375 திரையரங்குகளுக்கு மேல் திரையிடப்படும் ’திரௌபதி’!

தமிழ் சினிமாவில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை குறைந்தபட்சம் இரண்டு படங்கள் முதல் 7 படங்கள் வரை ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. பிப்ரவரி 28 அன்று வெளிவரவிருக்கின்ற படங்களின் பட்டியலில் அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனித்துவரக்கூடிய திரைப்படமாக திரௌபதி இடம்பெற்றுள்ளது. இயக்குனர் மோகன்.G தயாரித்து இயக்கியிருக்கும் குறைந்த பட்ஜெட் படம் திரெளபதி. இந்தப்படத்தின் முதல் டிரெய்லர் “ஜாதிகள் உள்ளதடி பாப்பா” என்கிற அடைமொழியோடு வெளியானபோது ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ச்சிக்குள்ளானது. சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான ரஜினியின் தர்பார் பட டிரெய்லர் பரபரப்பை பின்னுக்குத்தள்ளி அனைத்து சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் விவாத பொருளாக முதலிடத்தை ஒரு வார காலம் ஒன்றரை கோடியில் தயாரான திரெளபதி ஆக்கிரமித்து தக்கவைத்துக்கொண்டது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. படம் எந்த மாதிரியான கருத்தை முன்வைத்தது தயாரிக்கப்பட்டுள்ளது என்பது இயக்குநரை தவிர்த்து வேற யாருக்கும் தெரியாது.…

Read More

கன்னிமாடம்-விமர்சனம் !

ஆணவக்கொலை சம்பந்தப்பட்ட கதை என்றால் பத்தடி தள்ளி நிற்கும் சினிமா ரசிகனை “இதையும் பார் நண்பா” என நட்போடு அழைக்கிறது கன்னிமாடம். இப்படம் பார்ப்பவர்களுக்கு சாதி வெறியர்கள் மேல் கோபம் வரும் என்பது முன் அறிவிப்பு. சென்னையில் தஞ்சம் புகும் காதல் ஜோடிக்கு அடைக்கலம் தருகிறார் ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக். அவர் கொடுக்கும் அடைக்கலத்தையும் மீறி அந்த ஜோடிகளுக்கு சில விபரீதங்கள் நடக்கின்றன. முடிவு என்ன என்பதே கன்னிமாடம். இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்திலே ஆணவக்கொலை என்ற மேட்டரை கையில் எடுத்துள்ள போஸ் வெங்கட்டின் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள். சமூகக் கருத்துள்ள படத்தைத் தயாரிக்க முன்வந்த ஹசீருக்கும் வாழ்த்துகள். அன்பு கேரக்டரில் வரும் ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக் நல்ல தேர்வு. விஷ்ணு ராமசாமியின் நடிப்பிலும் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. படத்தின் முக்கிய அம்சமே நாயகியின் கேரக்டர் தான். அதை…

Read More