நடிகர் R.K.சுரேஷ் மீது ஒரு கோடி ரூபாய் மோசடிக்குற்றசாட்டு

சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவி வீணா(45) என்பவர்  நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர், பாஜக நிர்வாகி என பன்முக தன்மை கொண்ட ஆர்.கே.சுரேஷ் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது…. என் கணவர் ராமமூர்த்தி எஸ்பிடி என்ற பெயரில் எர்த்மூவர்ஸ் நடத்தி வந்தார். தொழிலில் எற்பட்ட இழப்பைச் சரி செய்ய 2018 ஆம் ஆண்டு 10 கோடி கடன் வாங்கித் தருவதாக சென்னையில் உள்ள கமலகண்ணன் கூறினார். அதன் பேரில் திரைப்பட நடிகரான ஆர்.கே. சுரேஷை, கமலகண்ணன் எனக்கும் என் கணவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஆர்.கே.சுரேஷ் தனக்குத் தெரிந்த வங்கி மேலாளர் மூலமாக கடன் எற்பாடு செய்து தருவதாகவும் அதற்கு கமிஷனாக 1 கோடி கொடுக்கும்படியும் கூறினர். அவரை நம்பி…

Read More