ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம் :

  முழுக்க முழுக்க பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில், கதை, திரைக்கதை, கதாபாத்திர வடிவமைப்பு இப்படி எதைப் பற்றியும் பெரிதாக கவலைப்படாமல், நகைச்சுவையை மட்டுமே மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “ஆயிரம் பொற்காசுகள்”.  இப்படம் அதன் நோக்கமான நகைச்சுவையை நமக்குப் பரிசளித்திருக்கிறதா…?  இல்லையா…? என்பதை பார்ப்போம். “ஆயிரம் பொற்காசுகள்” அடங்கிய ஒரு புதையல் ஒன்று கிடைக்கிறது. அதை அரசாங்கத்திற்கு தெரியாமல் பங்கு பிரித்துக் கொள்வதற்கான போராட்டமே “ஆயிரம் பொற்காசுகள்” திரைப்படத்தின் ஒன்லைன். அந்த ஆயிரம் பொற்காசுகள் யாருக்கு கிடைக்கிறது…? எப்படி கிடைக்கிறது..? அதை ஆண்டு அனுபவிக்க நினைக்கும் மைய கதாபாத்திரங்களுக்கு எப்படி எந்த ரூபத்தில் எல்லாம் சிக்கல் வருகிறது…? பங்கு பிரிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளும், அதன் இறுதிகட்டத் தீர்வையும் இப்படத்தின் திரைக்கதை விளக்குகிறது. ஆரம்பத்திலேயே சொன்னது மாதிரி சிரிக்க வைக்க வேண்டும் என்பது…

Read More

”குய்கோ” சினிமா விமர்சனம்

தனது 30 வருட பத்திரிக்கைத் துறைப் பணி மற்றும் அனுபவத்தை தொடர்ந்து அருள் செழியன் முதன்முறையாக இயக்கி இருக்கும் திரைப்படம் “குய்கோ”. அருள் செழியன் 2016ம் ஆண்டு வெளியான ‘ஆண்டவன் கட்டளை” திரைப்படத்தின் கதாசிரியராக பணியாற்றியவர் என்பது நினைவு கூறத்தக்கது.  ’ஆண்டவன் கட்டளை’ திரைப்படம் எப்படி அனைத்து தரப்பு மக்களையும் கவரும் திரைப்படமாக இருந்ததோ அதே போன்று “குய்கோ” திரைப்படமும் ஒரு வித்தியாசமான காண்பனுவத்தைக் கொடுக்கும் படமாக அமைந்திருந்தது என்பதிலும் கண்டிப்பாக கொண்டாட்டத்திற்கான படமாக “குய்கோ” இருக்கின்றது என்பதிலும் படம் பார்த்த யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இயக்குநருக்கு பழைய தமிழ் படங்கள் என்றால்  மிகவும் பிடிக்கும் போல் தெரிகிறது. தான் கதை எழுதிய திரைப்படத்திற்கு  ஆண்டவன்  கட்டளை என்ற பெயரை அவர்தான்  சிபாரிசி செய்தாரா..? என்பது தெரியவில்லை. அல்லது அப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன…

Read More