நகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு – சத்யா,ஆகியோர் ‘ரங்கபலி’ (Rangabali) புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் காமெடி சரவெடியில் இணைகின்றனர்.

நாகார்ஜுனா ரெட்டி மற்றும் பவன் பாசம்செட்டி இருவரும் இணைந்து ட்ரீம் மூவி மேக்கர்ஸ் மற்றும் நயவாயு சித்ராலு ஆகிய பேனர்களின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். இரண்டு பேனர்களின் முதல் தயாரிப்பு முயற்சியாக இந்தப் படம் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படக்குழு இன்று டைட்டில் வெளியீட்டு கிளிம்ப்ஸை வெளியிட்டது. இந்தப் படம் முற்றிலும் தனித்துவமான கருத்துருவை தாங்கி வருகிறது. இது வழக்கமான தெலுங்கு அல்லது தமிழ்ப் படம் அல்ல, மாறாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளையும், இரண்டு திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்களையும் ஒன்றிணைக்கும் ‘ Telumil ’ படைப்பு. கிளிம்ப்ஸ் ஒரு நகைச்சுவையான குறிப்புடன் தொடங்குகிறது, அதில் ஒரு தெலுங்கரும், ஒரு தமிழரும் தங்களுக்குப் பிடித்தமான உணவுகளை ரசித்து சாப்பிட்டுக்கொண்டே, தங்கள் உணவுதான் சிறந்தது என்று பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள். தெலுங்கு கதாபாத்திரம் கூல் ட்ரிங்குடன் பிரியாணியை…

Read More

நடிகர் அல்லு அர்ஜுனின் மனைவி, தொழில்முனைவோர், தாய் மற்றும் இந்தியாவின் அதிகம் பின்தொடரப்படும் பிரபலங்களில் ஒருவர் என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய அல்லு சினேகா ரெட்டி!

அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளத்தைத் தாண்டி, சினேகா ரெட்டி தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தொழில்முனைவோர், தாய், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் ஆர்வம் கொண்டவர், டிஜிட்டல் பிரபலம் என பன்முகத்தன்மையுடன் செயல்பட்டு வரும் அவர், சமூக வலைதளங்களில் 9.1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட வலுவான சோஷியல் மீடியா கம்யூனிட்டியை உருவாக்கியுள்ளார். அவரது தொழில்முனைவுப் பயணத்தின் முக்கிய அங்கமாக ‘பிகாபூ’ (Picaboo) ஸ்டுடியோ உள்ளது. தனது தொழில்முறை பணிகளுடன், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்திலும் சினேகா அதிக ஆர்வம் உள்ளவர். தனது உடற்பயிற்சி மற்றும் லைஃப்ஸ்டைல் பற்றிய கிளிம்ப்ஸை அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். தனது குழந்தைகளுடன் செலவிடும் தருணங்களையும் அவர் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அதேபோல் அவரது பயணங்கள், ஃபேஷன் மற்றும் வாழ்க்கைமுறை தொடர்பான பதிவுகளும் ரசிகர்களுடனான அவரது நெருக்கத்தை மேலும்…

Read More

டிசம்பரில் வெளியாகும் மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ (Makkal Kaavalan)

பிர்லா ஸ்டுடியோஸ் (Birla Studios ) – நீலம் ஸ்டுடியோஸ் (Neelam Studios )  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படம் – உலக அளவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். நடிகர் கே. மணிகண்டன் (K. Manikandan) நடிப்பில் உருவாகும் இந்த அதிரடி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி- அவரது பிறந்த நாளன்று அறிவிக்கப்பட்டுள்ளது கே. மணிகண்டன் நடிப்பில் பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள அதிரடி திரைப்படமான ‘மக்கள் காவலன்’ எதிர்வரும் டிசம்பர் மாதம்  4ஆம்  தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கே. மணிகண்டனின் பிறந்த நாளையொட்டி இந்த வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. லட்சியம் -மன உறுதி- தடைகளை கடந்து முன்னேறும் துணிச்சல்- ஆகியவை ‘மக்கள் காவலன்’ படத்தின் மைய…

