ஒரு குழந்தை ஆரோக்கியமான குழந்தை, இன்னொரு குழந்தை ஆரோக்கியமற்ற குழந்தை என்று பேசினேனே தவிர, இரண்டு வரிகளை மட்டும் வைத்துக்கொண்டு, முதலமைச்சரின் பிறப்பைக் கொச்சைப்படுத்திப் பேசினேன் என்று கூறுவது முற்றிலும் தவறானது’ என்று ஆ.ராசா விளக்கமளித்திருந்தார். இதைத்தொடர்ந்து, சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஒரு முதல்வருக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் சாதாரண…
Read Moreஎடப்பாடி பழனிச்சாமி-பன்னீர்செல்வம் ஒற்றுமையால் உற்சாகமான அதிமுக
அடுத்த மாதம் ஆட்சி கவிழும் என்று சொன்னதைப் போலத்தான், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்ததும் பழைய பன்னீர்செல்வமாக ஓபிஎஸ் உருவெடுப்பார்; அடுத்த தர்மயுத்தம் எப்போது வேண்டுமானாலும் ஆரம்பமாகும் என்று எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் எகிறின. எதுவும் நடக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தையும், அதனால் கிடைக்கும் பலனையும் ஒரு நாள்கூட விடாமல் அனுபவிக்க நினைத்துத்தான் ஓபிஎஸ் அமைதியாக இருக்கிறார்; ஆட்சிக்காலம் முடிந்ததும் அவருடைய ஆட்டம் ஆரம்பமாகும் என்றார்கள். அதுவும் ஆகவில்லை. இறுதியாக வேட்பாளர் பட்டியலில் இருவருக்கும் இடையில் பெரிய போர் வெடிக்கும்; பன்னீர் கண்ணீரோடு வெளியே வந்து பேட்டி கொடுப்பார் என்று காத்திருந்தார்கள். கடைசி வரை எதிர்க்கட்சியினரோ, அரசியல் விமர்சகர்களோ கணித்தபடி எதையும் நடக்கவிடவில்லை இரட்டையர். இருப்பினும் இருவரிடையே ஏதோ ஓர் இறுக்கம் இருந்து கொண்டிருந்தது. முதல்வர் வேட்பாளர் என்று பொதுக்குழுவில் அறிவித்ததற்குப்பின், வேறு எங்குமே பன்னீர் செல்வம் அந்த…
Read Moreஆளுங்கட்சியின் தலையீட்டை நிறுத்த வேண்டும் – திமுக புகார்
தேர்தல் ரத்து என்று செய்தி வெளியான விவகாரத்தில் ஆளுங்கட்சியின் தலையீட்டை நிறுத்த வேண்டும் என்றும் கே.என்.நேருவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயற்சி நடப்பதாகவும் திமுக, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவிடம் நேற்று (மார்ச் 29) அளித்த புகாரில், “முன்னாள் அமைச்சரும், திமுகவின் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் திமுகவுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவை ஜீரணிக்க முடியாத ஆளும்கட்சியினர் மற்றும் அதிகாரிகள், பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களுக்குப் பணம் கொடுத்து திமுக மற்றும் கட்சித் தலைவர்கள் மீது கெட்ட பெயர்களை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கே.என்.நேருவின் பெயரைக் களங்கப்படுத்த முயற்சி செய்கின்றனர். கடந்த மார்ச் 27ஆம் தேதி நாளிதழ் ஒன்றில் ‘கரூர், திருவண்ணாமலை, திருச்சி…
Read Moreதிருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் ரத்தா?- மாவட்ட ஆட்சியர் விளக்கம்
திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற வதந்தியை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார். திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட 8 காவல்நிலையங்களில் காவலர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் நடந்த சோதனையில், பணத்துடன் கூடிய கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இதற்கு அம்மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். மேற்கு வட்டாச்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் திருச்சி மாவட்ட ஆட்சியருமான திவ்யதர்ஷினி இன்று(மார்ச் 29) ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா புகார் வந்ததைத்…
Read Moreகமலஹாசனுடனான உறவு முறிந்து போன ஒன்று – நடிகை கௌதமி
வானதி சீனிவாசனை துக்கடா தலைவர் என மநீம பொதுச்செயலாளர் குமாரவேல் கூறியது கோவை தெற்குத்தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து மார்ச் 27ஆம் தேதி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மக்களுடைய பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், ஆட்சி நிர்வாகம் பற்றிய புரிதல் தொடர்பாக வானதி சீனிவாசனுடன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விவாதிக்க தயாரா? என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு பதிலடியாக மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுசெயலாளர் குமாரவேல் அறிக்கை வெளியிட்டார். அதில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, கமல்ஹாசனை வானதி சீனிவாசனுடன் விவாதத்துக்கு அழைத்துள்ளார். விவாதம் செய்தால் தான் யாருக்கு நிர்வாகத் திறமை உள்ளது என்பது அவரது வாதம். அதனை…
Read Moreசசிகுமார் பெருமைப்படுத்திய கவிஞர்
சினிமாவில் சக கலைஞர்களின் திறமையை, வெற்றியை அங்கீகரிப்பது, உரிய நேரத்தில் வாழ்த்துவது மிக மிக குறைவு இதில் இருந்து வித்தியாசப்பட்ட மனிதராக, இயக்குனராக, நடிகராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் சசிகுமார் தன் குருநாதர் இயக்குனர் பாலாவின் குருநாதர் பாலுமகேந்திராபட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதை அறிந்து அவருக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய மற்றவர்கள் முயற்சித்தபோது”தலைமுறைகள்” படத்தை தயாரித்து அந்த படத்தில் நடித்து இயக்கும் வாய்ப்பை இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு உருவாக்கி கொடுத்து பெருமைப்படுத்தியவர் சசிக்குமார் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள படம் எம்.ஜி.ஆர் மகன். சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, மிர்ணாளினி மற்றும் பலர் நடிப்பில் தயாராகியுள்ள இப்படத்தின் மூலம் பிரபல பின்னணிப் பாடகர் அந்தோணிதாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். எம்.ஜி.ஆர் மகன் படத்தின் பாடல்கள் சமீபத்தில்…
Read Moreபாஜகவுக்கு வாக்களித்தால் பிரியாணி சாப்பிடலாம் – நமீதா
பாஜக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடிகை நமீதா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தாமரை சின்னத்தில் வாக்களித்தால், விலையில்லா எரிவாயு சிலிண்டரில் பிரியாணி சமையல் செய்து சாப்பிட்டுக் கொண்டே, இலவச கேபிள் இணைப்பில் மகிழ்ச்சியாக தொலைக்காட்சித் தொடா் பாா்க்கலாம் என்று நடிகை நமீதா பிரசாரம் செய்தார் தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. இதோடு புதிய தமிழகம் சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில், தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாததால் மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வந்த சரவணன் கடந்த 14ஆம்…
Read Moreஅமைச்சர் எம்.சி.சம்பத் உறவினர் நிறுவனங்களில் 6 கோடி சிக்கியதா?
தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினருடைய நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், ரூ.6 கோடி சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மக்கள் நீதி மய்யம், திமுக, அதிமுக என முக்கிய கட்சியினருக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. அண்மையில் திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்நிலையில், அமைச்சர் எம்.சி.சம்பத் உறவினரின் கல்வி, நிதி நிறுவனங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். எம்.சி. சம்பத்தின் சம்பந்தி தர்மபுரி டிஎன்சி இளங்கோவனின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பென்னாகரம் சாலையில் உள்ள ஸ்ரீ விஜய் வித்தியாலயா ஆண்கள் மெட்ரிக்…
Read Moreஎ.வ.வேலுவுக்கு துரோகம் செய்த கட்சி நிர்வாகி
திமுகவின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் 2 நாள்கள் ரெய்டு செய்தனர். ஆனால் அதில் எதிர்பார்த்துச் சென்ற எதையும் கைப்பற்ற முடியவில்லை என்று துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வேலுவும் விளக்கம் அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து மின்னம்பலத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக நமக்கு மேலும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. திமுகவில் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்த வி.பி. துரைசாமி தரப்பிலிருந்துதான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தரப்புக்கு இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது; வட மாவட்டங்களில் திமுகவின் தேர்தல் செலவுக்கான பணம் முழுவதும் வேலு மூலமாகத்தான் விநியோகம் செய்யப்படுகிறது; அவரை நெருக்கிப்பிடித்தால் அந்த வழங்கல் பாதையை அடைத்துவிடலாம்; அது அவர்களுக்கு ஒரு நெருக்கடியைத் தரும் என்றும் யோசனையாகச்…
Read Moreதமிழகத்தில் இஸ்லாமிய பெண்கள் வாக்கு யாருக்கு?
தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகள் எந்த அளவுக்கு பாஜக மற்றும் அதிமுகவுக்குக் கிடைக்கும் என்பதை அறிவதற்காக மத்திய, மாநில உளவுத் துறைகளின் சார்பில் அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் இஸ்லாமியப் பெண்களில் கணிசமானவர்கள் பாஜகவை ஆதரிப்பதாகப் பதிவாகியிருக்கிறது என்று நமக்குத் தகவல் கிடைத்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்றவற்றால் மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தின. அதைத் தொடர்ந்து இப்போது தமிழகம், புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுகவும் பாமகவும் கூட்டுச்சேர்ந்துள்ள நிலையில், இஸ்லாமியர் வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு கிடைக்குமா, எந்த அளவுக்குக் கிடைக்கும்? குறிப்பாக பாஜகவுக்கு வாக்களிப்பார்களா? என உளவுத்துறை சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் ராமகிருஷ்ணனும், பாஜக கூட்டணியில் அதிமுகவின் சையது சுல்தானும்…
Read Moreகமல்ஹாசனுக்காக வாக்கு சேகரிக்கும் சுஹாசினி
கோவை தெற்கு தொகுதியை பொறுத்தவரை கமல்ஹாசன், வானதி சீனிவாசன் இருவரிடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது. இருவரும் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கி மக்களை சந்திக்கின்றனர். கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இல்லத்தரசிகளுக்கு இண்டக்ஷன் அடுப்பு இலவசமாக வழங்குவதாக அறிவித்தார். இவருக்கு ஆதரவாக நடிகை நமீதா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரச்சாரம் செய்தனர். இந்நிலையில் கமல்ஹாசனுக்கு நடிகை சுஹாசினி நேற்றும் இன்றும் டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். கமல்ஹாசனை ஆதரித்து அவரது அண்ணன் மகளும், நடிகையுமான சுஹாசினி நேற்று கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். மக்களை வீடு, வீடாக சென்று சந்தித்த அவர் தேர்தல் துண்டு பிரசுரங்களை வழங்கி டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இரண்டாவது நாளாக இன்று (மார்ச் 28) காலை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடிகை…
Read Moreதுரோகி தங்க தமிழ்செல்வன் எட்டப்பன் செந்தில்பாலாஜி
பிரச்சாரம் முடிவடையச் சரியாக ஒரு வாரமே இருக்கும் நிலையில் தமிழகத் தேர்தல் களத்தில் சூடு, ஆவி, புழுதி என பலதும் பறக்கிறது என்று சொல்லலாம். ஜெயலலிதா காலத்தில் பவ்யம் காட்டிவந்த எடப்பாடி பழனிசாமியும் இப்படிப் பேசுவாரா என திமுகவினரே வாயில் விரலை வைக்கும் அளவுக்கு, பிளந்துகட்டத் தொடங்கியிருக்கிறார். ’ஊர்ந்து சென்று முதலமைச்சர் பதவியைப் பெற்றார்’ என திமுக தலைவர் முதல் அண்மையில் கட்சியில் சேர்ந்த இளம் பேச்சாளர்வரை பேசினாலும், ஒரு கட்டம்வரை அதற்குப் பதில் அளிக்காமல் சமாளித்தார், எடப்பாடி பழனிசாமி. ஓரளவுக்கு மேல் சமாளிக்க முடியாமல் போகவே அவரால் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. விமர்சனத்தின் மீது பதிவாகும் கவனத்தைத் திருப்பிவிடும் உத்தியாக,’ஊர்ந்துபோய் பதவி வாங்கினதா சொல்றாங்க. ஊர்ந்துபோக நான் என்ன பாம்பா பல்லியா?’ என அப்பாவி பாமரனைப் போல எதிர்க் கேள்வியைப் போட்டார். திமுக தரப்பின்…
Read Moreகோயம்புத்தூரில் குடியேறுகிறாரா கமல்ஹாசன்
நடிகரும், மக்கள் நீதிமன்றகட்சி தலைவருமான கமல்ஹாசன், கோவையில் குடியேற திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் பரவியுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில நடிகர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இது குறித்து அவர் கூறும்போது, “என்னுடைய உறவினர்களும், நான் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் அதிகம் வசிக்கும் ( சென்னை) மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிட்டிருந்தால், எனக்கு பாதுகாப்பாகவும், மிக எளிமையான கணக்காகவும் இருந்திருக்கும். ஆனால் அதை நான் விரும்பவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் கோவை தெற்கு தொகுதி தான் மோசமான அரசியல்வாதிகளால் ஊழலால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் தான் அந்த தொகுதியில் நேரடியாக களம் இறங்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதுமட்டுமன்றி, கோவை தெற்கு தொகுதியில் தேசிய கட்சிகளால் தூண்டப்பட்டு சமூக நல்லிணக்கம் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களே அங்கு போட்டியிடவும் செய்கிறார்கள். அதனால் இது…
Read Moreகொளத்தூரில் முதல்வர் எடப்பாடியில் எதிர்கட்சி தலைவர்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் திமுக வேட்பாளரை ஆதரித்து நேற்று இரவு மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். சேலத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் எடப்பாடி தொகுதிக்குச் சென்றார். எடப்பாடியில் முதல்வரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் சம்பத் குமாருக்கு வாக்கு சேகரித்து, சாலையில் நடந்து சென்று பிரச்சாரம் செய்தார். எடப்பாடி, கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, திமுக தேர்தல் அறிக்கையை விளக்கிக் கூறி வாக்கு சேகரித்தார். பின்னர் எடப்பாடி காவல் நிலையம் அருகே உள்ள ஒரு பேக்கரி கடையில் பொதுமக்களுடன் அமர்ந்து டீ குடித்தார். அப்பகுதியில் இருக்கும் கடைகளுக்குச் சென்றும் வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் பலர்…
Read Moreபாட்டுபாடி வாக்கு கேட்கும் நாம் தமிழர் சீமான்
திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிரச்சாரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை, அண்ணாசிலை அருகில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அவர் பேசுவதற்கு முன்னர், அக்கட்சியின் பெண்கள் பிரிவினர் மேடையிலேயே சூடம் கொளுத்தி ஆரத்தி எடுத்தனர். மைக்கைப் பிடித்த சீமான், நாம் தமிழரின் ஆட்சி அமைந்தால் என்னென்ன செய்வோம் என தமிழ்த் தேசியக் கொள்கைத் திட்டங்களைப் பற்றி விவரித்தார். அவரின் பேச்சிலிருந்து..! ” பாண்டியாறு புன்னம்புழா ஆறுகள் கேரளத்தின் ஆறு மாவட்டங்களை செழிக்கச்செய்கிறது. அதில் அணை கட்ட இந்திராகாந்தி அடிக்கல் நாட்டிவிட்டுப் போய்விட்டார். நாம் அந்த அணையைக் கட்டுவோம். பசியைப் போக்கணும்னு இலவச அரிசி தருது அரசாங்கம். உலக வர்த்தக அமைப்பு உணவு மானியத்தை துண்டிக்குது. இது தெரியாமல் இங்கு சில தலைவர்கள் வீடு தேடி ரேசன் அரிசி…
Read Moreஎன் பேச்சால்முதல்வர் காயப்பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் – ஆ. ராசா
சமீபத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசும்போது, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசினார். அதில் அவர் பயன்படுத்திய சொற்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. முதல்வரின் தாயைப் பற்றி அவதூறு பேசியதாக ஆ.ராசாவுக்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று, சென்னையில், பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் தனது தாயைப் பற்றி இழிவுபடுத்திப் பேசுவதா என கண் கலங்கினார். முதல்வரின் தாயைப் பற்றி அவதூறு பேசியதாக ஆ.ராசா மீது புகார் அளிக்கப்பட்டது. ராசா மீது வழக்கு பதியப்பட்டு அவரைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவந்தநிலையில், அதுதற்காலிகமாகநிறுத்திவைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவுகளில் வழக்குகளும் பதியப்பட்டு, போலீஸ் தரப்பில் தயாராக இருந்தும், கடைசியில் நேற்று மாலையில் நோ சொல்லிவிட்டார், எடப்பாடி இந்நிலையில் தனது பேச்சு குறித்து மீண்டும் விளக்கமளித்து…
Read Moreதேர்தலை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு
திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகத் திருப்பதி என்பவர் போட்டியிடுகிறார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்சுழி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கம் தென்னரசு, கடந்த மார்ச் 19ஆம் தேதி காரைப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட ஆவியூர் கிராமத்தில் வாக்காளர்களுக்குப் பரிசுப்பொருட்கள், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். இது பற்றி புகைப்படத்துடன் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பரிசு பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். திருச்சுழி தொகுதி தேர்தலை ரத்து செய்வதுடன், திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தியிருந்தார். இந்த மனு…
Read Moreஅமைச்சர் ஜெயக்குமாரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த பெண்!
