பூஜையுடன் துவங்கிய ஹரீஷ் கல்யாணின் ‘தனுசு ராசி நேயர்களே’

தன்னுடைய நட்சத்திர கவர்ச்சியால் ஒவ்வொரு படத்திலும் தன் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தி வரும் ஹரீஷ் கல்யாண், ஒவ்வொரு படத்திலும் புத்துணர்ச்சியைக் கொண்டு வருகிறார். பியார் பிரேமா காதல் படத்தில் பக்கத்து வீட்டு பையன் போன்ற கதாபாத்திரம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் முரட்டு சுவாபம் கொண்ட ஒரு இளைஞர் கதாபாத்திரம் என தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார் ஹரீஷ் கல்யாண். அவரது அடுத்த படமான ‘தனுசு ராசி நேயர்களே’வும் அதன் தலைப்பு, கதைக்களம் மற்றும் அவரது கதாபாத்திரம் என எல்லாவற்றிலும் ஆச்சரியத்தை தந்திருக்கிறது.

சஞ்சய் பாரதி இயக்கும் இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். இன்று காலை எளிய சம்பிரதாய பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இதில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு கொண்டனர்.

ஹரீஷ் கல்யாண், ரெபா ஜான், ரியா சக்ரபோத்தி, நடிகர்கள் அருண் விஜய், கௌதம் கார்த்திக், மஹத், விஷ்ணு விஷால், நாசர், பாண்டியராஜ், பிரித்வி பாண்டியராஜன், டேனி, ஆர்.எஸ். சிவாஜி, ஹ்ரிஷிகேஷ், வருண், 5 ஸ்டார் கல்யாண், விஜய் ஆதிராஜ், முனீஷ்காந்த், நடிகைகள் ரேணுகா, காயத்ரி, சம்யுக்தா, சுபிக்‌ஷா, அதுல்யா ரவி, லிஸி பிரியதர்ஷன், பிந்து மாதவி, இயக்குனர்கள் பாக்யராஜ், ரஞ்சித் ஜெயக்கொடி, இளன், விருமாண்டி, செல்வா, பி வாசு, ஆதிக் ரவிச்சந்திரன், ஆர்.வி.உதயகுமார், பிரதீப், கண்ணன், சந்தான பாரதி, இசையமைப்பாளர்கள் அனிருத், ஜிப்ரான், பாடலாசிரியர் மதன் கார்க்கி, கு கார்த்திக், வசனகர்த்தா பொன் பார்த்திபன், தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், கலையரசு, பிரமோத் ஃபிலிம்ஸ் ஸ்ருதி, கலர்ஸ் அனூப், வேல்ஸ் பிலிம்ஸ் அஸ்வின் மற்றும் ரம்யா என தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் கேமராவை ஆன் செய்ய, இயக்குனர் பி.வாசு கிளாப் அடித்து துவக்கி வைத்தார். 
ஹரீஷ் கல்யாண் நடிக்கும் இந்த “தனுசு ராசி நேயர்களே” ஒரு நகைச்சுவை படம். அவரது முந்தைய திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம். ரெபா ஜான் மற்றும் ரியா சக்ரபோர்த்தி கதாநாயகிகளாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

Related posts

Leave a Comment

one × 2 =