Dwarka Productions பிளேஸ் கண்ணன் – ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிப்பில், இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் உருவாகும் புதிய திரில்லர், காமெடிப்படத்திற்கு “சிஸ்டர்” எனப்பெயரிடப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்கள் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார், இயக்குநர் அருண் ராஜா காமராஜ், இயக்குநர் சாம் ஆண்டன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர் ஆண்டனி ரூபன் ஆகியோர் இப்படத்தின் மோஷன் போஸ்டரை சமூக வலைதளம் வழியே இன்று வெளியிட்டனர். கடந்த மாதம் துவங்கி, தீவிரமாகப் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது, அறிமுக இயக்குநர் ரா.சவரி முத்து, வித்தியாசமான களத்தில் கலக்கலான காமெடியுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமான படைப்பாக இப்படத்தை…
Read MoreMonth: January 2024
”எனக்கும் இயலுக்குமான பாசப் பிணைப்பு ரசிகர்களின் உள்ளம் தொடும்” – அருண் விஜய்
ஆக்ஷன் காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு நடிகர் அருண் விஜய் எப்போதும் பிடித்தமானவர். ஏனெனில், அவர் தனது படங்களில் வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் மூலம் ரசிகர்களைக் கவரக்கூடியவர். அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘மிஷன் சாப்டர் 1 (அச்சம் என்பது இல்லையே)’ டிரெய்லர் அவரது ஆக்ஷன் திறமையை வெளிப்படுத்தியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் விஜய் இயக்கிய இந்தப் படம் ஜனவரி 12, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் அருண் விஜய் படம் குறித்து கூறும்போது, “எனது முந்தைய படங்களில் நான் செய்த ஆக்ஷன்களை விட இந்தப் படத்தில் ஆக்ஷன் இன்னும் அதிகமாக, சிறப்பாக இருக்கும். ‘மிஷன் சாப்டர் 1’ படத்தில் பல எமோஷன் உள்ளது. பல திருப்பங்களோடு பர்வையாளர்களுக்குப் பிடித்த வகையிலான திரையங்க அனுபவத்தை இந்தப் படம் கொடுத்து உற்சாகப்படுத்தும். இந்தப் படத்தில்…
Read Moreபணக்காரர் ஆவதற்கான எளிய வழிகளைச் சொல்லும் ரமேஷ் அரவிந்தின் புத்தகம்
நேர்வழியில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதற்கான எளிய வழிகளை புத்தகம் மூலம் இளைஞர்களுக்கு சொல்லும் நடிகர் ரமேஷ் அரவிந்த் ‘அன்புடன் ரமேஷ்’ புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் பரபரப்பாக விற்பனை ஆகிறது, அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டிலும் கிடைக்கும் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என சுமார் 150 திரைப்படங்களில் நடித்தவரும் திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவருமான ரமேஷ் அரவிந்த் ஒரு ஊக்கமூட்டும் பேச்சாளர் மற்றும் எழுத்தாளரும் கூட. கர்நாடகா முழுவதும் உள்ள பெருநிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டும் பேச்சுக்கள், பயிற்சிகளை வழங்கி வரும் ரமேஷ் அரவிந்த், கல்வி, வாழ்க்கை, பணி, மற்றும் தொழிலில் வெற்றி பெறுவது குறித்த புத்தகங்களையும் எழுதி வருகிறார். இந்த வரிசையில் இவர் எழுதியுள்ள…
Read Moreஇயக்குநர் கோகுல் – விஷ்ணு விஷால் இணையும் புதிய திரைப்படம்
