தேசியம், செப்டம்பர் 18, 2026: பல்வேறு வகைகளில் சிறப்பான பிராந்தியக் கதைகளை வழங்கி, Original Series பிரிவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கி வரும் Tamil Zee 5, தற்போது ‘Octopus’ எனும் பரபரப்பான Suspense Thriller தொடரை பார்வையாளர்களிடம் கொண்டு வரத் தயாராகியுள்ளது. வழக்கமான கதை சொல்லும் முறைகளுக்கு மாறாக, வலுவான பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடர், மர்மம், உணர்வு மற்றும் சுவாரஸ்யத்தை ஒன்றிணைக்கிறது. ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கியுள்ள ‘Octopus’ 7 எபிசோடுகளைக் கொண்ட Tamil Zee 5 Original தொடராகும். இதில் அஷ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு இளம் பெண் காணாமல் போனதைத் தொடர்ந்து, அந்த உண்மையை கண்டறிய ஒரு நெருக்கமான அக்கம்பக்கத்தினர் ஒன்றிணைகின்றனர்.…
Read MoreAuthor: reporter
அசத்தலான போஸ்டர் மற்றும் குஜிலிமஸ்து வீடியோவுடன் ‘ராவடி’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!
பஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள ‘ராவடி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அசத்தலான புதிய போஸ்டர் மற்றும் குஜிலிமஸ்து (Gujilimasthu) வீடியோவுடன் அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படம், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. ‘ராவடி’ திரைப்படம் வரும் 2026 டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் வெளியாகியுள்ள புதிய போஸ்டர் மற்றும் குஜிலிமஸ்து வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள ‘குஜிலிமஸ்து’ வீடியோ ரசிகர்களின் கவனத்தை வருகிறது. ஃபார்ட்டி கொண்டாட்டத்துடன் தொடங்கும் இந்த வீடியோ, ‘அராஜகம் பத்தல பத்தல’ என்ற பாடலுடன் காதல், கல்லூரி, அடிதடி, கொண்டாட்டம் என…
Read MoreUAE: திரைப்பட தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு விநியோகத்தில் கவனம் செலுத்தி வரும் Triple M Production LLC, தமிழ் திரையுலகில் தனது செயல்பாடுகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
UAE-யை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தை அதன் Executive Director ஜி. பாபு ராமகிருஷ்ணன் வழிநடத்தி வருகிறார். UAE, கத்தார், இந்தியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் FMCG வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறையில் அனுபவம் பெற்ற அவர், Triple M Production மூலம் சினிமா மற்றும் பொழுதுபோக்குத் துறையிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளார். Irani, Niram Marum Ulagil, Ace, Akkenam, Bun Butter Jam உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களுடன் Triple M Production இணைந்து பணியாற்றியுள்ளது. UAE, சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் உள்ளிட்ட GCC நாடுகளிலும் திரைப்பட வெளியீடு மற்றும் விநியோக பணிகளை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இயக்குநர் ராம் இயக்கியுள்ள Yezhu Kadal Yezhu Malai திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோகத்திலும் Triple M…
Read More’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!
தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு நிகராக, சுயாதீன பாடல்களையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர். அந்த வகையில் காதல், காதல் தோல்வி, நகைச்சுவை மற்றும் அதிரடியான குத்து இசை ஆகியவற்றை வித்தியாசமான முறையில் இணைக்கும் புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது ஆஷிக் மற்றும் ஷ்ரவ்னிதா ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு, ரூபேஷ் திவாரி இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். ஆட்டம் போட வைக்கும் துள்ளலான இசையும், நகைச்சுவை கலந்த இசை அணுகுமுறையும் கொண்ட இந்தப் பாடல், வழக்கமான காதல் தோல்விப் பாடல்களில் இருந்து வேறுபட்ட ஒன்றாக உள்ளது. ஒரு இளம் காதல் ஜோடிக்கு இடையேயான தொலைபேசி உரையாடலுடன் பாடல் தொடங்குகிறது. அப்போது அந்தப் பெண் ’பிரேக்’ என்ற ஒரு…
Read Moreபிக்பாஸ் ராஜு ஜெயமோகனின் இயக்கி, நடிக்கும் டார்க் ஹியூமர் கதையான ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியது!
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஆஸ்பயர் உபுண்டு பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியது. பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளரும் நடிகருமான ராஜு ஜெயமோகன் இப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார். சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது படக்குழு தென்காசியின் அழகிய இயற்கைச் சூழலில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மொட்டை மற்றும் இடிந்த கரை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படம் டார்க் ஹியூமர் ஜானரை சேர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமான அரங்குகள் மற்றும் செயற்கையாக உருவாக்கப்பட்ட செட்டில் நடைபெறாமல் கதையின் உண்மைத்தன்மையை வலுப்படுத்தும் வகையில் மலை, காடுகள் என இயற்கைச்…
Read Moreநடிகர்கள் அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் இணைந்த ‘காக்க காக்க’, ‘நான் அவனில்லை’ படங்கள் புகழ் ஜீவன்!
‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஜீவன் தற்போது பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அசோக் குமார் இயக்கும் ‘லவ்வர் பாய்’ படத்தில் இணைந்துள்ளார். ‘காக்க காக்க’ திரைப்படத்தின் மூலம் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், வழக்கமான கதைக்களங்களைத் தாண்டி வித்தியாசமான கமர்ஷியல் படங்களைத் தேர்ந்தெடுத்து ஹீரோவாகவும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகர் ஜீவன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் திரைத்துறைக்கு திரும்புகிறார். அசோக் குமார் இயக்கத்தில், அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தில் ஜீவன் தற்போது இணைந்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ‘லவ்வர் பாய்’ படப்பிடிப்பில் ஜீவன் இணைந்துள்ளதை…
Read Moreதேசிய விருது வென்ற தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் இருவரும் ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனுடன் இணையும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம்!
குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ், ‘மார்கோ’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் (UMF) உடன் இணைந்து புதிய மலையாள திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தை உன்னி முகுந்தன் எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்ற இரண்டு தயாரிப்பு நிறுவனங்களான பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் முதன்முறையாக ஒரு திரைப்படத்திற்காக இணைகின்றன. பான் இந்திய அளவில் ரசிகர்களை சென்றடையும் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதே இந்த நிறுவனங்களின் நோக்கம். விமர்சன ரீதியாகவும் வர்த்த ரீதியாகவும் புகழ்பெற்ற பல திரைப்படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமாக பனோரமா ஸ்டுடியோஸ் திகழ்கிறது. ‘ஓம்காரா’, ‘ஸ்பெஷல் 26’, ‘பியார் கா பஞ்ச்நாமா’, ‘ரெய்டு’, ‘ஷைத்தான்’ மற்றும் பிளாக்பஸ்டர் ‘த்ரிஷ்யம்’…
Read Moreதென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!
நடிகை நிதி அகர்வால் தனது திரைப்பயணத்தின் முக்கியமான கட்டத்தில் நுழைந்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ள அவர், திரையுலகில் தனது அடுத்தகட்ட பயணத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளார். அதிக படங்களில் நடிக்க வேண்டும், தொடர்ந்து வளர வேண்டும், தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதே அவரது நோக்கம். நிதி அகர்வாலை பொறுத்தவரை, வெற்றி என்பது அவர் நடிக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கையை மட்டுமே சார்ந்தது அல்ல. ஒரு நடிகையாக வளர்வதற்கான பயணம், உழைப்பு மற்றும் கிடைக்கும் வாய்ப்புகளே அவருக்கு முக்கியம். ‘ஹரி ஹர வீர மல்லு’ மற்றும் ‘தி ராஜா சாப்’ ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பின்போது, ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஷெட்யூலை திறம்பட சமாளித்து நடித்து கொடுத்தார். கடினமாக உழைப்பதும் தன்னை பரபரப்பாக…
Read Moreவரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்
இலங்கைத் தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றைப் படைத்துள்ள ‘அந்தோனி’ திரைப்படம், 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது விழாவின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிற்கான தேர்வுப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. உலகப் புகழ்பெற்ற இசைமேதையும், ‘The Maestro’ என அழைக்கப்படுபவருமான இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் உருவான வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கைத் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை ‘அந்தோனி’ பெற்றுள்ளது. ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைவளரி சக இரமணதாஸ் மற்றும் சுகந்தினி இரமணதாஸ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கயல் வின்சன்ட், TJ. பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகியோர் இயக்கியுள்ள ‘அந்தோனி’ திரைப்படம் மூன்று மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.…
Read Moreராஷ்மிகா மந்தானாவின் மிரட்டலான புதிய அவதாரம்: ‘மைசா’ திரைப்படத்தின் அதிரடி டீசர் வெளியீடு!
அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் (Unformula Films) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தானா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பான்-இந்திய அதிரடித் திரைப்படமான ‘மைசா’ (Mysaa) டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். “நான் சோர்ந்துவிட்டேன், நான் நின்றுவிட்டேன், நான் தோற்றுவிட்டேன்…” என்ற ராஷ்மிகாவின் கம்பீரமான பின்னணிக் குரலுடன் டீசர் தொடங்குகிறது. சமூகத்தின் அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து, தனி ஒரு போராளியாக நின்று களம் காணும் அஞ்சாத ஒரு பெண்ணாக ராஷ்மிகா இதில் சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்த போரில் அவர் வெறும் போராளி மட்டுமல்ல; போரின் போக்கையே தீர்மானிக்கும் பேராயுதமாக உருவெடுக்கிறார். கோண்ட் பழங்குடியினப் பெண்ணாக (Gond tribal woman) நடித்துள்ள ராஷ்மிகா, இந்த கதாபாத்திரத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகளையும் சண்டை பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். பைக் ரேசிங் சாகசங்கள் முதல் ஆபத்தான நீருக்கடியிலான சண்டை காட்சிகள்…
Read More
