“இதயம் முரளி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் கடந்த  ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம்பெரும் பாராட்டுக்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தைஉலகமெங்கும் வெளியிட்டது. இப்படத்தின் பெரும் வரவேற்பைப் தொடர்ந்து   படக்குழுபத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில் சின்னி ஜெயந்த் பேசியதாவது.., “முதலில் இந்தப் படத்தின் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்குநன்றி சொல்ல வேண்டும். இன்றைய தலைமுறையில் பலரும் பழைய நினைவுகளை மறந்துவிடுகிறார்கள். ஆனால் அந்த பழைய உணர்வுகளையும் நினைவுகளையும் அழகாக மீட்டெடுத்து திரையில் கொண்டு வந்த பெருமை இயக்குநர் ஆகாஷ்பாஸ்கரனுக்கே சேரும். அதர்வாவுடன் இது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். அவரது தந்தை முரளியுடன் இணைந்து…

Read More

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத முத்திரையைப் பதித்துள்ள கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம், தனது 46-வது ஆண்டைப் பெருமையுடன் கொண்டாடி வருகிறது. அந்த மகத்தான திரைப்பயணத்தில் மேலும் ஒரு பெருமைமிகு அத்தியாயமாக ‘அமரன்’ திரைப்படம் இடம்பிடித்துள்ளது. கமல்ஹாசன் வழங்கியுள்ள இப்படத்தை கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். வலுவான கதைகளையும், திறமையான படைப்பாளிகளையும் மிகப் பெரிய திரை அனுபவமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவர்களின் உறுதியின் அடையாளமாக ‘அமரன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோரின் அர்ப்பணிப்புமிக்க நடிப்பு, கதையின் உணர்வுகளையும், உண்மைத்தன்மையையும் சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது, 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘அமரன்’…

Read More

மூன்று தலைமுறைகள்… ஏழு தசாப்தங்கள்… தேசிய அங்கீகாரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரே ஒரு மகத்தான பாரம்பரியம்!

72-வது தேசிய திரைப்பட விருதுகளில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது சிறப்புமிக்க பயணத்தில் மேலும் ஒரு பொற்கால அத்தியாயத்தை பதிவு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படம் என்ற தேசிய விருதையும், இப்படத்தில் தனது ஆழமான மற்றும் சக்திவாய்ந்த நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ், சிறப்பு பாராட்டு (Special Mention) விருதையும் பெற்றிருப்பது படக்குழுவினருக்கும், சத்யஜோதி பிலிம்ஸுக்கும் பெருமை சேர்த்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸுக்கு இந்த தேசிய அங்கீகாரம் வெறும் விருதாக மட்டுமல்ல; ஏழு தசாப்தங்களாக, மூன்று தலைமுறைகள் தொடர்ந்து அர்த்தமுள்ள கதைகள், கலைநயம் மிக்க படைப்புகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய திரைப்படங்களை உருவாக்கி வந்த பாரம்பரியத்திற்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும். இந்த மகத்தான பயணத்தின் தொடக்கம் 1950-களின் இறுதியில் வீனஸ் டி. கோவிந்தராஜன் அவர்களால் தயாரிக்கப்பட்ட…

Read More

உலகளாவிய டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்னதாக, புது டெல்லியில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் அறிமுகம்1

