’டோரதி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. நடிகர் முத்துப்பாண்டி, “இது என்னுடைய முதல் மேடை. வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சாருக்கு நன்றி. எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ராஜா சார் இசையில் வரும் வரிகளின் மீனாட்சியாய் இந்தப் படத்திற்கு வழித்துணையாய் இருந்த கீர்த்தி சுரேஷ் மேமுக்கு நன்றி”. நடிகர் செளந்தரராஜன், “கார்த்திக் சுப்புராஜ்ஜை ஷார்ட் பிலிம் காலத்திலிருந்து தெரியும். மிகச்சிறந்த திறமையான இயக்குநர். அவருடைய எண்ணம் செயலெல்லாம் ஒன்று போல இருக்கும். அவர் மதுரையையும் அந்த மனிதர்களையும் மிகவும் நேசிப்பார். இந்திய அளவிலும் அவர் பெரிய இயக்குநராக வளர வேண்டும்.…

Read More

‘ஆர்எக்ஸ் 100’ நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டாவின் புதிய திரைப்படம் ‘கம்பேக்’!

‘ஆர்எக்ஸ் 100’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா தனது புதிய திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ’கம்பேக்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் மூலம் அவர் தனது திரைப்பயணத்தில் ஒரு புதிய பாதையில் பயணிக்கத் தயாராகியுள்ளார். கார்த்திகேயா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கார்த்திகேயா கிரியேட்டிவ் வொர்க்ஸ் சார்பில் இப்படத்தை உருவாக்குகிறார். இதில் கதாநாயகனாக நடிப்பதுடன், இயக்குநர் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அவரது மனைவி லோஹிதா ரெட்டி இப்படத்தின் தயாரிப்பாளராக உள்ளார். குடும்பத்தினர் இணைந்து தயாரிக்கும் இந்தத் திரைப்படம் 2027ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்திகேயா பாக்ஸராக நடித்துள்ளார் என்பதை கிளிம்ப்ஸ் காட்டுகிறது. மூன்று ஆண்டுகளாக அந்த குத்துச்சண்டை வீரர் குறித்து எந்தத் தகவலும் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் குரலோடு கதை…

Read More

ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு களத்தில் அசத்தும் LK அக்ஷய் குமாரின் அடுத்த படம் இனிதே துவங்கியது!

‘சிறை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் LK அக்ஷய் குமார் நடிக்கும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படத்திலும்  வித்தியாசமான கோணங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வரும் LK அக்ஷய் குமாரின் அடுத்த படைப்பாக இப்படம் உருவாகிறது. கிரைம் டிராமா ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பும் இன்று தொடங்கியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் LK அக்ஷய் குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை விழாவில் இயக்குநர்கள் H. வினோத், சிறுத்தை சிவா, R. S. துரை செந்தில்குமார், சுரேஷ் ராஜகுமாரி, விக்னேஷ்…

Read More

‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்றுகொண்ட டி.ஜி. தியாகராஜன், சத்யஜோதி பிலிம்ஸ் பாரம்பரியத்திற்கு கிடைத்த மற்றுமொரு பெருமை!

இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி பிலிம்ஸின் தயாரிப்பில் உருவான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் தேசிய விருதை பெற்றுள்ளது. 72-வது தேசிய திரைப்பட விருதுகளில், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படத்திற்கான ரஜத் கமல் விருதை ‘கேப்டன் மில்லர்’ பெற்றுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் இந்த விருதை விழாவில் நேரில் பெற்றுக்கொண்டார். அதே திரைப்படத்திற்காக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷும், விழாவில் நேரில் கலந்துகொண்டு தனது Special Mention தேசிய அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார். இந்த இரட்டை தேசிய அங்கீகாரம், ‘கேப்டன் மில்லர்’ படக்குழுவிற்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல; பல தசாப்தங்களாக தரமான கதைகளையும், கலைநயம் மிக்க படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் சத்யஜோதி பிலிம்ஸின்…

Read More

சினிமாவை நம்பினால் அது கைவிடாது: நடிகர் சித்து பேச்சு!

அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ .இப்படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , பிரதீப்,வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை பாலாஜி இயக்கியிருந்தார். இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர்.ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி என்ற தொழில்நுட்பக் கூட்டணியுடன் இந்தப் படத்தை கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருந்தன. சமீபத்தில் வெளிவந்த படங்களில் வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் என்று பெயர் பெற்று ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த ‘தி டார்க் ஹெவன்’ ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று இன்று பெரிய வெற்றி பெற்றுள்ளது.இது சிறு முதலீட்டுப் படத்…

Read More

அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ்  மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. ஆர். கார்த்திகேயன்  இயக்கியுள்ள இப் படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய ,ஆர்.கே. செல்வா படத்தொகுப்பு செய்ய,  மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார். ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ்  சார்பில் கே.கருணாமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் ராசி சிதம்பரம் வெளியிடுகிறார். *இவ்விழாவில் ஹேப்பி ஹை பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபிநயா பேசும்போது,* “இந்தப் படம் எடுக்க முடிவு செய்வதற்குக் காரணம் கதை தான் . கதை பிடித்துப் போய் தான் இந்தப்…

