ஐஸ்வர்யா ராஜேஷின் மருத்துவ செவிலியர் கதையைப் பேசும் “சிஸ்டர்”

Dwarka Productions பிளேஸ் கண்ணன் – ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிப்பில், இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் உருவாகும் புதிய திரில்லர், காமெடிப்படத்திற்கு “சிஸ்டர்” எனப்பெயரிடப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்கள் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார், இயக்குநர் அருண் ராஜா காமராஜ், இயக்குநர் சாம் ஆண்டன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர் ஆண்டனி ரூபன் ஆகியோர் இப்படத்தின் மோஷன் போஸ்டரை சமூக வலைதளம் வழியே இன்று வெளியிட்டனர். கடந்த மாதம் துவங்கி, தீவிரமாகப் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது, அறிமுக இயக்குநர் ரா.சவரி முத்து, வித்தியாசமான களத்தில் கலக்கலான காமெடியுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமான படைப்பாக இப்படத்தை…

Read More

மீண்டும் இணைந்த ‘ஈரம்’ கூட்டணி

7ஜி ஃபிலிம்ஸ் சிவா தயாரிக்க, இயக்குனர் அறிவழகனின் ‘ஆல்பா ஃப்ரேம்ஸ்’ சார்பில் இணைந்து தயாரிக்கும் ஹாரர், திரில்லர் படம் ‘சப்தம்.’ தனது மேக்கிங் மற்றும் கதை சொல்லலில் அனைவரையும் ஈர்த்த, வெற்றிப்பட இயக்குனர் அறிவழகன் ஈரம் படத்திற்கு அடுத்து இயக்கி இருக்கும் ஹாரர் திரில்லர் படம் இது. இதில் இயக்குனர் அறிவழகன்,நடிகர் ஆதி, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். ஈரம் திரைப்படம் முழுவதும் மழை மற்றும் மழை சார்ந்த காட்சிகளை மையப்படுத்தி உருவானது. இதில் சிறப்பு பேய் தண்ணீரின் வழி வரும். அதுபோல், சப்தம் திரைப்படம் மலை மற்றும் குளிர் பிரதேசம் சார்ந்த பகுதிகளை மையப்படுத்தி காட்சியமைக்கப்பட்டுள்ளது. மேலும், சப்தத்தை மையப்படுத்தியும் காட்சிகளை உருவாக்கியுள்ளனர். மும்பை, மூணாறு, சென்னை உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தின் இடைவேளை மற்றும் இறுதிக்கட்ட காட்சிக்காக ரூபாய்…

Read More