2022 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான கட்டா குஸ்தி படத்திற்குப் பிறகு, எங்களின் அடுத்த திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் அறிவிப்பதில் மகிழ்ச்சி. இந்த புதிய திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார் மற்றும் ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா போன்ற வெற்றிப்படங்களையும் மற்றும் விரைவில் வரவிருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தையும் இயக்கியுள்ள இயக்குநர் கோகுல் இப்படத்தை இயக்கவுள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் தற்காலிகமாக ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – புரடக்சன் நம்பர் எண் 10’ என்று அழைக்கப்படும். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் வெளிவந்த ‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், கட்டா குஸ்தி , எஃப் ஐ ஆர் போன்ற வெற்றிப் படங்களின் தொடர்ச்சியாக அடுத்து வரவுள்ள “ஆர்யன்” படமும் அதிக பொருட்செலவில், ஆக்சன் மற்றும் அசத்தலான பொழுது போக்குத் திரைப்பபடமாக…
Read More”கில்லர் சூஃப்”- அனைவரும் விரும்பி சுவைக்கக்கூடியது – மனோஜ் பாஜ்பாய்
நெட்ஃபிளிக்ஸ் உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் பொழுதுபோக்கு சேவையாகும், 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 247 மில்லியன் கட்டண உறுப்பினர்களுடன் டிவி தொடர்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் என்று உலகளவில் மக்களின் வரவேற்பு பெற்று தரமான தொகுப்புகளை வழங்கும் நெட்ஃப்ளிக்ஸில் இப்பொழுது கில்லெர் சூப் , 2024 ஆம் ஆண்டிற்கான அட்டவணையில் இணைந்துள்ளது. ரே, சொஞ்சிரியா போன்ற இந்தி திரைப்படங்களை இயக்கிய அபிஷேக் சௌபே தற்போது, “கில்லர் சூப்” என்ற இணைய தொடர் இயக்கி இருக்கிறார். இத்தொடர், மைஞ்சூர் என்ற கற்பனை நகரத்தில் நிகழும் இக்கதையில் பல காதல் சாரம்சங்களை உள்ளடக்கி விறுவிறுப்பான திருப்புமுனைகளைக் கொண்டது. சேட்டனா கௌஷிக் மற்றும் ஹனி ட்ரெஹான் தயாரித்துள்ளனர். வரும் ஜனவரி 11ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் – இல் வெளியாகிறது. இதில் மனோஜ் பாஜ்பாய், கொங்கோனா சென்ஷர்மா, நாசர், சாயாஜி ஷிண்டே, லால், அன்புதாசன்,…
Read Moreதிருவிழாவிற்கு என் திரைப்படம் வெளியாவது இதுவே முதல்முறை – அருண் விஜய் உருக்கம்
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஷன் சாப்டர்1’ ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. எடிட்டர் ஆண்டனி பேசியதாவது, “படம் சூப்பராக வந்திருக்கிறது. அருண் விஜய் சாரும் சூப்பராக செய்திருக்கிறார். இண்டர்நேஷனல் தரத்தில் படம் வந்திருக்கிறது”. நடிகர் ருத்ரன், “தமிழில் இது என்னுடைய முதல் படம். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. அருண் விஜய், ஏமி ஜாக்சன் இருவரும் ஆக்ஷனில் பின்னியுள்ளார்கள். ஆதரவு கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி”. நடிகர் விராஜ், “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. படத்தில் வேலைப் பார்த்த நடிகர்கள் தொழில்நுட்பக் குழுவினருக்கு நன்றி”. நடிகர் பரத் கோபன்னா பேசியதாவது, “இந்தப் படம் வெளியாகும் நாளுக்காகதான்…
Read Moreகொரட்டாலா சிவா – ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணியில் இரத்தம் தெறிக்கும் “தேவரா- பார்ட் 1” கிளிம்ப்ஸ்