புது டெல்லி, 18 ஜூலை 2026:* இந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார பாரம்பரியத்தை உலக அரங்கில் பகிர்ந்து கொள்ளும் முக்கியமான தருணம். ராமாயணம் என்பது இதிகாச நூல் மட்டுமல்ல! நமது திருவிழாக்கள், வாழ்க்கை நெறிகள் மற்றும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் கதைகளின் அங்கமாக இருந்து வருகிறது. இந்தியா மற்றும் உலகெங்கும் வாழும் இந்தியர்களின் அன்றாட வாழ்விலும் அது பிரதிபலிக்கிறது. இப்போது, அந்தப் பயணம் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. ஜூலை 24 ஆம் தேதி உலகம் முழுவதும் டிரெய்லர் வெளியாகவுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே, ‘ராமாயணம்’ திரைப்படத்தின் பிரத்யேக முதல் அறிமுக நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. ‘ராமாயணம் – பாரதத்திலிருந்து உலகம் வரை’ என்பதை உணர்த்தும் வகையில், இந்த நிகழ்வு ‘பிரதம் சங்கல்ப்’ எனும் பெயரில் நடைபெற்றது. இந்திய பாரம்பரியத்தில் ‘சங்கல்ப்’ என்பது மகத்தான முயற்சியைத் தொடங்குவதற்கு முன் மனப்பூர்வமாக…

Read More

முதல்வர் விஜய்க்கு மக்களும் அரசியல் கட்சிகளும் உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் – இயக்குநர் A.J. பாலகிருஷ்ணன்!

காமராஜர் ஆவணப்படம் மற்றும் திருக்குறள் இரண்டாம் பாகத்தின் மாதிரி காட்சி வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் சமூகத்தின் முக்கிய ஆளுமைகள், மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் A.J. பாலகிருஷ்ணன், காமராஜர் திரைப்படத்தை அரசுடமையாக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியதுடன், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் தனது கருத்துகளை பகிர்ந்தார். இயக்குநர் A.J. பாலகிருஷ்ணன் பேசியதாவது.., , “அனைவருக்கும் மாலை வணக்கம். பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளில் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கும் வாய்ப்பு கிடைத்ததை என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். நான் நெல்லை மாவட்டத்திலிருந்து சென்னை வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, 1994-ல் பெருந்தலைவர் காமராஜரின் உதவியாளர் வைரவன் அவர்களைச் சந்தித்தேன். காமராஜரின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்க…

Read More

தேசிய விருது ஜூரியாக கலா மாஸ்டர், இயக்குநர் And இ.வி.கணேஷ்பாபு பங்கேற்பு

72nd National Film awards 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அளவில் சில முக்கிய ஆளுமைகள் ஜூரியாக செயல்பட்டு தேசிய விருதுக்கான படைப்புகளை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதில் தமிழகத்திலிருந்து முழு நீள திரைப்படங்களுக்கான பிரிவில் (feature film) கலா மாஸ்டர் பங்கேற்றார் Non feature film – குறும்படங்கள்,ஆவணப் படங்கள்,அனிமேஷன் ஆகிய பிரிவுக்கு இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு அவர்களும் தமிழ்நாட்டில் இருந்து சென்று ஜூரியாக செயல்பட்டு இருக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற படைப்புகளுக்கான விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. பல மாநிலங்களில் இருந்து பல மொழிகளில் உருவாக்கப்பட்ட படைப்புகளுக்கான தேசிய விருதை பிரம்மாண்டமான விழாவில் ஆண்டுதோறும் இந்திய குடியரசுத் தலைவர் வழங்கி வருகிறார் என்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக திரையுலகில் கொண்டாடப்படுகிறது

Read More

தேசிய விருது ஜூரியாக கலா மாஸ்டர், இயக்குநர் And இ.வி.கணேஷ்பாபு பங்கேற்பு

72nd National Film awards 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அளவில் சில முக்கிய ஆளுமைகள் ஜூரியாக செயல்பட்டு தேசிய விருதுக்கான படைப்புகளை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதில் தமிழகத்திலிருந்து முழு நீள திரைப்படங்களுக்கான பிரிவில் (feature film) கலா மாஸ்டர் பங்கேற்றார் Non feature film – குறும்படங்கள்,ஆவணப் படங்கள்,அனிமேஷன் ஆகிய பிரிவுக்கு இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு அவர்களும் தமிழ்நாட்டில் இருந்து சென்று ஜூரியாக செயல்பட்டு இருக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற படைப்புகளுக்கான விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. பல மாநிலங்களில் இருந்து பல மொழிகளில் உருவாக்கப்பட்ட படைப்புகளுக்கான தேசிய விருதை பிரம்மாண்டமான விழாவில் ஆண்டுதோறும் இந்திய குடியரசுத் தலைவர் வழங்கி வருகிறார் என்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக திரையுலகில் கொண்டாடப்படுகிறது

