ஒரு ஜாலியான பையனின் காதல் அனுபவங்கள் தான் இந்த சபாநாயகன் திரைப்படம். ச.பா.அரவிந்த் ஆன நாயகன் அசோக் செல்வனுக்கு பள்ளிகாலத்தில் ஒரு காதல், கல்லூரி காலத்தில் ஒரு காதல், சிங்கப்பூரிலிருக்கும் பெறோரைப் பார்க்கச் செல்லும் போது ஒரு காதல், எம்.பி.ஏ படிக்கும் போது ஒரு காதல் என தடுக்கி விழும் இடத்திலெல்லாம் ஒரு காதல் செய்கிறார். பார்க்கும் பெண்கள் எல்லோர் மீதும் காதலில் விழும் 2கே கிட்ஸ் கதாபாத்திரம். சிரித்துக் கொண்டே ஜாலியாக செய்திருக்கிறார். ஹீரோயின்களாக வரும் கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ் ஆகிய மூவரில் முதல் இடம் மேகாவிற்கு. வந்து செல்வது சில காட்சிகள் மட்டும் தான் என்றாலும் கூட அவர் வந்து செல்லும் காட்சிகள் க்யூட்டான கவிதைகள் போல இருப்பதால் காட்சிகளையும் அந்தக் காதலையும், அதனோடு மேகாவின் அழகையும் ரசிக்க முடிகிறது. செகண்ட்…
Read MoreTag: மைக்கேல் தங்கதுரை
சபாநாயகன் உங்கள் மன அழுத்தத்திற்கு மாமருந்தாக இருக்கும்” – அசோக் செல்வன்
அறிமுக இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன். நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன், Certified Rascals ஸ்ரீராம், போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் செல்வனின் ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். கிளியர் வாட்டர் பிக்சர்ஸ் சார்பாக அரவிந்த் ஜெயபாலன், ஐ சினிமா சார்பாக அய்யப்பன் ஞானவேல் மற்றும் கேப்டன்…
Read More