புதிய‌ திறமைகளை கண்டறிவதற்கும், காலத்தால் அழிக்க முடியாத‌ கதைகளை சொல்லவதற்குமான ‘ஆஹா ஃபைண்ட்’ முன்முயற்சியை தொடங்கியுள்ள‌ ஆஹா தமிழ், முதல் வெளியீடு ‘பயாஸ்கோப்’

உலகளாவிய‌ தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்கள் விரும்பும் முன்னணி ஓடிடி தளமான ஆஹா, துணிச்சலான மற்றும் புதுமையான உள்ளடக்கத்தை தொடர்ந்து வழங்க உறுதிபூண்டுள்ளது. ஆஹா ஃபைண்ட் எனும் புதுமையான முன்னெடுப்பை இன்று அறிவிப்பதில் ஆஹா பெருமிதம் கொள்கிறது. புதிய‌ திறமைகளை கண்டறிவதற்கும், காலத்தால் அழிக்க முடியாத‌ கதைகளை சொல்லவதற்குமான சாளரமாக‌ ‘ஆஹா ஃபைண்ட்’ திகழும். வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் சொல்லப்படாத கதைகளுக்கு உலகளாவிய அரங்கை ‘ஆஹா ஃபைண்ட்’ முன்முயற்சியின் வாயிலாக‌ வழங்குவதன் மூலம் தமிழ் சினிமாவின் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதை ஆஹா தமிழ் நோக்கமாகக் கொண்டுள்ளது. திரைப்பட உரிமத்திற்கான நம்பகமான சந்தையான புரொடியூசர் பஜார் உடன் இணைந்து ‘ஆஹா ஃபைண்ட்’ அதன் பயணத்தை தொடங்கி உள்ளது. ஆஹா ஃபைண்ட்டின் முதல் வெளியீடான பிரபல‌ இயக்குந‌ர் சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பயாஸ்கோப்’ கிராமிய வாழ்க்கை வரலாற்று…

Read More

KVN Productions கேடி – தி டெவில் படத்திலிருந்து “சிவ சிவா” என்ற தெய்வீகமான நாட்டுப்புற பாணி வகையிலான பாடலை வெளியிட்டுள்ளது !!

KVN Productions நிறுவனம், தொலைநோக்கு படைப்பாளி பிரேம் இயக்கத்தில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா திரைப்படம் கேடி – தி டெவில் படத்திலிருந்து, “சிவ சிவா” என்ற கன்னட நாட்டுப்புற கீதத்தைப் பெருமையுடன் வெளியிட்டுள்ளது. மனதை வசீகரிக்கும் இந்தப் பாடல், கன்னட நாட்டுப்புற இசையின் துடிப்பான சாரத்தை, பாரம்பரியத்தை, கொண்டாடுகிறது. இப்பாடலைப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யாவால் இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவாளர் வில்லியம் டேவிட், காட்சிக்கு உயிரூட்டியுள்ளார். இந்தப் பாடல் இந்திய நாட்டுப்புற இசையின் கலாச்சார ஆழத்தையும் கலையின் ஆழத்தையும் எடுத்துக் காட்டுகிறது. முன்னணி பாடகர்கள் கைலாஷ் கெர் மற்றும் பிரேம் (கன்னடம்), விஜய் பிரகாஷ் (தமிழ் மற்றும் தெலுங்கு), பிரணவம் ஷஷி (மலையாளம்), மற்றும் சலீம் மாஸ்டர் (இந்தி)- ஆகியோர் பாடியுள்ளனர். ஒவ்வொரு பதிப்பும் பாடலின் ஆத்மார்த்தமான மையத்தை, அதன் மொழியியல் சாரத்தோடு பிரதிபலிக்கிறது. முன்னணி பாடலாசிரியர்கள்…

Read More