விஜய் எம்.பி. புதிதாகத் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் Silver Tree Studios. படைப்பாற்றல் மற்றும் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு களங்களில் சுவாரஸ்யமான படைப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் தொடங்கியுள்ளது. சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் (Silver Tree Studios) வழங்கும் – புரொடக்ஷன் no.1 (Production No.1), POP Entertainment நிறுவனத்துடன் இணைந்து உருவாகிறது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க, படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் ப்ரீத்தி பகதாலா (Preethi Pagadala) கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், காதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் வலுவான கதாபாத்திரங்களை உள்ளடக்கிய ஃபேமிலி ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிறது. மேலும் இப்படத்தில்…
Read MoreAuthor: reporter
டிஎன்பிபிஎல் இரண்டாவது சீசனில் ஊட்டி பைசன்ஸ் அணியுடன் விளையாட்டு அரங்கில் களமிறங்கும் கீதம்!
சென்னை, செப்டம்பர் 2026: தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் சீசன் 2 போட்டியில் பங்கேற்கும் ஊட்டி பைசன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஃபிரான்சைஸ் உரிமையாளராக, போட்டி விளையாட்டுத் துறையில் தனது பயணத்தைத் தொடங்குகிறது கீதம். நீலகிரி மலைப்பகுதியின் வேர்களையும், காட்டெருமையின் வலிமை மற்றும் விடாமுயற்சியையும் முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த அணி, ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 14 விளையாட்டு வீரர்களுடன் களமிறங்குகிறது. போட்டியில் முழு அர்ப்பணிப்புடன் பங்கேற்பதோடு, ஆடுகளத்திலும் அதற்கு வெளியிலும் தங்களுக்கென அடையாளத்தை உருவாக்குவதே இந்த அணியின் இலக்காகும். கீதத்தைப் பொறுத்தவரை, ஊட்டி பைசன்ஸ் அணி என்பது விருந்தோம்பல் துறைக்கு அப்பாற்பட்ட புதிய அத்தியாயமாகும். வளர்ந்து வரும் பிக்கிள்பால் விளையாட்டுக்கு பங்களிப்பதுடன் சமூகம், கலாச்சாரம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு அணியை உருவாக்குவதற்கான வாய்ப்பாகவும் இது அமைகிறது. “ஊட்டி பைசன்ஸ் அணி…
Read Moreநவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’
மிகவும் எதிர்பார்க்கப்படும் துல்கர் சல்மான் நடிக்கும் ஆகாசம்லோ ஓக தாரா ‘AOT’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை பவன் சாதினேனி இயக்கியுள்ளார். லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குண்ணம் மற்றும் ரம்யா குண்ணம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன. ‘AOT’ திரைப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில், படக்குழு சிறப்பான புரமோஷன் பணிகளைத் திட்டமிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, தொடர்ந்து கேட்கத் தூண்டும் பாடலாக மாறியுள்ளது. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.…
Read More‘பைசன் காளமாடன்’ படத்திற்காக சைமா (SIIMA AWARD) சிறந்த நடிகர் விருது வென்ற துருவ் விக்ரம் – இளம் நடிகருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை!
தென்னிந்திய திரையுலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களின் திறமையை அங்கீகரிக்கும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாக சைமா (SIIMA) விருதுகள் திகழ்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சைமா விருது விழாவில், ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியதற்காக துருவ் விக்ரம் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். இளம் நடிகராக தனது திரைப்பயணத்தில் துருவ் விக்ரமுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், அவரது திறமைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாக அமைந்துள்ளது. தனது முதல் படத்திலிருந்தே மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து ,நடிப்பில் கவனம் செலுத்தி வரும் துருவ் விக்ரம், ஒவ்வொரு படத்திலும் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் தனது நடிப்பை மெருகேற்றி வருகிறார். இந்நிலையில், தனது மூன்றாவது திரைப்படத்திலேயே சைமா விருதுகளில் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது அவரது இளம் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.…
Read More#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்
இன்றைய காலகட்டத்தில் காதலும் உறவுகளும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன. நேரில் சந்தித்து காதல் வளர்ந்த காலம் மாறி, டேட்டிங் ஆப்கள் மூலம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொள்ளும் காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம். ஸ்வைப், மேட்ச், மெசேஜ் என காதலின் தொடக்கமே தற்போது டிஜிட்டல் உலகில் இருந்து வருகிறது. இப்படியான நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது புதிய தமிழ் வெப் சீரிஸ் ‘#Love’. ஷோ-ரன்னர் , சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இந்தத் தொடரை இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள இந்தத் தொடரில், இருவருக்கும் இடையிலான உறவு கதையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. FOUND மற்றும் Find My Bae எனும் இரண்டு டேட்டிங் ஆப்களைச் சுற்றி கதை நகர்கிறது. மற்றவர்களுக்கான சரியான துணையைத் தேடிக்…
Read Moreசென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, அக்டோபர் 10-ஆம் தேதி மலேசியாவில் தொடரும் கௌதம் வாசுதேவ் மேனனின் இசை மற்றும் நினைவுகளின் பயணம்
திரையுலகில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சென்னையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி மூலம் அவரது திரைப்பயணம் கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்தக் கொண்டாட்டம் தற்போது எல்லைகளைக் கடந்து மலேசியாவின் கோலாலம்பூரை சென்றடையவுள்ளது. ‘ஒன்றா ரெண்டா – 25 Years of GVM’ எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி, வரும் அக்டோபர் 10, 2026 அன்று கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனனின் திரையுலகப் பயணத்துடன் இணைந்த மறக்க முடியாத இசை, கதைகள் மற்றும் இனிய நினைவுகளை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள், மெட்டுக்கள் மற்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நினைவுகள் வழியாக ஒரு இசைப் பயணமாக வடிவமைக்கப்பட்டுள்ள **‘ஒன்றா ரெண்டா’**, கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தை ஒரு…
Read Moreஎன்ன விலை விமர்சனம் 4.75/5..
