இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட பிரபலம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பான் இந்திய க்ரைம் ஆக்ஷன் என்டர்டெயினராக கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜீப்ரா. புதுமையான களத்தில், பரபர திரைக்கதையுடன் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தயாரிப்பாளர் தினேஷ் பேசியதாவது… பத்திரிகை நண்பர்களே நாங்கள் அனைவரும் தமிழ்க்காரர்கள். இந்தக்கதை இங்கு சென்னையில் தான் உருவானது. நான் முதலில் மீடியாவில் தான் வேலை பார்த்தேன். நான் முதன்முதலில் அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியில் வேலை பார்த்தேன், அடுத்தடுத்து வேலை பார்த்து, இந்தப்படம் செய்துள்ளேன். இந்தப்படத்திற்காக ஐந்து படமெடுக்குமளவு திரைக்கதையைத் தந்தார் ஈஸ்வர். அவ்வளவு ஸ்டஃப் இருக்கிறது…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
சென்னையில் நடந்த ‘புஷ்பா 2’ நிகழ்ச்சியில் தமிழை போற்றிய பான் இந்தியன் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
பாட்னாவில் நடந்த ‘புஷ்பா 2: தி ரூல்’ டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியின் மூலம் தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜூன் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் நிகழ்வை கண்டுகளித்தனர். இந்த நிகழ்வு ‘புஷ்பா’ திரைப்படம் எந்தளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. தனது நடிப்பால் மட்டுமல்லாது திறமையான நடனம் மூலமும் புஷ்பா கதாபாத்திரத்தின் மூலமும் உலகம் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் நடிகர் அல்லு அர்ஜூன். படத்திற்கான புரோமோஷன்களின் ஒரு பகுதியாக கடந்த நவம்பர் 24 அன்று ‘புஷ்பா2’ படக்குழு சென்னை வந்தடைந்தது. தாம்பரம், சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற இந்த ப்ரீ ரிலீ ஈவண்ட்தான் இப்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. படத்தை விநியோகிக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிகழ்வு நடக்கும் ஏரியா முழுவதும் ‘புஷ்பா2’ தீம்…
Read More