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம் தொகுதியில் ஏழாவது முறையாக அமைச்சர் ஜெயக்குமார் தேர்தலை சந்திக்கிறார்.ஏற்கனவே நடந்து முடிந்த ஆறு தேர்தலில் ஐந்து முறை அதே தொகுதியில் வெற்றி பெற்று மக்களின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் காலை தொடங்கி இரவு வரையிலும் வீதி தோறும், வீடுகள் தோறும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.நேற்று பஜனை தெருவில் அவர் பிரச்சாரத்திற்காக வந்தபோது உள்ள கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெண்மணி அவர் அருகே வந்து அவள் கையை பிடித்து, “எங்க தெய்வம் நீதானய்யா நீதானய்யா கொரோனா காலத்துல எல்லா உதவியும் செஞ்சு எங்கள காப்பாத்துன தெய்வம் நீ தான நீ ஜெயிக்கணும்ய்யா என்று சொல்லி ஜெயக்குமாரின் கைகளை பற்றிக் கொண்டார். அங்கிருந்த அனைவரும் இந்த காட்சியை பார்த்து…
Read Moreஇயக்குனர் சரவண சக்தி மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் “கதை திருட்டு”குற்றசாட்டு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவருமான சிங்காரவேலன் நாயகன், பில்லா பாண்டி படங்களை இயக்கியவரும், நடிகருமான சரவண சக்தி மீது கதை திருட்டு குற்றசாட்டு சுமத்தியுள்ளார் இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கொரானா ஊரடங்கின்போது என்னை தொடர்பு கொண்ட துணை நடிகர் மற்றும் இயக்குனருமான சரவணஷக்தி படப்பிடிப்பு இல்லாததால் பொருளாதார ரீதியாக சிரமப்படுவதாகவும், பணஉதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்”மீன் வாங்கி கொடுப்பதை காட்டிலும் மீன்பிடிக்க கற்றுகொடுப்பது சிறப்பானது” என்கிறகொள்கையுடையவன்நான் அதனால் நான்ஒரு கதை சொல்கிறேன் அதற்கு திரைக்கதை அமைத்து தாருங்கள் அதற்காக 50,000 ம் ரூபாய் சம்பளம் தருவதாகவும் கூறினேன் அதற்கு சரவண சக்தி சம்மதித்தார் “எல்லாம் அவன் செயல்” “பைரவா” படங்கள் பாணியில் மருத்துவ கல்லூரி மாணவியை அந்த கல்லூரி உரிமையாளர், மற்றும் தாளாளர் இருவரும் கற்பழித்து கொலை செய்துவிடுகிறார்கள்…
Read Moreபாண்டிசேரியில் போட்டியிடும் வேட்பாளர்களின் கல்வி தகுதி – குற்ற பின்ணனி
புதுச்சேரியில் உள்ள வேட்பாளர்களில் 54 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது கடந்த தேர்தலை விட அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான வழக்குகள், கல்வித் தகுதி தொடர்பாக தன்னார்வகண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை நேற்றுவெளியிட்டது. ஆய்வு செய்யப்பட்ட வேட்பாளர்களில் 323 பேரில் 54 பேர் மீது (17 சதவீதம்) மீது கிரிமினில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 28 பேர் மீது (9 சதவீதம்) கொலை, கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்ற கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் இரு வேட்பாளர்கள் மீது கொலை வழக்கும், ஒரு வேட்பாளர் மீது கொலை முயற்சி வழக்கும் உள்ளன. ஒரு வேட்பாளர் மீது பெண்ணை மானபங்கப்படுத்தித் தாக்கிய வழக்கும் உள்ளது. இது கடந்த 2016 தேர்தலில் 30 பேராக…
Read Moreபுதுச்சேரி பாஜக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் – நாராயணசாமி
புதுச்சேரியில் பல தொகுதிகளில் வாக்காளர்களின் ரேஷன் கார்டுகளை பாஜகவினர் கேட்டு வருகின்றனர் என்று, முன்னாள் முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நேற்று (மார்ச் 27) செய்தியாளர்களிடம் கூறுகையில், வாக்காளரின் ஆதார் எண்ணுடன் கூடிய மொபைல் எண் பெற்றது தொடர்பான விஷயத்தில் புதுச்சேரியில் 9 வேட்பாளர்களையும் தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தில் கூறுகையில், ஆட்சியில் அதிகாரச் சண்டைதான் நடந்தது என்றார். அவர் ஆட்சிக் காலத்தில் துணைநிலை ஆளுநரோடு சண்டையிடவில்லையா? அவரும் அதே அதிகாரச் சண்டைதான் செய்தார். ஒரே மேடையில் ஆட்சியில் செய்த பணிகளை விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். தயாரா? தேர்தலின்போது கலவரத்தைத் தூண்ட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளிவருகிறது. இதைக் காவல்துறை கண்காணிக்க வேண்டும். கர்நாடகத்திலிருந்து பாஜகவினர் பலர் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர். பல தொகுதிகளில் வாக்காளர்களின் ரேஷன் கார்டுகளை பாஜகவினர் கேட்பதாகப்…
Read Moreகோவில்பட்டியில் தினகரனை அச்சுறுத்தும் ஜோல்னாபை
எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் டிடிவி தினகரனுக்கு பெரும்தலைவலியாக ஜோல்னா பை அணிந்திருக்கும் அந்த வேட்பாளர் இருப்பார் என்கிறது கள நிலவரம். தனக்கென்று தனி செல்வாக்கு உள்ள டெல்டா பகுதிகளில் போட்டியிடாமல், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக டிடிவி அறிவித்த போது, அமமுக தொண்டர்களே அதிர்ச்சியடைந்தனர். இங்கு டிடிவி போட்டியிடுவதற்கு முக்கிய காரணம் மட்டுமல்ல.. ஒரே காரணமும் அமமுக தென் மண்டல அமைப்புச் செயலாளர் எஸ்.பி.மாணிக்க ராஜா தான். எனினும், இங்கு பக்காவாக வியூகம் அமைத்தே டிடிவி களமிறங்கியுள்ளார். கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை, அதிமுகவின் கடம்பூர் ராஜு 64,514 வாக்குகள் பெற்ற நிலையில், திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் 64,086 வாக்குகள் பெற்று, வெறும் 429 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக 28,512 வாக்குகள் பெற்றது. இம்முறை மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக தினகரனுடன்…
Read Moreஇருசக்கர வாகன பேரணிகளுக்கு தடை
தமிழகத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தேர்தல் பரப்புரையில் இருசக்கர வாகனத்தில் பேரணி செல்ல தடை விதித்துள்ளது தமிழக தேர்தல் ஆணையம். தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. சில இடங்களில் பைக்கில் பேரணியாக சென்றும், மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்தும் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேர்தல் பரப்புரையில் பைக் பேரணி என்ற பெயரில் மக்களை அச்சுறுத்துவதாக புகார் வந்துள்ளது. அதனால், பைக் பேரணிக்கு தடை விதிக்கப்படுகிறது. வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இருசக்கர வாகன பேரணிக்கு…
Read Moreகொளத்தூர் மாடல் தொகுதியாக மாற்றப்படும் – மு.க.ஸ்டாலின்
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று (மார்ச் 27) கொளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், இந்தத் தொகுதியை மாடல் தொகுதியாக மாற்றுவேன் என்று கூறியுள்ளார். ஸ்டாலின் பேசுகையில், “சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இந்தக் கொளத்தூர் தொகுதியில் வழக்கம்போல் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறேன். இது கொளத்தூர் தொகுதி என்று சொல்வதைவிட நம்முடைய தொகுதி என்றே சொல்வேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பதால், கொளத்தூர் தொகுதிக்குக் காலம் தாழ்ந்து வந்திருக்கிறேன். இருந்தாலும், நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள். அதனால்தான் முதலில் சொன்னேன், இது நம்முடைய தொகுதி என்று. “ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் வீட்டுப் பிள்ளை தானே வளரும்” என்று பழமொழி உண்டு. அதேபோல மற்ற தொகுதிகளுக்குச் சென்று வருவதால், இந்தத் தொகுதியில் எனக்கு மேலும் ஆதரவு அதிகமாகத்தான் இருக்கும். ‘நம்முடைய எம்.எல்.ஏ. – நம் வீட்டுப் பிள்ளை –…
Read Moreமுதியோர் தபால் வாக்குகள் அதிமுக- திமுக யாருக்கு சாதகம்
தபால் வாக்குகளால் வெற்றி எதிர் திசைக்குத் திரும்பிய வரலாறு தமிழகத்தில் நிறைய நடந்திருக்கிறது. நம்முடைய ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தை தேசத்தில் நிலை நிறுத்துவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பது நமக்குத் தெரிவதை விட, அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும். 2006 சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செளந்தரராஜன் வாங்கிய வாக்குகள் ஒரு லட்சத்து 269. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சின்னசாமி வாங்கியது ஒரு லட்சத்து 283 வாக்குகள். அதாவது 14 வாக்குகள்தான் வித்தியாசம். அப்போதிருந்த தேர்தல் அதிகாரி, செளந்தரராஜனுக்கு விழுந்த தபால் வாக்குகளை அதிமுகவுக்கு மாற்றிவிட்டதாக வாக்கு எண்ணும் மையத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியினர் போராடினர். எந்த பயனும் ஏற்படவில்லை. ராதாபுரம் அப்பாவு வழக்கு ஊரறிந்த சேதி. கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் அப்பாவுவை…
Read Moreமக்களை குழப்பும்- முதல்வர் பழனிச்சாமி-ஸ்டாலின் குற்றசாட்டு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 27) கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். நாகர்கோவில் செட்டிக்குளத்தில் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அவர், “நடக்க இருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற வேட்பாளர்கள் நாகர்கோவில் எம்.ஆர்.காந்தி, குளச்சல் குமரி பா.ரமேஷ், கன்னியாகுமரி வேட்பாளர் தளவாய் சுந்தரம், பத்மநாபபுரம் ஜான் தங்கம், விளவங்கோடு பாஜக வேட்பாளர் ஜெயசீலன், கிள்ளியூர் ஜூட் தேவ் ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டுகிறேன். பொன்.ராதாகிருஷ்ணன் திறமையானவர். இந்த மாவட்டம் எழுச்சி பெற, ஏற்றம் பெற மத்திய அரசிடம் பேசி பல திட்டங்கள் பெற்றுத் தந்திருக்கிறார். மாவட்டம் வளர்ச்சிபெற அவருக்கு வாக்களியுங்கள். கடந்த தேர்தல்களில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லாததால் பல திட்டங்கள் வராமல் போனது. இங்கு நம் கூட்டணி…
Read Moreமேற்குவங்கத்தில் ஆடியோ கிளப்பிய பரபரப்பு
முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற மேற்கு வங்கத்தில் நேற்று (மார்ச் 27) வெளியான இரண்டு ஆடியோ துணுக்குகள் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டன. ஒன்று, மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியை உள்ளடக்கிய கிழக்கு மித்னாபூர் மாவட்ட பாஜக துணைத்தலைவருடன், ஒரு பெண் தொலைபேசியில் பேசுவதாகக் கூறப்படும் ஒலிப்பதிவு. மற்றொன்று, திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் தாவிய ஒரு தலைவரும் இந்த மாதம் தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படும் ஒலிப்பதிவு. முதல் ஒலிப்பதிவில் பேசும் குரல், மேற்குவங்க முதலமைச்சர் மம்தாவினுடையதுதான் என்பது பாஜகவின் குற்றச்சாட்டு. அந்த பாஜக பிரமுகரின் பெயர், பிரலாய் பால். முன்னர் திரிணமூல் கட்சியில் செயல்பட்ட அவர், பிறகு சுவேந்து அதிகாரியுடன் சேர்ந்து பாஜகவில் சேர்ந்துவிட்டார். அவரிடம், ”மீண்டும் திரிணமூல் கட்சிக்கு வந்துவிடுங்கள்; நந்திகிராம் தொகுதியில்…
Read Moreஇந்தியில் பேசி வாக்கு சேகரிக்கும் வட மாநில பாஜக தலைவர்கள்
காங்கிரஸ் கட்சியோ, பாஜகவோ, சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் வேற்று மாநிலங்களைச் சேர்ந்த அகில தலைவர்களைப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவது வழக்கமானதுதான்; ஆனால், இந்த முறைதான் அதிக அளவில் வேற்று மாநிலங்களின் மாநிலத் தலைவர்களைச் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகளைக் கவரக் களம் இறக்கியுள்ளது பாஜக . மேற்குவங்கத்தில் இந்தி பேசும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் பணியாற்றுகின்றனர். ஏற்கெனவே அங்கு வங்காள மண்ணைச் சேர்ந்தவர்கள், அந்நிய சக்திகள் என மம்தா பிரச்சாரத்தை ஒரு பக்கம் திருப்பி விட்டுக்கொண்டிருக்கிறார். அதைக் கண்டும் காணாததுமாக தங்கள் பக்கத்தை வலுப்படுத்த உத்தரப் பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், முன்னாள் முதலமைச்சரும் இப்போதைய மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் ஆகியோரை அடிக்கடி மேற்குவங்கத்தில் பெரும் பொதுக்கூட்டங்களில் பேசவைத்தது. அவர்களும் சில நாள்கள் ஒன்று சேர்ந்தாற்போல முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதைப்போலவே, தமிழகத்திலும் பாஜகவின் அகில இந்தியத் தலைவர் நட்டா,…
Read Moreகோவையில் நடனமாடி வாக்கு கேட்ட நமீதா
கோவையில் இளைஞர்களுடன் நடனமாடி, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஓட்டுக்கேட்டு நேற்று (மார்ச் 26) நடிகை நமிதா பிரச்சாரம் செய்தார். கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற புது புது யுத்திகளுடன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார் வானதி சீனிவாசன். நேற்று அவருக்கு ஆதரவாக நடிகை நமிதா தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு தாமரைக்கு வாக்கு சேகரித்தார். கோவை காந்திபுரம் ராமர் கோவில் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட நமிதாவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசியதாவது , “கோவையில் பிறந்து வளர்ந்தவர் வேட்பாளர் வானதி சீனிவாசன். உங்களுக்காக சேவை செய்து வருகிறார். கடந்த ஐந்து வருடங்களில் இந்த தொகுதியைச் சேர்ந்த 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் மோடியின்…
Read Moreசிம்மசொப்பனம்செந்தில்பாலாஜி மீது குற்றப்பத்திரிகை
கரூரில் நேற்று (மார்ச் 26) திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரம்மாண்டக் கூட்டத்தின் இடையே பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “செந்தில்பாலாஜி ஆளுங்கட்சிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்”என்று பேசியிருந்ந்தார். அன்றே வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய திமுக கரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான செந்தில்பாலாஜி மீது குற்றப் பத்திரிகை நேற்று (மார்ச் 27) பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய குற்றப் பிரிவு தாக்கல் செய்துள்ள இந்த குற்றப் பத்திரிகையில் அப்போதைய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு பேர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. மத்திய குற்றப் பிரிவின் வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவிடம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 2011- 2015 அதிமுக ஆட்சி காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை பெற்றுத் தருவதில் அதிகாரிகளுடன் இணைந்து…
Read Moreஅதிமுக வேட்பாளர் வாக்குறுதி நீதிமன்றம் உத்தரவு
வாக்காளர்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிப்பதாகக் கூறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபடும் அதிமுக வேட்பாளருக்கு எதிரான புகாரை பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜெயராஜ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் என்.பி.நட்ராஜ் போட்டியிடுகிறார். அவர், தனக்கு வாக்கு அளித்தால், தனது உறவினர்களுக்குச் சொந்தமான மூன்று மருத்துவமனைகளில் இலவச மருத்துவச் சிகிச்சை வழங்குவதாகக் கூறி, வாக்குச் சேகரித்துவருகிறார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று(மார்ச் 26) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு…
Read Moreஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் – எடப்பாடி ஆவேசம்
சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 26) பிரச்சாரம் மேற்கொண்டார். முதல்வர் பேசுகையில், “அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் போகிற இடத்தில் எல்லாம் பொய்யாகப் பேசி வருகிறார். திமுக ஆட்சியில் எதாவது திட்டங்கள் செய்திருந்தால் தானே, அதைப் பெற்றி பேசுவார். பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். எடப்பாடி பழனிசாமி போலி விவசாயி என்கிறார். நானும் மண்வெட்டி பிடிக்கிறேன், அவரும் மண்வெட்டி பிடிக்கட்டும். களத்தில் தெரியும் யார் விவசாயி என்று. எவ்வளவு வேண்டுமானாலும் பேசட்டும். மக்கள் தான் இறுதித் தீர்ப்பு கொடுக்கப் போகிறார்கள்” என்று பேசினார். தொடர்ந்து அவர், “திமுகவை வீழ்த்த என் தொண்டை போனாலும், உயிரே போனாலும் பரவாயில்லை. உயிரை கொடுத்தாவது…
Read Moreமதங்களுக்கு எதிரான கட்சியல்ல திமுக- முக ஸ்டாலின்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் என பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் இன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளரும், கழகத்தின் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு, பிரச்சாரத்துக்காகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம் அருகே பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அனைத்து தொகுதிகளிலிருந்தும் மக்கள் இன்று (மார்ச் 26) திரண்டு வந்து பிரச்சாரத்தில் கலந்துகொண்டனர் மக்கள் வெள்ளத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “ நேருவைப் பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை. அவரிடம் எந்த வேலையைக் கொடுத்தாலும், அதில் முத்திரை பதிக்கும் வகையில் செய்துவிடுவார். கடந்த 7 ஆம் தேதி, திருச்சியில், ’ஸ்டாலினின் 7 வாக்குறுதிகள்’ என்ற நிகழ்ச்சியை…
Read Moreசசிகலாவை சுற்றும் அரசியல் நெருக்கடி மெளனம் கலைப் பாரா
சென்னை தி நகர் அபிபுல்லா சாலையில் குடியிருந்துவரும் சசிகலா மௌனத்தைக் கலைக்கக் காத்திருப்பதால் தொடர் பயணத்தில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுக்காலம் பெங்களூரு சிறையிலிருந்தவர் விடுதலையாகி, பிப்ரவரி 8ஆம் தேதி, சென்னைக்கு வந்தார். திடீரென மார்ச் 3 ஆம் தேதி அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக தெரிவித்தார். ஆனாலும் அவரது அரசியல் நடவடிக்கைகள் ஓயவில்லை என்பதை அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன. கடந்த வாரம் தஞ்சைக்கு பயணம் மேற்கொண்ட சசிகலா அங்கே கும்பகோணம், ஒரத்தநாடு அமமுக வேட்பாளர்கள் தன்னை சந்தித்தபோது அவர்களுக்கு வாழ்த்து சொல்லி அவர்களோடு போட்டோவும் எடுத்துக்கொண்டார். அதன் பின் திருச்சி சென்றபோது அமமுக ஸ்ரீரங்கம் வேட்பாளரான சாருபாலா தொண்டைமான் சசிகலாவை சந்தித்தார். இந்த நிலையில்தான் திடீரென அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா பற்றிய தனது மாதக் கணக்கிலான மௌனத்தை…
Read Moreராகுல் பொதுக்கூட்டத்தில் வைகோ பங்கேற்கிறார்
திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் மார்ச் 28 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அதில் மதிமுக பொதுச் செயலாளர் கலந்துகொள்ள மாட்டார் என்று தகவல்கள் வந்த நிலையில்… இன்று மதிமுக வெளியிட்ட அறிவிப்பில், ‘திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வைகோ கலந்துகொள்வார்’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 28 ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விருதுநகர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று பத்து நாட்களுக்கு முன்பே திமுக மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தேதி வாங்கிவிட்டார். அதனால் அந்த தேதியில் வைகோவால் சேலம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. வைகோவுக்கு பதிலாக மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி கலந்துகொள்வார் என்று மதிமுக வட்டாரத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேசிய அளவிலான தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்ளும் கூட்டத்தில் கூட்டணியின் எல்லா கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ள…
Read Moreஅமலாக்கதுறை மீது நீதிவிசாரணை நடத்த கேரள அரசு உத்தரவு
கேரளத்தில் தங்கக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுதாரியான ஸ்வப்னாவின் சர்ச்சைக்குரிய வாக்குமூலத்தால், மாநில அரசுக்கு அமலாக்கத் துறை மூலம் நெருக்கடி ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறையினர் மீதும் சேர்த்து நீதிவிசாரணை நடத்த அந்த மாநில அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று (மார்ச் 26) கூடிய அமைச்சரவையில், ஓய்வுபெற்ற நீதிபதி மோகனன் தலைமையில் இந்த நீதி விசாரணை ஆணையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. முன்னதாக, திருவனந்தபுரத்தில் இருக்கும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் தூதரகம் மூலம் தங்கமும் டாலர்களும் கடத்தப்பட்டதாகவும் அதில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் ஸ்வப்னா வாக்குமூலம் அளித்தார் என்று தகவல்கள் வெளியாகின. அவருடன் குற்றம்சாட்டப்பட்ட சரித் என்பவரும் இதேபோல வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் கசிந்தன. இருவரும் அமலாக்கத் துறையின் மிரட்டலால்தான் அவ்வாறு வாக்குமூலம் அளித்தனர் என பின்னர்…
Read Moreபுதுச்சேரியில் தேர்தலை ஏன் ஒத்திவைக்க கூடாது – உயர்நீதிமன்றம்
புதுச்சேரி பாஜக சார்பில் தொகுதி வாரியாக வாட்ஸ்அப் குழுக்கள் ஆரம்பித்து பிரச்சாரம் செய்யப்படுவதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் தொடர்ந்த வழக்கில், “வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர் மற்றும் முகவரி மட்டுமே இடம்பெற்றிருக்கும் என்பதால் ஆதார் ஆணையத்திலிருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று பாஜக பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிறப்பு புலன் விசாரணைக் குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் இன்று (மார்ச் 26) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘இதுபோன்று மொத்தமாக எஸ்எம்எஸ் அனுப்புவதற்கு முன்னரே உரிய அனுமதி பெறவேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.…
Read Moreவருமானவரித்துறை சோதனையை தவிடுபொடியாக்கிய எ.வ.வேலு
அரசியல் கட்சிகள் சட்டமன்றத் தேர்தலுக்காக வியூகம் வகுத்துள்ளது போலவே, மத்திய அரசின் வருமான வரித்துறையும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக சிறப்பு வியூகம் அமைத்துள்ளது. இந்தியாவிலேயே தேர்தல் நேரத்தில் பணம் அதிகம் விளையாடும் என்ற ரெக்கார்டு தமிழகத்துக்கு ஏற்கனவே இருக்கிறது, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், கடந்த நாடாளுன்றத் தேர்தலில் வேலூர் என பணத்தால் தேர்தல்கள் நிறுத்தப்பட்ட வரலாறு தமிழகத்துக்கு உள்ளது. அதனால் இந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டை அதிகம் எதிர்பார்த்திருக்கிறது தேர்தல் ஆணையம். தேர்தலின் போது நடக்கும் பண விளையாட்டைக் கட்டுப்படுத்தவும், கண்டறிந்து தடுக்கவும் இரு சிறப்பு அதிகாரிகளை நியமித்தது தேர்தல் ஆணையம். அதில் ஒருவர் வருமான வரித்துறையில் தென்னிந்திய அளவிலான உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற பாலகிருஷ்ணன். இவரது தனிச் சிறப்பு என்னவெனில் இவரது பதவிக் காலத்தில்தான்…
Read Moreஉதயநிதி ஸ்டாலின் செங்கலை திருடியதாக புகார்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இரு பெரும் தலைவர்கள் இல்லாத இந்த தேர்தல் அனைத்து தரப்பினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பரபரப்புக்கும், சுவாரஸ்யத்துக்கும், குறைவில்லாமல் இருக்கிறது இந்த தேர்தல் களம். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படாதது குறித்து கடுமையாக விமர்சித்தார். அடிக்கல் நாட்டிய தோடு கிடப்பில் போடப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளின் அலட்சியத்தைச் சுட்டிக்காட்டும் வகையில், ”அதிமுக அரசும் பாஜக அரசும் இணைந்து மதுரையில் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்துள்ளேன்” என்று கூறி ஒரு செங்கல்லைத் தூக்கிக் காட்டினார். பொதுமக்கள் மத்தியில் உதயநிதியின் செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியது.…
Read Moreகல்லாகட்டும் காட்ஸில்லா வெர்சஸ் காங்
மான்ஸ்டர்வெர்ஸ் பட வரிசையின் அடுத்த படமான ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ உலகம் முழுவதும் வெளியாகி பட்டையைக் கிளப்பி வருகிறது. லெஜண்ட்ரி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மான்ஸ்டர்வெர்ஸ் (MonsterVerse) வரிசையில் நான்காவது படமாக ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ என்ற திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ‘காட்ஸில்லா’ (2014), ‘காங்: தி ஸ்கல் ஐலேண்ட்’ (2017), ‘காட்ஸில்லா: கிங் ஆஃப் மான்ஸ்டர்ஸ்’ (2019) உள்ளிட்ட படங்கள் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றன. இந்த வரிசையில் தற்போது ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ வெளியாகியுள்ளது. ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் கோவிட் லாக்டெளனுக்குப் பிறகு வெளியான ஹாலிவுட் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டியுள்ள படம் என்னும் பெருமையைப் பெற்றுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் மட்டும் வெளியான முதல் நாளிலேயே பல கோடி வசூலைக் குவித்துள்ளது. காட்ஸில்லா படத்துக்கும், கிங்காங் படத்துக்கும் தனித்தனியாக பெரிய…
Read Moreஇசையமைப்பாளர் ரஹ்மானின் இந்தி எதிர்ப்பு
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கதை எழுதி தயாரித்திருக்கும் படம் 99 பாடல்கள். இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (மார்ச் 25,2021) நடந்தது. இயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன்,யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், அனிருத், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் இந்தித் திணிப்பை எதிர்க்கும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் நடந்துகொண்டது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமானிடம் தமிழில் பேசி விட்டு அருகே இருந்த படத்தின் நாயகனிடம் இந்தியில் பேசுகிறார் நெறியாளர். சட்டென புருவம் உயர்த்தும் ஏ.ஆர்.ரகுமான், “இந்தி?” எனக்கேட்டுவிட்டு இந்தியில் பேசியவரிடமிருந்து விலகிப் போய் தூர நிற்கிறார். கரகோஷம் அரங்கை அதிர வைக்கிறது. மேடையிலிருந்து இறங்குகையில் நெறியாளரை பார்த்து, “தமிழ் தெரியுமான்னு அப்பவே கேட்டேன்ல!” என்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.’அந்த இன்னொரு நபரை வரவேற்கவே இந்தி.. மன்னித்து விடுங்கள்’ என்கிறார் நெறியாளர். தமிழின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அக்காணொளி பலராலும் பகிரப்பட்டு வருகிறது. மகாதானம்…
Read Moreஅன்பு கலந்த நன்றிகள் – ஓமை கடவுளேஅசோக் செல்வன்
நடிகர்கள் மட்டுமே, ஒரு பிறப்பில் பல வாழ்க்கை பாத்திரங்கள் வாழ ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு புதிய பிறப்பாக பிறந்து, அதில் வாழ்ந்து பார்க்கும், ஆசி அவர்களுக்கு கிடைக்கிறது. இந்த சுழற்சி திரையில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருந்தாலும் சிலது மட்டுமே நடிகர்களின் மனதிற்கு நெருக்கமான பாத்திரமாக இருக்கும். அதில் சில பாத்திரங்கள் வசூலில் மிகப்பெரும் வெற்றியை பெறுகிறது. சில பாத்திரங்கள் விமர்சகர்களிடம் சிறப்பான பாராட்டுகளை பெறுகிறது. சில பாத்திரங்களை ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்கிறது. மிக சொற்பமான பாத்திரங்களே அனைத்து வகையிலும் முழுமையடைகிறது. அம்மாதிரியான பாத்திரங்கள் நடிகர்களின் அடையாளமாகிவிடும். என்னுடைய “மரக்கர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்” அந்த வகையிலான ஒரு அழகான திரைப்படம். இந்திய அளவில் எல்லாவகையிலும் சிறந்ததொரு நடிகரென, புகழ்பெற்ற நடிகர் மோகன்லால் அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போது, நான் மிகப்பெரும் மகிழ்ச்சியடைந்தேன். அந்த நொடியை…
Read Moreமஞ்சனத்தியாக மாறிய பண்டாரத்தி பாடல்
கர்ணன் படத்தில் பண்டாரத்தி பாடல்வரிகள் மாற்றப்பட்டது சம்பந்தமாக படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ் வெளியிட்டிருக்கும் அறிக்கை கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது. அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான். சொந்த அத்தையாக அக்காவாக ஆச்சியாக பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிபடுத்தினேன். ஆனால் நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம்…
Read Moreகாடன் திரைப்பட விமர்சனம்
இயற்கை வளங்களை அழிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மக்களின் எதிர்ப்பும் என்ற ஒன்லைனில் யானைகளின் வாழ்க்கைப் போராட்டத்தை கலந்துகட்டி, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தயாராகியுள்ள ‘காடன்.’ அஸ்ஸாமில் காட்டைக் கூறுபோட்டு யானைகளின் வாழ்வாதாரத்தை அழித்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி, பிரமாண்ட காட்சிகளோடு இயக்கியிருக்கிறார் பிரபு சாலமன். அது யானைகள் சுதந்திரமாக வாழ்ந்து வருகிற பல கிலோ மீட்டர் சுற்றளவுள்ள அந்த அடர்ந்த காடு. அந்த காட்டையும், காட்டில் வாழ்கிற உயிரினங்களை குறிப்பாக யானைகளை தனி மனிதனாக – தனது சொந்த குழந்தைகளைப் போல் கட்டிக் காக்கிற மனிதன் ‘காடன்.’ பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பு தருகிற நிறுவனம் கட்டுவதாக சொல்லி அந்த காட்டை அழிக்கிற முயற்சியில் ஈடுபடுகிறார் செல்வாக்கு மிகுந்த அமைச்சர் ஒருவர். அந்த நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும்போது யானைகளின் வழித்தடம் தடுக்கப்பட்டு யானைகள்…
Read Moreதிருப்தியில்லாமல் வேலை செய்த படம் அசுரன் – வெற்றிமாறன்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் படம் வாடிவாசல்.கலைப்புலி தாணு தயாரிப்பு.ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு, ஜி.வி பிரகாஷ்குமார் இசை, கலை இயக்கம் ஜாக்கி என்றும் சொல்லப்பட்டிருந்தது. சனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அறிவித்தார். சூர்யாவின் பிறந்தநாளையொட்டி 2020 சூலை 23 அன்று வாடிவாசல் படத்தின் முதல்பார்வையை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில், வாடிவாசல் படத்தில் சூர்யா இல்லை, வேறு கதாநாயகனை விரைவில் அறிவிப்போம் என்று கலைப்புலிதாணு பெயரிலான ஒரு ட்விட்டர் கணக்கில் செய்தி வெளியானது. உடனே அதை மறுத்த கலைப்புலிதாணு, அது போலிக் கணக்கு அதில் வரும் செய்திகளை நம்பவேண்டாம் என்று சொன்னார். அதோடு,நவம்பர் 28,2020 அன்று எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா…
Read Moreவிடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கை
வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளின் சார்பிலும் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை இன்று (மார்ச் 25) அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விழுப்புரத்தில் வெளியிட்டார். அந்த அறிக்கையில், “ தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% விழுக்காடு இடஒதுக்கீட்டு முறை பாதுகாக்கவும்; மருத்துவப் படிப்பில் தமிழக அரசு, அகில இந்திய ஒதுக்கீடு ((AIQ- All India Quota) மத்திய அரசின் தொகுப்பிற்கு, ((Central Pool) 15% இடங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும். இதன்மூலம் அந்த இடங்களுக்கான பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு நிலைநிறுத்தவும்; பின்தங்கிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் மத்திய அரசின் உதவிபெரும் பாடப்பிரிவுகள்…
Read Moreதொலைக்காட்சியில் வெளியாகும் மண்டேலா
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜய், அஜித் என எல்லா நடிகர்களுடனும் நடித்துவிட்ட காமெடி நடிகர் யோகிபாபு. காமெடியனாக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்தார். இவர் லீட் ரோலில் நடிக்க தர்மபிரபு, கூர்கா படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், யோகிபாபு முதன்மை ரோலில் நடிக்க உருவாகியிருக்கும் படம் ‘மண்டேலா’. சசிகாந்த் வழங்க பாலாஜி மோகன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருக்கிறார். ஒரே ஷெட்யூலில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்தது படக்குழு. அதோடு, இறுதிக்கட்டப் பணிகளையும் முடித்து படம் ரிலீஸூக்குத் தயாராகிவிட்டதாம். இன்றைய காலகட்டத்தில் சின்ன பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடியிலோ, டிவியிலோ ரிலீஸ் செய்வதே புத்திசாலித்தனம் என திரையுலகம் நம்புகிறது. அதன்படி, மண்டேலா படமும் நேரடியாக டிவியில் வெளியாக இருக்கிறது. நமக்குக் கிடைத்த தகவல்படி, யோகிபாபுவின் மண்டேலா படமானது நேரடியாக…
Read Moreமுரட்டுதனமான நூறு அண்ணன்கள் சுல்தான் கதை என்ன?
