பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட்-ன் சமீபத்திய இசை வெளியீடான ‘அன்னக்கிளி’, வாகீசன் ராசையாவின் முதல் ஆல்பமான _தமிழ் கிறுக்கனின் முதல் பாடல், ரசிகர்களின் இதயங்களை வென்று வருகிறது. வெளியான 72 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. வாகீசனால் எழுதி, பாடி, நடிக்கப்பட்ட ‘அன்னக்கிளி’, தனது சிறுவயது காதலிக்குக் காதலை தெரிவிக்கும் இளைஞனின் இனிமையான கதையை உயிர்ப்பிக்கிறது. கிராமிய தமிழ்நாட்டின் வண்ணமயமான பின்னணியில், இளம் காதலின் அப்பாவித்தனம், வெட்கம் மற்றும் விளையாட்டுத்தனமான கேலியை அழகாக படம்பிடிக்கிறது. சமீபத்தில் எத்திராஜ் கல்லூரியில் Gen Z மாணவர்களிடமிருந்து இந்த பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது, இது குழுவை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. _Top Cooku Dupe Cooku_ நிகழ்ச்சி மூலம் பிரபலமான மோனிஷா பிளெஸ்ஸி, இந்த பாடலில் வாஹீசனுடன் அழகான கெமிஸ்ட்ரியை பகிர்ந்து பாடலுக்கு மேலும் அழகு…
Read MoreAuthor: reporter
அப்போலோ மருத்துவமனைகளின் ₹8,600 கோடி விரிவாக்கத் திட்டம் – திட்ட இயக்குநராக உபாசனா காமினேனி கொனிடெலா (Upasana Kamineni Konidela) நியமனம்!
புதிய மருத்துவமனைகள் அமைத்தல், ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்துதல், நோயாளிகளுக்கான மருத்துவச் சேவைகளை எளிதாக அணுகும் வகையில் வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை உபாசனா காமினேனி கொனிடெலா மேற்கொள்ள உள்ளார். அப்போலோ மருத்துவமனைகள் இந்தியா முழுவதும் தனது மருத்துவக் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில், உபாசனா காமினேனி கொனிடெலாவை Director – Projects பொறுப்பில் நியமித்துள்ளது. அப்போலோ குழுமத்தின் தலைமை நிர்வாகம், மருத்துவக் குழுக்கள் மற்றும் திட்டப் பங்குதாரர்களுடன் இணைந்து, இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள மருத்துவமனைத் திட்டங்களின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தும் பணிகளில் அவர் கவனம் செலுத்த உள்ளார். புதிய மருத்துவமனைகள் அமைத்தல், ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவமனைகளின் விரிவாக்கம் மற்றும் மேம்படுத்துதல், நோயாளிகளுக்கான பகுதிகளில் ஒரே மாதிரியான வடிவமைப்புத் தர நிலைகளை உருவாக்குதல் ஆகியவை அவரது முக்கியப் பொறுப்புகளாக இருக்கும். மேலும், மருத்துவமனைகளில்…
Read Moreஎழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை, திரைக்கதையில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’!
பிரபல கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் கதை, திரைக்கதையில், திரைப்பட கல்லூரி மாணவர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’. எம் 4 இண்டர்நேஷ்னல் (M4 International) வழங்கும், அப்பு மூவிஸ் (Appu Movies) சார்பில் திருமதி.ஏ.முஸ்தரி M.Sc மற்றும் பாபு தூயவன் B.Com D.F.T, இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பி.நித்யானந்தன் B.A.D.F.T, இயக்குகிறார். ’பாரீஸ் ஜெயராஜ்’ படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த விவாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ‘அங்காரன்’ படத்தில் நாயகியாக நடித்த ரெய்னா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சாம்சன், ஜெகதீஷ், நிஷா, யார் கண்ணன், ஆர்.அரவிந்தராஜ், ராம்நாத், கிரிஷ் ராவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜெகன் கல்யாண் இசையமைக்கும் இப்படத்திற்கு கீதாகரண் B.V.A, ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எம்.சயீப் B.V.A, படத்தொகுப்பு செய்ய, ஸ்ரீதர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பாஸ்கர்…
Read More’டோரதி’ படத்திற்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் ராஜா சாரின் இசைதான் – கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சி
ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. நடிகர் முத்துப்பாண்டி, “இது என்னுடைய முதல் மேடை. வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சாருக்கு நன்றி. எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ராஜா சார் இசையில் வரும் வரிகளின் மீனாட்சியாய் இந்தப் படத்திற்கு வழித்துணையாய் இருந்த கீர்த்தி சுரேஷ் மேமுக்கு நன்றி”. நடிகர் செளந்தரராஜன், “கார்த்திக் சுப்புராஜ்ஜை ஷார்ட் பிலிம் காலத்திலிருந்து தெரியும். மிகச்சிறந்த திறமையான இயக்குநர். அவருடைய எண்ணம் செயலெல்லாம் ஒன்று போல இருக்கும். அவர் மதுரையையும் அந்த மனிதர்களையும் மிகவும் நேசிப்பார். இந்திய அளவிலும் அவர் பெரிய இயக்குநராக வளர வேண்டும்.…
Read More‘ஆர்எக்ஸ் 100’ நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டாவின் புதிய திரைப்படம் ‘கம்பேக்’!
