மூன்று சம்பவங்களை ஒரே நேர் கோட்டில் இணைக்கிற கதை.திருமணம் ஆகி சில வருடங்களுக்கு பிறகு மருத்துவ சிகிச்சை மூலம் கர்ப்பமடையும் சாந்தினிக்கு அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தனது கணவர் விவேக் பிரசன்னா தந்தை இல்லை என்று ஒருவன் போனில் தொடர்பு கொண்டு சொன்னதோடு, அது தொடர்பாக அவர் செல்போனுக்கு ஒரு வீடியோவையும் அனுப்பி வைக்கிறான். வீடியோ ரகசியம் வெளியே வராமல் இருக்க ரூ.50 லட்சம் பணத்துடன் குறிப்பிட்ட இடத்துக்கு வரச் சொல்கிறான். இது ஒரு கதை. அடுத்த கதை: ஆட்டோ ஓட்டுநரின் மகளான பூர்ணிமா ரவி, காதலனால் கர்ப்பமடைந்த நேரத்தில் காதலனின் சுயரூபம் தெரியவர, அவனை அடியோடு கை கழுவுகிறாள். மூன்றாவது கதை: புதிதாக கார் திருடும் நண்பர்கள் இருவர் ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை நைசாக திருடிச் செல்கிறார்கள். போகிற…
Read More