சாணிக் காயிதம் படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்பு

நடிகை கீர்த்தி சுரேஷ், மூத்த நடிகை மேனகாவின் மகள். தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து தொடரி, பைரவா, ரெமோ, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘நடிகையர் திலகம்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருதை பெற்றார். இதையடுத்து ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துவிட்டார். தொடர்ந்து அருண் மாதேஷ் இயக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்து சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார் கொரோனா ஊரடங்குகாரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.தற்போது படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் தான் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ்  வித்தியாசமான கதாபாத்திரத்தில்…

Read More