கார்த்தி, ராஷ்மிகா,நெப்போலியன், லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான். பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி படம் வெளியாகவிருக்கும் நிலையில் மார்ச் 24ஆம் தேதி அப்படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். கார்த்தி, ராஷ்மிகா, பாடலாசிரியர் தனிக்கொடி, விவேகா, நடிகர்கள் பிரின்ஸ், சென்றாயன், கேஜிஎஃப் புகழ் ராமச்சந்திர ராஜு, ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன், இசையமைப்பாளர்கள் விவேக் மெர்வின், நடன இயக்குநர் ஷோபி, படத்தொகுப்பாளர் ரூபன், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் கார்த்தி பேசியதாவது… “இந்த நிகழ்ச்சி குடும்ப விழா போன்ற உணர்வைத் தருகிறது. சொந்தப்பந்தம் கூட இருப்பதே பெரும் மகிழ்ச்சி என்பதை கொரோனா சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதேபோல், ஒரு படத்தைச் சுற்றியே அனைவரின் சிந்தனையும் இருந்தால், இந்த…
Read Moreஎ.வ.வேலுவை குறிவைக்கும் வருமானவரித்துறை அதிர்ச்சியில் திமுக வேட்பாளர்கள்
திருவண்ணாமலை திமுக மாவட்டச் செயலாளரும் உயர் நிலைக்குழு உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவை குறிவைத்து திருவண்ணாமலையிலும், சென்னையிலும் வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டு திமுக வட்டாரத்திலும், திமுக கூட்டணிக் கட்சிகள் வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இன்று (மார்ச் 25) பகல் திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளரான எ.வ வேலுவுக்கும், கூட்டணி வேட்பாளர்களுக்கும் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த நேரத்தில்தான்… எ.வ. வேலுவின் கல்லூரி, அலுவலகம், வீடு என சென்னையிலும், திருவண்ணாமலையிலும் சுமார் பத்து இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தத் தொடங்கினார்கள். சில மணி நேரங்களாக நீடித்த இந்த சோதனையின் என்ன கைப்பற்றப்பட்டது என்பது பற்றி வருமான வரித்துறையினர் எதையும் இன்னும் முறையாக அறிவிக்கவில்லை. இந்த ரெய்டால் திமுக மற்றும் வடமாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து திருவண்ணாமலை அரசியல் வட்டாரத்தில்…
Read Moreதிருச்சி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றம்
திருச்சி மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி அருகே பறக்கும்படை சோதனையில் முசிறியில் அதிமுக வேட்பாளர் செல்வராஜின் காரில் இருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தையடுத்து, தேர்தல் ஆணையம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், திருச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, சார் ஆட்சியர் ஆகியோர் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதையடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி திவ்யதர்ஷினி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை காவல்துறை தலைமையகத்தில் பணியாற்றி வந்த மயில்வாகனன், திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீரங்கம் சார் ஆட்சியராக விசுவ மகாஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாற்றப்பட்ட…
Read Moreதிமுகவின் நாட்டாமை மனப்பான்மை திணறும் திமுக வேட்பாளர்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு பத்து நாட்கள் மட்டுமே உள்ளதுஅதற்குள் எத்தனை கண்ணிகளைக் கடந்து செல்ல வேண்டுமோ என்று எல்லாக் கட்சிகளின் வேட்பாளர்களும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அச்சத்தோடு அலைகிறார்கள். ஆனால், அடுத்தடுத்து வரும் ‘சர்வே’ ரிசல்ட்களைப் பார்த்துவிட்டு, இப்போதே ஜெயித்துவிட்டதைப் போல ‘மிதப்பில்’ இருக்கிறார்கள் திமுக வேட்பாளர்கள் பலர். அதிமுக தலைமையிடமிருந்து ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஸ்வீட் பாக்ஸ் போனதென்றால், அறிவாலயத்தில் இருந்து வேட்பாளர்களுக்கு இந்த மிதப்பும், அசால்ட்டும்தான் பகிரப்பட்டிருக்கின்றன. இது 2016 தேர்தல் வரலாற்றையே திரும்பவும் எழுதி விடுமோ என்று உதறலில் இருக்கிறார்கள் உடன்பிறப்புகள். அதிமுக கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருப்பதால், அக்கட்சியின் சார்பில் களத்தில் நிற்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வேட்பாளர்கள் அனைவருமே, இருப்பதிலே கொஞ்சம் எடுத்துத் தேர்தலில் செலவழிக்கின்ற நிலையில்தான் இருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு இந்தத் தேர்தல் செலவு, ஒரு மாத வருவாய்…
Read Moreஅனைத்து சட்டமன்ற கூட்டத்திலும் பங்கேற்றவன் நான் – எடப்பாடி பழனிச்சாமி
தமிழக வரலாற்றில் அனைத்து சட்டமன்றக் கூட்டத்திலும் பங்கேற்ற முதல்வர் நான் மட்டுமே என்று எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் எங்குச் சென்றாலும், என்னைப் பற்றியும் அமைச்சர்களைப் பற்றியும்தான் பேசி வருகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி யார் என்றே தெரியாது என்றார். தற்போது அவருக்கு என்னைப் பற்றி பேசவில்லை என்றால் தூக்கமே வராது. இந்த ஆட்சியை எளிதாகக் கவிழ்த்து விடலாம் என்று நினைத்தார். ஆனால் அவரது கனவு பலிக்கவில்லை. உங்களுடைய ஆதரவுடன்அனைத்தையும் தவிடுபொடியாக்கினேன். ஒரு சாதாரண மனிதன் முதல்வரானால் எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்தேன். ஆனால் மக்களின் ஆதரவால் அனைத்திலும் வெற்றி பெற்றேன். நான் முதல்வரான பிறகு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை…
Read Moreதினகரன் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் கோவில்பட்டி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுவதை அடுத்து ஸ்டார் தொகுதியாகிவிட்டது. அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூவும், திமுக கூட்டணியில் சிபிஎம் சார்பில் சீனிவாசனும் களத்தில் நிற்கிறார்கள். கட்சிகளுக்கு இடையேயான போட்டியாக வெளியே பேசப்பட்டாலும் கோவில்பட்டியில், “ரெண்டு நைனாவும் ஒரு தேவமாரும் மோதுறாங்கலே’ என்றே ‘சுருக்’கெனச் சொல்கிறார்கள் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு தனதுதளபதிஎன்றுமாணிக்கராஜாவை சொல்லி அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தமிழகம் முழுக்க பிரச்சாரத்துக்குக் புறப்பட்டுவிட்டார். ஆனால் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூவும், திமுக கூட்டணியின் சிபிஎம் சீனிவாசனும் தொகுதிக்குள் இண்டு இடுக்கு விடாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். தினகரன் மீண்டும் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில்தான் தொகுதிக்கு வருகிறார். அதற்குள் மாணிக்கராஜா ஒவ்வொரு கிராமமாக சென்று சூறாவளியாக வாக்கு வேட்டையாடிக் கொண்டிருக்கிறார். கடந்த 2016 தேர்தலில் கோவில்பட்டி…
Read Moreஉதயநிதி நேர்மையாளர் இல்லை – கமலஹாசன்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கும், திமுக இளைஞரணிச் செயலாளராக பிறகு பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கும் வார்த்தை போர் நடந்தது. கிராமசபை உள்ளிட்ட திமுக தனது வாக்குறுதிகளை காப்பியடிப்பதாக கமல்ஹாசன் கூறியிருந்த நிலையில், “நாங்கள் இதையெல்லாம் ஐம்பது ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கிறோம். ஐம்பது ஆண்டுகளாக கமல்ஹாசன் தூங்கிக் கொண்டிருந்தாரா?”என்று கேள்வி எழுப்பினார் உதயநிதி. இந்நிலையில் இந்த மோதல் சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்கிறது. திமுக மீது தொடர்ந்து தன் பிரச்சாரத்தில் குற்றம் சாட்டி வரும் கமல்ஹாசன் நேற்று (மார்ச் 24) தனது கோவை தெற்கு தொகுதிக்கென சிறப்பு தேர்தல் உறுதிமொழிகளை அறிவித்தார். அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உதயநிதி பற்றி கேட்கப்பட்டபோது, “நான் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் படம் நடித்திருக்கிறேன்.. அதற்காக பணம் வாங்கியிருக்கிறேன். அப்போது கூட இது சரியான பணமா என்று…
Read Moreஇந்தி சிங்கிளில் நடித்த முதல் தென்னிந்திய நடிகர் அல்லு சிரீஷ்
நடிகர் அல்லு சிரீஷ் ஒரு டிரெண்ட் செட்டர் என்பதில் சந்தேகமில்லை. நடிகரும் பொழுதுபோக்கு கலைஞருமான இவர் மக்களை கவரும் வகையில் புதுபுது படைப்புகளை இயக்க தயங்கியதில்லை. அல்லு சிரீஷ் தென்னிந்திய விருது விழாக்களான ஐஃபா, பிலிம்பேர் மற்றும் சைமா உள்ளிட்ட பல விருது விழாக்களை தொகுத்து வழங்கியுள்ளார், இவரின் நகைச்சுவை உணர்வின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார். டிக்டாக்கில் இணைந்த முதல் நடிகர் இவர், மேலும் அதில் ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டிருந்தார். இந்தி பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமான தர்ஷன் ராவல் மற்றும் நீதி மோகன் ஆகியோர் பாடிய இந்தி – விலாயதி ஷரப் என்ற மியூசிக் வீடியோவில் நடித்து, இந்தி சிங்கிளில் நடித்த முதல் இளம் தென்னிந்திய நடிகர் என்ற அங்கிகாரம் பெற்றுள்ளார்.
Read Moreஇதுதான் மக்களாட்சி மாண்பா-இயக்குனர் தங்கர்பச்சான்
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொது தேர்தல், இதில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடு, தேர்தல் ஆணைய இயலாமை பற்றி இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏற்கெனவே தேர்தல் முறைகளில் செய்ய வேண்டிய சீர் திருத்தங்களைச் செய்யாமல் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்திமுடித்துக்கொண்டே இருக்கின்றது. கல்வி அறிவு இல்லாதவர்களுக்காகத்தான் சின்னங்களைப் பார்த்து வாக்களிக்கும் முறையைக்கொண்டு வந்தார்கள். இந்திய நாட்டில் 740 பல்கலைகழகங்கள் உருவானபின்னும் இன்னும் அதேமுறை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இன்னும்கூட படிக்கத்தெரியாமல் வாழும் மக்கள் சின்னங்களைப் பார்த்து வாக்களிக்கும் முறை வேண்டும் என்பதால் தான் இம்முறை தொடர்கின்றது. ஆனால் ஒவ்வொருக் கட்சிக்கும் நிரந்தரச் சின்னங்கள் ஒதுக்கப்படுவதும் அதனால் உண்மையான மக்களாட்சி உருவாக ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் தேர்தல் ஆணையம் சிந்திக்க வேண்டும். இனியாவது நிரந்தரச்சின்னங்களை ஒதுக்காமல் ஒவ்வொரு தேர்தலுக்கும் வேறு வேறு சின்னங்களை ஒதுக்க வேண்டும். இவ்வாறு…
Read Moreதேசிய விருதுகளால் தமிழ் சினிமா தலைநிமிர்ந்து நிற்கிறது – பாரதிராஜா
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், மூத்த இயக்குனருமான பாரதிராஜா தேசிய விருது பெற்ற தமிழ் திரையுலக கலைஞர்களை வாழ்த்தி, பாராட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்சினிமாவைபெருமைப்படுத்திய தேசிய விருது பெற்ற கலைஞர்கள் தேசிய அளவிலான அங்கீகாரம் ஒவ்வொரு கலைஞனுக்குமான எதிர்பார்ப்பாக இருக்கும். கடின உழைப்பை மதிக்க வேண்டும்… அந்த உழைப்பு தேசிய அளவில் உச்சி நுகரப்பட வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அவ்விருதை ஏற்புடைய கலைஞர்கள் பெறும்போது தமிழ் சினிமா தலை நிமிர்கிறது. 2019-ல் வெளியான படங்களில் எல்லோரையும் அசத்தியெடுத்த படம் ‘அசுரன்’. அதோடு இன்னும் சில நல்ல படங்களும் தேர்வில் கலந்துகொண்டன. நம் தமிழ் சினிமாவில் நல்ல சினிமாக்கள் பிறந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் 2019 ஆண்டில் நமக்கு நெருக்கமான படமான அசுரன் படத்திற்காக சிறந்த நடிகர் விருது அசுர உழைப்பாளன் தனுஷூக்கு கிடைத்தது உண்மையிலேயே…
Read Moreடெல்லியில் விவசாயிகள் போராட்டம் 125 நாட்களை கடந்தது
125 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் செய்து வருகிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் பகுதியில் இவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் நடந்து வரும் இந்த விவசாயிகள் போராட்டம் நாட்டையே உலுக்கி உள்ளது. டெல்லி எல்லையில் தற்போது போராடி வரும் விவசாயிகள் டெல்லி எல்லையை தாண்டி உள்ளே சென்று மீண்டும் போராட்டம் நடத்தும் திட்டத்தில் உள்ளனர். குடியரசு தினத்தின் போது டெல்லிக்குள் இவர்கள் சென்றது போல மீண்டும் உள்ளே செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி எல்லையில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து 120-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி எல்லையில் தற்போது போராடி வரும்…
Read Moreகொரோனா பரவலை தடுக்கு வாக்குசாவடிகளில் 13 வகையான பாதுகாப்பு
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு அன்று கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 13 வகையான பாதுகாப்பு உபகரணங்கள், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது. இதற்கான உபகரணங்களை, தமிழக சுகாதாரத்துறை கொள்முதல் செய்து வருகிறது. அதன்படி வெப்ப நிலையை பரிசோதிக்கும் ‘தெர்மல் ஸ்கேனர் கருவி’, முழு உடற்கவச உடை, 3 அடுக்கு முககவசம், காட்டன் முககவசம், 2 வகையான கையுறை, 3 வகையான கிருமிநாசினி, முக பாதுகாப்பு கவசம், மருத்துவ உபகரணங்களுடன் கூடிய பெட்டகம் உள்பட 13 வகையான பொருட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் வழங்கப்பட உள்ளன. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- ஒவ்வொரு வாக்காளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்வதுடன், கிருமிநாசினி கொண்டு கை…
Read Moreபிரேமலதா விஜயகாந்த்துக்கு கொரானோ தொற்று இல்லை
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இவர் கடந்த 18-ந்தேதி தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதிசுடன் விருத்தாசலம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு, விருத்தாசலத்தில் தங்கி, தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதீஷ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையறிந்த கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் வேட்புமனு தாக்கலின்போது சுதீசுடன் இருந்த பிரேமலதா விஜயகாந்த், தொகுதி பொறுப்பாளர் ராஜ் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர். அதன்அடிப்படையில் சுகாதாரத்துறை குழுவினர் நேற்று விருத்தாசலம் தொகுதிக்குட்பட்ட செராமிக் தொழிற்பேட்டை பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பிரேமலதா விஜயகாந்திடம் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என…
Read Moreகருத்துகணிப்பு முடிவுகளால் அலட்சியம் வேண்டாம் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது ஊடகங்களில் – பத்திரிகைகளில் வெளியாகும் கருத்துக் கணிப்புகளும் திமுக. தலைமையிலான கூட்டணியின் மகத்தான வெற்றிக்குக் கட்டியம் கூறுகின்றன. இவையெல்லாம் நமக்கு, நமது உழைப்புக்கு, நாம் கொண்டிருக்கும் கோட்பாடுகளுக்கு, ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரும் அதே வேளையில், முன்பைவிட நாம் அதிகமான கவனத்துடன் உழைக்க வேண்டும்!. என்ற எச்சரிக்கை உணர்வையும் இணைத்தே ஏற்படுத்துகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. கருத்துக்கணிப்புகள் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்தாலும், எதிராக இருந்தாலும், அதனை மட்டுமே நம்பி சார்ந்திருக்காமல், முன்னெப்போதும் போல களப்பணியாற்றுவதே நம் கடமை என்பதை தலைவர் கருணாநிதி அடிக்கடி நினைவூட்டுவார். மக்கள்தான் வெற்றியைத் தருவதற்குத் தயாராக இருக்கிறார்களே என்ற அதீத எண்ணம் மனதில் கடுகளவு குடியேறினாலும், அது களத்தில் மலையளவு பாதிப்பை ஏற்படுத்தி விடும். தேர்தல் என்பது ஒவ்வொரு வாக்குக்கும் உள்ள ஜனநாயக…
Read Moreவெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மின்னணு தபால் வாக்குபோட அனுமதி இல்லை
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்விக்கு மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் அளித்த பதில் வருமாறு:- வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மின்னணு தபால் ஓட்டு போட வசதியாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் திருத்தம் செய்யும் யோசனையை தேர்தல் கமிஷன் முன்வைத்தது. அதை அமல்படுத்துவதில் உள்ள சவால்களை களைய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதனால், 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு தபால் ஓட்டு வசதியை அளிப்பது சாத்தியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Read Moreஉருமாறிய கொரோனா – மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது இந்தியாவில் காணப்படும் கொரோனா வைரஸ் வகைகளை மரபணு வரிசைப்படுத்தி ஆய்வு செய்வதற்காக, 10 தேசிய ஆய்வுக்கூடங்கள் கொண்ட குழுமத்தை (இன்சாகாக்) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதம் உருவாக்கியது. அந்த ஆய்வுக்கூடங்களில் கொரோனா வகைகளை மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வு நடந்து வருகிறது. மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அனுப்பி வைத்த 10 ஆயிரத்து 787 கொரோனா உறுதி செய்யப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், இதுவரை 771 உருமாறிய கொரோனாவை ‘இன்சாகாக்’ குழுமம் கண்டுபிடித்துள்ளது. இவற்றில், 736 மாதிரிகள், இங்கிலாந்தை சேர்ந்த உருமாறிய கொரோனாவை சேர்ந்தவை. 34 மாதிரிகள் தென்ஆப்பிரிக்க உருமாறிய கொரோனாவையும், ஒரு மாதிரி, பிரேசில் உருமாறிய கொரோனாவையும் சேர்ந்தவை. 18 மாநிலங்களில் இந்த உருமாறிய கொரோனாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதே சமயத்தில், சர்வதேச பயணிகள், அவர்களுடன்…
Read Moreபழனி புதியமாவட்டமாக உருவாக்கப்படும் – முதல்வர் பழனிச்சாமி வாக்குறுதி
பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பழனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் திறந்த வேனில் முதல்வர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, “ஸ்ரீரங்கம் கோயில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் ஆகிய இடங்களில், திருநீறு கொடுத்தபோது அதைக் கீழே கொட்டி மக்களின் கடவுள் நம்பிக்கையை அவமதித்தவர் திமுக தலைவர் ஸ்டாலின். இவ்வாறு மதங்களை அவமதித்து வந்த ஸ்டாலின் தற்போது வேலை கையில் எடுத்திருக்கிறார். இதுதான் பழனி முருகனின் சக்தி. தமிழகத்தின் சிறந்த புண்ணியத் தலம் பழனி, எனவே பழனியைத் திருப்பதி போலத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு…
Read Moreதேசத்தை விற்றுவிடுவார்கள்- நாம் தமிழர்சீமான்
நோட்டுக்கு வாக்கை விற்காதீர்கள், அவர்கள் வாக்கைப் பெற்றுக்கொண்டு நாட்டை விற்றுவிடுவார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருப்போரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எல்லா திட்டங்களைக் கொண்டு வந்து, வாழ்வதற்கு வாய்ப்பற்ற ஒரு நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். இதை எதிர்த்துப் போராடினால் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்கின்றனர். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் கழிவுகளைக் கடலில் கொட்டுகிறார்கள். இதனால் மிக பெரிய பாதிப்பைச் சந்திக்கிறோம். கல்பாக்கம் அணு உலையால் சுற்றுவட்டார 14 கிராமங்களில் பத்திரப்பதிவே செய்ய முடியாத நிலை உள்ளது. அணுக்குண்டு மேல் அமர்ந்திருப்பதும் அணு உலை அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர். காற்றாலைகள் கடற்கரை…