Read More

மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் கலந்த குடும்பக் கதையான ‘அப்பா குட்டி’ திரைப்படம், அக்டோபர் 16, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகின்றது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், ஆக்‌ஷன், குடும்ப உணர்வுகள் மற்றும் பாசத்தை மையமாகக் கொண்ட படமாக உருவாகி இருக்கின்றது. ஒரு அப்பாவுக்கும் அவரது மகளுக்கும் இடையிலான ஆழமான பாசமும், அவர்களுக்குள் இருக்கும் வலுவான உறவும்தான் இந்தப் படத்தின் முக்கியமான கதைக்களமாக அமைந்துள்ளது. விஜய் ஆண்டனி இந்தப் படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்திலும், ஆக்‌ஷன் நிறைந்த காட்சிகளிலும் நடித்து இருக்கின்றார். குடும்ப பாசம், உணர்ச்சிகள், விறுவிறுப்பான காட்சிகள் என அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.ஏற்கனவே வெளியான படத்தின் Second லுக் போஸ்டரில் விஜய் ஆண்டனியுடன் ஒரு சிறுமி இடம்பெற்றிருந்தார். இந்த போஸ்டர், அப்பா மற்றும் மகளுக்கு இடையிலான பாசமான உறவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அக்டோபர் 16 வெளியீட்டை முன்னிட்டு படக்குழு விரைவில் தீவிரமான…

Read More

‘அன்பில் அவன்’ திரைப்படம் இனி 2 அக்டோபர் 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகும்.

‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர அம்சங்களுக்கு  நீங்கள் அளித்து வரும் அளவற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அனைத்து தளங்களிலும் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்து வரும் வரவேற்பு உண்மையிலேயே எங்களை நெகிழச் செய்துள்ளது. நீங்கள் எங்கள் மீது பொழிந்து வரும் நம்பிக்கைக்கும் அன்புக்கும் நாங்கள் எப்போதும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, ‘அன்பில் அவன்’ திரைப்படம் 25 செப்டம்பர் 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், உங்கள் அனைவரிடமிருந்தும் கிடைத்து வரும் அபாரமான வரவேற்பும், எங்கள் விநியோக கூட்டாளர்களிடம் உருவாகியுள்ள அதிக அளவிலான ஆர்வமும் நம்பிக்கையும், இப்படத்தை இன்னும் பெரிய அளவிலும், பரந்த அளவிலும் வெளியிடுவதற்கு எங்களை ஊக்குவித்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் இப்படம் பார்வையாளர்களை சிறந்த முறையில் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, வெளியீட்டை ஒரு வாரம் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம்.…

Read More

வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’  டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நெனி என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இலங்கையில் நடைபெற்ற போரின் பின்னணியில், 2016-ல் உறவுகளையும் சொந்த மண்ணையும் இழந்து, வேறு வழியின்றி தமிழ்நாட்டிற்கு வந்து சேரும் ஒரு தந்தையும் அவரது சிறுமகளும் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டதாக ‘தாய்நிலம்’ உருவாகியுள்ளது. தாய்நிலத்தை விட்டு வெளியேறிய பிறகு புதிய இடத்தில் வாழ்க்கையை தொடங்க வேண்டிய சூழலில், அந்த தந்தையும் மகளும் சந்திக்கும் சவால்களையும், அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்களின் அன்பையும் திரைப்படம் பேசுகிறது. எல்லாவற்றையும் இழந்து தமிழ்நாட்டிற்கு…

Read More

சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் இடம்பெறும் சந்தோஷ் நாராயணனின் ‘Enjoy Enjaami’ மற்றும் ‘Maamadura’!

தமிழ் இசையை உலக அரங்கிற்கு தொடர்ந்து எடுத்துச் செல்லும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைப் பயணத்தில் மேலும் ஒரு பெருமையான தருணம் இணைந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த ‘Enjoy Enjaami’ மற்றும் ‘Maamadura’ ஆகிய பாடல்கள், தற்போது வெளியாகியுள்ள சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் இடம்பெற்றுள்ளன. உலகளாவிய ரசிகர்களை சென்றடையும் வகையில் வெளியாகியுள்ள இந்த சர்வதேச திரைப்படத்தில் தமிழ் பாடல்கள் இடம்பெற்றிருப்பது, தமிழ் இசையின் தனித்துவத்தையும் அதன் உலகளாவிய பயணத்தையும் மீண்டும் வெளிப்படுத்தும் முக்கியமான தருணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, ‘Enjoy Enjaami’ பாடல் தமிழ் நாட்டுப்புற இசையின் வேர்களையும் நவீன இசை அணுகுமுறையையும் இணைத்து உலகளவில் பெரும் கவனத்தை பெற்ற நிலையில், தற்போது அது சர்வதேச Netflix திரைப்படத்தின் வாயிலாக மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களை சென்றடைந்துள்ளது. அதேபோல், ‘Maamadura’ பாடலும்…

Read More