மாஸ் ஹீரோ என்டிஆர் நடிப்பில், கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தேவரா’ படத்தின் முதல் பாகத்தின் கிளிம்ப்ஸ் சர்வதேச தரத்துடன் வெளியாகியுள்ளது! மாஸான புதிய அவதாரத்தில் நடிகர் என்டிஆர் மிரட்ட உள்ள ஆக்ஷன் டிராமா திரைப்படம் ‘தேவரா’. இந்தப் படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். சயிஃப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட இயக்குநர் கொரட்டாலா சிவா திட்டமிட்டுள்ளார். இதன் முதல் பாகமான, ‘தேவரா பார்ட்1’ உலகெங்கிலும் ஏப்ரல் 5, 2024 அன்று தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தினை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். ‘தேவரா’வின் உலகை அறிமுகப்படுத்தும் வகையிலான கிளிம்ப்ஸ் இன்று வெளியாகியுள்ளது. விஷூவல்ஸ், இசை என…
Read More“இளைஞர்களை செருப்படியில் இருந்து காப்பாற்றியது இமெயில்” ; கே.பாக்யராஜ் கூறிய புதிய தகவல்
SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திரிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், மதுராஜ், நடிகர்கள் அருள்தாஸ், நடிகை வனிதா விஜயகுமார், கோமல் சர்மா, ரத்னா, லொள்ளு சபா மனோகர், சிதம்பரம், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, முத்துக்குமார், இந்திய தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும் நிறுவனருமான சாலமன், சமூக சொற்பொழிவாளர் முகிலன், தொழிலதிபர்கள் எஸ்.ஆர் பாபு, ராஜசேகர்…
Read Moreநமது கோவையில் தமிழகத்திலே மிகப்பெரிய திரையரங்கம்
தமிழகத்திலேயே மிகப்பெரிய மிக நவீன வசதிகளுடன் கூடிய, திரையரங்கமாக பிராட்வே திரையரங்கம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. இத்திரையரங்கத்தினை பார்வையிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் இனைத் தயாரிப்பாளர் திரு செண்பகமூர்த்தி, திரையரங்கு உரிமையாளர் திரு சதீஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன திரையரங்கமாக, பிராட்வே திரையரங்கம் அமைந்துள்ளது. 9 திரைகள் கொண்ட இந்த திரையரங்கில், தமிழகத்திலேயே மிகப்பெரிய திரை அளவைக்கொண்ட, லேசர் ஸ்கிரீன் எபிக், ஐமேக்ஸ் ஸ்கிரீன் மற்றும் மிகச்சிறந்த ஒலி அமைப்பும் புதுமையான வகையில் உயர்தரத்திலான இருக்கை வசதிகளுடன் கூடிய கோல்ட் ஸ்கிரீன் அமைந்துள்ளது. இதனுடன் 6 வழக்கமான திரைகளும் அமைந்துள்ளது. ரசிகர்களும், திரைக்காதலர்களும் வியந்து பார்க்கும் வகையிலான, இந்த மல்டிப்ளெக்ஸ் பிராட்வே திரையரங்கினை பார்த்துப் பிரமித்த, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் திரு செண்பகமூர்த்தி அவர்கள்,…
Read Moreசிம்புவுடன் நடித்தே தீருவேன் – நடிகை தேவயானி ஷர்மா பிடிவாதம்!
டெல்லியை பூர்விகமாக கொண்ட நடிகை தேவயானி ஷர்மா, ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகங்களில் வலம் வருகிறார். 2021 ஆம் ஆண்டு , ரொமான்டிக் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இணை கதாநாயகியாக திரையுலகத்திற்கு அறிமுகமான இவர் பலவிதமான நாட்டிய கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அவர் கூறுகையில், ” ஹிந்தி , தெலுங்கு என்ற மொழிகளில் நான் படங்கள் பண்ணினாலும் எனக்கு தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் உள்ளது. சாதாரண கதாநாயகியாக மட்டுமில்லாமல், என் நடிப்புத் திறனை முழுவதும் செயல்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும். கீர்த்தி சுரேஷ் சாய் பல்லவி இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள், இவர்கள்தான் எனக்கு முன்னுதாரணம். வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதே ஆகும். இதற்கான முழு வீச்சில்…
Read More