Read Moreஅடுத்துவரும் பத்து நாட்கள் அதிமுக்கியமானவை – கமல்ஹாசன்
திமுக, அதிமுக என்ற இருபெரும் சக்திகளுக்கு இடையே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தானும் ஒரு கூட்டணியை நகர்த்திக்கொண்டு தேர்தலைச் சந்திக்கிறார். தீவிர பிரச்சாரத்துக்கு இடையே மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சித் தொண்டர்களுக்காக நேற்று (மார்ச் 24) ஒரு ஆடியோ மெசேஜை வாட்ஸ்அப் வழியாக வெளியிட்டிருக்கிறார். அடுத்த பத்து நாட்களில் என்ன செய்ய வேண்டுமென்பதை அதில் விளக்கியிருக்கிறார் கமல். “வணக்கம். நல்லா இருக்கீங்களா… தேர்தல் பிரச்சாரத்துக்கு இன்னும் பத்து நாட்கள்தான் இருக்கு. நாம இத்தனை வருஷம் செய்த உழைப்புக்கும், பட்ட கஷ்டத்துக்கும் பலன்களை அறுவடை பண்ண வேண்டிய காலம் இது. கவனமா இருந்து பயிர்களையும் காப்பாத்தணும். அடுத்த பத்து நாட்கள் சொந்த வேலைகளை எல்லாம் ஒத்தி வைச்சுட்டு, தமிழ்நாட்டை தத்து எடுத்துக்கங்க. மிக மிக உற்சாகத்தோட உழைக்கணும். என்ன…
Read Moreசசிகலாவை கட்சியில் இணைக்க எடப்பாடி – பன்னீர் ஆலோசனை
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு வருவதாக அதிமுகவில் சலசலப்புகள் எழுந்து அடங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் நேற்று (மார்ச் 24) தேர்தல் பரப்புரை செய்வதற்காக முதல்வரின் மாவட்டமான சேலத்துக்கு வந்தார் துணை முதல்வரும் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம். சேலம் மாநகரில் பிரச்சாரம் செய்த ஓ.பன்னீர்செல்வம் பின் முதல்வரின் சொந்தத் தொகுதியான எடப்பாடிக்குச் சென்றார். அங்கே முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமிக்காக வாக்கு சேகரித்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வெகுவாகப் புகழ்ந்தார் ஓ.பன்னீர் செல்வம். “தற்போது நல்லாட்சி நடத்திவரும் முதல்வர் அண்ணனின் ஆட்சி தொடர வேண்டும். அம்மா வழியில் தமிழகத்தைத் தடம்பிறழாது வழிநடத்திச் சென்றுகொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று பேசிய ஓ.பன்னீர் தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக செய்திருக்கும் சாதனைகளையும் பட்டியலிட்டார். குறிப்பாக தொழில்துறையில் சுமார் 26,000…
Read Moreசோழவந்தானில்கழக வேட்பாளர்களை திணறடிக்கும் தேமுதிக வேட்பாளர் ஜெயலட்சுமி
மதுரை மாவட்டத்திற்குள் வரும் சோழவந்தான்(தனி) தொகுதியில் தேமுதிக வேட்பாளராக ஜெயலட்சுமி போட்டியிடுகிறார் வேட்பு மனு வாபஸ் வாங்குவதற்கான கடைசி நாளான நேற்று மாலை 3 மணிவரை திமுக- அதிமுக- தேமுதிக தரப்பில் பரபரப்பும்- பதட்டமும் நிலவியது காரணம் தேமுதிக வேட்பாளராக போட்டியிடும் ஜெயலட்சுமி தான் கடந்த ஐந்து சட்டமன்ற தேர்தலில் திமுக அதிமுக தரப்பில் இந்த தொகுதியை சேர்ந்தவர்களுக்கு ஒரு முறை மட்டுமே இந்த கட்சிகள் வாய்ப்பு கொடுத்திருக்கின்றன அதில் அதிமுக வேட்பாளர் கருப்பையா வெற்றிபெற்றார் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பவானி குறைந்த வாக்குகளில் வெற்றிவாய்ப்பை இழந்தார் இந்த தேர்தலில் தொகுதியில் அதிமுக- திமுக இரு கட்சியிலும் இருப்பவர்கள் போட்டியிட விருப்பமனுகொடுத்திருந்த போதிலும் வழக்கம்போல வெளி தொகுதி ஆட்களுக்கே போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறது திமுக – அதிமுக இரு கட்சிகளுமே இதில் இருந்து வேறுபட்டு…
Read Moreதேசிய குடியுரிமை சட்டத்தை திமுக அனுமதிக்காது – மு.க.ஸ்டாலின்
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று காலை தூத்துக்குடி, பிறகு ராமநாதபுரம் மற்றும் இரவில் ராயபுரம் தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.ராயபுரம், பெரம்பூர், மாதவரம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர், துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர் தொகுதிகளில் மக்கள் மத்தியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியபோது திமுக சார்பில் ஆதரவு கொடுத்தோம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த சட்டத்துக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதுபோன்று, கேரளா, மேற்கு வங்காளத்தில் இந்த சட்டத்தை அனுமதிக்காதது போல் திமுக ஆட்சியில் இந்த சட்டத்தை அனுமதிக்கப்பட்டோம். வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடந்த போது மக்களை வந்து சந்தித்திருப்பாரா ராயபுரம் தொகுதி வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார். நாடாளுமன்றத்தில் ஆதரித்துவிட்டு, பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, தற்போது தேர்தலுக்காக இங்கு வந்து பாட்டுப் பாடி…
Read Moreகமல்ஹாசன் வாகனத்தில் பறக்கும் படை சோதனை
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். நேற்று (மார்ச் 22) நாகப்பட்டினம் மாவட்டத்தில் அவர் பிரச்சாரத்துக்குச் சென்றார். கீழ்வேளூர், நாகப்பட்டினம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் ம.நீ.ம. வேட்பாளர்களை ஆதரித்து நாகையில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், அங்கிருந்து தஞ்சை சென்றார். நேற்று மாலை தஞ்சை ரயிலடியில் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு காரில் திருச்சி நோக்கிக் கிளம்பினார். அப்போது தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது கமல்ஹாசன் காரை தேர்தல் பறக்கும் படையினர் மறித்தனர். 50,000 ரூபாய்க்கு அதிகமான கணக்கில் வராத பணம் கொண்டு செல்லப்பட்டால் அதைக் கைப்பற்ற பறக்கும் படையினருக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த நிலையில் கமலின் பிரச்சார வாகனத்துக்குள் துணை ராணுவப்படையினர், போலீஸார் ஏறி சோதனையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனை முடிந்து சில நிமிடங்களில் அவர்கள்…
Read Moreமனைவியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க விரும்பும் விஷ்ணு விஷால்
இந்த ஆண்டில் நல்ல விஷயம் நடக்கும் என்று தன்னம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணுவிஷால் தெரிவித்திருக்கிறார். நடிகர் விஷ்ணு விஷால் இன்று சென்னையில் ஊடகவியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது… சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். இந்த ஆண்டில் நான் நடித்த மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. முதலில் ‘காடன்’ வெளியாகிறது. அதைத்தொடர்ந்து என்னுடைய தயாரிப்பில் ‘எஃப் ஐ ஆர்’ வெளியாகவிருக்கிறது. ‘மோகன்தாஸ்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறேன். ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன். ‘ஜீவி’ படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். வேறு சில படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. அதற்கடுத்து மீண்டும் சொந்த பட நிறுவனம் சார்பாக புதிய படம் தயாரிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று…
Read Moreஎஸ்டிபிஐ கட்சிக்கு குக்கர் சின்னம்
அமமுக கூட்டணியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சிக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலில், எஸ்.டி.பி.ஐ. கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இணைந்து, ஆலந்தூர், ஆம்பூர், பாளையங்கோட்டை, திருவாரூர், மதுரை மத்தி, திருச்சி மேற்கு ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலிலும் அமமுக கூட்டணியில் இணைந்து நெல்லிதோப்பு, அரியாங்குப்பம், காரைக்கால் வடக்கு, மாஹே ஆகிய 4 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடுகிறது. இந்த 10 தொகுதிகளிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் தேர்தல் கமிஷனால் ஏற்கப்பட்டு, இன்று அவர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக, அதிமுக போன்ற கட்சிகள் தலைமையிலான கூட்டணியில் உதயசூரியன், இரட்டை இலை சின்னத்தில் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதேபோல அமமுக தலைமையிலான கூட்டணியில் அமமுகவின் குக்கர் சின்னம்…
Read Moreதமிழக தேர்தலும் – இரண்டாவது கொரானா அலையும்
ஆட்சிக்கு எதிர்ப்பு அலை இருக்கிறதா? எதிர்க்கட்சிக்கு ஆதரவு அலை இருக்கிறதா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்துகொண்டிருக்கும் நிலையில் கொரோனா இரண்டாம் அலை என்ற அச்சம் தமிழகத்தை படர்ந்துள்ளது. தேர்தல் காலம் என்பதால் எங்கெங்கு பார்த்தாலும் பிரச்சாரம், மக்கள் கூட்டம் என்று கொரோனா மீண்டும் பரவ சாத்தியக் கூறுகளும் அதிகமாக இருக்கின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேளச்சேரி சந்தோஷ்பாபு, அண்ணாநகர் பொன்ராஜ் ஆகியோருக்கும் தேமுதிகவின் சேலம் மேற்கு வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜுக்கும் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இதுவரை எத்தனை எத்தனை நிர்வாகிகளைச் சந்தித்திருக்கிறார்கள், வீதி வீதியாக சென்று எத்தனை மக்களோடு கைகுலுக்கியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் நினைத்தால் கொரோனா தொற்றின் அபாயம் அச்சமூட்டுகிறது. ஏற்கனவே தனது பிரச்சாரத்தில் மக்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி…
Read Moreதூத்துக்குடி துப்பாக்கிசூடு விசாரணை என்ன ஆனது – மு.க.ஸ்டாலின்
‘ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் எனக்குத் தெரியாது. டிவியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என கூறிய எடப்பாடி பழனிசாமி பதவியில் நீடிக்கலாமா?’ என திமுக தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடி மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராகத் தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இன்னும் மாறா வடுவாக மக்கள் மனதில் இருக்கிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று (மார்ச் 22) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலின், “துப்பாக்கி சூடு சம்பவம் எனக்குத் தெரியாது என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி பதவியில் தொடரலாமா” என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து பேசிய அவர், 13 பேர காக்கை குருவிகள்…
Read Moreதிமுக தேர்தல்அறிக்கை கவனிக்கப்படுவது ஏன்?
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளன. அதிமுகவைப் பொறுத்தவரை, வாக்காளர்களுக்கு இலவச வீடு, வாஷிங் மிஷின், மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா, இலவச கேபிள் கனெக்ஷன் உள்ளிட்ட வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. மறுபக்கம் திமுகவை பொறுத்தவரை மாதம்தோறும் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உதவித் தொகை வழங்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. அதே சமயத்தில் தமிழகத்தின் எதிர்காலத்துக்கான யோசனைகளும் திமுக அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தின் சுயாட்சி மற்றும் சுயமரியாதைக்காகப் போராடுவோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பில் 75 சதவிகித விழுக்காடு உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்படும், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 40 சதவிகித இட ஒதுக்கீடு, பல்வேறு ஜாதியைச் சேர்ந்த 215 பேரை கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்போம். கல்வி பொது பட்டியலிலிருந்து…
Read Moreகதையை நம்பி சதீஷை கதாநாயகனாக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்
தமிழ் சினிமாவில் புதிதாக படம் தயாரிக்க வருகிறவர்களுக்கு முன்ணனி நடிகர்கள் கால்ஷீட் கிடைப்பது இல்லை இரண்டாம்நிலையில் வளர்ந்துவரும் நடிகர்கள் ஒரு படம் நடித்து வெளியானவுடன் கோடிகளில் சம்பளம் கேட்க தொடங்கிவிடுகின்றனர் ஆனால் அவர்கள் நாயகனாக நடிக்கும் படங்களுக்கு வியாபாரம் இருப்பது இல்லை அதனால் காமெடி வேடத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களை கதாநாயகனாக நடிக்க வைத்து படம் தயாரிக்கும்போக்கு கவுண்டமணி காலத்தில் தொடங்கியது ஆனால் வியாபார ரீதியாக வெற்றி கிடைக்காததால் காமெடி பயணத்தை தொடர்ந்தார் அவரை தொடர்ந்து காமெடி நடிகர்கள் விவேக், வடிவேலு, சந்தானம், சூரி, யோகிபாபு, ஆகியோர் கதாநாயகனாக நடித்து வந்தாலும் சந்தானம் மட்டுமே வியாபார ரீதியாக நாயகனாக தொடர முடிகிறது மற்றவர்களால் நாயக பிம்பத்தை தொடர முடியவில்லை இந்த நிலையில் 2006 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் காமெடி, குணசித்திர வேடங்களில்நடித்துக் கொண்டிருக்கும் சதீஷ்அவருக்கென…
Read Moreஇரண்டாம் திருமணத்தை உறுதிப்படுத்திய விஷ்ணு விஷால்
தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், 2009ம் ஆண்டில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ‘முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள ‘காடன்’ படம் தமிழ், தெலுங்கில் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது தன்னுடைய திருமணத்தைப் பற்றி விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார். அவருக்கும் இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுக்கும் சில வருடங்களாகவே காதல் இருந்து வருகிறது. இருவரும் ஜோடியாக இருக்கும்புகைப்படங்களை சமூக வலைதளங்களில் விஷ்ணு விஷால் வெளியிட்டு வந்தார் ஆனால் திருமணம் பற்றிய செய்தியை அறிவிக்காமலும், உறுதிப்படுத்தாமலும், வதந்திகளுக்கு பதில் சொல்லாமல் மௌனம் காத்துவந்த விஷ்ணு விஷால் மெளனம் கலைத்து படப்பிடிப்பிலும் ஒரு படம் முடிவடையும்…
Read Moreஅதிமுக கொடுக்கிற கட்சி திமுக எடுக்கிற கட்சி – எடப்பாடி பழனிச்சாமி.
மக்களை நம்பிதான் அதிமுக உள்ளது என்று திருவண்ணாமலை பிரச்சாரத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வந்தவாசி தொகுதிகளில், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளர் தூசி மோகனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட போது, பேசிய முதல்வர் பழனிசாமி, “மக்கள் பாதிப்படைந்த நேரத்தில் நிவாரணம் வழங்கி மக்களைப் பாதிப்பிலிருந்து மீட்ட அரசு அதிமுக அரசு. தைப் பொங்கலை மக்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கினோம். ஒரு வருடத்தில் அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,500 வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசு. ஒருநாளாவது குடும்ப அட்டைகளுக்கு திமுக 100 ரூபாய் கொடுத்திருக்குமா? மக்களுக்குக் கொடுக்கிற கட்சி அதிமுக,…
Read Moreகோவைக்குவிருந்தாளியார்? கமலுக்குவானதி சீனிவாசன் கேள்வி
கொங்கு மண்டலத்துடன் என்னுடைய தொடர்பைப் பிரித்துக் காட்டக் கமல் முயன்றால் நிச்சயம் அதில் தோல்வி அடைவார் என்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி, மிகவும் எதிர்பார்ப்புக்குரிய ஒரு பகுதியாக இருக்கிறது. முதன்முதலாகச் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இருவரும் மக்களை நேரடியாகச் சந்திப்பது , பரப்புரை மேற்கொள்வது என தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கமலுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாகச் சிறிது ஓய்விலிருந்தார். இதை அறிந்த வானதி சீனிவாசன், கோவை பகுதிக்கு, விருந்தினராக வந்திருக்கும் கமல்ஹாசன் அவர்களின் உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி பழ…
Read Moreமந்திரி வேண்டுமா – எம்.பி வேண்டுமா பாஜக அதிரடி
தமிழக சட்டமன்றத் தேர்தலோடு கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலுக்கும் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. கொரோனா பாதிப்பால் கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினரும் தமிழக காங்கிரஸ் செயல் தலைவருமான வசந்தகுமார் கடந்த வருடம் காலமானார். இதையடுத்து குமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் சட்டமன்றத் தேர்தலோடு நடக்கிறது. பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், இத்தொகுதியில் எட்டுமுறைக்கு மேல் போட்டியிட்டவருமான பொன்.ராதாகிருஷ்ணன் களம் காண்கிறார். காங்கிரஸ் சார்பில் மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். இங்கே பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில், “ஏற்கனவே தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு அத்தனை எம்பிக்களையும் கொடுத்துவிட்டீர்கள். அதனால் தமிழகத்துக்கு என்ன பயன்? இந்த முறை புத்திசாலித்தனமாக யோசித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களியுங்கள். அதனால் கன்னியாகுமரிக்கும் தமிழகத்துக்கும் மோடி அமைச்சரவையில் ஒரு மத்திய அமைச்சர் கிடைப்பார். உங்களுக்கு வெறும் காங்கிரஸ்…
Read Moreஅதிமுகவில் இருந்துயார் சென்றாலும் கட்சிக்கு பாதிப்பு இல்லை-ஒபிஎஸ்
அதிமுக என்பது ஒரு ஆலமரம். இதிலிருந்து யார் சென்றாலும் பாதிப்பு இல்லை என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்திய போது அவருக்கு உறுதுணையாக ஆதரவாக நின்றவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம். தற்போது அவர் திமுகவில் இணைந்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்து கொண்டார். இது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் (மார்ச் 21) மதுரை வந்தார் ஓ.பன்னீர்செல்வம். அவரிடம், தர்ம யுத்தத்தின் போது உங்களுக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.முத்துராமலிங்கம் அதிமுகவிலிருந்து விலகியதற்குக் காரணம் என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ஓபிஎஸ், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மிகப்பெரிய…
Read Moreசொத்துமதிப்பை பாகம் பிரித்த நடிகர் மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை அவர் நேற்றைக்குத் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனு பட்டியலுடன் தன்னுடைய சொத்துப் பட்டியலையும் இணைத்திருக்கிறார். அதன்படி, மன்சூர் அலிகான் கையில் ரொக்கமாக 50,000 ரூபாய் வைத்திருக்கிறார். அவருடைய மனைவிகள் இருவரும் தலா 25,000 ரூபாய் வைத்திருக்கிறார்கள். அவருடைய பிள்ளைகள் இருவர் தலா 5,000 ரூபாய் வைத்திருக்கிறார்கள். மன்சூர் அலிகான் தனது 2 சேமிப்புக் கணக்குகளிலும் சேர்த்து 12,810 ரூபாய் வைத்திருக்கிறார். அவருடைய மனைவி 1,071 ரூபாய் வைத்திருக்கிறார். 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு காரும், 5 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இன்னொரு காரையும் மன்சூர் அலிகான் வைத்துள்ளார். அவருடைய இரண்டு மனைவிகளும் 16 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 400 கிராம்…
Read Moreஉதயநிதி ஸ்டாலின் சொத்துமதிப்பு என்ன?
சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க.வின் சார்பில் அந்தக் கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலினின் மகனும், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். இதற்காக தனது வேட்பு மனுவை உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தனது சொத்துப் பட்டியலையும் இணைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் மொத்த சொத்து மதிப்பு 28 கோடியே 82 லட்சமாகும். உதயநிதியின் பெயரில் 21 கோடியே 13 லட்சத்து ஒன்பதாயிரத்து 650 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், 6 கோடியே 54 லட்சத்து 39 ஆயிரத்து 552 ரூபாய் மதிப்பில் அசையாச் சொத்துக்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதிக்கு சொந்தமான ரேஞ்ச் ரோவர் காரின் மதிப்பு மட்டும் ரூ.1 கோடியே 77 லட்சத்து 68 ஆயிரத்து 736 ஆகும். தற்போது உதயநிதியின் கையில் ரூ.75 ஆயிரம் ரொக்கம் இருப்பதாகவும், மொத்த…
Read Moreஅதிமுகவில் நீக்கப்படாத விராலிமலைசுயேச்சை வேட்பாளர்
அதிமுகவில் ஆங்காங்கே சுயேச்சையாக போட்டியிடும் போட்டி வேட்பாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். பெருந்துறையில் அதிமுக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் முன்னாள் அமைச்சரும், தொடர்ந்து இருமுறை எம்.எல்.ஏ.வாக இருப்பவருமான தோப்பு வெங்கடாசலம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோல நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சிட்டிங் எம்.எல்.ஏ. சந்திரசேகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து விராலிமலை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் நெவளிநாதன் மீது இன்னும் தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கனவே மார்ச் 18 ஆம் தேதி விஜயபாஸ்கரை எதிர்த்து மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் நெவளிநாதன் விராலிமலை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து அவர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தனித்தனியே கடிதமும் எழுதியிருந்தார். அதில், “கட்சிக்…
Read Moreதினகரன் வெல்ல நினைக்கும் தொகுதிகள்
எங்கள் கூட்டணிதான் முதன்மையான கூட்டணி என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் சொல்லிவருகிறார். அதேநேரம் உட்கட்சியில் அவர் நடத்திவரும் ஆலோசனையில், ‘நாம் அதிகபட்சம் எவ்வளவு தொகுதிகளில் வேண்டுமானாலும் வெற்றிபெறலாம்.ஆனால் குறைந்தது பத்து தொகுதிகளாவது ஜெயிக்க வேண்டும்’என்று ஆணையிட்டிருக்கிறார். தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் அலசி ஆராய்ந்து டாப் டென் தொகுதிகளைத் தேர்வு செய்தவர் 2021இல் குறைந்தபட்சம் பத்து எம்.எல்.ஏ.க்களுடன் சட்டமன்றத்தில் அமரவேண்டும் என அனைத்து விதமான வேலைகளையும் செய்துவருகிறார். அந்த தொகுதிகள்… 1. கோவில்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளராகத் தினகரன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜு, கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சீனிவாசன் களத்தில் உள்ளார், 2. பாபநாசம் அமமுக வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ, ரங்கசாமி, அதிமுக வேட்பாளராகக் கோபிநாதனும், திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளரும்…
Read Moreகமல்ஹாசன் நல்லவரா – கெட்டவரா
அரசியல் என்று வந்து விட்டால், நல்லவர், கெட்டவர் அனைவரையும்தான் அணைத்துப் போக வேண்டி இருக்கும். நல்லவர்களுக்காக மட்டுமே, நல்லவர்களைக் கொண்டு கட்சி நடத்துவது என்பதெல்லாம் கற்பனையிலும் நடக்காத விஷயம். அரசியலுக்கு வந்த பின், கமலுக்கு இது புரிய ஆரம்பித்திருக்கும். அல்லது அவர் புரிந்து கொண்டே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். இப்போது நடக்கும் சில விஷயங்கள், கமலைப் பார்த்து மக்களே ‘நீங்க நல்லவரா, கெட்டவரா’ என்று கேட்க வைப்பதுதான் காலத்தின் கோலம். 2018 பிப்ரவரி 1 அன்று, மதுரை ஒத்தக்கடையில் கமல் கட்சி துவக்கியபோது, அவருடன் சேர்ந்தவர்களில் பலர் யாரும் அறியாதவர்கள். பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழ் ஆளுமையுமான கு.ஞானசம்பந்தன், நடிகை ஸ்ரீப்ரியா, போலீஸ் அதிகாரி மவுரியாவைத் தவிர, வேறு யாரையும் அப்போது மக்களுக்குத் தெரியாது. துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட மருத்துவர் மகேந்திரன், மாணவர் நகலகம் செளரிராசன், நடிகர் நாசரின் மனைவி…
Read Moreவாசிங் மெஷின் இருக்கட்டும் செல்போன் என்னாச்சு – மு.க.ஸ்டாலின்
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு வீட்டுக்கும் வாஷிங் மெஷின் தருகிறோம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் மார்ச் 19 ஆம் தேதி கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் அமர்ந்த 2011, 2016 தேர்தல்களில் அக்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை பற்றி குறிப்பிட்டுப் பேசினார். அவர் பேசுகையில், “இப்போது அ.தி.மு.க.வின் சார்பில் ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அது அப்படியே தி.மு.க.வின் நகல். நாம் என்ன சொன்னமோ அதை அப்படியே கொஞ்சம் உயர்த்தி வெளியிட்டிருக்கிறார்கள். நான் கேட்கின்ற கேள்வி. இதே போல 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட ஒன்றையாவது நிறைவேற்றி இருக்கிறார்களா? நான் சில உதாரணங்களை மட்டும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும் செல்போன் கொடுப்பேன்…
Read Moreதொண்டாமுத்தூரில்வேலுமணி இறக்கிய ஸ்லிப்பர் செல்கள்
கட்சி வேலையானாலும், தேர்தல் வேலையானாலும் அமைச்சர் வேலுமணிக்கு நிகர் அவரேதான். மிரட்டிவிடுவார் மனிதர். அவருடைய அசாதாரணமான உயரமும், அசாத்தியமான துணிச்சலும் அவரைத் தனித்துக் காட்டும் அடையாளங்கள். தேர்தல் நேரத்தில் வேலுமணியின் வேலைகள் எப்படியிருக்கும் என்பது பற்றி, அதிமுக வட்டாரத்தில் நடக்கும் அனைத்து விவகாரங்களையும் அறிந்த மாநில நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ‘‘வேலுமணிக்கு எந்த டிபார்ட்மென்ட்டில் அல்லது எந்தக் கட்சியில் எங்கே ஆளிருக்கிறார்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. ஆனால் அவருக்குப் போக வேண்டிய தகவல்கள் அவ்வப்போது போய்விடும். திமுகவில் மட்டுமில்லை; பாரதிய ஜனதாவில், ஐடி டிபார்ட்மென்ட்டில் என அவருக்கு வேலை பார்க்கும் ஸ்லீப்பர் செல்கள் இல்லாத இடமேயில்லை என்று சொல்லலாம். சென்ற தேர்தலில், திமுகதான் ஜெயிக்குமென்று எல்லா கருத்துக் கணிப்புகளும் முன்பே சொல்ல ஆரம்பித்த நிலையில், தன்னை எதிர்த்து திமுக கூட்டணியில் யார் போட்டியிட வேண்டுமென்பதையும் அவரே…
Read Moreவிவசாயிக்கும் முதலாளிக்குமான போட்டி – அன்புமணி ராமதாஸ்
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது தேர்தல் பிரச்சாரத்தை மார்ச் 18 ஆம் தேதியில் இருந்து தொடங்கியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பார்கலாம். அணுகலாம். ஈகோ பார்க்க மாட்டார். உங்களோடு சேர்ந்து டீ காபி சாப்பிடுவார். ஆனால் ஸ்டாலினை அவரது கட்சிக் காரர்களே யாரும் பார்க்க முடியாது. பளார் என்று அறைந்துவிடுவார். அவ்வளவு அகங்காரம். அது தலைமயில்லை. ஆனால் இங்கே ஒரு விவசாயி முதல்வர். இன்னொரு விவசாயி துணை முதலமைச்சர். இந்த ஆட்சி தொடர வேண்டும். அதனால்தான் விவசாயிகள் ஆள வேண்டுமென்ற நோக்கத்தில்தான் மருத்துவர் கூட்டணி அமைத்துள்ளார். விவசாய கடன்களை தள்ளுபடி செய்வேன் என்று சொன்னார் ஸ்டாலின். ஆனால் தள்ளுபடி செய்துவிட்டார் எடப்பாடி அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக ஒரு குற்றமும் கிடையாது.ரவுடியிசம் இல்லை. கட்டப் பஞ்சாயத்து இல்லை. ஆனால்…
Read Moreஸ்டாலின் பெட்டியை திறக்கப்போவதில்லை- எடப்பாடி பழனிச்சாமி
தமிழக முதல்வர் பழனிசாமிமார்ச் 16 அன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை காட்டுமன்னார் கோயிலில் தொடங்கி சிதம்பரத்தில் பிரசாரம் செய்து அங்கேயே இரவில் தங்கினார். சிதம்பரம் நகருக்குத் தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்த அவருக்கு, நடராஜர் கோயில் பொது தீட்சிதர் பிரசாதம் மற்றும் நடராஜர் திரு உருவப்படத்தை வழங்கினர். நேற்று காலை, சிதம்பரம் நடராஜர் கோயிலில் எடப்பாடி பெயரில் திறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு பட்டாடை, மாலை, நடராஜர் தூக்கிய திருவடியில் சாத்தப்படும் குஞ்சிதபாதம் உள்ளிட்ட அருட்பிரசாதத்தினை சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் வழங்கினர். புவனகிரியில் வேட்பாளர் அருண்மொழித் தேவனை ஆதரித்தும், குறிஞ்சிப்பாடியில் வேட்பாளர் செல்வி ராமஜெயத்தை ஆதரித்தும் பரப்புரையில் ஈடுபட்டார் முதல்வர். பின்னர் கடலூரில் வேட்பாளரான அமைச்சர் எம். சி.சம்பத்தை ஆதரித்து பிரசாரம் செய்து பேசியதாவது, “இந்தத் தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல். இதில்…
Read Moreகாதம்பரி திரைப்பட விமர்சனம்
அறிமுக இயக்குநர் அருள் இயக்கி தயாரித்திருப்பதோடு ஹீரோவாகவும் நடித்திருக்கும் படம் ‘காதம்பரி’. வித்தியாசமான திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் காஷிமா ரஃபி, அகிலா நாராயணன்ன், சர்ஜுன், நின்மி, பூஷிதா, மகராஜன், முருகானந்தம் ஆகியோர் நடித்துள்ளனர். ஹீரோ அருள் மற்றும் அவரது நண்பர்கள் டாக்குமெண்டரி படப்பிடிப்புக்காக காட்டுப் பகுதிக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, அவர்களுடைய கார் விபத்துக்குள்ளாகி விடுகிறது. சிறிய காயங்களுடன் நடுகாட்டில் சிக்கிக் கொள்ளும் நண்பர்கள், அந்த காட்டில் இருக்கும் வீடு ஒன்றுக்கு செல்லும் போது, அங்கு வாய் பேச முடியாத பெரியவர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் உதவி கேட்டு அந்த வீட்டில் தங்குகிறார்கள். வாய் பேச முடியாத பெரியவரின் செயல்கள் விசித்திரமாக இருப்பதோடு, அந்த வீட்டில் இருக்கும் சில பொருட்களும் விசித்திரமாக இருக்க, அது குறித்து நண்பர்கள் ஆராயும் போது, அறை ஒன்றில் இருக்கும் மரப்பெட்டியில்…
Read Moreஅரசாங்கத்தின் கொடூர முகத்தினை தோலுரிக்கும் தேன் – சிறப்பு பார்வை
பசுமை, பசுமை, பசுமை… திரும்பிய பக்கமெல்லாம் பசுமை படர்ந்த தேனி மாவட்டத்தின் மலைக் கிராமம். காதலறும்பிய இளவட்டங்கள் வேலுவும் பூங்கொடியும் கணவன் – மனைவியாக உற்றார் உறவினர் சம்மதித்தாலும் கடவுளின் உத்தரவு கிடைக்காத நிலை. கடவுளின் முடிவை மீறினால் தம்பதிகளில் ஒருவருக்கு மரணம் நிச்சயம்’ என்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள். காதலர்கள் மீறுகிறார்கள். குறிப்பிட்ட குறைபாட்டோடு குழந்தை பிறக்க, அடுத்தடுத்தும் வளைத்துக் கட்டி வெளுத்து வாங்குகிறது சோதனைகள். அத்தனைக்கும் காரணம் மக்கள் விரோத அரசின், மனிதம் தொலைத்த அரசு ஊழியர்களின் அராஜகம். அந்த அராஜகங்களின் தொகுப்பு அழ வைக்கும் காட்சிகளாய் விரிகிறது. ஆதார் கார்டு, காப்பீடு அட்டை போன்றவைகளால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை விளக்கியிருப்பதெல்லாம் இயக்குநர் கணேஷ் விநாயக்கின் துணிச்சல்! ஓங்கி உயர்ந்த மலையில் அதைவிட ஓங்கி உயர்ந்த மரங்களில் தாவி தேனெடுத்து பிழைப்பு நடத்தும் அப்பாவி இளைஞனாய்…
Read Moreதமிழகத்தில் இதுவரை 215 கோடி பறிமுதல் – தேர்தல் ஆணையர்
தமிழகத்தில் இதுவரை பறக்கும் படையினரால் ரூ.215.28 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தலைமைசெயலகத்தில், நேற்று(மார்ச் 19) தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் மது மகாஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை ஆணையர் கிர்லோஷ்குமார், அமலாக்கத் துறை சிறப்பு டிஜிபி கரன் சின்ஹா, காவல்துறை ஏடிஜிபி ராஜீவ்குமார், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மோகன், அமலாக்கத் துறை ஐஜி செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 18ஆம் தேதி வரை உரிய ஆவணங்களின்றி ரூ.117.81 கோடி மதிப்பிலான தங்கம்,…
Read Moreவிஜயபாஸ்கருக்கு எதிராக அதிமுக உறுப்பினர் போட்டி
புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை தொகுதியில் அதிமுக வேட்பாளரான அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து அதிமுகவில் இருந்தே ஒருவர் சுயேச்சை வேட்பாளராக நேற்று (மார்ச் 18) வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். அதிமுகவில் புதுக்கோட்டை மாவட்டம் என்றாலே அமைச்சர் விஜயபாஸ்கர்தான் என்று ஆகிவிட்ட நிலையில்… இன்று அதிமுகவின் மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் நெவளிநாதன் விராலி மலை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. “இன்று விராலி மலையில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த நான் விராலிமலையில் வேட்பாளராக போட்டியிடக் காரணம், அமைச்சர் விஜயபாஸ்கரின் சாதிய சர்வாதிகார அடக்கு முறைப் போக்குதான். அவர் தொடர்ந்து இந்த மாவட்டத்தில் தன்னைத் தவிர வேறு எவரும் இந்த இயக்கத்தில் வளர்ந்துவிடக் கூடாது, வேறு எவரும் அதிகாரத்தில்…
Read Moreதேர்தல்களத்தில் குஷ்பூ காணாமல்போன கௌதமி
ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ கலாச்சாரம் நிறைந்த பா.ஜ.க தமிழகத்தில் இந்த சட்டசபைத் தேர்தலில் முத்திரை பதிக்க முடிவுசெய்து நடிகைகளைக் களத்தில் இறக்க முயன்றது. பா.ஜ.க சார்பில் போட்டியிட நடிகை குஷ்புவிற்கு சீட் கொடுக்கப்பட்டது. கவுதமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ராஜபாளையத்தில் கவுதமியும், சேப்பாக்கத்தில் குஷ்புவும் களமிறங்க விரும்பினர். பா.ஜ.க தலைமையும் அவர்களைப் பொறுப்பாளர்களாக நியமித்து, அந்தந்த ஊர்களுக்குச் சிலமாதங்களுக்கு முன்பே அனுப்பியது. இருவரும் தொகுதிக்குள் நகர்வலம் துவங்கியதால், பா.ஜ.க வட்டாரமே களைகட்டியது. திடீர் திருப்பமாக, சேப்பாக்கம் தொகுதி, பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது. ‘சிவகாசி வேண்டாம்’ என, ராஜபாளையம் வந்து விட்டார், ராஜேந்திர பாலாஜி. இதனால் ‘அப்செட்’ ஆனாலும், இரு நடிகைகளும் காட்டிக் கொள்ளவில்லை. ‘கட்சி முடிவை ஏற்கிறேன்’ என்றார் குஷ்பு. ‘ராஜபாளையம் மக்கள் காட்டிய அன்புக்குத் தலைவணங்குகிறேன். அவர்களுடன் உறவு நிலைத்திருக்கும்’ என்றார் கவுதமி. இதற்கிடையில், குஷ்புக்கு ஆயிரம் விளக்கு தொகுதி…
Read Moreகளத்தில் போட்டி வேட்பாளர் நேரில் மரியாதை நெகிழ வைத்த வேட்பாளர்கள்
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்ட போது கைகுலுக்கியது இரு கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வரவிருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த்தும் போட்டியிடவுள்ளனர். கன்னியாகுமரியில் பாஜக வெற்றி பெறுமா? காங்கிரஸ் வெற்றி பெறுமா? என கடுமையான போட்டி நிலவி வருகிறது. விஜய் வசந்த்துக்குக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பொன் ராதாவுக்கு உள் துறை அமைச்சர் அமித்ஷாவும் வாக்கு சேகரித்தனர். இதனால் கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் தேர்தல் முடிவுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. இந்நிலையில், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வுக்குக் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார் பொன் ராதாகிருஷ்ணன். அதுபோன்று விஜய் வசந்த்தும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.…
Read Moreஹெலிகாப்டர் பயணத்திற்கு வாய்ப்பு வழங்கியது மக்கள் தான் – கமல்ஹாசன்
நான் ஹெலிகாப்டரில் பறப்பதற்கு மக்கள்தான் காரணம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். முதன்முறையாகத் தேர்தலில் களம் இறங்கும் கமல் கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது நானும் குடும்ப அரசியல் தான் செய்கிறேன் என தன் வழக்கமான பேச்சில் மக்களைக் குழப்பிய கமல், பின் மக்கள் தான் என் குடும்பம் என கூறி கொங்கு மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறார். இந்நிலையில், கமல் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டர் பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பாக இன்று விளக்கமளித்துள்ள கமல், “நான் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தவன் தான். எனக்கு ஹெலிகாப்டர் ஒன்றும் தேவையில்லை. என்னை ஹெலிகாப்டரில் போக வைத்ததே மக்கள் தான். அதற்காகத்…
Read Moreரஜினிகாந்த் ஆதரவு எனக்கு எப்போதும் உண்டு – நடிகை குஷ்பூ
நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு எனக்கு எப்போதும் உண்டு என பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக முகூர்த்த நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். நாளை (மார்ச் 19) வேட்பு மனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள். இந்நிலையில் இன்று (மார்ச் 18) ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். கட்சித் தொண்டர்கள் புடைசூழ, கலை நிகழ்ச்சி, கொண்டாட்டங்களுடன் திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது மகிழ்ச்சி…
Read Moreதமிழகத்தின் ஏழை வேட்பாளர் குவியும் ஆதரவு
தமிழகத்தைக் குடிசை இல்லா மாநிலமாக மாற்றுவோம் என அரசியல் கட்சிகள் சொல்லி வருகின்றன. ஆனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரே குடிசை வீட்டில் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. கோடிக்கணக்கில் சொத்து இருப்பதாக வேட்புமனுவில் கணக்குக் காட்டும் வேட்பாளர்கள் மத்தியில் மிகவும் எளிமையான ஒரு வேட்பாளரைக் களமிறக்கியிருக்கிறது ஒரு தேசியக் கட்சி. 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விவசாயத் தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் அதிகம் உள்ள தொகுதியாக திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி சிபிஐக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியிலிருந்து மாரிமுத்து என்பவர் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மாரிமுத்து. அதில், ’அவருக்கு 75 சென்ட் நிலம் உள்ளது. அதன் மதிப்பு ரூ.1.75 லட்சம். கையில் இருக்கும் ரொக்கப் பண மதிப்பு ரூ.3000. மனைவி…
Read Moreமக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு கொரானா தொற்று
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பிரச்சாரம், வேட்பு மனுத் தாக்கல், பொது மக்களைச் சந்தித்தல் என அரசியல் கட்சியினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதனால் பொது இடங்களில் மக்கள் அதிகளவு கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரானா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது. நேற்று மட்டும் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 394 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்பாளர்கள் வீடு வீடாக, வீதி வீதியாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக வேளச்சேரி தொகுதியில் விருப்ப ஓய்வு பெற்ற மூத்த…
Read Moreபினராயி விஜயனை எதிர்க்க பயப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள்
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் மாநில பாஜக முன்னாள் தலைவர் சி.கே.பத்மநாபன் நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பில் மட்டும் தாமதம். மனுத் தாக்கலுக்கு இன்று (மார்ச் 19) தான் கடைசி நாள் எனும் நிலையில், நேற்று (மார்ச் 18) மதியம்வரை காங்கிரஸ் கட்சியின் சார்பில் தர்மடம் தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை அக்கட்சி மேலிடம் அறிவிக்கவே இல்லை. கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவர் கே. சுதாகரனை தர்மடம் தொகுதியில் போட்டியிடுமாறு மாநிலத் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அவரிடம் பேசினார். முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா ஆகியோரும் அவரிடம் தர்மடத்தில் நிற்குமாறு பேசிப் பார்த்தனர். மாவட்ட நிர்வாகிகளும் தொகுதியில் உள்ள காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினரும்கூட சுதாகரனிடம் இது…
Read Moreஅதானி துறைமுகத்திட்டத்தை அதிமுக ஆதாரிக்காது – பன்னீர்செல்வம்
காட்டுப்பள்ளி அதானி துறைமுகத் திட்டத்தை அதிமுக ஆதரிக்காது என்று துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கு உறுதி அளித்துள்ளார். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருவொற்றியூர் தேரடி பகுதி, பொன்னேரி, அம்பத்தூர் பேருந்து நிலையம், போரூர் சந்திப்பு உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய துணை முதல்வர், “தாலிக்குத் தங்கம் 4 கிராமிலிருந்து 8 கிராமாக உயர்த்தப்பட்டுள்ளது. பேறு கால நிதியுதவியும் உயர்த்தப்பட்டுள்ளது, இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்பட்டுள்ளது” என அதிமுகவின் திட்டங்கள் குறித்துப் பேசினார். “திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, நில அபகரிப்பு போன்ற பிரச்சினைகள் இருந்தன. ஆனால் தற்போது தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது. இதை மக்கள் எண்ணி பார்க்க…
Read Moreசுயேச்சையாக போட்டியிடும் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்
அதிமுகவில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிடும் பட்டியலில் முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலமும் சேர்ந்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக நேற்று (மார்ச் 18) மனு தாக்கல் செய்திருக்கிறார். பெருந்துறை தொகுதியில் 2011 தேர்தலில் வெற்றிபெற்ற தோப்பு வெங்கடாசலம் அமைச்சர் ஆக்கப்பட்டார். 2016 தேர்தலிலும் அவர் மீண்டும் வெற்றிபெற்றும் அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டப் பொறுப்பாளராக இருந்து மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளையும் வெற்றி பெற வைத்தும் தனக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தார் தோப்பு. 2016 ஆட்சி அமைத்ததும் கருப்பணனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஜெ.மரணத்துக்குப் பின் அமைச்சரவையில் செங்கோட்டையனும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து சேர்க்கப்பட்டார். அப்போதும் தோப்புவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இந்நிலையில் மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினர்…
Read Moreசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் அறிவிப்பு
விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் மட்டுமின்றி பிற மொழி படங்களிலும் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி, பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் படத்துக்காக தேதிகள் ஒதுக்கியுள்ளார். லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களை முடித்த கையோடு விஜய் சேதுபதி, சன் டிவியில் குக்கிங் நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டதாக கடந்த இரண்டு நாட்களாக தகவல்கள் வலம் வருகின்றன. இந்நிலையில் பொன்ராம் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன் பணிபுரிய உள்ளார். இமான் இசையமைக்கிறார். எடிட்டராக விவேக் ஹர்ஷன் பணிபுரிய உள்ளார். இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோவின் மூலம், இதில் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக…
Read Moreஅனைத்து முதல்வர் வேட்பாளர்களும் ஓர் மேடையில் விவாதம் நடத்தலாமா?- சீமான்
வருகிற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதையொட்டி, சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்து மக்களின் கவனத்தைத் திருப்பி வருகிறார். அந்தவகையில் நேற்று சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே, கட்சி வேட்பாளர் கவிதாவுக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “தொலைக்காட்சிகளுக்கு எல்லாம் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன். தேர்தலில் போட்டியிடும் அனைத்து முதல்வர் வேட்பாளர்களையும் ஒன்றாக நிறுத்துங்கள். எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், கமலஹாசன், சீமான் என அனைவரையும் 20 நிமிடங்கள் பேச வைத்து விவாதிக்கலாம். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேளுங்கள். யார் சொல்வது சரியாக இருக்கிறதோ அவர்களுக்கு மக்கள் ஓட்டுப்போடட்டும். அமெரிக்காவில் இதுபோன்று…
Read Moreஎதிர்கட்சி முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் வருமானவரி துறையினர் ரெய்டு
தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறையினரின் ரெய்டுகள் கடந்த சில ஆண்டுகளாகவே வழக்கமாகியுள்ளன. அந்த வகையில் திமுக, மக்கள் நீதி மய்யம், மதிமுக பிரமுகர்களைக் குறிவைத்து நேற்று (மார்ச் 17) வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். அதிமுக கூட்டணியில் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் போட்டியிடும் தாராபுரத்திலும், கமல் இன்று பிரச்சாரம் செய்ய வரும் திருப்பூரிலும் ரெய்டு நடந்துள்ளது. மதிமுகவின் திருப்பூர் மாவட்ட துணை செயலாளராக இருப்பவர் கவி நாகராஜ். இவர் தாராபுரத்தில் பல்பொருள் அங்காடி, பனியன் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய அண்ணன் சந்திரசேகர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலப் பொருளாளராக இருக்கிறார். இவர், திருப்பூர் லட்சுமிநகர் பிரிஜ்வே காலனி விரிவாக்கம் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருவதோடு, நூல் வியாபாரமும் செய்து வருகிறார். மேலும் முக கவசம், கொரோனா கவச ஆடைகள்…
Read Moreமு.க.அழகிரி மௌனம் கலைவாரா?
