ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நடிகராக அறிமுகமாகும் ‘எல்லம்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்தில் தனது சொந்த ஊரான வேதுருபாகாவிற்கு சென்று, அந்த ஊரின் பாரம்பரியம், உணர்வுகள் மற்றும் திருவிழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். இவை அனைத்தும், ‘எல்லம்மா’ திரைப்படத்தின் ஆன்மாவுடன் நெருக்கமாக இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஜாத்தாரா திருவிழா கொண்டாட்டங்களின் போது, ஊரில் உள்ள தனது பூர்வீக இல்லத்தில் தங்கி, கிராம மக்களுடன் அன்பாக உரையாடி, விழாவின் ஆன்மிக மற்றும் கலாச்சார உற்சாகத்தில் முழுமையாக கலந்து கொண்டார். அந்த அனுபவங்களையும், நினைவுகளையும், திருவிழாவின் கலாச்சார கொண்டாட்டத்தையும் பதிவு செய்த உணர்ச்சிப்பூர்வமான வீடியோவை அவர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியிருப்பது, “என் அப்பா பிறந்த கிராமம்…
Read MoreAuthor: reporter
Arshad Warsi recalls Vir Hirani as ‘ShortCircuit’ from Munna Bhai ahead of Pritam and Pedro release:
What began years ago with a child actor sharing screen space with Arshad Warsi has now come full circle with Pritam and Pedro. A newly unveiled visual comparing an old frame of young Vir Hirani with Arshad to the duo now standing side by side in Rajkumar Hirani’s upcoming series has instantly struck a nostalgic chord online. Titled “Lap Se Laptop Tak,” the moment perfectly captures the journey from childhood innocence to stepping into an entirely new world of chaos, comedy, and companionship together. Years Later, The Duo Returns This…
Read Moreபொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, காலம் மாறிப்போச்சு போன்ற படங்களில் நடித்த தமிழ் செல்வி கடந்த மாதம் காலமானார்!
அவரது கணவரும், தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற தலைமை சங்க தலைவருமான பிரேம்நாத், நடிகை தமிழ் செல்வியின் 30’ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு, (27.05.2026) நாளை காலை 10′ மணிக்கு, சென்னை வடபழனி, கங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற தலைமை சங்கத்தில், நடிகையும், சங்க உறுப்பினருமான தமிழ் செல்வி திருவுருவ படத்திறப்பு நிகழ்வும், அதனை தொடர்ந்து, 1000 பேருக்கு அன்னதானமும் வழங்குகிறார்! மனிதநேயம் லயன் டாக்டர் EG.சுவாமிநாதன் மற்றும் இளம் தொழிலதிபர் துபாய் மதன் ஆகியோர் தலைமையில், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, முன்னாள் எம்எல்ஏக்கள் தி.நகர் பி.சத்யா, வி.என்.ரவி, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், செந்தில்நாதன், நடிகர்கள் மன்சூர் அலிகான், ஜீவா, தாமு, கிங்காங், விஜய் கணேஷ், நாமக்கல் எம்ஜிஆர் ஆகியோர் மறைந்த நடிகை தமிழ் செல்வியின் திருவுருவ…
Read Moreடிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில் திரு கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா!
டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில் திரு கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது இயக்குனர், பாடலாசிரியர் திரு கங்கை அமரன் இசையமைப்பாளர் சதா சுதர்சனம், கண்ணன், தவசீலிதன்ராஜ், சகோ கணேசன், தயாரிப்பாளர் ரவிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்… இவ்விழாவில் திரு கங்கை அமரன் அவர்கள் பேசியதாவது… தயாரிப்பாளர் கிளாடி ஜெராடு அவர்களைப் பற்றி பேசும் பொழுது…அவரின் நல்ல எண்ணம் தான் இப்படத்தின் தொகுப்பு என்றும்… அருமையான சமூக உறவுகளை..ஏஐ தொழில்நுட்பத்துடன் நடிகர்களை நடிக்க வைத்து ஒரு கதையினை கொடுத்துள்ளார்..எங்கள் அண்ணா இசைஞானி யின் வாசிப்பில் தான் நாங்கள் பல பேர் வளர்ந்திருக்கோம்…எங்கள் குழந்தைகளை அண்ணனிடம் தான் சாரீரம் கற்று கொள்ள அனுப்புவோம்… அப்படிப்பட்ட குருக்களு டன் வளர்ந்த பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது.. இந்த…
Read Moreகிளைமாக்ஸ் முதல் கதாபாத்திரங்கள் வரை “பெத்தி” படத்தில் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது – சிவராஜ்குமார் !!
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “பெத்தி” திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள இந்த கிராமத்து ஆக்ஷன் திரைப்படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது. இந்த படத்தில் “கௌர்நாயுடு” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், இப்படத்தின் கதை தான் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது கதாபாத்திரத்திற்கு தெளிவான நோக்கம் மற்றும்…
Read Moreதிரைத்துறையினர் ஒன்று கூடிய பிரம்மாண்ட விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் பெயரில் புதிய விருது அறிவிப்பு!
