‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஜீவன் தற்போது பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அசோக் குமார் இயக்கும் ‘லவ்வர் பாய்’ படத்தில் இணைந்துள்ளார். ‘காக்க காக்க’ திரைப்படத்தின் மூலம் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், வழக்கமான கதைக்களங்களைத் தாண்டி வித்தியாசமான கமர்ஷியல் படங்களைத் தேர்ந்தெடுத்து ஹீரோவாகவும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகர் ஜீவன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் திரைத்துறைக்கு திரும்புகிறார். அசோக் குமார் இயக்கத்தில், அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தில் ஜீவன் தற்போது இணைந்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ‘லவ்வர் பாய்’ படப்பிடிப்பில் ஜீவன் இணைந்துள்ளதை…
Read MoreAuthor: reporter
தேசிய விருது வென்ற தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் இருவரும் ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனுடன் இணையும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம்!
குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ், ‘மார்கோ’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் (UMF) உடன் இணைந்து புதிய மலையாள திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தை உன்னி முகுந்தன் எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்ற இரண்டு தயாரிப்பு நிறுவனங்களான பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் முதன்முறையாக ஒரு திரைப்படத்திற்காக இணைகின்றன. பான் இந்திய அளவில் ரசிகர்களை சென்றடையும் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதே இந்த நிறுவனங்களின் நோக்கம். விமர்சன ரீதியாகவும் வர்த்த ரீதியாகவும் புகழ்பெற்ற பல திரைப்படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமாக பனோரமா ஸ்டுடியோஸ் திகழ்கிறது. ‘ஓம்காரா’, ‘ஸ்பெஷல் 26’, ‘பியார் கா பஞ்ச்நாமா’, ‘ரெய்டு’, ‘ஷைத்தான்’ மற்றும் பிளாக்பஸ்டர் ‘த்ரிஷ்யம்’…
Read Moreதென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!
நடிகை நிதி அகர்வால் தனது திரைப்பயணத்தின் முக்கியமான கட்டத்தில் நுழைந்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ள அவர், திரையுலகில் தனது அடுத்தகட்ட பயணத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளார். அதிக படங்களில் நடிக்க வேண்டும், தொடர்ந்து வளர வேண்டும், தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதே அவரது நோக்கம். நிதி அகர்வாலை பொறுத்தவரை, வெற்றி என்பது அவர் நடிக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கையை மட்டுமே சார்ந்தது அல்ல. ஒரு நடிகையாக வளர்வதற்கான பயணம், உழைப்பு மற்றும் கிடைக்கும் வாய்ப்புகளே அவருக்கு முக்கியம். ‘ஹரி ஹர வீர மல்லு’ மற்றும் ‘தி ராஜா சாப்’ ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பின்போது, ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஷெட்யூலை திறம்பட சமாளித்து நடித்து கொடுத்தார். கடினமாக உழைப்பதும் தன்னை பரபரப்பாக…
Read Moreவரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்
இலங்கைத் தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றைப் படைத்துள்ள ‘அந்தோனி’ திரைப்படம், 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது விழாவின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிற்கான தேர்வுப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. உலகப் புகழ்பெற்ற இசைமேதையும், ‘The Maestro’ என அழைக்கப்படுபவருமான இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் உருவான வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கைத் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை ‘அந்தோனி’ பெற்றுள்ளது. ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைவளரி சக இரமணதாஸ் மற்றும் சுகந்தினி இரமணதாஸ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கயல் வின்சன்ட், TJ. பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகியோர் இயக்கியுள்ள ‘அந்தோனி’ திரைப்படம் மூன்று மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.…
Read Moreராஷ்மிகா மந்தானாவின் மிரட்டலான புதிய அவதாரம்: ‘மைசா’ திரைப்படத்தின் அதிரடி டீசர் வெளியீடு!
அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் (Unformula Films) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தானா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பான்-இந்திய அதிரடித் திரைப்படமான ‘மைசா’ (Mysaa) டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். “நான் சோர்ந்துவிட்டேன், நான் நின்றுவிட்டேன், நான் தோற்றுவிட்டேன்…” என்ற ராஷ்மிகாவின் கம்பீரமான பின்னணிக் குரலுடன் டீசர் தொடங்குகிறது. சமூகத்தின் அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து, தனி ஒரு போராளியாக நின்று களம் காணும் அஞ்சாத ஒரு பெண்ணாக ராஷ்மிகா இதில் சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்த போரில் அவர் வெறும் போராளி மட்டுமல்ல; போரின் போக்கையே தீர்மானிக்கும் பேராயுதமாக உருவெடுக்கிறார். கோண்ட் பழங்குடியினப் பெண்ணாக (Gond tribal woman) நடித்துள்ள ராஷ்மிகா, இந்த கதாபாத்திரத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகளையும் சண்டை பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். பைக் ரேசிங் சாகசங்கள் முதல் ஆபத்தான நீருக்கடியிலான சண்டை காட்சிகள்…
Read More‘தனிநாயகன்’ தமிழ் தூதர் தனிநாயகம் அடிகளார் ஆவணப்படம் வெளியீடு
சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார் குறித்த ஆவணப்படுத்தை இயக்கியிருக்கிறார். அவரைச் சந்தித்து உரையாடியதில் இருந்து…. “தமிழுக்குப் பல்வேறு விதங்களில் தொண்டு செய்த அறிஞர் தனிநாயகம் அடிகளார். தமிழ் என்பது ஒரு மாநில மொழி அல்ல… அது உலகச் சிந்தனை கொண்ட உலகப் பொது மொழி என்பதை உலகுக்கு அறிவித்த பேரறிஞர். அறிவித்ததோடு மட்டுமின்றி அதைச் செயலாக்கம் செய்தவரும் அவர்தான். உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழ் அறிஞர்களைக் கூட்டி உலகத் தமிழ் மன்றம் என்ற ஓர் அமைப்பைஉருவாக்கி உலகத் தமிழ் மாநாடு என்ற கருத்தாக்கத்தை விதைத்து முதல் உலகத் தமிழ் மாநாட்டை மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் நடத்தியவர். அதைத் தொடர்ந்து தமிழ் ஆய்வுகள் பன்னாட்டு மொழிகளில் நடைபெறக் காரணமானவர். உலகமெங்கும் பரவிய தமிழரின் தடங்கள்…
Read Moreபல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!