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக எப்படியாவது அவரது அண்ணன் மு.க.அழகிரியை மீண்டும் அரசியல் களத்துக்குக் கொண்டு வந்து நிறுத்திட வேண்டுமென்று கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாகவே பல முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அழகிரி கடந்த தீபாவளியன்று தனது ஆதரவாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு செயல் வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட, அது மின்னம்பலத்தில் வெளியாகி பரபரப்பானது. சில முறை ஒத்திவைக்கப்பட்ட அந்த ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 3ஆம் தேதி பாண்டிகோவில் பகுதியில் உள்ள ஒரு பெரிய மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மு.க.அழகிரி தனது தம்பியும் திமுக தலைவருமான ஸ்டாலினை கடுமையான வார்த்தைகளால் சாடினார். “ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவியை வாங்கித் தந்ததே நான்தான். ஸ்டாலின் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என்று தெரியவில்லை. ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியை என்னிடம்…
Read Moreதேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது 331 கோடி ரூபாய்
ஐந்து மாநிலங்களில் ரூ.331 கோடி பணம், நகை பறிமுதல்! தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளம், புதுச்சேரி, அசாம்,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அந்தந்த மாநிலங்களில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்க ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு தலா மூன்று பறக்கும் படை, கண்காணிப்புக் குழுக்களைத் தேர்தல் ஆணையம் அமைத்தது. தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில் 295 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம், மதுபானம் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த செலவு ‘லஞ்சம்’ என்ற வரையறையின் கீழ்…
Read Moreவிவசாயி முதல்வராக கூடாதா?-எடப்பாடி பழனிசாமி கேள்வி
நீட் தேர்வைக் கொண்டுவந்த காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த திமுகவுக்கு அப்போது நீட்டைத் தடுக்க திராணி இல்லை என்று விமர்சித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அதிமுக வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து முதல்வர் பழனிசாமி நேற்று (மார்ச் 17) பிரச்சாரம் செய்து பேசினார். அப்போது அவர், “நான் எப்படி முதல்வர் ஆனேன் என்பது நாட்டுக்கே தெரியும். எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க எவ்வளவு நெருக்கடிகள் இருந்தது என்று மக்களுக்குத் தெரியும். நான் பேசுவதைக் கவனமாக கவனித்தால் நான் பேசுவது ஸ்டாலினுக்குப் புரியும். அதைக் கவனிக்காமல் ஒருவர் எழுதி கொடுத்ததை வாசிக்கிறார். சொந்தமாகச் சிந்தியுங்கள். ஒரு விவசாயி முதல்வர் ஆகக் கூடாதா? நான் விவசாயி என்பதால் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளேன். ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களுக்கு என்ன செய்துள்ளார்? விவசாயிகளின் நிலத்தைப் பிடுங்கி தனியாருக்குத்தான் கொடுத்துள்ளார். நாங்கள் டெல்டா…
Read Moreகம்ப்யூட்டர் வழங்குவது இலவசமல்ல முதலீடு-கமலஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்று (மார்ச் 17) ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிகளில் அந்தக் கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுகவையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்துப் பேசிய கமல், “ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால், ஏழைகள் இல்லாத நிலையை உருவாக்கினார்களா? தமிழ் மொழியைக் காப்பாற்றிவிட்டார்களா? இந்தி ஒழிக என்று சொல்வது பிறப்புரிமை அல்ல, தமிழ் வாழ்க என்று சொல்வதுதான் பிறப்புரிமை” என்றார். ஆரம்பப் பள்ளிகள் எல்லாம் மோசமாகிவிட்டது என்று குற்றம்சாட்டிய கமல், கடந்த தேர்தலில் 39 பேர் வெற்றி பெற்றார்கள் என மார்தட்டிக் கொண்டார்கள். அந்த 39 தொகுதியில் என்ன முன்னேற்றம் நடந்தது என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த தலைமுறையினரின்…
Read Moreதமிழக தடகள வீராங்கனை சாந்தி வாழ்க்கை படமாகிறது
தமிழகத்தை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன் வாழ்க்கை சினிமா படமாகிறது. இவர் இந்தியாவுக்கு 12 சர்வதேச பதக்கங்களையும், தமிழகத்துக்கு 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் பெற்று கொடுத்துள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண் ஆவார். ஆசிய விளையாட்டு போட்டியில் நடத்தப்பட்ட பாலின சோதனை அறிக்கை அடிப்படையில் அவருக்கு பெண்களுக்கான போட்டியில் தகுதி மறுக்கப்பட்டு அவர் வென்ற வெண்கல பதக்கம் திரும்ப பெறப்பட்டது. தடகள போட்டிகளில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார். சாந்தி சவுந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த திருப்பங்கள் நிறைந்த சம்பவங்களை மையமாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டு அவரிடம் ஒப்புதல் பெற்று இந்த படம் தயாராவதாக படத்தின் இயக்குனர் ஜெயசீலன் தவப்புதல்வி தெரிவித்துள்ளார். சாந்தி சவுந்தரராஜன் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை நடிக்கிறார். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு…
Read Moreசட்டமன்ற தேர்தல் திமுக மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை கவனித்திடும் வகையில் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களை அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமித்து உள்ளார். அதன்படி தி.மு.க. மண்டல பொறுப்பாளர்கள் பெயர் விவரம் வருமாறு:- கனிமொழி, ஜெகத்ரட்சகன் மத்திய மண்டலம் – தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி. தெற்கு மண்டலம் – மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. வடக்கு மண்டலம் – உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. மேற்கு மண்டலம் – உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் – துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா. தொகுதி பொறுப்பாளர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் விவரம் வருமாறு:- கொளத்தூர் – கி.நடராஜன், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் – ஏ.சரவணன், ராயபுரம், பெரம்பூர் – வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து…
Read Moreகன்னியாகுமரியில் பொன்ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. அதோடு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க.-காங்கிரஸ் தேசிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பா.ஜ.க. சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த்தும் வேட்பாளராக களத்தில் உள்ளனர். இந்தநிலையில் பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அரவிந்திடம் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக அவர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டார். அவருடன் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஊர்வலமாக வந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்பதால் நிர்வாகிகள் அனைவரும் கலெக்டர்…
Read Moreநாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வேட்புமனுவில் சிக்கலா?
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வரும் சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் கடந்த மார்ச் 15ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவை வைத்துதான் இப்போது விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. சீமான் தாக்கல் செய்துள்ள மனுவில் கடந்த நிதியாண்டுகளுக்கான தனது ஆண்டு வருமானத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். இதில் கடந்த 2019-20 ஆம் ஆண்டுக்கான வருட வருமாக ஆயிரம் ரூபாய் மட்டுமே என்று குறிப்பிட்டிருக்கிறார்.இதன் மூலம் சீமான் வருமானத்தை மறைத்துவிட்டதாக புகார்கள் எழுந்தன. ஆனால் சீமானின் நாம் தமிழர் கட்சி வட்டாரத்திலோ, “சீமானின் அபிடவிட்டில் 2019-20 ஆம் ஆண்டுக்கான ஆண்டு வருமானம் ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து சீமானின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. இது அனேகமான தட்டச்சுப் பிழையாக இருக்கலாம். இதையடுத்து சீமான் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார்” என்று…
Read Moreஅண்ணாத்த படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டு தொடங்கியது
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஐதராபாத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியபோது படக்குழுவை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஐதராபாத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியபோது படக்குழுவை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் படப்பிடிப்பை நிறுத்தினர். ரஜினிகாந்துக்கு பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனாலும் சில நாட்கள் ஐதராபாத்தில் தனிமைப்படுத்திக்கொண்டார். பின்னர் ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். உடல்நிலையை கருதி அரசியலுக்கு வரவில்லை என்றும் அறிவித்தார். வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவர் போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டுக்கான பூமி பூஜையில் பங்கேற்றார். இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு சென்றும் பார்வையிட்டார். இந்தநிலையில் தற்போது அண்ணாத்த…
Read Moreஆஸ்கர் 99வது விருது வழங்கும் விழாதொகுப்பாளராக பிரியங்கா சோப்ரா
வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவரான பாடகர் நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளனர். 93வது ஆஸ்கர் விருதுக்கான படங்களின் பரிந்துரைகள் கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டன.இந்திய நேரப்படி வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 முதல் 8.30 மணி வரை ஆஸ்கர் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த முறை விழா வழக்கம் போல நடத்தப்பட்டாலும் குறைந்த எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இருப்பினும் நேரலையாக ஆஸ்கர் நிகழ்ச்சிகளை சமூக ஊடகங்கள் வாயிலாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் விருது கொடுப்பதற்காக கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா, இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிட்டார் ஆஸ்கர் போட்டியின் இறுதி பட்டியலில் இடம்…
Read Moreஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக தயார் எடப்பாடிக்கு ஸ்டாலின் சவால்
சேலத்தில் நேற்று (மார்ச் 16) பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின்… மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் தான் ஆஜராக தயார் என்று பேசினார். வீரபாண்டி, ஏற்காடு தொகுதி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்த ஸ்டாலின், “அம்மையார் ஜெயலலிதாவிற்கு நான் விசுவாசமாக இருப்பேன் என்று பழனிசாமி சொல்லிக் கொண்டிருக்கிறார். விசுவாசமாக இருப்பவர் என்ன செய்திருக்க வேண்டும்? அவருடைய மர்ம மரணத்தை கண்டுபிடித்து நாட்டுக்குச் சொல்லி இருக்க வேண்டும். இதுவரையில் யாருக்காவது ஜெயலலிதா எப்படி மறைந்தார் என்று தெரியுமா? உங்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே தெரியாது. பெரிய மர்மமாக இருக்கிறது. அதுவும் இறந்தது யார்? சாதாரண ஜெயலலிதாவோ, அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோ அல்ல. தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா! சிறிது நினைத்துப் பாருங்கள். நம்முடைய உறவினர்களோ, நண்பர்களோ அக்கம் பக்கத்தில் இறந்து…
Read Moreதிமுக அழுத்தம் காங்கிரஸ் பட்டியல் வெளியிட்டது
தமிழக காங்கிரஸ் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிடும் நிலையில்… 21 தொகுதிகளுக்கான முதல் பட்டியல் மார்ச் 13ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று (மார்ச் 16) இரவு அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். விளவங்கோடு, குளச்சல் தொகுதிகளுக்கு தற்போது அங்கே இருக்கும் சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான விஜயதாரணி, பிரின்ஸ் ஆகியோரே மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மார்ச் 14 ஆம் தேதியன்று மின்னம்பலத்தில் வெளியிட்ட காங்கிரஸ்: 4 வேட்பாளர்கள் அறிவிப்பு தாமதம் ஏன்? என்ற செய்தியில் சொல்லப்பட்டது மாதிரியே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அச்செய்தியில், “விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேபோல குளச்சல் தொகுதியில் பிரின்ஸ் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் தலா…
Read Moreமூன்று ட்விட் ராஜினாமா செய்த பாரதிய ஜனதா கட்சி எம்.பி.
கொரோனா காலத்தில் நாடாளுமன்ற மக்களவை நடவடிக்கைகளைப் பார்த்தவர்களுக்கு, மகுவா மொய்த்ராவைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் ஆளும் பாஜக அமைச்சர்களைக் கேள்விகளால் துளைத்து, அவ்வப்போது பரவலான கவனத்தை ஈர்க்கும் மகுவா, மேற்குவங்க மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர். அவர் போட்ட மூன்று டுவீட்டுகளை அடுத்து வங்கத்துக்காரரான மாநிலங்களவை உறுப்பினர் பா.ஜ.க.வின் ஸ்வபன் தாஸ் குப்தா, பதவியிலிருந்து விலகியிருக்கிறார். மாநிலங்களவை உறுப்பினராக 2016 ஏப்ரலில் நியமிக்கப்பட்டவர், ஸ்வபன் தாஸ் குப்தா. அவருடைய பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஓராண்டு ஒரு மாதம் இருக்கும்நிலையில், மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக இறக்கிவிடப்பட்டுள்ளார். முதலமைச்சர் வேட்பாளர்களில் ஒருவர் என இவர் முன்னிறுத்தப்படுகிறார். மேற்குவங்கத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் மூன்றாம் கட்ட, 10ஆம் தேதி நடைபெறும் நான்காம் கட்டத் தேர்தல் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த ஞாயிறன்று பாஜக…
Read Moreநத்தம் விஸ்வநாதன் மீது வழக்குபதிவு
ஆரத்தி தட்டில் பணம் போட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் பண பட்டுவாடாவைத் தடுக்க உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்நிலையில் ஆரத்தி தட்டில் பணம் போட்டதாக நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் போட்டியிடுகிறார். நத்தம் தொகுதிக்கு உட்பட்ட முளையூர் புன்னபட்டி, காட்டுவேலம்பட்டி பகுதிகளில் அண்மையில் பிரச்சாரம் மேற்கொண்டார். காட்டுவேலம்பட்டி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவரை வரவேற்கப் பெண்கள் ஆரத்தி தட்டுடன் காத்திருந்தனர். அந்த ஆரத்தி தட்டுகளில் அதிமுக பிரமுகர் ஒருவர் சார்பில் பணம் போடப்பட்டது. பின்னர், ஒரு வீட்டின் முன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் ஆரத்தி எடுக்கும்…
Read Moreஆனந்தவிகடன் குழுமத்தின் மீது சினிமா தயாரிப்பாளர் புகார்
ஒரு படம் என்பது பலருடைய கடின உழைப்பு, பண முதலீடு உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கியது. இதனை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் விமர்சனம் செய்து, படக்குழுவினருக்கும் தயாரிப்பாளருக்கு கடும் மன உளைச்சலை உண்டாக்குவார்கள். படங்களை விமர்சனம் செய்யலாம் தவறில்லை, அது எல்லை மீறிப் போகும் தான் சிக்கல் உண்டாகிறது. அப்படியொரு சிக்கலில் சிக்கியிருக்கிறது ‘தீதும் நன்றும்’ திரைப்படம். ராசு ரஞ்சித் இயக்கத்தில் அபர்ணா பாலமுரளி, லிஜோ மோல் ஜோஸ், ஈசன், இன்பா உள்ளிட்ட பலருடைய நடிப்பில் மார்ச் 12-ம் தேதி வெளியான படம் ‘தீதும் நன்றும்’. சார்லஸ் இம்மானுவேல் தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் மீதிருந்த நம்பிக்கையால் மார்ச் 9-ம் தேதி பத்திரிகையாளர்களுக்கு பிரத்தியேக காட்சி திரையிட்டோம். அதில் பங்கேற்ற பல பத்திரிகையாளர்கள் நிறைகள், குறைகள் என அனைத்தையுமே சுட்டிக் காட்டினார்கள். அவை அனைத்திலுமே எங்களுக்கு உடன்பாடு…
Read Moreகொரானாவில் இருந்து மீண்ட சூர்யா படப்பிடிப்பில் பங்கேற்பு
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில்சூர்யா நாயகனாக நடிக்கும் படம் சூர்யா 40 இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜ் நடிக்கிறார். சூர்யா – சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமான இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளராக இமான் பணிபுரிகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.அப்போது நாயகன் சூர்யா படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை,, ஓய்வில் இருந்ததால் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. ஒருவாரம் மட்டும் முதல்கட்டப் படப்பிடிப்பு நடந்தது. அதன்பின், மார்ச் 13 மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அப்போது சூர்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அவரை வைத்து சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனவாம். இம்மாத இறுதிவரை படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
Read Moreஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான சென்னை வீராங்கனை பவானி
ஜப்பானில் இந்த (2021) ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி தேர்வாகியுள்ளார். ஒலிம்பிக் போட்டியின் வாள் சண்டை பிரிவில் பங்கேற்பதற்கு உலக தரவரிசையைக் கணக்கிட்டு தகுதி அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், உலக தரவரிசையில் 45ஆவது இடத்தில் உள்ள 27 வயது பவானி தேவி ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். “ஆறாவது படிச்சுட்டு இருந்தப்போ கிளாஸை கட் அடிக்கிறதுக்காக விளையாட்டுப் போட்டிக்குப் பெயர்கொடுக்க நினைச்சேன். ‘மற்ற விளையாட்டுகளுக்கு ஆட்களை சேர்த்தாச்சு. வாள்சண்டை போட்டியில் கலந்துக்கறியா?’னு கேட்டாங்க. வேற வழியில்லாமல் பெயர் கொடுத்தேன். இப்போ, அதுவே எனக்கான அடையாளமா மாறியிருக்குது. பதினாலு வயசுல சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஆரம்பிச்சுட்டேன். இந்தியாவில் அதிகம் ஃபேமஸாகாத இந்தப் போட்டி, இப்போ என் மூலம் ஓரளவுக்கு தெரிய ஆரம்பிச்சிருக்கிறது சந்தோஷமா இருக்கு’’ என்கிறார் வாள்வீச்சுப்…
