ராஷ்மிகா மந்தானாவின் மிரட்டலான புதிய அவதாரம்: ‘மைசா’ திரைப்படத்தின் அதிரடி டீசர் வெளியீடு!

அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் (Unformula Films) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தானா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பான்-இந்திய அதிரடித் திரைப்படமான ‘மைசா’ (Mysaa) டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். “நான் சோர்ந்துவிட்டேன், நான் நின்றுவிட்டேன், நான் தோற்றுவிட்டேன்…” என்ற ராஷ்மிகாவின் கம்பீரமான பின்னணிக் குரலுடன் டீசர் தொடங்குகிறது. சமூகத்தின் அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து, தனி ஒரு போராளியாக நின்று களம் காணும் அஞ்சாத ஒரு பெண்ணாக ராஷ்மிகா இதில் சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்த போரில் அவர் வெறும் போராளி மட்டுமல்ல; போரின் போக்கையே தீர்மானிக்கும் பேராயுதமாக உருவெடுக்கிறார். கோண்ட் பழங்குடியினப் பெண்ணாக (Gond tribal woman) நடித்துள்ள ராஷ்மிகா, இந்த கதாபாத்திரத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகளையும் சண்டை பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். பைக் ரேசிங் சாகசங்கள் முதல் ஆபத்தான நீருக்கடியிலான சண்டை காட்சிகள்…

Read More

‘தனிநாயகன்’ தமிழ் தூதர் தனிநாயகம் அடிகளார் ஆவணப்படம் வெளியீடு

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார் குறித்த ஆவணப்படுத்தை இயக்கியிருக்கிறார். அவரைச் சந்தித்து உரையாடியதில் இருந்து…. “தமிழுக்குப் பல்வேறு விதங்களில் தொண்டு செய்த அறிஞர் தனிநாயகம் அடிகளார். தமிழ் என்பது ஒரு மாநில மொழி அல்ல… அது உலகச் சிந்தனை கொண்ட உலகப் பொது மொழி என்பதை உலகுக்கு அறிவித்த பேரறிஞர். அறிவித்ததோடு மட்டுமின்றி அதைச் செயலாக்கம் செய்தவரும் அவர்தான். உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழ் அறிஞர்களைக் கூட்டி உலகத் தமிழ் மன்றம்  என்ற ஓர் அமைப்பைஉருவாக்கி உலகத் தமிழ் மாநாடு என்ற கருத்தாக்கத்தை விதைத்து  முதல் உலகத் தமிழ் மாநாட்டை மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் நடத்தியவர். அதைத் தொடர்ந்து தமிழ் ஆய்வுகள் பன்னாட்டு மொழிகளில் நடைபெறக் காரணமானவர். உலகமெங்கும் பரவிய  தமிழரின் தடங்கள்…

Read More

பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

பெண்களின் உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இந்தியாவில் நடைபெறும் முதல் பல்துறை மாநாடுகளில் ஒன்று HER. இந்த மாநாட்டினை Be The One கிளினிக் நிறுவனர் டாக்டர் இர்ஃபானா சாகுல் ஹமீத் முன்னெடுத்தார். *சென்னை, செப்டம்பர் 20, 2026:* Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின் உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளை மையமாகக் கொண்ட HER – வுமன்ஸ் ஹெல்த் & லான்ஜெவிட்டி சப்மிட் மாநாட்டை செப்டம்பர் 19 ஆம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள ஹோட்டல் புல்மேனில் நடத்தினார். பெண்களின் உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இந்தியாவில் நடைபெறும் முதல் பல்துறை மாநாடுகளில் ஒன்றான HER மாநாடு, பெண்களின் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் ஏற்படும் உடல்நலத் தேவைகளை வெவ்வேறு மருத்துவத் துறைகளின் கோணத்தில் அலசி…

