கில்லி, பையா, என பல படங்களில் பார்த்த அதே கதை தான். நாயகியை துரத்தும் ஒரு கும்பல். நாயகியை காப்பாற்றப் போராடும் நாயகன், இந்த இரண்டு செயல்களுக்கும் பின்னால் காரணங்கள் அடங்கிய சில பின்கதைகள். இது தவிர்த்து நாயகன் விஷாலுக்கும் வில்லன் கூட்டத்திற்குமான மற்றொரு பின்கதை அடங்கியது தான் இந்த “ரத்னம்” திரைப்படத்தின் கதை. இக்கதையில் இறுதியில் நாயகன் நாயகியை காப்பாற்றினானா…? என்று கேட்கவும் வேண்டுமா என்ன…? ஆந்திரா, தமிழ்நாடு எல்லை பிரிக்கப்பட்ட பொழுது சில தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களின் நிலம் அண்டை மாநிலங்களில் மாட்டிக் கொண்டதால் ஏற்படும் பிரச்சனைகளில் துவங்கும் கதை, திருப்பதி மலை மேல் செல்லும் பேருந்தை கவிழ்த்து கொள்ளை கொலை சம்பவங்கள் நிகழ்த்தும் கயவர்களைக் காட்டி, அப்படியே தமிழ்நாட்டிற்கு பயணித்து, அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சமுத்திரக்கனியை சிறு வயது விஷால் காப்பாற்றி…
Read MoreTag: ப்ரியா பவானி சங்கர்
இயக்குநர் ஹரியின் “குட்லக் ஸ்டுடியோஸில் புதிதாக துவங்கப்பட்ட 5.1 மிக்ஸிங்
கமர்ஷியல் சினிமாவில் தனக்கென தனி பாணி அமைத்து தனது வெற்றி படங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வரும் இயக்குநர் ஹரி, டப்பிங், படக்கோர்ப்பு (மிக்ஸிங்), மற்றும் படத்தொகுப்பு (எடிட்டிங்) உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை திரையுலகினர் சிறப்பாக மேற்கொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட குட்லக் ஸ்டுடியோஸை கடந்த வருடம் தொடங்கினார். கடந்த ஒரு வருடமாக மேற்கண்ட சேவைகளை திறம்பட வழங்கி வந்த குட்லக் ஸ்டுடியோஸ், இன்று இரண்டாம் ஆண்டுக்குள் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக, 5.1 மிக்ஸிங் மற்றும் டப்பிங் வசதி கொண்ட புதிய ஸ்டுடியோவை இயக்குநர் ஹரி தொடங்கினார். அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை குறைந்த செலவில் நிறைந்த தரத்தில் திரையுலகத்திற்கு வழங்குவதே குட் லக் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்று கூறிய இயக்குநர் ஹரி, தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும்…
Read More