Read More

முழுக்க முழுக்க AI தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “அவிரா “

வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் ஏராளமான கண்டுபிடிப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன அந்த வகையில் AI என்ற (Artificial intelligence ) தற்போது உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே, திரைப்படம் துறையிலும் AI தொழில்நுட்பம் அடியெடுத்து வைக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி உருவாகி வரும் முழு நீள திரைப்படம் ” அவிரா “ சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய பிரபாகரன். இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏஐ தொழில்நுட்பத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை லைட் ஹவுஸ் ஃபில்ம் கம்பெனி தயாரிக்கிறது. முழுக்க முழுக்க Photo Realistic A I தொழில்நுட்பம் மூலம் முழு நீளப்படத்தையும் தயாரித்திருப்பது இந்தியாவிலேயே இது தான் முதன்முறை என்ற பெருமை இயக்குனர் பிரபாகரனையே சேரும்.…

Read More

காஜல் அகர்வால் இடம்பெறும் நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் சக்திவாய்ந்த பாடல் !

ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel)  தற்போது வெளியாகியுள்ளது. நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தளராத மன உறுதியை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் இந்தப் பாடல், படத்தின் உணர்ச்சி மையமாக அமைந்துள்ளது. பாடகி ரிச்சா ஷர்மா மனதை வருடும் வகையில் பாடியுள்ள இந்த பாடலுக்கு மங்கேஷ் தகாடே இசையமைத்துள்ளார். வரிகளை ஷகீல் அசாமி எழுதியுள்ளார். காஜல் அகர்வால் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘து சல்’, மிகப்பெரிய சவால்களையும், உணர்வுபூர்வமான போராட்டங்களையும் எதிர்கொண்டாலும் ஒருபோதும் சரணடைய மறுக்கும் ஒரு பெண்ணின் உறுதியான பயணத்தை பிரதிபலிக்கிறது. சக்திவாய்ந்த காட்சிகளும், ஆழமான வரிகளும் இணைந்து, ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் மீண்டும் எழுந்து நிற்கும் துணிச்சலை கொண்டாடுகிறது. எவ்வளவு கடினமான பாதையாக இருந்தாலும், தொடர்ந்து முன்னேறுவதே உண்மையான…

Read More

‘ஹபீபி’ வெற்றிக்குப் பிறகு இரண்டு புதிய படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமான இளம் நடிகர் ஈசா – தனது திரைப்பயணம், வெற்றி மற்றும் எதிர்காலம் குறித்து மனம் திறக்கிறார்

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். ஆனால் முதல் படத்திலேயே சிறந்த கதை, வலுவான கதாபாத்திரம், திறமையான இயக்குநர், ரசிகர்களின் வரவேற்பு, விமர்சகர்களின் பாராட்டு என அனைத்தும் ஒருசேர கிடைப்பது மிகவும் அரிது. அந்த அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஹபீபி’ திரைப்படத்தின் கதாநாயகன் ஈசா. மதுரையைச் சேர்ந்த ஈசா, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பயின்று வரும் மாணவர். அதேநேரத்தில் தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களையும் பரிசுகளையும் வென்ற விளையாட்டு வீரரும் ஆவார். விளையாட்டின் மூலம் பெற்ற ஒழுக்கம், விடாமுயற்சி, கட்டுப்பாடு ஆகியவற்றையே சினிமாவிலும் தனது பலமாக மாற்றிக் கொண்டுள்ளார். திரைப்படத் துறையில் தனது பயணத்தை தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம் பாவா இயக்கத்தில், நடிகர் அமீர் நடித்த ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தில்…

Read More