“விஸ்வநாத் & சன்ஸ்” முதல் சிங்கிள் “பட்டாம்பூச்சி” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது !

தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ள கூட்டணிகளில் ஒன்றான, சூர்யா நடிப்பிலும் வெங்கி அட்லூரி இயக்கத்திலும் உருவாகியுள்ள “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம், 2026 ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிளான “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” பாடலை படக்குழு வெளியிட்டது. இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் முறை கேட்கும்போதே மனதை கவரும் இனிமையான மெட்டும் புத்துணர்ச்சியூட்டும் உணர்வும் கொண்ட இந்தப் பாடல், இந்த சீசனின் மிகவும் நம்பிக்கைக்குரிய இசை வெளியீடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஆரம்பகட்ட வரவேற்பைப் பார்க்கும்போது, வரும் நாட்களில் இசை ரசிகர்களின் மிகப்பெரிய விருப்பப் பாடலாக இது உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெலடி பாடல்களை சிறப்பாக உருவாக்குவதில் ஜி.வி. பிரகாஷ் குமார் எப்போதும் தவறுவதே இல்லை.…

Read More

தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியின் #D55 “ஓம்” பட தலைப்பு அறிவிப்பு விழா, கோலாகலமாக நடைபெற்றது!

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் #D55 திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்திற்கு “ஓம்” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. R Take Studios மற்றும் Wunderbar Films நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படைப்பாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் Wunderbar Films சார்பில் ஷ்ரேயாஸ் பேசியதாவது.., “முதலில் இயக்குநருக்கும் தனுஷ் சாருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் உங்களிடம் நன்றிக்கடன்பட்டவனாக இருக்கிறேன், சார். இந்த திரைப்படம் திரையுலகில் உருவாகும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாகும். என் திரைப்பயணத்தில்…

Read More

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வழங்கும், அறிமுக இயக்குநர் அசோக் இயக்கத்தில், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக இணைந்துள்ளார்

சிறந்த திரைப்படங்கள் அனைத்தும் துணிச்சலான முடிவில் இருந்துதான் தொடங்குகிறது. உலகம் அங்கீகரிப்பதற்கு முன்பே ஒரு தயாரிப்பாளர் புதிய திறமையாளர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். தமிழ் சினிமாவில் காதல், சுப்ரமணியபுரம் மற்றும் பீட்சா முதல் மாபெரும் சாதனை படைத்த பாகுபலி: தி பிகினிங், கே.ஜி.எஃப்: சாப்டர் 1 மற்றும் காந்தாரா வரை பல மறக்க முடியாத திரைப்படங்கள் புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக அளவிலும் ராக்கி, தி பிளேர் விட்ச் புராஜெக்ட் மற்றும் கெட் அவுட் போன்ற திரைப்படங்கள் புதிய திறமையாளர்கள் மீதான நம்பிக்கை சினிமா வரலாற்றை உருவாக்கும் என்பதை நிரூபித்தன. அந்த வரிசையில், சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ், வெங்கட் கே நாராயணாவின் கேவிஎன் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து புதிய சுவாரஸ்யமான கதைக்களங்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தி வெற்றி பெற்று இந்திய சினிமாவில் தனியிடத்தைப்…

Read More

விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

சம்கிராந்தி 2027-ஐ குறிவைத்து ஒரு அதிரடி கூட்டணி உருவாகியுள்ளது. விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம் மற்றும் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி இணையும் முழுநீள கொண்டாட்ட பொழுதுபோக்கு திரைப்படமான #VenkyAnil5 & #NkrAR2 தற்போது உருவாகி வருகிறது. ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாஹு கரபாட்டி தயாரிக்கும் இந்தப் படத்தை, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், சுமதி. அர்ச்சனா மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் வழங்குகின்றன. கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். படத்தின் பிரம்மாண்டமான முஹூர்த்த விழா மற்றும் பூஜை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் பல சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர், இயக்குநர் அனில் ரவிபுடி மற்றும் தயாரிப்பாளர் சாஹு கரபாட்டியிடம் திரைக்கதையை வழங்கி நிகழ்வை தொடங்கி வைத்தனர். முஹூர்த்த காட்சிக்காக, விக்டரி வெங்கடேஷ்,…

