நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள நடிகை கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் முதல் பார்வை!

பூம்பாரை முருகன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’. இதில் நடிகர் ஆர் கே சுரேஷ் மாறுபட்ட வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜித், புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இதன் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரக்கூடிய கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி முதல் பார்வையை வெளியிட்டு படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளையும் கூறியுள்ளார். இக்கதையில் காவல் கட்டுபாட்டு மையம் முக்கிய பங்கு வகுக்கிறது. அது தத்ரூபமாக இருக்கவேண்டும்…

Read More

திருவிழாவிற்கு என் திரைப்படம் வெளியாவது இதுவே முதல்முறை – அருண் விஜய் உருக்கம்

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஷன் சாப்டர்1’ ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. எடிட்டர் ஆண்டனி பேசியதாவது, “படம் சூப்பராக வந்திருக்கிறது. அருண் விஜய் சாரும் சூப்பராக செய்திருக்கிறார். இண்டர்நேஷனல் தரத்தில் படம் வந்திருக்கிறது”. நடிகர் ருத்ரன், “தமிழில் இது என்னுடைய முதல் படம். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. அருண் விஜய், ஏமி ஜாக்சன் இருவரும் ஆக்‌ஷனில் பின்னியுள்ளார்கள். ஆதரவு கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி”. நடிகர் விராஜ், “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. படத்தில் வேலைப் பார்த்த நடிகர்கள் தொழில்நுட்பக் குழுவினருக்கு நன்றி”. நடிகர் பரத் கோபன்னா பேசியதாவது, “இந்தப் படம் வெளியாகும் நாளுக்காகதான்…

Read More