நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் ‘ப்ரோகோட்- (BroCode)’

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ப்ரோகோட்- ( BroCode)’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். ‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி ‘ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் ‘ ப்ரோகோட்- (BroCode)’ எனும் திரைப்படத்தில் ரவி மோகன் கதையின் நாயகனாக நடிக்கிறார். நடிகர் எஸ். ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நான்கு முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். ‘போர் தொழில்’ படத்தில் பணியாற்றிய கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ‘அனிமல்’, ‘அர்ஜுன் ரெட்டி’ போன்ற வெற்றி பெற்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்குநராக ஏ .ராஜேஷ்…

Read More