Read More

Samantha Ruth Prabhu-Backed ZOY Redefines Menstrual Health and Cycle Wellness

ZOY Is Building the Future of Menstrual Care While Driving Awareness Around Cycle Wellness Beyond Periods: ZOY Is Reimagining Menstrual Care Through Thoughtful Innovation and Holistic Wellbeing Link to campaign film: https://youtube.com/shorts/afcrAddFD6s?si=CwBEc8TbGkrNq4uU As conversations around women’s health continue to evolve, a new category is beginning to emerge Cycle Wellness. While menstrual care has traditionally focused on managing periods, cycle wellness encourages women to better understand the different phases of their cycle, hormonal fluctuations, energy levels, emotional wellbeing and overall health throughout the month. ZOY, the feminine and menstrual healthcare brand…

Read More

திரைப்பட உரிமை தொடர்பாக ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ‘திரிஷ்யம் 3’ மலையாளத் திரைப்படத்தின் பிரத்யேக தெலுங்கு உரிமைகளின் முழு மற்றும் ஒரே உரிமையாளரான, ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை சமீபத்தில் தொடங்கியது. ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமைகளின் மீதான தனது பிரத்யேக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த மனுவில், ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் எம்.ஜே. ஆண்டனி, இயக்குநர் ஜீத்து ஜோசப், பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் ஆகியோரோ அல்லது அவர்களின் முகவர்கள், ஊழியர்கள், உரிமை பெற்றவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களோ, ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தை தெலுங்கு மொழியில் உலகெங்கிலும் எந்த முறையிலும் மறுஆக்கம் செய்யவோ,…

Read More

*’திரிஷ்யம் 3′ தெலுங்கு ஓடிடி வெளியீட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை*

மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ‘திரிஷ்யம் 3’ மலையாளத் திரைப்படத்தின் பிரத்யேக தெலுங்கு உரிமைகளின் முழு மற்றும் ஒரே உரிமையாளரான, ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை சமீபத்தில் தொடங்கியது. ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமைகளின் மீதான தனது பிரத்யேக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த மனுவில், ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் எம்.ஜே. ஆண்டனி, இயக்குநர் ஜீத்து ஜோசப், பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் ஆகியோரோ அல்லது அவர்களின் முகவர்கள், ஊழியர்கள், உரிமை பெற்றவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களோ, ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தை தெலுங்கு மொழியில் உலகெங்கிலும் எந்த முறையிலும் மறுஆக்கம் செய்யவோ,…

Read More

*‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !*

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios), நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் (Era Entertainment) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம், வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வண்ணமயமான மற்றும் கவனம் ஈர்க்கும் புதிய போஸ்டரின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே வெளியாகிய ஒவ்வொரு அப்டேட்டின் மூலமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வந்த ‘அன்பே டயானா’, திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது. போஸ்டரில் மணமக்கள் கோலத்தில் கதாநாயகன் பாரி இளவழகன் மற்றும் கதாநாயகி ரம்யா ரங்கநாதன் காரின் மீது அமர்ந்திருக்க, அவர்களைச் சுற்றி குடும்பத்தினரும் நண்பர்களும் மகிழ்ச்சியுடன் நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.…

Read More

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

டிரைடன்ட் ஆர்ட்ஸ் R. Ravindran மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் நடிகர் சனந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா டி , வாட்ஸப் மணி , டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை துரைராஜ் கவனித்திருக்கிறார். ஜூன் 26ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் கலந்து கொண்டனர். பாடலாசிரியர் சாரதி பேசுகையில், ” ‘அயோத்தி’ படத்திற்குப் பிறகு…

Read More

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

பான் இந்தியா என்ற டெர்ம் உருவாவதற்கு முன்பே, நடிகர் அல்லு அர்ஜுன் நாடு முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். அவரது திரைப்படங்கள், பாடல்கள், நடன அசைவுகள் மற்றும் தனித்துவமான திரையிருப்பு ஆகியவை மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இதற்கு சமீபத்திய உதாரணமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பதிவுகளில் ஒன்றில் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்தியுள்ளதை சொல்லலாம். இது வெறுமனே கிரியேட்டிவ் தேர்வாக மட்டுமல்லாமல், இன்று அல்லு அர்ஜுன் பெற்றிருக்கும் பிரபலத்தையும் கலாச்சார முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. ‘AA23’ திரைப்படம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிலையிலேயே அதன் தீம் இசை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் வெளியாகாத ஒரு படத்தின் இசையும் களமும் தேசிய அளவில் கவனத்தை ஈர்ப்பது என்பது மிகச் சில நடிகர்களுக்கே நடக்கும். அல்லு…

Read More