கொரோனா தொற்றின் மீது. மக்களுக்கு இருக்கும் பயத்தை காட்டிலும் அது பற்றிய செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வருவது மக்களின் மனநிலையை பாதிக்கிறது என சமூக பொதுவெளியில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது இவற்றில் இருந்து நேர்மறையான, மனோநிலை, சிந்தனைகளுக்கு மக்களை மாற்ற வேண்டும் என்கிறார் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா
கொரோனா பயத்தை போக்கும் விதமாக சில வழிமுறைகளை சொல்லி இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவுவதால் மக்கள் பீதியில் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா மீதுள்ள பயத்தை போக்கி தைரியப்படுத்துவது அவசியம்.இங்கு 10 பேர் செத்தனர். அங்கு 50 பேர் செத்தனர் என்றெல்லாம் பயமுறுத்தி இருக்கிற தைரியத்தை போக்குவதை விடுத்துகொரோனாவை எதிர்கொள்ள நாம் எப்படி இருக்க வேண்டும்.
நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி கொடுக்க வேண்டும்.இந்த கஷ்ட காலத்தில் எல்லோரும் நலமுடன் இருக்க நான் பிரார்த்திக்கிறேன். கஷ்டத்தில் இருந்து மீள ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும்.
அரசின் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை ஏற்று வீட்டிலேயே இருங்கள். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் அடிக்கடி பேசுங்கள். காலையில்நேர்மறைஎண்ணங்களோடு படுக்கையில் இருந்து எழுந்திருங்கள். பிரார்த்தனை செய்யுங்கள். எல்லோருடனும் பேசிப்பேசி பயத்தை போக்கலாம். சுவாச பயிற்சியான பிராணாயாமம் செய்யுங்கள்” என்றார்
நடிகை அனுஷ்கா கூறியதுபோன்று இன்றைக்குமக்களைபயமுறுத்திவரும் ஆக்சிஜன் பற்றாக்குறையில் இருந்து விடுபடலாம் அதற்கு எல்லோரும் காலைவேளையில்” பிராணாயாமம்” எனும் மூச்சுப்பயிற்சியை தொடர்ந்து செய்துவந்தால் மூச்சுப்பிரச்சினை ஏற்பட்டு ஆக்சிஜன் தேட வேண்டிய தேவை இருக்காது என கூறியுள்ள நடிகர் சிவக்குமார் அது சம்பந்தமான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.