கதை… ராமேஸ்வரம் கடலில் பக்தர்கள் காணிக்கையாக போடும் நாணயங்களை கடலில் மூழ்கி எடுத்து அதன் மூலம் தன் குடும்பத்தை காப்பாற்றி வருபவர் கருணாஸ்.. ஒரு நாள் இவர் நீரில் மூழ்கும் போது விலை உயர்ந்த மதிப்புள்ள ஒரு பொருளை எடுக்கிறார்.. அது அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என மனைவி சொன்னதன் பேரில் காவல் நிலையத்திற்கு செல்கிறார்.. ஆனால் அங்குள்ள காவலர்கள் அந்த பொருளை அபகரிக்க திட்டமிடும்போது சப் இன்ஸ்பெக்டர் வந்து விடுகிறார்.. இதனால் திருட்டு போலீஸ் கருணாஸ் மீது திருடன் பட்டம் கட்டி அவரை சிறையில் அடைகின்றனர். எந்த தவறும் செய்யாத தன் கணவனை காப்பாற்ற வக்கீல் நிமிஷா சஜயன் உதவியை கேட்கிறார் கருணாஸ் மனைவி.. அதன்படி காவல் துறையை எதிர்த்து வாதாடுகிறார் வக்கீல்.. அப்பொழுது காவல்துறைக்கு ஆதரவாக தமிழக அரசும் களத்தில் குதிக்கிறது.. இதை இரண்டையும்…
Read Moreகே. பாக்யராஜ் நடித்த கடைசி படமான’கன்னடத்து பைங்கிளி’-யை சாய் ரமணி இயக்க எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் (MBM Entertainment) நிறுவனத்தின் சார்பில் இந்துமதி கோபி தயாரிக்க ஆர். கோபி வழங்குகிறார்
எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் (MBM Entertainment) நிறுவனத்தின் சார்பில் இந்துமதி கோபி தயாரிப்பில் ஆர். கோபி வழங்கும் ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படத்தை ‘சிங்கம் புலி’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படங்களை இயக்கிய சாய் ரமணி எழுதி இயக்கியுள்ளார். பன்முக வித்தகரான டி. ராஜேந்தர் இசையமைக்கும் இப்படத்தில் அவரது இசையில் முதல் முறையாக இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். மேலும், சமீபத்தில் மறைந்த நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் நடித்த கடைசி படமாக இது அமைந்துள்ளது. டி.ஆர். மற்றும் பாக்யராஜ் இணைந்து பணியாற்றிய ஒரே படம் ‘கன்னடத்து பைங்கிளி’ என்பதும் குறிப்பிடத்தக்கது. நாயகனின் தந்தையாக படம் முழுவதும் வரும் பாத்திரத்தில் சிறப்பான பங்களிப்பை பாக்யராஜ் வழங்கியுள்ளார். சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு பாக்யராஜும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜும் இணைந்து நடித்த படமும் இது தான். அதுவும் கணவன் மனைவியாகவே நடித்துள்ளனர். இப்படத்தில் புதுமுகங்கள் அமல் அஜித்,…
Read Moreஷபீர் சுல்தான் – Chinmayi sripaada இணைந்த ‘வான்மதி’ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் ஷபீர் சுல்தான் மற்றும் பிரபல பின்னணி பாடகி Chinmayi sripaada இணைந்து உருவாக்கியுள்ள புதிய Independent தமிழ் பாடல் ‘வான்மதி’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ் கவிதை மற்றும் இனிமையான மெலடியுடன் R&B, ஹிப்-ஹாப் மற்றும் இந்திய பாரம்பரிய இசையின் கலவையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. ஷபீர் மியூசிக் ஏசியா இசை நிறுவனத்தின் சார்பில் செப்டம்பர் 11, 2026 அன்று உலகம் முழுவதும் ‘வான்மதி’ பாடல் வெளியானது. பாடலின் விளம்பர நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக செப்டம்பர் 12 அன்று சென்னை AMPA SKYONE மாலில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பாடல் குழுவினர் ரசிகர்களை சந்தித்து, பாடல் வெளியீட்டை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள், ‘வான்மதி’ பாடலின் வித்தியாசமான இசை அமைப்பு மற்றும் ஷபீர் சுல்தான் –…
Read More‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும், ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18) , ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரு சிறுவன் ஓடுவதுடன் தொடங்கும் டீசர், அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான காட்சிகளுடன் பயணிக்கிறது. ஊரே ‘பத்தா’வைத் தேடும் சூழல் உருவாக, அந்தத் தேடலின் பின்னணி என்ன என்ற கேள்வியை எழுப்பும் வகையில் டீசர் அமைந்துள்ளது. கதை குறித்த முக்கிய தகவல்கள் எதையும் வெளிப்படுத்தாமல், படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. டீசரில் விஜய்…
Read More
