நேற்று, கோவை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பெரியநாயகி உடனுறை கங்கை கொண்ட சோழீஸ்வரர் திருநெறிய செந்தமிழ் ஆகம திருக்குட முழக்கு நன்னீராட்டுப் பெருவிழாவில் இயக்குனர் திரு. கே. பாக்யராஜ் அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டு இறைவனின் அருளினை பெற்றதில் எண்ணற்ற மகிழ்ச்சி. பின்னர் அன்னதான நிகழ்வை துவைக்கி வைத்து வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினோம். இந்த திருக்கோவிலினை மிகச் சிறப்பாக நிறுவிய கவிஞர், நடிகர் மற்றும் இயக்குனர் திரு. பா. விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டேன்.
Read MoreCategory: Uncategorized
ராஜூ முருகன் வசனத்தில் நடிக்கும் கௌதம் கார்த்திக்!
இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் நமக்கு கதாநாயகனாக அறிமுகமான கௌதம் கார்த்திக், தொடர்ந்து தமிழில் பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பத்து தல’ மற்றும் ‘ஆகஸ்ட் 16, 1947’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது. தற்போது கௌதம் கார்த்திக் ‘கிரிமினல்’ மற்றும் ‘மிஸ்டர் எக்ஸ்’ என இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில், இப்போது இவர் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கௌதம் கார்த்திக்கின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இப்புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். எளிய மக்களின் வாழ்வியலையும் அதிகாரத்திற்கு எதிரான அரசியலையும் அழுத்தமாக பதிவு செய்யும் இயக்குநர் ராஜு முருகன் இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தினா ராகவன்…
Read More