Read More

எதிர்மனுதாரர்களின் பதில் மற்றும் வழக்கின் விசாரணைக்காக அக்டோபர் 1ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மலையாளத்தில் உருவாகியுள்ள ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி மொழி ரீமேக் மற்றும் அதன் வர்த்தகப் பயன்பாடு தொடர்பான தங்களது உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. விசாரணை நடைபெற்று முடியும் வரை, ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி பதிப்பை உலகின் எந்தப் பகுதியிலும் வெளியிடுதல், பயன்படுத்துதல், விநியோகித்தல் அல்லது வேறு எந்த வகையிலும் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எதிர்மனுதாரர்கள் மேற்கொள்ளக் கூடாது எனத் தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மலையாளத்தில் உருவான ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தைத் தழுவி…

Read More

ஹைக்கூ’ படக்குழுவுடன் மூன்றாவது முறையாக இணையும் முன்னணி விநியோக நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி !

தமிழ் சினிமாவில் காதல் கதைகள் எப்போதுமே ஸ்பெஷல். ‘மௌன ராகம்’, ‘அலைபாயுதே’, ‘மின்னலே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘96’ என பல்வேறு காலகட்டங்களில் வெளியான காதல் திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அந்த வரிசையில், புதிய தலைமுறைக்கான காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் தமிழ் திரையரங்க விநியோகத்தினை முன்னணியில் உள்ள சக்தி ஃபிலிம் ஃபேக்டரி கைப்பற்றியுள்ளது. ‘ஹைக்கூ’ படக்குழுவுடன் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இணையும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்திற்கும் படக்குழுவினருக்கும் இடையில் உள்ள பரஸ்பர நம்பிக்கையையும் இது காட்டுகிறது. திரையரங்க விநியோகத்தில் முன்னணி நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வணிக ரீதியாக நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அவற்றை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் பெயர் பெற்றது. அந்த வகையில், ‘ஹைக்கூ’ திரைப்படத்தை இந்நிறுவனம் விநியோகம் செய்வது படம் மீதான எதிர்பார்ப்பை…

Read More

பா.ரஞ்சித் பார்த்து, பாராட்டிய ‘யானைமரம்’!

ராமையா ரவிச்சந்திரன் இயக்கியுள்ள ‘யானைமரம்’ படத்தின் டிரைலரை பார்த்து, பாராட்டினார் பா.ரஞ்சித். “யானைமரம்” படத்தின் First Look போஸ்டரை தனது ‘சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2’ படப்பிடிப்பு தளத்தில் வெளியிட்டார் பா.ரஞ்சித்! அருகில் நடிகர்கள் ஜெயிலர் சீனு, ஜான் கொக்கன், ஹரீஷ் உத்தமன், கே.பிரபாகரன், இயக்குநர் ராமையா ரவிச்சந்திரன். பள்ளி மாணவர்கள் பார்க்க வேண்டிய படம். பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் உள்ள பரமு என்கிற சிறுவன், தனக்கு கிடைக்க வேண்டிய ஐந்து ரூபாய் உரிமைக்காக போராடுகிறான். மேலும், அவன் தனது சிறு வயதில் நட்டு வைத்த மா விதை தற்போது யானையின் உருவத்தில் வளர்ந்து நிற்பதைப் பார்த்து ஆச்சர்யப் படுகிறான். பரமு, அந்த யானை மரத்தை நண்பனாக பாவித்து அதனிடம் தன் இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்கிறான். இந்த சமூகத்தில் அவனுக்கான உரிமை கிடைத்ததா? அவனுக்கும்…

