ஜூலையில் வெளியாகிறது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ‘மாரீசன்’

நடிகர்கள் பஹத் பாசில் – வடிவேலு இருவரும் இணைந்திருக்கும் ‘மாரீசன்’ எனும் திரைப்படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவலை படக் குழுவினர் பிரத்யேக போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாரீசன்’ எனும் திரைப்படத்தில் பகத் பாசில், வடிவேலு, விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீஜித் சாரங் மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். டிராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தயாரித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய…

Read More

ஜி.வி. பிரகாஷ் குமாரின் பரபர சஸ்பென்ஸ் த்ரில்லர், ‘பிளாக்மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘பிளாக்மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ போன்ற மிஸ்ட்ரி த்ரில்லர் படங்களை இயக்கிய இயக்குநர் மு. மாறனுடன் ஜி.வி. பிரகாஷ் குமார் இணைந்திருக்கும் இந்தப் படத்தை ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் கீழ் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதற்காக நடிகர்கள் ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி இருவருக்கும் படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. மேலும், முதல் பார்வைக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பிற்காக பத்திரிகை ஊடகங்கள் மற்றும் ரசிகர்ளுக்கும் படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. மர்ம பின்னணியில் ஜி.வி. பிரகாஷ்குமார் இருக்கும்படியான முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படம் மே 2025 இல்…

Read More