2025ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான 18வது ஆண்டு எடிசன் திரைப்பட விருதுகள் 2026 விழா, நேற்று (மே 24, 2026) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. திரைப்படத் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்த நாற்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் பல்வேறு பிரிவுகளில் கௌரவிக்கப்பட்டனர். இந்த பிரம்மாண்ட விழாவில் மலேசிய துணை அமைச்சர் ராமராஜ், ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் தூதர்கள், தொழிலதிபர்கள் ஏ2பி சீனிவாசன், லீமா ரோஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் புதிய விருது பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. எடிசன் விருதுகளின் சேர்மன்…
Read Moreசைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்” ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது!!
Asia Iconic Studios சார்பில் ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன் மற்றும் வினோத் கண்ணன், இணை தயாரிப்பாளர்- ஹரிஹரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட களத்தில் சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்” திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி சிவானி ஸ்டுடியோ நிறுவனம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை வந்த திரில்லர் படங்களிலிருந்து மாறுபட்டு, அம்மாவுக்கும் இரட்டை பெண் குழந்தைகளுக்குமான அன்பும் உறவும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு விபத்தில் தந்தை உயிரிழக்கிறார். அதில் தாயின் முகமும் கடுமையாக சேதமடைகிறது. பிளாஸ்டிக் சர்ஜரிக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பும் தாயின் விநோதமான நடத்தைகள், அவரது இரட்டை பெண் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்க தொடங்குகிறது. இதன் பின்னர் அவர்கள் அந்த மர்மங்களை ஆராய ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் திகில் சம்பவங்களே இப்படத்தின்…
Read Moreகார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்
தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் பல்துறை திறமைகள் கொண்ட நடிகர்களில் ஒருவரான கார்த்தி, தயாரிப்பாளர் சூர்யதேவரா நாக வம்சி தலைமையிலான பிரபலமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை திறமையான இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்க, நடிகை மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். #Karthi30 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு வேகமாக முன்னேறி வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் தீவிரமாக படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வாத்தி, லக்கி பாஸ்கர், விஸ்வநாத் & சன்ஸ் ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மீண்டும் ஒரு பிரமாண்டமான படைப்புடன் வருகிறது. தொழில்துறை வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் ஏற்கெனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் கூட்டணி பெரும்…
Read Moreதுல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் #DQ41 படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது!!
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ரவி நேலகுதிடி, சுதாகர் செருகூரி, எஸ்எல்வி சினிமாஸ் ( SLV Cinemas ) தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான #DQ41, #SLV10 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்தது. கவர்ச்சிகரமான படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது ! பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தற்போது தனது புதிய திரைப்படமான #DQ41 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்குகிறார். வெற்றி தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தலைமையிலான எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரைப்படம், அந்த நிறுவனத்தின் 10வது தயாரிப்பாக #SLV10 என உருவாகி வருகிறது. தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மனித உணர்வுகளும் காதலும் கலந்த இனிமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது. பனிமூட்டம் சூழ்ந்த…
Read Moreவாரண்ட் – இணையத் தொடர் விமர்சனம்
கதை… பாலாஜி சக்திவேல் ரிட்டையர்டு ஆசிரியர்.. இவரது மகன் பிரசாந்த் பாண்டியராஜ்.. தன்னைப் போலவே தன் ஒரே மகனும் அரசு அதிகாரியாக வேண்டும் ஆசைப்பட்டு அனைத்து தேர்வுகளையும் எழுத சொல்கிறார்.. ஆனால் எல்லாம் தேர்வுகளும் தோல்வியில் முடிகிறது.. ஒரு கட்டத்தில் தன் உறவினர் போலீஸ் காளி வெங்கட் மூலம் பிரசாந்துக்கு காவல்துறையில் வேலை கிடைக்கிறது.. சிபாரிசு மூலம் வேலை கிடைத்ததால் வேலையில் கொஞ்சம் அலட்சியமாக இருக்கிறார் பிரசாந்த்.. இதனால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்.. ஒரு கைதி இவரது அலட்சியத்தால் தப்பி செல்கிறார்.. இதனால் காவல்துறையில் உயர் அதிகாரிகளின் அலட்சியத்துக்கு ஆளாகிறார்.. இதனால் ஒரு எடுப்பிடியாகவே இவரை நடத்துகின்றனர்.. ஒரு கட்டத்தில் போலீஸ் வேலையை வேண்டாம் என்று நினைக்கிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது.? போலீஸ் வேலையை விட்டு சென்றாரா அல்லது காவல் துறையில் சாதித்து காட்டினாரா? என்பதெல்லாம்…
Read More