Read Moreகிரிக்கெட்வர்ணணையாளர் கரம்பற்றிய கிரிக்கெட் வீரர் பும்ரா
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை நேற்று (மார்ச் 15) திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கான கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடந்துவரும் நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பு எடுத்துக்கொள்வதாக பிசிசியிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதன் பிறகு, டி20 தொடரிலும் பும்ரா இடம்பெறாமல் போன நிலையில், அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தது. முதலில், மலையாள நடிகை அனுபமாவைத் திருமணம் செய்வதாக வதந்தி பரவிய நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை மார்ச் 15ஆம் தேதியன்று, கோவாவில் வைத்து திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், சஞ்சனா கணேசனை நேற்று (மார்ச் 15) பும்ரா திருமணம்…
Read Moreமுடிவுக்கு வராத விஜய்65 திரைக்கதை
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். விஜய் – நெல்சன் இணையும் தளபதி 65 படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். தற்போது நெல்சன் திலீப்குமார், படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்வதில் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் ‘தளபதி 65’ படத்துக்கான திரைக்கதை வசன வேலைகள் இன்னும் முடியவில்லை என்று சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்வில் குறிப்பிட்டிருக்கிறார். நெல்சன் திலீப்குமாரின் டாக்டர் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன், சமீபத்திய நிகழ்வொன்றில், “நெல்சன் திலீப் குமார் ‘டாக்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் ‘தளபதி 65’ படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை ஒரே சமயத்தில் செய்து வருகிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். எனவே நெல்சன், ‘தளபதி 65’ படத்தின் ஸ்கிரிப்ட்…
Read Moreஆஸ்கார் விருது போட்டியில் இடம்பிடிக்காத சூரரைப் போற்று
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த வருட தீபாவளிக்கு நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’. முதன்முறையாக திரையரங்கில் வெளியாகாமல் ஒரு பெரிய பட்ஜெட் படம்… நேரடியாக OTTயில் வெளியாகி வெற்றிபெற்றது. விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்ற படம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ஆஸ்கர் போட்டியிலும் நுழைந்தது. இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால் பல விதிமுறை தளர்வுகள் இருந்தன. அதன்படி, OTTயில் வெளியாகும் படங்களும் ஆஸ்கரில் போட்டியிட்டன. அதன்படி, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டியிட்டது. பொதுப்பிரிவில் போட்டியிட்டு 366 படங்களில் ஒன்றாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. அதில், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை எனும் மூன்று பிரிவுகளில் இறுதியாகப் போட்டியில் இருந்தது. ஆஸ்கர்…
Read Moreவரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தெற்குவீதியில் பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை நேற்று (மார்ச் 15) திருவாரூரில் இருந்து தொடங்கினார். நேற்று கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு சென்னையில் இருந்து திருவாரூருக்குப் புறப்பட்டார் ஸ்டாலின். திருவாரூரின் தெற்கு வீதிக்கு மிகப்பெரிய அரசியல் பாரம்பரியம் உள்ளது. மூத்த கம்யூனிஸ்டு தலைவர்கள் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஈ.கே.நாயனார், எஸ்.ஏ.டாங்கே, ஏ.பி.பரதன் ஆகியோர் திருவாரூரில் மேடை அமைத்தபோது இங்குதான் பேசியிருக்கிறார்கள். ராஜீவ் காந்தி, தானே ஜீப் ஓட்டிக்கொண்டு சோனியாவுடன் இந்தத் தெற்கு ரத வீதியில் வந்திருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் என பல தலைவர்கள் திருவாரூர் தெற்கு ரத வீதியில் பேசியிருந்தாலும்… கலைஞர் திருவாரூரில் பேசுகிறார் என்றால் அவருக்கும் உற்சாகம் திருவாரூருக்கும் உற்சாகம். பலமுறை இந்த திருவாரூர் தெற்கு வீதியில் பேசியுள்ளார் கலைஞர். கடைசியாக 2016ஆம் ஆண்டு மொழிப்போர் வீர வணக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.…
Read Moreஎடப்பாடியிடம் பதுங்கிய பாஜக பம்மியபாமக தடுமாறியதமாக
வெயில் சூட்டோடு வேட்புமனு தாக்கலின் சூடும் கிளம்பி, தமிழக அரசியல் களத்தை அனலாய் தகிக்கவைத்துக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் இருந்துகொண்டே அதிமுக மீது தாக்குதல் நடத்திய தேமுதிக, இப்போது கூட்டணியை விட்டு வெளியேறிய பின் சும்மா இருக்குமா? “தேமுதிக பக்குவமற்ற அரசியலை நடத்துகிறது” என்று கூறியிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலளித்து நேற்று (மார்ச் 15) தேமுதிக தலைமை அலுவலகத்தில் பேட்டியளித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, “ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை” என்று பதிலளித்துள்ளார். இரண்டு கூட்டணிகளிலும் உள்ள எல்லாக் கட்சிகளுமே, திமுக, அதிமுக என இரண்டு தலைமையிலான கூட்டணிகளிலும் வெவ்வேறு காலகட்டங்களில் வேவ்வேறு தேர்தல்களைச் சந்தித்தவைதான். எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என பெரிய பெரிய ஆளுமைகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை நடத்திய அனுபவம் அல்லது அது குறித்த தரவுகள் அவர்களிடம் இருக்கின்றன. ஆனால், இந்த…
Read Moreஅஜீத்குமார் பிறந்த நாள் பரிசு வலிமை முதல் பார்வை – போனி கபூர்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்தது. இறுதியாக, சண்டைக் காட்சி ஒன்றை வெளிநாட்டில் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு. இதற்காக ஏப்ரலில் வெளிநாடு செல்வார்கள் எனச் சொல்லப்படுகிறது.‘வலிமை’ படத்தில் யாரெல்லாம் அஜித்துடன் நடிக்கிறார்கள் என்ற தகவலைக் கூட படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை.தற்போது, ‘வலிமை’படம் குறித்த தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக தயாரிப்பாளர் போனிகபூர் வெளீயிட்டுள்ள ட்விட்டர் பதிவில்…மே 1 ஆம் தேதி அஜித் தனது 50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். அன்றைய தினத்தில் ‘வலிமை’ படத்தின் முதல்பார்வை வெளியாகும் எனவும், அன்று முதல் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளனர்
Read Moreகமல்ஹாசன் கார் மீது தாக்குதல்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு திரும்புகையில் அவரது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார். தேர்தலை முன்னிட்டு நேற்று மாலை காஞ்சிபுரம் பெரியார் நினைவு தூண் அருகே பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பரப்புரை ஆற்றினார். இரவு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு ஹோட்டலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். கார் காந்தி சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு நபர் கமலின் கார் மீது தாக்கியுள்ளார். இதில் காரின் ஒரு பக்கக் கண்ணாடி உடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கட்சித் தொண்டர்கள் அந்த நபரை பிடித்து சரமாரியாகத் தாக்கினர். இதில் அவருக்கு மூக்கு வாய் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் அந்த நபர் மது போதையிலிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read Moreதினகரனின் கோவில்பட்டி கணக்கு தேமுதிக – அமமுக கூட்டணி பின்னணி
அமமுக – தேமுதிக கூட்டணி முடிவாகி, இக்கூட்டணியில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக அங்கே போதிய எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியால் கடந்த வாரம் கூட்டணியில் இருந்து வெளியேறியது.இந்த நிலையில் அமமுக,மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு நடத்தியது, ஆனால், மக்கள் நீதி மய்யத்துடனான கூட்டணிப் பேச்சு தொடங்குவதற்கு முன்பே முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் அதிமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற பொதுக் கருத்தின் அடிப்படையில் தேமுதிகவும், அமமுகவும் கூட்டணி அமைத்துள்ளன. இதில் தேமுதிக சார்பில் அவைத் தலைவர் இளங்கோவனும், அமமுக சார்பில் டிடிவி தினகரன் சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான செந்தமிழனும் கையெழுத்திட்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா போட்டியிடுகிறார். இந்த 60…
Read Moreஇயற்கை நேசித்தவர் ஜனநாதன் – இயக்குனர் தங்கச்சாமி
ராட்டினம், எட்டுதிக்கும் மதயானை படங்களை இயக்கியவர் தங்கச்சாமி இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மறைவையொட்டி வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்திநேற்று சென்னையில் விடுதியில் தங்கியிருந்தபோது அந்த செய்தி வந்தது. ஜனநாதன் மறைந்தார்.அவர் மறைந்த செய்தி சட்டென்று என்னுள் நிலைகுலைவை உருவாக்கியது. தமிழ் இயக்குனர்களில் என் உள்ளத்திற்கு அணுக்கமானவர் ஜனநாதன். அவருடைய தனிப்பட்ட உடல்நிலைகளை நான் அறிய முடிந்ததில்லை.அவரை நான் சந்தித்ததே ஒரு அஞ்சலி கூட்டத்தில் தான். என் முதல் படமான ராட்டினம் படம் பற்றி அவர் உற்சாகத்துடன் விலாவாரியாக பேசினார். ராட்டினம் படம் குறித்து அவர் சொன்னபோதிருந்த முகபாவங்களை திரும்பத் திரும்ப நினைத்துக்கொள்கிறேன். நாம் மனிதர்கள் என்றுமிருப்பார்கள் என்றே நம்ப விரும்புகிறோம். அந்த நம்பிக்கை வெறும் எண்ணம்தான், நிதர்சனம் வேறு என்று வாழ்க்கை உணர்த்திக்கொண்டேதான் இருக்கிறத நான்காவது மாடி விடுதி அறையின் அகன்ற ஜன்னல் வழியாக சாலையை பார்த்து கொண்டு இருந்தேன்.…
Read Moreஆலம்பனாவில் நவயுக அலாவுதீன் யார்?
தமிழ் சினிமாவில் உடல்கேலி வசனங்கள் பேசாத காமெடியனாகவும், அதே நேரம் சிறந்த நடிகராகவும் வலம் வரும் நடிகர்கள் சொற்பமே. சமீபகால சினிமாவில் முனீஸ்காந்த் & காளி வெங்கட் மாதிரியான நடிகர்களைக் குறிப்பிடலாம். குறிப்பாக, முண்டாசுப்பட்டி, ராட்சசன், மாநகரம் மற்றும் மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் பட்டையைக் கிளப்பிய நடிகர் முனீஸ்காந்த். தொடர்ச்சியாக, பல படங்களில் நடித்துவருகிறார். அப்படி, அவரின் லைன் அப்பில் இருக்கும் ஒரு படம் ‘ஆலம்பனா’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. வைபவ் நாயகனாக நடித்திருக்கிறார். அலாவுதீனாக வைபவும், ஜீனியாக முனீஸ்காந்தும் இருக்கும் ‘ஆலம்பனா’ பட போஸ்டர் இணையத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. ஃபேண்டஸி சினிமாவாக இருக்கும் என்கிறார்கள். இப்படத்தை, பரி கே.விஜய் இயக்கிவருகிறார். இவர், முண்டாசுப்பட்டி மற்றும் இன்று நேற்று நாளை படங்களில்…
Read Moreரம்ஜான் பண்டிக்கைக்கு எந்த படம் ரீலீஸ்
விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகம் கொஞ்சம் நிமிர்ந்து நடைபோட தொடங்கிவிட்டது. கடந்த மாதங்களில் எக்கச்சக்கப் படங்கள் திரையரங்கில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், பாலிவுட் இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. பாலிவுட் ரசிகர்கள் கொரோனா அச்சத்தினால் இயல்பாக திரையரங்குக்கு வரவில்லை. தமிழுக்கு விஜய்யின் மாஸ்டர் போல, பாலிவுட் திரையுலகம் சல்மான் கானின் ராதே படத்தை நம்பியிருக்கிறது. சல்மான் கான், திஷா பதானி நடிப்பில் உருவாகிவரும் ‘ராதே: தி மோஸ்ட் வான்டட் பாய்’ திரைப்படம் வரும் ரம்ஜான் பண்டிகை தின ஸ்பெஷலாக மே 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை பிரபு தேவா இயக்கியிருக்கிறார். மாஸ்டர் போல, பக்கா கமர்ஷியல் மாஸ் படமாக இருக்கும் என்கிறார்கள். சல்மான் கானுக்குப் போட்டியாக பாலிவுட் நடிகை கங்கனா களமிறங்குகிறார். விஜய் இயக்கத்தில் கங்கனா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘தலைவி’.…
Read Moreதிருந்தாத நடிகர் விஷால் நெருக்கடியில் எனிமி தயாரிப்பாளர்
அரிமாநம்பி இருமுகன் ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி.இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2020 அக்டோபர் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. அதன்பின் இடைவெளி விட்டுவிட்டு நடந்த அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடந்துவருகிறது. அங்கு படப்பிடிப்பு தொடங்கியபின் வருவதாகச் சொன்ன விஷால், சொன்னதைவிட சில நாட்கள் தாமதமாகச் சென்றாராம். அங்கு போனவுடன் ஓரிரு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர், அப்புறம் காணாமல் போய்விட்டார் என்கிறார்கள். மூன்று நாட்கள் அவரைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லையாம். மூன்று நாட்களுக்குப் பின் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம். இதனால், திட்டமிட்டதைவிட பத்துநாட்கள் அதிகமாகப் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருக்கிறதாம். இதனால் படக்க்ழூவினர் தாமதமாகத்தான் சென்னை திரும்புவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் வினோத், மிகவும் நொந்துபோயிருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கிய…
Read Moreதமிழ்சினிமா வந்ததும்-போனதும் வசூல் செய்தது என்ன?
தமிழ் சினிமாவில் தினந்தோறும் புதிய பட அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கிறது, படங்களின் முதல் பார்வை, முன்னோட்ட டிரைலர், தனிப்பாடல்கள் வெளியீடு என சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகின்றன. சினிமா துறையினர் நிரம்பி இருக்கும் வாட்ஸ்அப் குழுக்களில் புதிய படங்கள் வெளியீடு, படங்களுக்கு சமூக வலைதளங்களில் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் என பெருமையுடன் தயாரிப்பாளர்களால் பகிரப்பட்டு வருகின்றன வாரந்தோறும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் உண்மை வசூல் நிலவரங்கள் மிக மோசமாக இருக்கிறது என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள் இந்த வருடம் ஜனவரி மாதம் 12, பிப்ரவரி மாதம் 22, மார்ச் இதுவரை 10 என 45தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது இவற்றில் நட்சத்திர அந்தஸ்து உள்ள படங்கள் 1. மாஸ்டர்(விஜய்)2. கபடதாரி(சிபிராஜ்)3.பாரிஸ் ஜெயராஜ்(சந்தானம்)4.கமலி From நடுக்காவேரி5.சக்ரா(விஷால்) 6. வேட்டைநாய்(R.K. சுரேஷ்) 7. மிருகா(ஸ்ரீகாந்த்) 8.அன்பிற்கினியாள்(அருண்பாண்டியன்)9. நெஞ்சம் மறப்பதில்லை(சூர்யா) 10. சங்கத்…
Read Moreவரலாறு பெருமை கொண்ட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்
வரலாற்றில் சிலர்இடம் பிடிக்க போராடுவார்கள் தங்களை பெருமைபடுத்திக் கொள்ள சிலரை வரலாறு தன்னுள் பதிவு செய்து பெருமை கொள்ளும் அத்தகைய ஆளுமை, பொதுவுடமை சித்தாந்தவாதி என தன்னை பகிரங்கமாக பிரகடனப்படுத்தி கொண்டு திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன் பதினெட்டு ஆண்டுகளில் 5 படங்கள் மட்டுமே இயக்கினாலும் தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமை இயக்குநர்களில் இடம்பெற்றவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன கடந்த வியாழன் (மார்ச் 11) அன்று மதியம் படத்தொகுப்புப் பணிகளிலிருந்து வீட்டிற்குச் சாப்பிடச் சென்றுள்ளார் ஜனநாதன் நீண்ட நேரமாகத் திரும்பாத காரணத்தால் அவருடைய உதவியாளர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார்.உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துப் பரிசோதனை…
Read Moreபுதுச்சரி சட்டப் பேரவை திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 30 தொகுதிகள் உள்ளன. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு, திமுக – காங்கிரஸ் இடையே அண்ணா அறிவாலயத்தில் கடந்த மார்ச் 11ஆம் தேதி கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனும் கையெழுத்திட்டனர். இந்நிலையில், திமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 13) வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 தொகுதிகளில், 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாகூர் தொகுதிக்கு மட்டும் பின்னர் அறிவிக்கப்படும் என்று திமுக தெரிவித்துள்ளது. புதுவை வேட்பாளர்கள் பட்டியல் உருளையன்பேட்டை – எஸ்.கோபால், உப்பளம் – வி.அனிபால் கென்னடி, மங்கலம் – சண்குமரவேல், முதலியார் பேட்டை – எல்.சம்பத், வில்லியனூர் – ஆர். சிவா, நெல்லித்தோப்பு – வி.கார்த்திகேயன், ராஜ்பவன் – எஸ்.பி.சிவகுமார், மண்ணாடிப்பாட்டு – கிருஷ்ணன் (எ) எ.கே.குமார், காலாப்பட்டு –…
Read Moreசமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அந்த 40 தொகுதிகளை அக்கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் நேற்று சென்னையில் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- 1.துறைமுகம் 2.உத்திரமேரூர் 3. அரக்கோணம் (தனி) 4.சோளிங்கர் 5.ஆற்காடு 6.வாணியம்பாடி 7.ஆம்பூர் 8.ஜோலார்பேட்டை 9.போளூர் 10.உளுந்தூர்பேட்டை 11.ரிஷிவந்தியம் 12. ஆத்தூர் (தனி) 13. சங்ககிரி 14. திருச்செங்கோடு 15. அந்தியூர் 16. கிருஷ்ணராயபுரம் (தனி) 17. லால்குடி 18. கடலூர் 19.சிதம்பரம் 20.சீர்காழி (தனி) 21.திருத்துறைப்பூண்டி (தனி) 22.சிவகங்கை 23.மதுரை தெற்கு 24.பெரியகுளம் (தனி) 25. ராஜபாளையம் 26. விருதுநகர் 27.விளாத்திகுளம் 28.தூத்துக்குடி 29.திருச்செந்தூர் 30. ஒட்டப்பிடாரம் (தனி) 31. வாசுதேவநல்லூர் (தனி) 32.தென்காசி 33.ஆலங்குளம் 34. நெல்லை 35. அம்பாசமுத்திரம் 36,நாங்குநேரி 37.ராதாபுரம் 38.பத்மநாபபுரம் 39.விளவங்கோடு 40.கிள்ளியூர். பேட்டியின்போது கட்சியின் முதன்மை துணை…
Read Moreதிமுக சட்டமன்ற வேட்பாளர் பட்டியல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது.இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அப்போது தி.மு.க. பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலின்படி கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினும், காட்பாடி தொகுதியில் துரைமுருகனும் மீண்டும் போட்டியிட உள்ளனர். இதேபோன்று தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மீண்டும் அதே தொகுதியில் களம் காண்கின்றனர். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் போட்டியில் களம் இறங்குகிறார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மறைந்த தி.மு.க. தலைவர்…
Read Moreமம்தா பானர்ஜியை தாக்கியதில் பாஜகவுக்கு சதி,தொடர்பு?
