DMY கிரியேஷன் நிறுவனர் மகனின் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி !!

மலேசியா இதுவரை காணாத அளவில், பிரம்மாண்டமான நட்சத்திர திருமண விழா நடைபெற உள்ளது. இரண்டு நாடுகளை ஒன்றாக இணைக்கவுள்ள இவ்விழாவில், மலேசிய என்டர்டெயிண்ட்மென்ட் உலக பிரபலங்களும், தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்கவுள்ளனர்.   அக்டோபர் 12 அன்று, DMY கிரியேஷன் நிறுவனர் மற்றும் (மேலும் DMY என அறியப்படும்), தலைவர் டத்தோ முஹம்மது யூசாஃப், தனது மகன் ஃபஜ்ருல் ரஹ்மானுக்கு, செட்டியா நகரில் அமைந்துள்ள கன்வென்சன் சென்டரில், பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். தம்பதிகளின் திருமணத்தைக் குறிக்கும் நிக்கா விழா, அங்கு அரங்கேறுகிறது. நண்பர்கள், விருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இரு காதல் மனங்களின் ஒருங்கிணைவு கொண்டாடப்படவுள்ளது.   இந்த பிரம்மாண்டமான கொண்டாட்டத்தில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களும், கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கவுள்ளனர். மினுமினுக்கும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் இவ்விழா பெரும் கவர்ச்சியுடன்…

Read More

‘செல்ல குட்டி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா!

ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி.மணிபாய் தயாரிப்பில், சகாயநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செல்ல குட்டி’. புதுமுகங்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ் நாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் புதுமுக நடிகைகள் தீபிக்‌ஷா, சிம்ரன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா, திடியன், சாப்ளின் பாலு, மணி, லக்‌ஷ்மி, புஷ்பதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.   இப்படத்தின் பாடல்களுக்கு டி.எஸ்.முரளிதரன் இசையமைத்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் சிற்பி பின்னணி இசையமைத்துள்ளார். பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஓம்பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாபி ஆண்டனி நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். வரும் அக்டோபர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘செல்ல குட்டி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.…

Read More