Read More

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது அடுத்த படைப்பாக ‘நந்தன் 2’ திரைப்படத்தை தற்போது உருவாக்கி வருகிறார். இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இரா.சரவணன் எழுதி இயக்குகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தின் முதல் டைட்டில் லுக் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. வெளியாகியுள்ள டைட்டில் போஸ்டர், வழக்கமான திரைப்பட போஸ்டர்களில் இருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளது. முழுவதும் கருப்பு-வெள்ளை பின்னணியில், ஒரு சிறுமியின் கையில் தண்ணீர் ஏந்திப் பிடித்திருக்கும் உலோகப் பாத்திரத்தின் பிரதிபலிப்பில் கேமராக்களுடன் செய்தியாளர்கள் மற்றும் படக்குழுவினர் இடம் பெறுவது போன்ற காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த பிரதிபலிப்பின் மையத்தில் சிவப்பு நிறத்தில் இடம்பெற்றுள்ள ‘நந்தன் 2’ என்ற தலைப்பு, படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ‘நந்தன் 2’…

Read More

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: ஒரு நாற்காலிக்காக வினோத் பாபுவுக்கு நூதன தண்டனை – முனியம்மாலுடன் மோதிய முகேஷ்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் ஒரு நாற்காலியை இடம் மாற்றியதற்காக வினோத் பாபுவுக்கு முனியம்மால் வித்தியாசமான தண்டனை வழங்குகிறார். முழங்காலிட்டு அமர்ந்து வீட்டைச் சுற்றி ஒரு ரவுண்ட் வருமாறு அவரிடம் கூறுகிறார். இந்த தண்டனையைப் பார்த்த முகேஷ், “இதெல்லாம் எனக்கு ஃபன்னியா தெரியல” என முனியம்மாலிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு முனியம்மால், “உங்களுக்கு ஃபன்னியா இல்லன்னா கிளம்புங்க” என பதிலடி கொடுக்க, இருவருக்கும் இடையே பரபரப்பான வாக்குவாதம் உருவாகிறது. *பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ஐ இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் காணலாம். JioHotstar-ல் எப்போது வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்யலாம். மேலும், பிக் பாஸ் வீட்டின் 24×7 நேரலை ஒளிபரப்பையும் JioHotstar-ல் காணலாம்.*

Read More

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கும் “மறுஜென்ம காதல்”!

இந்தியன் டிஜிட்டல் பிலிம்ஸ் வழங்கும், வித்யா பிரேம் தயாரிப்பில், வந்தை பிரேம் எழுதி, இயக்கும் ‘மறுஜென்மம் காதல்’ படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அன்புச்செல்வன், நடிகர்கள் இமான் அண்ணாச்சி, கூல் சுரேஷ், முத்துக்காளை, கிரேன் மனோகர், கராத்தே ராஜா, இயக்குநர் E.V.கணேஷ் பாபு மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டு, வாழ்த்தினார்கள்! பாவிக்கும், ஆவிக்கும் நடக்கும் சண்டை மற்றும் உண்மையான காதல் எத்தனை ஜென்மங்கள் எடுத்தும் சேரும் என்பதே ‘மறுஜென்ம காதல்’! வந்தை பிரேம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யாதாரி நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகனாக கூல் சுரேஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அக்ஷராய் விஜய் நடிக்கிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, முத்துக்காளை, கிரேன் மனோகர், கராத்தே ராஜா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி வந்தை பிரேம் இயக்குகிறார். கிரியேட்டிவ் இயக்குநர்…

Read More

சென்னையில் சிக்மா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சஞ்சய் பேச்சு..!!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது. தயாரிப்பாளர் தமிழ்குமரன் பேசியதாவது, “’சிக்மா’ படத்தின் இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கு இந்த படம் எவ்வளவு முக்கியமானதோ, அதுபோலவே லைகா நிறுவனத்திற்கும் இந்த படம் மிக முக்கியமானது. ஏனெனில், அவருடைய அப்பா இன்றைய தமிழக முதல்வர் விஜய் அவர்களின் ‘கத்தி’ படம் தயாரித்து தான் நாங்கள் திரைத்துறைக்கு அறிமுகமானோம். இப்பொழுது அவர் மகனை நாங்கள் அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி. இயக்குநராக சஞ்சய் மீது நாங்கள் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. படத்தை சிறப்பாக செய்திருக்கிறார். திறமையாளர்களை கண்டறிந்து ஊக்குவிப்பவர் சுபாஸ்கரன் சார்.…

