நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பாடநூலில் சேர்க்க  வேண்டும் – நடிகர் சௌந்தரராஜா கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு நடிகரும், தவெக தலைவர் விஜய் -யின் ஆதரவாளரான சௌந்தரராஜாவின் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் நம்மாழ்வாரின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகள் 11 பேருக்கு நம்மாழ்வார் விருதும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கி ஊக்கபடுத்தினார்.,

முன்னதாக உசிலம்பட்டி கண்மாய் கரையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, தான் விதைத்த பனைவிதைகளில் எத்தனை பனை மரங்களாக வளர்ந்துள்ளன என மீட்டெடுக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர்.,

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சௌந்தரராஜா.,

நம்மாழ்வார் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியில் உள்ள 11 விவசாயிகளை முதற்கட்டமாக கண்டுபிடித்து விருதும், ரொக்க பணமும் எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் கொடுத்து எனது நன்றியை தெரிவித்துள்ளேன். அதை நான் பிறந்த பிறப்பிற்கு கிடைத்த மிக பெரிய அர்த்தமாக உணர்கிறேன்.,

இந்த நிகழ்வுக்கு நம்மாழ்வாரின் நண்பர், நெல் ஜெயராமனின் உறவினரும் கலந்து கொண்டனர்.,

தமிழக அரசுக்கு கோரிக்கையாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன், நம்மாழ்வார் ஐயாவிற்கு மணிமண்டபமும், நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமனின் வாழ்க்கை வரலாற்றை தமிழக பாடநூலில், ஏதாவது ஒரு பக்கத்தில் வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.,

இனிமேல் பருவநிலை மாற்றம் மிக பெரிய சவாலாக இருக்க போகிறது, ஆரோக்கியம் ரொம்ப முக்கியம், எவ்வளவு தான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்.,

மீண்டும் மீண்டும் விவசாயிகளை காக்க வேண்டியது, இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பது நமது கடமை.,

இந்த மாதிரி நேர்மையான விவசாயிகளுக்கு அவர்களை போற்ற வேண்டியதும் நமது கடமை தான்., அதை எல்லா மக்களும் செய்ய வேண்டும் அரசாங்கமும் செய்ய வேண்டும்.,

மரங்களை நட்டு வைப்பதை விட அதை பராமரிப்பு கண்டிப்பாக செய்ய வேண்டும்., நிறைய மரங்களை நட வேண்டும், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பது தான் என் தலையில் ஓடிக் கொண்டிருக்கிறது.,

11 விவசாயிகளுக்கு கொடுத்துள்ளேன், இதை வருடம் முழுவதும் கொடுக்க ஆசைப்படுகிறேன்., 55 ஆயிரம் கொடுக்கவே 15 ஆண்டுகள் ஆகிவிட்டது., பணம் மட்டும் இல்லை அவர்களை தேடி கண்டறிய வேண்டும், இதை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் சென்று விவசாயிகளுக்கு ரொக்கம் மற்றும் விருது வழங்க உள்ளேன்.,

கண்டிப்பாக பாடநூலிலும், மணிமண்டபமும் அமைக்க வேண்டும்
நம்மாழ்வாரும், நெல் ஜெயராமனையும் வரும் சந்ததியினர் படித்தால் தான் விவசாயத்தில் என்ன செய்ய வேண்டும் என தெரியும்.,

இப்போது உள்ள இளைய தலைமுறை விவசாயிகள் என்ன விவசாயத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை கூட மறந்துவிடும் நிலை உள்ளது., விவசாயத்தை சொல்லிக் கொடுக்க மணிமண்டபம் மட்டுமல்ல எல்லா பாட புத்தகத்திலும் வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

 

Related posts

Leave a Comment