பெண்களின் உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இந்தியாவில் நடைபெறும் முதல் பல்துறை மாநாடுகளில் ஒன்று HER. இந்த மாநாட்டினை Be The One கிளினிக் நிறுவனர் டாக்டர் இர்ஃபானா சாகுல் ஹமீத் முன்னெடுத்தார். *சென்னை, செப்டம்பர் 20, 2026:* Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின் உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளை மையமாகக் கொண்ட HER – வுமன்ஸ் ஹெல்த் & லான்ஜெவிட்டி சப்மிட் மாநாட்டை செப்டம்பர் 19 ஆம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள ஹோட்டல் புல்மேனில் நடத்தினார். பெண்களின் உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இந்தியாவில் நடைபெறும் முதல் பல்துறை மாநாடுகளில் ஒன்றான HER மாநாடு, பெண்களின் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் ஏற்படும் உடல்நலத் தேவைகளை வெவ்வேறு மருத்துவத் துறைகளின் கோணத்தில் அலசி…
Read Moreஇரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.
‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது அடுத்த படைப்பாக ‘நந்தன் 2’ திரைப்படத்தை தற்போது உருவாக்கி வருகிறார். இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இரா.சரவணன் எழுதி இயக்குகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தின் முதல் டைட்டில் லுக் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. வெளியாகியுள்ள டைட்டில் போஸ்டர், வழக்கமான திரைப்பட போஸ்டர்களில் இருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளது. முழுவதும் கருப்பு-வெள்ளை பின்னணியில், ஒரு சிறுமியின் கையில் தண்ணீர் ஏந்திப் பிடித்திருக்கும் உலோகப் பாத்திரத்தின் பிரதிபலிப்பில் கேமராக்களுடன் செய்தியாளர்கள் மற்றும் படக்குழுவினர் இடம் பெறுவது போன்ற காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த பிரதிபலிப்பின் மையத்தில் சிவப்பு நிறத்தில் இடம்பெற்றுள்ள ‘நந்தன் 2’ என்ற தலைப்பு, படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ‘நந்தன் 2’…
Read Moreபிக் பாஸ் தமிழ் சீசன் 10: ஒரு நாற்காலிக்காக வினோத் பாபுவுக்கு நூதன தண்டனை – முனியம்மாலுடன் மோதிய முகேஷ்!
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் ஒரு நாற்காலியை இடம் மாற்றியதற்காக வினோத் பாபுவுக்கு முனியம்மால் வித்தியாசமான தண்டனை வழங்குகிறார். முழங்காலிட்டு அமர்ந்து வீட்டைச் சுற்றி ஒரு ரவுண்ட் வருமாறு அவரிடம் கூறுகிறார். இந்த தண்டனையைப் பார்த்த முகேஷ், “இதெல்லாம் எனக்கு ஃபன்னியா தெரியல” என முனியம்மாலிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு முனியம்மால், “உங்களுக்கு ஃபன்னியா இல்லன்னா கிளம்புங்க” என பதிலடி கொடுக்க, இருவருக்கும் இடையே பரபரப்பான வாக்குவாதம் உருவாகிறது. *பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ஐ இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் காணலாம். JioHotstar-ல் எப்போது வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்யலாம். மேலும், பிக் பாஸ் வீட்டின் 24×7 நேரலை ஒளிபரப்பையும் JioHotstar-ல் காணலாம்.*
Read Moreகூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கும் “மறுஜென்ம காதல்”!
இந்தியன் டிஜிட்டல் பிலிம்ஸ் வழங்கும், வித்யா பிரேம் தயாரிப்பில், வந்தை பிரேம் எழுதி, இயக்கும் ‘மறுஜென்மம் காதல்’ படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அன்புச்செல்வன், நடிகர்கள் இமான் அண்ணாச்சி, கூல் சுரேஷ், முத்துக்காளை, கிரேன் மனோகர், கராத்தே ராஜா, இயக்குநர் E.V.கணேஷ் பாபு மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டு, வாழ்த்தினார்கள்! பாவிக்கும், ஆவிக்கும் நடக்கும் சண்டை மற்றும் உண்மையான காதல் எத்தனை ஜென்மங்கள் எடுத்தும் சேரும் என்பதே ‘மறுஜென்ம காதல்’! வந்தை பிரேம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யாதாரி நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகனாக கூல் சுரேஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அக்ஷராய் விஜய் நடிக்கிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, முத்துக்காளை, கிரேன் மனோகர், கராத்தே ராஜா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி வந்தை பிரேம் இயக்குகிறார். கிரியேட்டிவ் இயக்குநர்…
Read More