Read More

BEEP பீப் – விமர்சனம்…

கதை… எந்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ராகவ் இந்த படத்தில் கதாநாயகன்.. இவருக்கு மிகவும் நெருக்கமான ஒரு பெண் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைகிறார்… ஒரு பக்கம் இது தற்கொலை என்று சொல்லப்பட்டாலும் மறுபக்கம் இது கொலை என சந்தேகிக்கப்படுகிறது.. இதனால் அந்த பெண்ணுக்கு நெருக்கமான ராகம் மீது போலீஸ் விசாரணை திரும்புகிறது.. ஆனால் அந்த மரணத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்.. ஒரு கட்டத்தில் இவரின் எக்ஸ்ட்ரா சக்தியை நம்பும் போலீஸ் நித்திஷ் வீரா இவர் சொல்வதைக் கேட்கிறார்.. அதாவது இவர் நிரபராதி என்று நிரூபிக்க அவகாசம் கொடுக்கிறார்.. அதன் படி ஒரு மரணத்திற்கு இரண்டு பக்கமும் விசாரணை தொடர்கிறது.. யார் அந்த கொலையாளியை கண்டுபிடித்தனர்.? போலீஸ் கண்டுபிடித்தார்.? நாயகன் ராகவ் கண்டுபிடித்தார்.? அப்படி ராகவிடம் இருக்கும் அந்த அதிசய சக்தி…

Read More

இசைஞானி இளையராஜாவின் இசையில் இலங்கை (ஈழத்து) தமிழ்த்திரைப்படம் “அந்தோனி” யின் ஆஸ்கார் நோக்கிய பயணம்

ஓசை பிலிம்ஸ் கலைவளரி சக இரமணதாஸ், மற்றும் சுகந்தினி இரமணதாஸ் அவர்களின் தயாரிப்பிலும், கயல் வின்சன்ட், TJ.பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் ஆகியோரின் நடிப்பிலும், சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகியோரின் இயக்கத்தில் மூன்று மொழிகளில் உருவாகி அண்மையில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மனதில் வரவேற்பை பெற்ற வெற்றித்திரைப்படமாக மாறியிருந்தது. திரையரங்குகளை தொடர்ந்து இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ, OTT Plus, Shortflix, Tentkotta, Roopahala போன்ற பல முன்னனி OTT தளங்களில் திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ‘அந்தோனி’ திரைப்படம் இன்று இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனத்தினூடாக 2027ம் ஆண்டின் சிறந்த சர்வதேச திரைப்படப்பிரிவில் ஆஸ்கார் விருது விழாவிற்கான தேர்வுக்குழுவிற்கு அனுப்பியிருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கின்றனர். உலமறிந்த மாபெரும் இசைமேதை The Maestro என்ற அழைக்கப்படும் இசைஞானி இளையராஜாவின் இசையில் வரலாற்றில் முதல்…

Read More

Hiphop Tamizha Adhi’s highly anticipated directorial venture arrives in cinemas on September 25; songs already creating a strong buzz among music lovers.

The much-awaited ‘Meesaya Murukku 2’, written and directed by Hiphop Tamizha Adhi, is gearing up for its worldwide theatrical release on September 25. With its vibrant music, youthful energy and an emotionally rooted story, the film has already generated considerable anticipation among audiences. The songs from the film – ‘Aura 10/10’, ‘Pappali Pazhamey’, ‘Goindhamma’, ‘Adi Podi’ and ‘Kalaivaaniye’, have struck a chord with music lovers, further amplifying the excitement surrounding the film. A press meet for ‘Meesaya Murukku 2’ was held in Chennai, ahead of the film’s release and the…

Read More