‘ஆர்எக்ஸ் 100’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா தனது புதிய திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ’கம்பேக்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் மூலம் அவர் தனது திரைப்பயணத்தில் ஒரு புதிய பாதையில் பயணிக்கத் தயாராகியுள்ளார். கார்த்திகேயா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கார்த்திகேயா கிரியேட்டிவ் வொர்க்ஸ் சார்பில் இப்படத்தை உருவாக்குகிறார். இதில் கதாநாயகனாக நடிப்பதுடன், இயக்குநர் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அவரது மனைவி லோஹிதா ரெட்டி இப்படத்தின் தயாரிப்பாளராக உள்ளார். குடும்பத்தினர் இணைந்து தயாரிக்கும் இந்தத் திரைப்படம் 2027ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்திகேயா பாக்ஸராக நடித்துள்ளார் என்பதை கிளிம்ப்ஸ் காட்டுகிறது. மூன்று ஆண்டுகளாக அந்த குத்துச்சண்டை வீரர் குறித்து எந்தத் தகவலும் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் குரலோடு கதை…
Read Moreஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு களத்தில் அசத்தும் LK அக்ஷய் குமாரின் அடுத்த படம் இனிதே துவங்கியது!
‘சிறை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் LK அக்ஷய் குமார் நடிக்கும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கோணங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வரும் LK அக்ஷய் குமாரின் அடுத்த படைப்பாக இப்படம் உருவாகிறது. கிரைம் டிராமா ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பும் இன்று தொடங்கியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் LK அக்ஷய் குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை விழாவில் இயக்குநர்கள் H. வினோத், சிறுத்தை சிவா, R. S. துரை செந்தில்குமார், சுரேஷ் ராஜகுமாரி, விக்னேஷ்…
Read More‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்றுகொண்ட டி.ஜி. தியாகராஜன், சத்யஜோதி பிலிம்ஸ் பாரம்பரியத்திற்கு கிடைத்த மற்றுமொரு பெருமை!
இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி பிலிம்ஸின் தயாரிப்பில் உருவான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் தேசிய விருதை பெற்றுள்ளது. 72-வது தேசிய திரைப்பட விருதுகளில், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படத்திற்கான ரஜத் கமல் விருதை ‘கேப்டன் மில்லர்’ பெற்றுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் இந்த விருதை விழாவில் நேரில் பெற்றுக்கொண்டார். அதே திரைப்படத்திற்காக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷும், விழாவில் நேரில் கலந்துகொண்டு தனது Special Mention தேசிய அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார். இந்த இரட்டை தேசிய அங்கீகாரம், ‘கேப்டன் மில்லர்’ படக்குழுவிற்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல; பல தசாப்தங்களாக தரமான கதைகளையும், கலைநயம் மிக்க படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் சத்யஜோதி பிலிம்ஸின்…
Read Moreசினிமாவை நம்பினால் அது கைவிடாது: நடிகர் சித்து பேச்சு!
அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ .இப்படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , பிரதீப்,வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை பாலாஜி இயக்கியிருந்தார். இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர்.ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி என்ற தொழில்நுட்பக் கூட்டணியுடன் இந்தப் படத்தை கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருந்தன. சமீபத்தில் வெளிவந்த படங்களில் வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் என்று பெயர் பெற்று ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த ‘தி டார்க் ஹெவன்’ ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று இன்று பெரிய வெற்றி பெற்றுள்ளது.இது சிறு முதலீட்டுப் படத்…
Read Moreஅன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா
அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள இப் படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய ,ஆர்.கே. செல்வா படத்தொகுப்பு செய்ய, மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார். ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே.கருணாமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் ராசி சிதம்பரம் வெளியிடுகிறார். *இவ்விழாவில் ஹேப்பி ஹை பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபிநயா பேசும்போது,* “இந்தப் படம் எடுக்க முடிவு செய்வதற்குக் காரணம் கதை தான் . கதை பிடித்துப் போய் தான் இந்தப்…
Read Moreமு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் கலந்த குடும்பக் கதையான ‘அப்பா குட்டி’ திரைப்படம், அக்டோபர் 16, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகின்றது.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், ஆக்ஷன், குடும்ப உணர்வுகள் மற்றும் பாசத்தை மையமாகக் கொண்ட படமாக உருவாகி இருக்கின்றது. ஒரு அப்பாவுக்கும் அவரது மகளுக்கும் இடையிலான ஆழமான பாசமும், அவர்களுக்குள் இருக்கும் வலுவான உறவும்தான் இந்தப் படத்தின் முக்கியமான கதைக்களமாக அமைந்துள்ளது. விஜய் ஆண்டனி இந்தப் படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்திலும், ஆக்ஷன் நிறைந்த காட்சிகளிலும் நடித்து இருக்கின்றார். குடும்ப பாசம், உணர்ச்சிகள், விறுவிறுப்பான காட்சிகள் என அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.ஏற்கனவே வெளியான படத்தின் Second லுக் போஸ்டரில் விஜய் ஆண்டனியுடன் ஒரு சிறுமி இடம்பெற்றிருந்தார். இந்த போஸ்டர், அப்பா மற்றும் மகளுக்கு இடையிலான பாசமான உறவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அக்டோபர் 16 வெளியீட்டை முன்னிட்டு படக்குழு விரைவில் தீவிரமான…
Read More
