சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் ‘தி பாய்ஸ்’ ( The Boys) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘தி பாய்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள். ‘ஹர ஹர மஹா தேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’, ‘பொய்க்கால் குதிரை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி, கதையின் நாயகர்களுள் ஒருவராக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘தி பாய்ஸ்’. இந்தத் திரைப்படத்தில் அவருடன் ‘ஜெயிலர்’ ஹர்ஷத், ‘கலக்கப்போவது யாரு’ வினோத், ஷா ரா, யுவராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அஹமத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண் மற்றும் கௌதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சாம்…

Read More

ஃபைட் க்ளப் விமர்சனம்

  வடசென்னை களம், கஞ்சா போதைப் பொருள் கடத்தல், வளர்ச்சிக்கு முயலும் இளைஞர், அவருக்கு உதவும் வடசென்னை முக்கியப் புள்ளி, துரோகம், பழிவாங்கல், கேங்க், கேங்க்வார் சண்டை இவைகளின் தொகுப்பே ஃபைட் க்ளப். வட சென்னைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அங்க அடையாளத்தில் இருந்து சற்றும் பிரளாத மற்றுமொரு தமிழ் சினிமா. வடசென்னை என்றாலே போதை கலாச்சாரம், கேங்க் வார், சண்டை, அடிதடி வம்புக்கு பயப்படாத இளைஞர்கள், கால் பந்தாட்டம், கேரம், மேற்கத்திய நடனம், நட்பு, துரோகம், பழி வாங்கல் என்று ஏற்கனவே போட்டு வைக்கப்பட்டிருக்கும் கெட்டியான எந்த மழைக்கும் எந்த நூற்றாண்டுக்கும் பெயர்ந்தே போகாத தார் சாலையில்  ஓடவிடப்பட்டிருக்கும் புதிய பேருந்து தான் “ஃபைட் க்ளப்”. எங்களை குற்றவாளிகளாகவே சித்தரிக்காதீர்கள்; பிற பகுதி மக்கள் எங்களை பார்த்தாலே பழகத் தயங்குகிறார்கள்; ஒதுங்கிப் போகிறார்கள், எங்களிடமும் வாழ்க்கை இருக்கிறது, எந்த…

Read More