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த 10ஆம் தேதியன்று நந்திகிராம் தொகுதியில் பிரச்சாரத்தின்போது நடந்த அசம்பாவிதத்தில் காயமடைந்தார்; அதற்கு பாஜகவினர் செய்த சதியே காரணம் என குற்றம்சாட்டுகிறது, திரிணமூல் காங்கிரஸ் கட்சி. தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை அக்கட்சியின் எம்.பி.கள் டெல்லியில் நேற்று சந்தித்து ’தாக்குதல்’ குறித்து எட்டு பக்க புகார் மனு அளித்தனர். டம்டம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் திரிணமூல் காங்கிரஸ் துணைத்தலைவருமான சுகத்தா ராய், மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரைன் ஆகியோர் உள்பட 6 திரிணமூல் எம்.பி.கள் குழுவினர் அரை மணி நேரம் சுனில் அரோராவிடம் பேசினார்கள். மம்தாவின் மீதான ‘தாக்குதலின்’ பின்னணியில் நந்திகிராமின் பாஜக வேட்பாளரும் முன்னாள் திரிணமூல் அமைச்சருமான சுவேந்து அதிகாரி செயல்பட்டுள்ளார் என்பது திரிணமூல் தரப்பு தந்த புகாரின் மையமான குற்றச்சாட்டு. கிழக்கு மிதினாப்பூர் மாவட்டத்தின் நந்திகிராமில் சில…
Read Moreமுதல் ஆளாக போடியில் வேட்புமனு தாக்கல் செய்த பன்னீர்செல்வம்
அதிமுக கட்சியால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் 0.பன்னீர்செல்வம் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 12 காலை 11 மணிக்குத் தொடங்கியது. முதல் நாளான நேற்று துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர் செல்வம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். போடி சட்டமன்றத் தொகுதியில் போடி நகராட்சி, போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம், பழனிசெட்டிபட்டி, பூதிப்புரம், குச்சனூர், வீரபாண்டி, மார்க்கையன்கோட்டை, மேலச்சொக்கநாதபுரம், போ.மீனாட்சிபுரம் ஆகிய பேரூராட்சிகள் உள்ளன. 1957- 2016 வரை நடைபெற்ற 14 தேர்தல்களில் காங்கிரஸ் 4 முறையும், திமுக.3 முறையும், அதிமுக 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 1989ஆம் ஆண்டு போடியில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் ஏறத்தாழ 2 .77 லட்சம் வாக்காளர்கள்…
Read Moreபுதுச்சேரியில் அதிமுகவை அலைகழிக்கும் பாஜக தலைமை
பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் அதிமுக, என். ஆர். காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன இடம்பெற்றபோதும், தொகுதி பிரச்சினையில் பாமக தனியாகப் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. என்.ஆர்.காங்கிரசும் பாரதிய ஜனதாவும் தொகுதி உடன்பாடு செய்து முடித்துவிட்டன. என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்கள், பாஜக 14 இடங்கள் அதில் அதிமுகவுக்கு 4 தொகுதிகள் தருவதாக உடன்பாடு கண்டனர். ஆனால் இப்போது அதிமுகவுக்கு மூன்று தொகுதிகள்தான் தரமுடியும் என பாஜக மாற்றிப்பேசுவதாக புதிய பிரச்சினை எழுந்திருக்கிறது. பாஜக நிர்வாகிகள் இதுதான் எங்கள் நிலைப்பாடு என கறாராகப் பேச, அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். பாஜக நிர்வாகிகளிடம், ” நாங்கள் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களே நான்கு பேர் இருக்கிறோம்; அதனால்தான் எட்டு தொகுதிகள் வேண்டும் எனக் கேட்டோம்; 4 தொகுதிகள் தருவதாகச் சொன்னீர்கள்; அதை ஏற்றுக்கொண்டோம். ஆனாலும் அதன்பிறகும் ஒரு தொகுதியைக் குறைத்தால்…
Read Moreராஜேந்திரபாலாஜியின் திட்டம் ராஜபாளையத்தில் நிறைவேறுமா
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த இரு தேர்தல்களில் வெற்றி பெற்று அமைச்சர் பொறுப்பு வகித்து வந்த கே.டி. ராஜேந்திர பாலாஜி, தோல்வி அச்சத்தில் தற்போது ராஜபாளையம் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுவதாக அதிமுகவினரே தெரிவிக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் ராஜபாளையம் தொகுதியில் அதிமுக வெற்றிபெறுவது எளிதான காரியமில்லை என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள். ராஜபாளையம் யூனியன் முழுவதும் திமுக ஓட்டு அதிகம் தற்போது ராஜபாளையம் நகரிலும் திமுக செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில் வெற்றி கொடிநாட்ட அங்கு வந்துள்ளார் கேடிஆர். அருப்புக்கோட்டை அருகேயுள்ள குருந்தமடம் பகுதியைச் சோ்ந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, சிறு வயதில் பெற்றோருடன் திருத்தங்கல் பகுதியில் வசித்து வந்தாா். தீவிர எம்ஜிஆா் ரசிகரான இவர், நகராட்சி வாா்டு உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டு திருத்தங்கல் நகா்மன்ற துணைத் தலைவா் பதவி வகித்தார். கடந்த 2011இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில்…
Read Moreஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிட போட்டியிடும் தொகுதிகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. நீண்ட இழுபறிக்கு பின்னர் தொகுதிகள் உடன்பாடு நிறைவுபெற்றது. இந்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் 6 தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:- 1.பவானிசாகர் (தனி). 2.திருப்பூர் வடக்கு. 3.சிவகங்கை. 4.திருத்துறைப்பூண்டி. 5.வால்பாறை (தனி). 6.தளி
Read Moreதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மதிமுக வேட்பாளர்கள் பட்டியல்
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு மதுராந்தகம் (தனி), சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் (தனி), அரியலூர் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த தொகுதிகளில் போட்டியிட விரும்பும் ம.தி. மு.க.வினரிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நேர்காணல் நடத்தினர். அதன்பின்னர் ம.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வைகோ நேற்றிரவு வெளியிட்டார். வேட்பாளர்கள் விவரம் வருமாறு:- 1. மதுராந்தகம் (தனி) – மல்லை சி.ஏ.சத்யா (ம.தி.மு.க. துணை பொதுசெயலாளர்). 2. சாத்தூர்-டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் (விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர்). 3. பல்லடம்-க.முத்துரத்தினம் (திருப்பூர் மாவட்ட துணை செயலாளர்). 4. மதுரை தெற்கு-மு.பூமிநாதன் (மதுரை மாவட்ட செயலாளர்). 5. வாசுதேவநல்லூர் (தனி) – டாக்டர் சதன் திருமலைக்குமார் (உயர்நிலை குழு உறுப்பினர்). 6. அரியலூர்-வக்கீல் கு.சின்னப்பா (அரியலூர் மாவட்ட வக்கீல்…
Read Moreதமிழ்நாடு பா.ஜ.க கட்சி உயர் மட்ட குழு ஆலோசனை-வேட்பாளர் தேர்வில் தீவிரம்
சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க.வின் உயர்மட்ட குழுவினரின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் எல்.முருகன் தலைமை தாங்கினார். தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய இணை மந்திரியுமான கிஷன்ரெட்டி, சி.டி.ரவி. தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் எல்.கணேசன், முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், பா.ஜ.க. விரும்பிய 20 தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி ஒதுக்கி உள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தேசிய தலைமை விரைவில் வெளியிட இருக்கிறது. இதில் யாரை அறிவித்தாலும் அவர்களை வெற்றி பெற வைப்பதற்காக பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அத்துடன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கும் உழைக்க வேண்டும். அதேபோல் மக்கள்…
Read Moreபாஜகவில் இணைந்தார் காமெடி நடிகர் செந்தில்
அ.தி.மு.க.வில் இணைந்து செயல்பட்டு வந்த நடிகர் செந்தில் கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களின் போது தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமையிடமான கமலாலயத்திற்கு நேற்று காலை வருகை தந்த நடிகர் செந்தில், பா.ஜ.க. மாநிலத்தலைவர் எல்.முருகன் மற்றும் அகில இந்திய பா.ஜ.க. பொதுச்செயலாளர் மற்றும் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான சி.டி.ரவி ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் தன்னை நேற்று இணைத்து கொண்டார். மாநில தலைவர் எல்.முருகன், அவருக்கு உறுப்பினர் அட்டையை வழங்கி வரவேற்றார். பின்னர் மாநில தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- பொதுமக்கள் நலன் கருதி பிரதமர் கொண்டு வரும் நல்ல திட்டங்களை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு துறைகளில் இருந்தும் பிரபலமானவர்கள் பா.ஜ.க.வில் இணைந்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது தமிழ் சினிமா உலகில் காமொடி நடிகராக பல…
Read Moreதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுதொடக்கம்
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறத அத்துடன், காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்பு மனுத்தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாட்கள் ஆகும். எனவே, 2 நாட்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாது. தொடர்ந்து, 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 20-ந்தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற 22-ந்தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பு மனுத்தாக்கலின்போது பின்பற்றுவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.…
Read Moreதினகரன்கோவில்பட்டிக்கு தொகுதி மாறியது ஏன்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் தொகுதி மட்டுமல்லாமல் இன்னொரு தொகுதியிலும் போட்டியிடப் போவதாக நேர்காணலின் போது அறிவித்தார். அந்த வகையில் அவர் தேனி மாவட்டத்தில் போட்டியிட வேண்டுமென்றும், தஞ்சை மாவட்டத்தில் போட்டியிட வேண்டுமென்றும் கோரிக்கைகள் கட்சிக்குள் எழுந்துகொண்டிருந்தன. இந்நிலையில்தான் நேற்று (மார்ச் 11) வெளியிடப்பட்ட அமமுகவின் இரண்டாம் கட்ட்ப் பட்டியலில் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டியை தினகரன் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன? “கோவில்பட்டி தொகுதிக்குள் கோவில்பட்டி ஒன்றியம், கயத்தாறு ஒன்றியம் என இரண்டு ஒன்றியங்கள் இருக்கிறது. கயத்தாறு ஒன்றியத்தில் முக்காவாசி 2008 இல் மறு சீரமைப்பின் போது கோவில்பட்டி தொகுதிக்குள் வந்துவிட்டன. கயத்தாறு ஒன்றிய சேர்மனுக்கு 16 கவுன்சிலர்கள். அதில் 10 கவுன்சிலில் அமமுகவினர் ஜெயித்துவிட்டார்கள். அதிமுக சார்பில் 2 கவுன்சிலர்கள். இந்த ஒன்றியத்தின் சேர்மனாக இருப்பவர் கடம்பூர் மாணிக்கராஜா. இந்த…
Read Moreபாரதிராஜாவுக்கு பதிலடி – சொந்தளிக்கும் தயாரிப்பாளர்கள்
தமிழ்சினிமா தயாரிப்பாளர்களுக்கு என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மட்டுமே கடந்த ஐம்பது ஆண்டுகளாக இயங்கிவருகிறது தணிக்கைக்கு விண்ணப்பிக்க, தமிழக அரசு வழங்கும் சிறுபடங்களுக்கான மானியம் ஆகிவற்றுக்கு இந்த சங்கமே அங்கீகார சான்றிதழ்கள் இன்றுவரை வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, புரடியூசர் கில்டு என வேறு இரண்டு அமைப்புகள் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தாலும் இந்த அமைப்புகள் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் அதிகாரம் செலுத்த முடிவதில்லை பிற மொழி, மற்றும் மொழிமாற்று படங்களின் படத்தயாரிப்பாளர்களுக்கான அமைப்பாகவே இயங்கிவருகின்றன இந்த சூழ்நிலையில் கடந்த வருடம் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது அப்போது தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. நவம்பர் 22/2020 அன்று நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு முரளி@ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்…
Read Moreஅறிமுக நடிகைகளின் அட்டகாசம்
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தவரை நடிகர் நடிகைகள் படம் சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டனர் அது தங்களுக்கு ஒரு புரமோஷன் என்று பெருமை கொண்டனர் நடிகர்கள், இயக்குனர்கள் புதிய படங்கள் தயாரிப்பதை தீர்மானிக்கும் சக்திகளாக மாறியபின் எல்லா நடைமுறைகளும் மாறிப்போனது திரைப்படம் தொடங்கி படம் வெளியாவதற்குள் பல முறை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்வுகள் நடைபெறும் நாயகன் முதல் அனைத்து நடிகர்களும் இதில் பங்கேற்கும் வழக்கம் அடியோடு அழிந்துபோனது மூத்த, முன்னணி நடிகர் நடிகைகள் படம் சம்பந்தமான புரமோஷன் நிகழ்வுகளுக்கு வருவதை தவிர்த்து அந்த பழக்கத்தை நிரந்தரமாக்கிவிட்டனர் அதனை தற்போது நடிக்க வரும் புதுமுக நடிகைகளும் கடைபிடிக்க தொடங்கிவிட்டனர் என்கின்றனர்சிறுபடத் தயாரிப்பாளர்கள் இயக்குனர் ராசு ரஞ்சித் நாயகனாக நடித்து ‘தீதும் நன்றும்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். படம் தயாராகி இரண்டு வருடங்களாக வியாபாரம் ஆகாமல் முடங்கி…
Read Moreசினிமாவை கற்றுக்கொள்ள படம் தயாரித்த நடிகர்
ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் ‘டிக் டாக்’ புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன்,தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பி.வி. கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர். இவ்விழாவில் படத்தைத் தயாரித்துக் கதாநாயகனாக நடித்திருக்கும் அருண்குமார் பேசும்போது, ” எனக்குச் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோ கனவோ சிறிதும் கிடையாது. ஆனால் நான் இந்த சினிமா தொழில் தொடங்க வேண்டும் என நினைத்த போது வேறு ஒருவரை வைத்து படம் எடுத்தேன். அது சரியாக வரவில்லை .எடுத்த படத்தை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு வேறு…
Read Moreதமிழக அரசியலும் உலகம் சுற்றும் வாலிபன் படமும்
தமிழக அரசியலும் உலகம் சுற்றும் வாலிபன் படமும் பிரித்து பார்க்க முடியாத ஒன்று திமுகவின் பொருளாளர், மற்றும் அடிப்படை பொறுப்பில் இருந்து எம்.ஜி.ஆர்நீக்கப்பட்ட பின்னர் எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, இரு வேடங்களில் நாயகனாக நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1973ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் அக்காலத்தில் பல தடைகளைக் கடந்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு இந்தப் படத்தை பல முறை ரி-ரிலீஸ் செய்து வெளியிட்டும் ஒவ்வொரு முறையும் பல ஊர்களில் அந்த சமயத்தில் வெளியாகும் புதிய படங்களுக்குப் போட்டியாக ஓரிரு வாரங்கள் வரை ஓடி சரித்திரம் படைத்திருக்கிறதுவெளிநாடுகளில் படப்பிடிப்பு என்பதை யோசித்து கூட பார்க்க முடியாக காலகட்டத்தில் ஜப்பான், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் என முழுக்க முழுக்க வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம் உலகம் சுற்றும்…
Read Moreகார்த்தி சிதம்பரத்தை எச்சரித்த தினேஷ்குண்டுராவ்
காங்கிரஸ் கட்சியில் அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை சொல்லி ஊடகங்களில் உலா வருபவர் கார்த்தி சிதம்பரம்.அந்த வகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளில் 8 பெண்களுக்கும் நான்கு தொகுதிகளை சிறுபான்மையினருக்கும் ஒதுக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்திருந்தார். இது தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் போன்றவர்களை டென்ஷன் ஆக்கியது.இந்த சூழலில் கடந்த மார்ச் எட்டாம் தேதி இரவு சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸின் பல்வேறு கோஷ்டி தலைவர்களையும் தமிழகத்தின் காங்கிரஸ் எம்பி களையும் தனித்தனியாக சந்திக்க முடிவு செய்தார் குண்டு ராவ். இதற்காக அவர்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே .ஆர். ராமசாமி உள்ளிட்ட பல தலைவர்களும் எம்.பி களும்…
Read Moreபிரசாந்த் நடிக்கும் படத்தை இயக்குகிறார் தந்தை தியாகராஜன்
இந்தியில் வெளியாகி தேசிய விருதுகளைக் குவித்த திரைப்படம் ‘அந்தாதூன்’. ஆயுஷ்மான் குர்ரானா, தபு நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய ஹிட். இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார் தியாகராஜன். நடிகர் பிரசாந்த் நடிக்க படம் ‘அந்தகன்’ எனும் பெயரில் படப்பிடிப்பு இன்று துவங்கியது. இந்தப் படம் துவங்கியதற்குப் பின்னணியில் மிகப்பெரிய போராட்டமே நடந்து முடிந்திருக்கிறது. முதலில், இந்தப் படத்தை இயக்க ஒப்பந்தமானது இயக்குநர் மோகன் ராஜா. இவர் விலகிவிட, ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் இயக்குநர் ஜே.ஜே. ஃபெட்ரிக் இயக்க ஒப்பந்தமானார். அதன்பிறகே, சிம்ரன், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்தி படத்துக்குள் வந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தமானார். தயாரிப்பாளர் தியாகராஜன் தலையீட்டால் இயக்குநர் ஃபெட்ரிக் படத்திலிருந்து விலகுகிறார் என ஏற்கெனவே செய்திகள் உலவி வந்த நிலையில் அந்ததகவல் உண்மையாகியிருக்கிறது. பிரசாந்த் நடிக்க அந்தகன் படத்தின் படப்பிடிப்பு 10.03.2021 அன்று…
Read Moreசிவபார்வதி காதலை கௌரவப்படுத்தும் ராதேஷியாம்பட போஸ்டர்கள்
ராதே ஷியாம்’ திரைப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மகா சிவராத்திரி புனித தினத்தை முன்னிட்டு சிவ-பார்வதியின் புராண காதலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது என்கிறது படக்குழு பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்துள்ள இந்த காதல் கதையின் புதிய போஸ்டரில், இருவரும் வெவ்வேறு திசைகளை நோக்கியவாறு தரையில் படுத்துள்ளனர். பின்னணியில் பனி படர்ந்துள்ளது. காதல் மற்றும் கனவுலகங்களின் கலவையாக இது அமைந்துள்ளது.படத்தின் பிரமாண்டத்தை வெளிப்படுத்தும் விதமாக போஸ்டர் உள்ளது. இத்தாலியில் உள்ள ரோம் உள்ளிட்ட மிகவும் அழகான இடங்களில் ‘ராதே ஷியாம்’ படமாக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் மோஷன் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.அதிரடி காதல் படமான ‘ராதே ஷியாம்’-ல், பத்து வருடங்களுக்கு பிறகு காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இது…
Read Moreமதுபாலா – இந்திரன்ஸ் நடிக்கும் ‘சின்ன சின்ன ஆசை ‘படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது
இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’ எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நடிகை மஞ்சு வாரியர் அவருடைய சமூக ஊடக பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை பாபுஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஜித் பாபுஜி தயாரித்திருக்கிறார். பெரும் பாராட்டைப் பெற்ற ‘எண்டே நாராயணனுக்கு’ எனும் குறும் படத்திற்கு பிறகு இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கியிருக்கும் திரைப்படம் இது. மேலும் இந்தப் படத்தின் மூலம் சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகை மதுபாலா கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்து மலையாள திரையுலகிற்கு திரும்பி இருக்கிறார். மதுபாலா உடன் தனித்துவமான நடிப்புத் தருணங்களுக்காக பெயர் பெற்ற நடிகர் இந்திரன்ஸ் இந்த படத்தின் மூலம் மீண்டும் பார்வையாளர்களின்…
Read Moreதலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படம் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் !!
தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4K தரத்தில் புத்தம் புது பொலிவுடன், மீண்டும் திரைக்கு வருகிறது. தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது திரைத்துறையில் 50 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இந்தியா மட்டுமல்லாது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரும் ஸ்டாராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாப்படுகிறார். அவரின் பொன் விழா ஆண்டை கொண்டாடும் வகையில் , பிளாக்பஸ்டர் திரைப்படமான “படையப்பா” படம் மீண்டும் திரையில் வெளியிடப்படவுள்ளது. 1999 ஆண்டில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான “படையப்பா” படத்தில் சூப்பர்ஸ்டாருடன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்…
Read Moreரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பெற்றுள்ளது!
மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகன்லால் நடித்திருக்க, இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தலைமையிலான ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ளது. பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சாதனை, பரபரப்பாக ரசிகர்களை கட்டிப்போடும் திரைக்கதை என பல சாதனைகள் புரிந்த ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியில் அபிஷேக் பதக் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்ட ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் உட்பட இந்தப் படத்தின் பல மொழி ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டுடியோஸ் தக்கவைத்துள்ளது. பனோரமா ஸ்டுடியோஸின் தலைவர்…
Read Moreபடத்திற்கு தலைப்பு வைத்ததே கதாநாயகி தான் : ‘ரெட் லேபில்’ படத்தயாரிப்பாளர் வெளிப்படையான பேச்சு!
‘ரெட் லேபில்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விழா ! இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில், முனிஷ்காந்த் நடிக்க,தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த ‘ரெட் லேபில்’ படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது. *இந்த விழாவில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, இயக்குநர்கள் எழில், வசந்தபாலன், மித்ரன் ஜவஹர், நடன இயக்குனர் ஸ்ரீதர், அனுமோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.*…
Read Moreஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் “ஹேப்பி ராஜ் ( Happy Raj)” படத்தின் தலைப்பு அறிவிப்பு
Beyond Pictures தயாரிப்பாளர் ஜெய்வர்தா, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஜனரஞ்சகமான படைப்புகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ் திரைப்படத் துறையில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். பல்வேறு திட்டங்கள் தற்போது தயாரிப்பில் உள்ளன; அவற்றின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். இதற்கிடையில், சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும், மரியா இளஞ்செழியன் இயக்கும் “ப்ரொடக்ஷன் நம்பர் 1” படத்தை அறிமுகப்படுத்தினர். இப்போது அந்த படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக “ஹேப்பி ராஜ்” என அறிவித்துள்ளனர். இயக்குனர் மரியா இளஞ்செழியன் தலைப்பின் பின்னணி குறித்து கூறும்போது, “ஹேப்பி ராஜ்” என்ற தலைப்பு ஒரு எளிய ஆனால் ஆழமான சிந்தனையில் இருந்து உருவானது — சினிமாவை மகிழ்ச்சியின் கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் என்ற விருப்பம். ஆக்ஷன் நிறைந்த மாஸ் என்டர்டெயினர்களுக்கு ரசிகர்கள் உற்சாகமாகக் குரல் கொடுப்பதை நாம் தினந்தோறும் காண்கிறோம். ஆனால்,…
Read More‘மூன்வாக்’ படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் !!
Link: https://www.youtube.com/watch?v=IwGXuGtQL4A Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் திரைப்படம் ‘மூன்வாக்’, Behindwoods Founder & CEO திரு. மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இப்படத்தினை தயாரித்து இயக்குகிறார். தன் நீண்ட திரை வாழ்க்கையில் முதல் முறையாக, இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் அவரே பாடியுள்ளார். ஒரு படத்தின் முழு ஆல்பத்தையும் அவரே முதன்முறை பாடியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்திலும், உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது. ‘ஏத்து’, ‘மெகரினா’, ‘மயிலே’, ‘டிங்கா’, ‘ஜிகர்’ என இந்த படத்தில் ஐந்து பாடல்களை அறிவித்த படக்குழு ஒவ்வொரு பாடல்களும், ஒவ்வொரு விதத்தில், ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை படைக்கும் வகையில் உருவாகியுள்ளது. படத்தின் அறிவிப்பு முதல் பல புதுமைகளால் அசத்தி வரும் படக்குழு இந்த படத்தின்…
Read Moreபோராடும் குணம் மட்டுமே வெற்றியை சாத்தியமாக்கி தோல்விகளை களையச் செய்கிறது: கவிஞர் கருணாகரன்
‘வல்லவன்’ திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய கவிஞர் கருணாகரன் பல்வேறு தடைகளை தாண்டி இன்று பல படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறார். சமீபத்தில் வெளியான ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ மற்றும் ‘கிணறு’ உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் எழுதிய பாடல்கள் பாராட்டுகளை பெற்ற நிலையில் தற்போது விஷால் நடிக்கும் ‘மகுடம்’ மற்றும் ‘லைப் டுடே’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் முன்னணி இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் மற்றும் ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் படங்களுக்கும் இவர் பாடல்களை எழுதி வருகிறார். தனது பயணத்தை பற்றி பேசிய கவிஞர் கருணாகரன், “எனது கலை உலக பயணம் போராட்டம் நிறைந்தது. மாற்றுத்திறனாளி இவர் என்ன எழுதுவார் என்று பல பேரின் கண்கள் என்னை நோக்கி கேள்வி எழுப்பிடும். அவர்களின் வார்த்தை மழுப்பலான பதில்களை கொடுக்கும். இவற்றைத் தாண்டி என் மீது…
Read Moreசாரா – திரை விமர்சனம்
பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றும் சாக்க்ஷி அகர்வால், அதே நிறுவனத்தில் பணியாற்றும் விஜய் விஸ்வாவை காதலிக்கிறார். பெற்றோர் சம்மதத்தின் பேரில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணத்துக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் சாக்ஷி அகர்வால், அவரது காதலர், சாக்ஷி அகர்வாலின் தம்பி ஆகியோர் கடத்தப்படுகிறார்கள் அந்த நிறுவனத்தில் கட்டுமான தொழிலாளியாக பணியாற்றும் செல்லக்குட்டி அவர்களை கடத்தி சிறை வைக்கிறார். இத்தனைக்கும் சாக்ஷி அகர்வாலும் செல்லக்குட்டியும் பள்ளிப் பருவ நண்பர்கள். இப்படி இருக்க அவர் அப்படி செய்தது ஏன்? கடத்தியவர் அவர்களை என்ன செய்தார்? கேள்விக்கான விடையை எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்வதே இந்த ‘சாரா’. கதையின் நாயகியாக சாரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாக்ஷி அகர்வால், அந்த கேரக்டரில் தேர்ந்த நடிப்பில் பிரகாசிக்கிறார். தன் சிறு வயது நண்பனை, தொழிலாளியாக பார்த்த நிலையிலும் அவர் காட்டும்…
Read Moreசாவீ – திரை விமர்சனம்
நாயகன் உதய் தீப், தனது தந்தை கொலையுண்டு இறந்ததற்கு தன் இரண்டு மாமன்கள் தான் காரணம் என நினைக்கிறார். அதுவே அவர்கள் மீது கோபமாக அவருக்குள் ஒளிந்து கொண்டு இருக்கிறது. அதே சமயம், இரண்டு மாமன்களில் ஒரு மாமன் மகளை காதலிக்கவும் செய்கிறார். இதற்கிடையே, அவர் காதலிக்கும் பெண்ணின் தந்தை ஒரு விபத்தில் இறந்து விட.. துக்க வீட்டில் அசதியில் அனைவரும் தூங்கி விட, பிணம் காணாமல் போகிறது. காணாமல் போன பிணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்குகிறது. குடும்ப உறுப்பினர்களிடம் போலீஸார் விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், நாயகனின் மற்றொரு மாமனும் இறந்து விடுகிறார். இந்த தொடர் மரணங்களின் மர்மப் பின்னணிக்கும் காணாமல் போன பிணத்துக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா… பிணத்தை கடத்தியது யார் என்பதை பிளாக் காமெடி ஜானரில் சொல்கிறது படம். நாயகனாக நடித்திருக்கும்…
Read MoreJioHotstar South Unbound நிகழ்வினை முன்னிட்டு, JioStar Leadership குழுவினர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர் !!
JioStar Head Entertainment Business, South Cluster, திரு.கிருஷ்ணன் குட்டி, JioStar Executive Vice President – Tamil திரு. பாலச்சந்திரன் R, Turmeric Media – CEO திரு. R. மகேந்திரன் ஆகியோர், இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, வரவிருக்கும் JioHotstar South Unbound என்ற முக்கிய நிகழ்வைப் பற்றி விளக்கினர். இந்த சந்திப்பில், நிகழ்வின் நோக்கம், தென்னிந்திய கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் அது உருவாக்கும் தாக்கம் போன்ற பல அம்சங்கள் குறித்து குழுவினர் முதல்வரிடம் பகிர்ந்தனர். மேலும், ‘Letter of Engagement’ என்ற ஒப்பந்தத்தின் முக்கிய குறிப்புகளும் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டின் திரைப்பட மற்றும் ஊடகக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து திறமைகளை உருவாக்குவது, பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது, படைப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் JioStar வழங்கும்…
Read More



