2019 ஆம் ஆண்டில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான தி லயன் கிங் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்த வெற்றியை குறிவைத்து வெளியாகி இருக்கும் படம், ‘முபாசா தி லயன் கிங்.’ பபூன் குரங்கான ரபீக் சிம்பாவின் மகளிடம் சொல்லும் பிளாஷ்பேக்குடன் படம் தொடங்குகிறது. சிறுவயதில் தங்கள் பூர்வீக இடத்தை விட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் ஒபாசா வேறொரு சிங்கஆளுகை இருக்கும் காட்டுக்குள் வந்து சேர்கிறது. ஆனால் அந்த சிங்கக் கூட்டத்தின் தலைவனான முபாசி, இடம் பெயர்ந்து வந்த இந்த குட்டி சிங்கத்தை ஏற்க மறுக்கிறது. இதற்குள் முபாசியின் மகன் டாக்காவின் அன்பை பெற்று விட்ட படியால் பெண் சிங்கங்கள் கூட்டத்தில் தங்கிக் கொள்ள அனுமதி கிடைக்கிறது. இந்நிலையில் எதிர்பாராமல் நடந்த ஒரு சண்டையில் வெள்ளை நிற சிங்கக் கூட்டத்தை சேர்ந்த ஒரு குட்டி சிங்கத்தை முபாசா கொன்று…
Read MoreAuthor: reporter
UI (உய்) – திரை விமர்சனம்
உலகளாவிய நுண்ணறிவு என்ற பொருள் படும் யுனிவர்சல் இன்டெலிஜென்ஸ் என்பதன் சுருக்கமே இந்த ui. கன்னட திரை உலகின் முன்னணி நடிகர் உபேந்திரா எழுதி இயக்கியதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார். அதுவும் இரட்டை வேடத்தில். படத்திலும் அவர் இயக்குனராகவே வருகிறார். அவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒன்றை பார்க்கும் ரசிகர்களில் பலர் பித்து பிடித்தது போல் ஆகிறார்கள். அதுவரை கோழையாக இருந்த சிலர் தைரியமான முடிவுகள் எடுக்கிறார்கள். இதனால் இந்த படத்தை ஒரு தரப்பு கொண்டாடி தீர்க்க, மற்றொரு தரப்போ படத்தை தடை செய்தாக வேண்டும் என்று போராடுகிறது. பிரபல திரைப்பட விமர்சகர் ஒருவர் மூன்று முறை அந்த படத்தை பார்த்த பிறகும் எப்படி விமர்சனம் எழுதுவது என்று தடுமாறுகிறார். அதனால் அவர் அந்தப் படத்தை இயக்கிய உபேந்திராவையே சந்திக்க புறப்படுகிறார். அந்த சந்திப்பில் அவரு க்கு கிடைத்த…
Read More