கதை… தனது மனைவி அபிராமி.. மகள் ப்ரீத்தி.. தம்பி விவேக் பிரசன்னா ஆகியோருடன் நடுத்தர குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் கராத்தே மாஸ்டர் அர்ஜுன்… சிறுவயது முதலே தன் மகளுக்கு கராத்தே கற்றுக் கொடுத்து அநியாயத்தை தட்டிக் கேட்கும் மனப்பக்குவம் என்றும் வேண்டும் என தைரியப் பெண்ணாக வளர்த்து வருகிறார்.. இதனால் அடிக்கடி பல அடிதடி பிரச்சனைகளை வீட்டுக்கு கொண்டு வருகிறார் ப்ரீத்தி.. இதனால் கோபமடைகிறார் அபிராமி.. பெண்ணுக்கு வரன் பார்க்கும் நேரத்தில் இதுபோல பிரச்சனைகளை கொண்டு வந்தால் மகனின் வாழ்க்கை பாதிக்கப்படும் என எண்ணுகிறார்.. இந்த சூழ்நிலையில் வில்லன் ஜான் கொக்கேன் மூலம் இவரது குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை வருகிறது.. ஆனால் அதை எதிர்க்க வேண்டிய கட்டாயம் அர்ஜுன் குடும்பத்திற்கு வரவே அந்த குடும்பம் என்ன செய்தது.? பெரிய ரவுடி கும்பலை இவர்களால் எதிர்த்து போராட…
Read MoreAuthor: reporter
இந்திய கிராமங்களின் ஆன்மாவை கொண்டாடும் படம் “பெத்தி” – ராம் சரண் !!
இந்திய கிராமங்களின் திறமைகளையும், உண்மையான இந்திய ஆன்மாவையும் மிகப்பெரிய திரையில் கொண்டாடும் படம் தான் ‘பெத்தி’ – டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில் ராம் சரண் பேச்சு மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள கிராமத்து விளையாட்டு பின்னணியிலான பிரம்மாண்ட திரைப்படம் ‘பெத்தி’ நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், சமீபத்தில் வெளியான டிரெய்லர், ஒரு கிராஸ் ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை வலுவாக வெளிப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இப்படத்தில்…
Read Moreலைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், சுபாஸ்கரன் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள், திரைத்துறையினர் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டீசர் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று, படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவன தலைவர் ஜி.கே.எம். தமிழ்குமரன் பகிர்ந்து கொண்டதாவது, “‘சிக்மா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஜூலை 31 என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று…
Read Moreகரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்
தெளிவான திட்டமிடலுடன் ஒரே வருடத்தில் 100க்கும் மேற்பட்ட ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ டிராமாக்கள் வெளியிட்டு, அதை மக்கள் வெறும் ரூ. 20 செலுத்தி கண்டுகளிக்கும் வசதியை ஏற்படுத்துவது மற்றும் இந்தப் புதிய தலைமுறைக் கதையாடலுக்கான எழுத்துத் திறனையும், வெர்டிக்கலுக்கான பிரத்யேக தொழில்நுட்ப வல்லமையையும் வளர்க்கும் “கதை கிளப்”, என வேகமாக வளர்ந்து வரும் மொபைல் பொழுதுபோக்கு துறையில் நுழைகிறது கதைஷார்ட்ஸ் சென்னை, மே 29, 2026: வேகமாக மாறிவரும் பொழுதுபோக்குத் தேவைகளை கருத்தில் கொண்டு, கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) எனும் தமிழ் நாட்டின் முதல் – ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ-டிராமா தளத்தை கரண் தயாநிதி மாறன் இன்று அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கான மொபைல் பொழுதுபோக்கு உலகில் தனது புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். ‘குட்டி சீரிஸ்’ என்ற பெயரில் மொபைல் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு…
Read Moreசூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது !!
சூர்யா மற்றும் வெங்கி அட்லூரி ( Venky Atluri) கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது. பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும் சாயி சௌஜன்யா தயாரித்துள்ளனர். டீசர் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக, சூர்யா ஒரு குழந்தையுடன் இடம்பெற்றிருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர் சூர்யாவின் பழைய வசீகரமிக்க நடிப்பு பாணியை மீண்டும் நினைவூட்டியதுடன் குடும்ப ரசிகர்களிடையே உடனடி வரவேற்பைப் பெற்றது. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து இயக்குநர் வெங்கி…
Read More“தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது!!
ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்சன் கலந்த பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகும் “தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு நேற்று (மே 26) இனிதே துவங்கியுள்ளது. தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், சரியாக மூன்று மாதங்களுக்குள் அனைத்து திட்டமிடல்களும் நிறைவு செய்யப்பட்டு இன்று படப்பிடிப்பு துவங்கியுள்ளது. திரைப்பட உலகில் இத்தகைய துல்லியமான திட்டமிடல் படக்குழுவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு துவக்க நிகழ்வில் இயக்குநர் வெங்கட் பிரபு கிளாப் அடிக்க, இயக்குநர் பொன்ராம் கேமராவை ஆன் செய்து படக்குழுவை வாழ்த்தினார். ஆன்மீக சூழலில் நடைபெற்ற இந்த தொடக்க விழா படக்குழுவிற்கு சிறப்பான தொடக்கமாக அமைந்தது. மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப்…
Read Moreடபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!
அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட ரொமாண்டிக் ஃபேண்டஸி படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளை தாண்டி ஒரு புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ், இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘கட்சி செரா’ பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார். மேலும், ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் வினோத் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.டி.வி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள…
Read Moreரைனோ பிக்சர்ஸ் தயாரிப்பில், தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை வழங்கும் நோக்கத்துடன் புதிய முயற்சியில் களம் இறங்குகிறார் தயாரிப்பாளர் திரு.ஆர்.ராகேஷ் .
இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் ப்ரொடக்ஷன் நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசராக பணியாற்றியுள்ள இவர், கபாலி , காலா , பைசன் போன்ற பிரம்மாண்ட வெற்றி திரைப்படங்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவின் உள்ளார்ந்த படைப்புத் தன்மையையும், தரமான உள்ளடக்கத்தின் அவசியத்தையும் நன்கு புரிந்துள்ள திரு. ஆர். ராகேஷ் அவர்கள், தற்போது தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை மிகப்பெரிய கனவுகளுடன் தொடங்கியுள்ளார், அவரது தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கிறார். இயல்பான நடிப்பாலும், கதைத்தேர்விலும் தனித்துவத்தை நிரூபித்துள்ள மணிகண்டன், தொடர்ந்து தரமான வெற்றி திரைப்படங்களை வழங்கி வரும் நிலையில், இந்த புதிய கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, குட் நைட் , குடும்பஸ்தான்,போன்ற வெற்றி படங்களின் வரிசையில் இணையும் வகையில், இந்த திரைப்படமும் உணர்வுகள், வலுவான கதைக்களம், நவீன திரைக்கதை…
Read More‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனலின் பிரம்மாண்டமான பீரியட் டிராமாவாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்ற ‘யாத்திசை’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஜே. கமலகண்ணன் தயாரித்திருக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார், இந்திய தேசிய இராணுவ (INA) அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படக்குழுவின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இப்படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரதிபலித்துள்ளது. இயக்குநரின் பிரம்மாண்டமான கதையை திரையில் உயிர்ப்பிக்க, அனைத்து துறைகளும் இணைந்து கடினமாக பணியாற்றியுள்ளன. சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி,…
Read Moreலெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது
உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த ஏப்ரல் 3ம் தேதி வெளியான லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு பெரும் வெற்றி பெற்று இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது. ஆர்.எஸ். துரை செந்தில்குமாரின் விறுவிறுப்பான எழுத்து மற்றும் பரபரப்பான இயக்கத்தில் உருவான இப்படத்தில் லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக் காட்சிகளும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பாராட்டுகளை பெற்றது. ‘லீடர்’ திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்று பலதரப்பட்ட ரசிகர்களும் ஆர்வமுடன் கேட்டு வந்த நிலையில் இது குறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மே 29 அன்று அமேசான் பிரைம் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘லீடர்’ திரைப்படம் வெளியாகிறது. திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது போன்றே ஓடிடியிலும் இப்படம் ரசிகர்களால் வரவேற்கப்படும் என்று…
Read More