பிக்பாஸ் வின்னர் ஆரி அர்ஜுனனின் புதிய படத்தை இயக்குகின்றார் அறிமுக இயக்குனர் அபின்.

பிக்பாஸ் வின்னர் ஆரி அர்ஜுனனின் புதிய படத்தை இயக்குகின்றார் அறிமுக இயக்குனர் அபின்.

 

 

உலக தமிழர்களை தன்வசபடுத்தி தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி மக்கள் மனதில் இடம் பெற்று வரும் பிக்பாஸ் வின்னர் ஆரி அர்ஜுனனின் புதிய படத்தை இயக்குகின்றார் அறிமுக இயக்குனர் அபின்.

முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் ஆரி அர்ஜுனன்

ஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாகவும், வித்யா பிரதிப் கதாநாயகியாகவும் நடிக்கும் இன்வெஸ்ட்டிகேசன் க்ரைம், கமர்சியல் த்ரில்லராக புதிய படம் உருவாகி , சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்க விரைவில் வருகின்றது.

பல்வேறு விளம்பர படங்களை தயாரித்து வந்த ஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா
மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி முதன்முறையாக தமிழில் திரைப்படம் ஒன்றை இணைந்து தயாரிக்கின்றது. வெளிநாடுகளில் கடந்த 10 வருடங்களாக படதொகுப்பாளராகவும், இந்தியாவில்
செலிபிரிட்டி போட்டோகிராபராக வலம் வந்துகொண்டிருந்த அபின் தனது அடுத்தகட்ட பயணமாக கதை, திரைக்கதை, வசனம், எழுதி இப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராகவும், மாயா,நெடுஞ்சாலை,எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்
உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்த ஆரி அர்ஜுனன் கதாநாயகனாகவும், வித்யா பிரதீப் கதாநாயகியாகவும் இப்படத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் முனிஷ்காந்த் உட்பட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

முதல் முறையாக ஒரு காப் ஸ்டோரி script பன்றதுல ஆரி அர்ஜுனன் தன்னுடைய சந்தோஷத்தை தெரிவித்திருக்கிறார்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி அடுத்தடுத்த கட்டங்களாக
மதுரை, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.,

அறிமுக இயக்குனர் அபின் மீது எல்லையில்லா அன்பும் கதையின் கருவில் உள்ள சுவாரசியத்திற்காகவும் பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டு
தமிழில் பல வெள்ளி விழா சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஆர்.சுந்தரராஜன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.

இசைப்புயல் ஏஆர் ரஹ்மானிடம் உதவியாளராக பணியாற்றிய ஸ்டெர்லின் நித்தியா இப்படத்தின் இசையமைப்பாளராகவும்,
பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜியின்
ஆயிரத்தில் ஒருவன், வேலைக்காரன், தனி ஒருவன் இரண்டாம் உலகம் ஆகிய படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய
பிவி கார்த்திக் ஒளிப்பதிவாளராகவும்,
நயன்தாரா நடித்த நெற்றிகண் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய கமலநாதன் இப்படத்தில் கலை இயக்குனராகவும், தளபதி விஜயின் மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் வரிகள் மூலம் உலக தமிழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த புகழ்பெற்ற
பிரபல பாடலாசிரியர் விவேக் பாடலாசிராயராகவும் மற்றும் படத்தொகுப்பாளராக அருள் சித்தார்த், சண்டை பயிற்சி இயக்குனராக சக்தி சரவணன் மற்றும் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் சினிமாவின்
நிர்வாக தயாரிப்பாளராகவுள்ள விசுவநாதன் இத்திரைப்படத்தின்
நிர்வாக தயாரிப்பாளராகவும், 25 ஆண்டு காலமாக சிறந்த சினிமா பிஆர்ஓவாக வலம் வரும் நிகில் முருகன் இப்படத்திற்கு பிஆர்ஓ_வாக உள்ளனர்.

தயாரிப்பு:

ஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா
மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி

கதை-திரைக்கதை-வசனம்- இயக்கம்

அபின்

English Press Release
Debut director Abin is all set to direct a feature film with the Big Boss title winner Aari Arujunan, who made a huge name for self by creating a unique fan base of Tamils around the world.

Ari Arujunan is playing the role of a cop for the first ever time.

Shaurya Productions – Subbiah along with Abin Film Factory are producing this investigation crime, commercial thriller starring Aari Arujunan as the male protagonist and Vidya Pradeep as the female lead. The film , will be out soon to treat the movie fans.

Shaurya Productions and Abin Film Factory, who have been producing various commercials, are producing a feature film in Tamil for the first time.

Abin, who was an editor in abroad for the last 10 years and a celebrity photographer in India, is taking a leg up in his journey, doing story screenplay and direction, in this directorial debut.

Ari Arujunan who featured as a hero in films like Nendunchalaai, Maya,and “Ellam mela irukravan paathukuvan”,etc….. is playing the lead role and Vidya Pradeep is playing the female lead. Along with them many other actors including Munishkanth are playing pivotal roles.

Aari Arujunan, has expressed his happiness in doing a cop story script for the first time.

The first phase shooting of the film will commence in Chennai and the subsequent phases of the film will be shot in Madurai, Dindigul and Palani.

With boundless affection for debut director Abin and for the interest in the nucleus of the story, the famous director AR Murugadoss and the versatile actor-director, screenwriter R. Sundararajan, who directed many super hit films in Tamil, attended and congratulated the crew.

Sterlin Nithya, who worked as an assistant to musician AR Rahman, is the music composer of the film. PV Karthik, associate of famous cinematographer Ramji (cinematographer for the films like “ayirathil oruvan” and “irandam ulagam”), will be working as the cinematographer and Kamalanathan, who worked as an art director in Nayanthara’s Nertikan, will be the art director.
Famous songwriter Vivek is the lyricist, who shook the Tamils around the world with his lyrics for the famous song “aalaporan tamilan” from thalabathy Vijay’s Mersal. Arul Siddharth is the editor and, Shakthi Saravanan is the stunt director.
Viswanathan, manager of the renowned AGS Cinemas is the Production executive and Nikil Murugan, who has been the best cinema PRO for 25 years, is the PRO for this film.

Production:
Shaurya Productions – Subbiah and Abin Film Factory

Story-screenplay-direction
Abin

Related posts

Leave a Comment