Read More

தமிழ் திரைப்பட இசை சங்கம் & ட்ரஸ்ட் மாயா பஜார் ஹப் நிறுவனம்

தமிழ் திரைப்பட இசை கலைஞரர்களின் சங்கம் இந்தியாவின் முதல் திரை துறை சங்கம் என்று பெருமைமிகு சங்கமாக விளங்குகிறது. இந்த சங்கத்தின் பல ஆண்டு கனவு தங்களது இடத்தில் ஒரு பிரமாண்டமான கட்டிடம் அமைத்து, அதில் வரும் வருமானத்தில் தங்களது உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான். அதற்காக இன்றைய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் ஏக மனதாக முடிவெடுத்து மாயாபஜார் ஹப் என்ற நிறுவனத்தை அணுகி அதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளனர். மாயா பஜார் நிறுவனம் தனது பல ஆண்டுகால அனுபவத்தை முன்னிறுத்தி சென்னை திரை இசை சங்கம் மற்றும் டிரஸ்டுக்கு சொந்தமான இடத்தில் மாபெரும் வணிக வளாகம் அமைத்து, அதில் திரையுலக பயன்பாட்டிற்கு தேவையான அனைத்து நவீன வசதிகளும் செய்து கொடுக்க முடிவெடுத்தனர். இந்த பத்து மாடி கட்டிடத்தை கட்ட…

Read More

அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

சுயாதீன இசை கலைஞர்களின் முயற்சியில் மியூசிக் வீடியோ ஆல்பங்கள் வெளியாகி இசை ரசிகர்களின் பாராட்டை பெறுவதுடன் மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை கடந்து சாதனையும் படைத்து வருகிறது. அந்த வகையில் இசை கலைஞர் ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ எனும் மியூசிக் வீடியோ ஆல்பம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை அனிருத்தின் இசை நிறுவனமான அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் ( Albuquerque Records) சார்பில் வெளியிட்டு, வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார். இசைக் கலைஞர் ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே நீ வரும் வழியே தள்ளாடிப் போகுதே மனமே…’ எனத் தொடங்கும் இண்டி மியூசிக்கல் வீடியோ ஆல்பம் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் தீக்ஷிதா எழுதி பாடியிருக்கிறார். இவருடன் இசையமைப்பாளர் ஸ்மித் ஆஷர் இணைந்து பாடியிருக்கிறார். இந்த பாடலுக்காக நடிகர் பவன் அலெக்ஸ் மற்றும் நடிகை பிரகதி ஸ்ரீவத்சவா ஆகியோர்…

Read More

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், செப்டம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்களிடையே நாளுக்கு நாள் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இத்திரைப்படம் பேசியிருக்கும் விஷயங்களும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பெயரும் இன்று அதிகம் விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாக உள்ளது. ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்கள் மூலம் படத்திற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருகை தருவதுடன், பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. படத்தின் முக்கியமான காட்சிகளின்போது ரசிகர்களின் ஆரவாரமும் கைத்தட்டல்களும் திரையரங்குகளை அதிரச் செய்கின்றன. திரையரங்குகளில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த அம்சங்களில் படத்தின் இசையும் ஒன்றாக அமைந்துள்ளது. குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸில் ஒலிக்கும் ‘முத்துமணி’ பாடல் ரசிகர்களின் உற்சாகத்தை கூட்டியுள்ளது. படம் நிறைவடைந்ததும் ரசிகர்கள் எழுந்து…

Read More

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் இணைந்து புதிய சங்கம் தொடங்கினர்

தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்குத் துறையில் முக்கியமான முன்னெடுப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் துறைகளைச் சேர்ந்த முக்கிய தயாரிப்பாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கியுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு முக்கிய தென்னிந்திய மொழிகளின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளில் செயல்பட்டு வந்த அமைப்புகள் தற்போது ஒரே குடையின் கீழ் இணைந்துள்ளன. இதன் மூலம், தென்னிந்திய தயாரிப்பாளர்களின் நலன்களுக்கான ஒற்றுமை மிக்க மற்றும் வலிமை வாய்ந்த அமைப்பு உருவாகியுள்ளது. தொலைக்காட்சி துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வு காண்பது, கலைஞர்களின் கால்ஷீட் மற்றும் பணிநேரங்களை முறைப்படுத்துவது, தயாரிப்பாளர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பது மற்றும் தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளுக்கு இடையிலான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவது…

Read More