தமிழ்த் திரையுலகில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரைப்படமான “அகத்தியா” திரைப்படத்தின், முதல் சிங்கிள் பாடல், “காற்றின் விரல்” இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசை, அதிர வைக்கும் விஷுவல்களுடன், திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக உள்ளது இப்பாடல். இப்பாடல் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றாக “அகத்தியா” இருக்கும் என்று உறுதியளிக்கிறது. ஃபேண்டஸி வகையில், திகில் மர்மம் நிறைந்த ஒரு புத்தம் புது உலகிற்கு அழைத்துச் செல்லும் இப்படம், வரும் ஜனவரி 31, 2025 அன்று பான் இந்திய வெளியீடாக, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. படத்திற்கு மேடை அமைத்துத் தரும் பாடல் காற்றின் விரல் ஒரு மெல்லிசை டூயட் பாடலாகும், இது அகத்தியா படத்தின் களத்தையும் அதன் மாயாஜால உணர்வுகளையும்,…
Read MoreAuthor: reporter
100 கோடி பட்ஜெட்டில் உருவாகும், “நாகபந்தம்” 5 மொழிகளில் ஒரே நேரத்தில், பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது!!
பிரபல திரைப்படைப்பாளி அபிஷேக் நாமா, தொடர்ந்து, தனது தனித்துவமான திரைப்படங்கள் மூலம், ரசிகர்களை அசத்தி வருகிறார். தற்போது “நாகபந்தம்” எனும் பிரம்மாண்டமான சாகசத் திரைப்படத்தை, உருவாக்கி வருகிறார். தி சீக்ரெட் ட்ரெஷர் எனும் டேக் லைன், ரகசிய புதையலைக் குறிக்கிறது. புதையலைத் தேடும் வித்தியாசமான களத்தில், புத்தம் புதிய தனித்துவமான சினிமா அனுபவத்தை தரும் படைப்பாக, இப்படம் இருக்கும். அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து NIK ஸ்டுடியோஸ் மூலம் கிஷோர் அன்னபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், ஆக்ஷன் பெத்த கபுவின் மூலம் அறிமுகமான விராட் கர்ணா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படத்தை, லட்சுமி ஐரா மற்றும் தேவன்ஷ் நாமா ஆகியோருடன் தாரக் சினிமாஸ் இணைந்து வழங்குகிறது. இன்று, தயாரிப்பாளர்கள் இப்படத்தின் ஒரு ப்ரீ-லுக் போஸ்டரை வெளியிட்டனர், அதில் கதாநாயகன் ஒரு பழமையான கோவிலின்…
Read Moreஐடென்டிட்டி திரைப்படம் மிகவும் புத்திசாலித்தனமான திரைக்கதை – திரிஷா
ராகம் மூவீஸ் பேனரின் கீழ் ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் சி.ஜே.ராய் தயாரிப்பில், டோவினோ தாமஸ், திரிஷா, வினய் ராய் நடிப்பில், கடந்த வாரம் வெளியான திரில்லர் திரைப்படம் “ஐடென்டிட்டி” IDENTITY. இப்படம், மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காக, இப்படம் சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இப்படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த அனுபவங்களை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். இயக்குநர் அகில் பேசும்போது… ‘எங்கள் படம் ஐடென்டிட்டி இங்கு தமிழ்நாட்டில், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் கலெக்சன் உயர்ந்து வருகிறது. இந்தப்படம் பார்த்து, பாராட்டி கருத்து தெரிவித்த, அனைத்து நண்பர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி. இப்படத்தில் கதை, ஆக்சன் காட்சிகள் எல்லாம் உங்களுக்காக 1 1/2 வருடம்…
Read Moreகலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ” !!
MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகி வருகிறது “யோலோ”. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அமீர் மற்றும் சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சாம், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச்செய்யும் அழகான காதல் திரைப்படமாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாக, இப்படத்தை இயக்குகிறார். இரண்டு பேர் வாழ முடியாத வாழ்க்கையை, இன்னொரு இரண்டு பேர் வாழ்வார்கள், அது எப்படி என்பதுதான் படம். வாழ்க்கை ஒரு முறை தான் அதை சரியாக வாழுங்கள் எனும் கருத்தில், காதல், காமெடியுடன் ஃபேன்டஸி கலந்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக இப்படம் உருவாகி வருகிறது.…
Read Moreநடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் பர்ஸ்ட் லுக்
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சீப் பிசினஸ் ஆபிசர் உமேஷ் குமார் பன்சால் பேசுகையில், ” தனித்துவம் மிக்க மற்றும் அழுத்தமான கதைகளை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் எங்களின் அர்ப்பணிப்பிற்கு ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் ஒரு சான்றாகும். ஜீ.வி. பிரகாஷ் குமாரின் அபாரமான திறமை மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட குழுவுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறோம். கடல் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கற்பனையுடன் கூடிய சாகசம் நிறைந்த படைப்பு ..பார்வையாளர்களை கவரும். மேலும்…
Read Moreராக்கிங் ஸ்டார் யாஷ், தனது பிறந்த நாளை முன்னிட்டு “டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்” படத்தின், அசத்தலான கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்!
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், அவரது நடிப்பில், மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதிரடி மாஸாக இருக்கும் போஸ்டர், யாஷின் பிறந்த நாளில், ஒரு பெரும் ஆச்சரியம் காத்திருக்கிறது என அறிவிக்கிறது. ராக்கிங் ஸ்டார் யாஷ் சமூக ஊடகங்களில் இந்த போஸ்டரைப் பகிர்ந்துள்ளார், போஸ்டரில் “நாயகனை கட்டவிழ்த்துவிடுகிறோம்…” என்ற டேக்குடன், யாஷ் வெள்ளை நிற டக்ஷீடோ ஜாக்கெட் மற்றும் ஃபெடோரா உடையில் மறைவான நிழலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார், புகை வளையத்தை, ஊதியபடி விண்டேஜ் காரில் சாய்ந்து நிற்கிறார். “இருத்தலியல் நெருக்கடி” என்ற வார்த்தைகள், ஒரு இருண்ட மற்றும் புதிரான பயணத்தைக் குறிக்கிறது. இந்த போஸ்டர் சர்வதேச தரத்துடன் அழகியலின் வடிவமாக அமைந்துள்ளது. இந்தத் திரைப்படம் எந்த…
Read Moreதமிழனின் வரலாற்றைப் போற்றும் “பூர்வீகம்” விரைவில் திரையில் வெளிவர இருக்கிறது!!
பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் R முருகானந்த் தயாரிப்பில், இயக்குநர் G.கிருஷ்ணன் இயக்கத்தில், கதிர், மியாஶ்ரீ நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்றைப் போற்றும் படைப்பாக, உருவாகியுள்ள திரைப்படம் “பூர்வீகம்”. படத்தின் பணிகள் முடிந்த நிலையில், திரையரங்குகளில் வெளியிட தற்போது பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. கதைச்சுருக்கம் : நம் இந்திய நாட்டின் முதுகெலும்பான தொழில் விவசாயம் .இரண்டு தலைமுறையாக இளைஞர்கள் தங்களின் பூர்வீகத்தை விட்டு இடம்பெயர்ந்து படிப்பிற்காகவும் தொழிலுக்காகவும் முழுமையாக இடம்பெயர்ந்து தற்பொழுது நகரத்திலேயே வாழ்ந்து வருகின்றனர் . நகரத்திற்கு இடம்பெயரும் இளைய சமுதாயம், நம் கலாச்சாரத்தையும், வாழ்வியலையும், விவசாயத்தின் மேன்மையையும், அப்படியே உதறி தள்ளிவிட்ட விவசாயத்தின் அருமையை எடுத்துச் சொல்லும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. படம் குறித்து தயாரிப்பாளர் டாக்டர் R முருகானந்த்…
Read Moreவேலம்மாள் பள்ளியில் நடைபெற்ற 12-வது வீதி விருது விழா, 2025
வேலம்மாள் நெக்சஸ் மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து 12-வது வீதி விருதுவிழா நிகழ்வை 2025, ஜனவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பெருமையுடன் நடத்தியது. இந்தக் கலைத் திருவிழா, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை வடிவங்களைக் கெளரவப்படுத்தவும், மீண்டும் உயிர்ப்பிக்கவும், ஊக்குவிக்கவும் நோக்கமாகக் கொண்டது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் வருகைதந்து தங்கள் கலைத்திறன்களை மிகுந்த ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர். இந்தக் கலைத் திருவிழா, சென்னை, முகப்பேர் கிழக்கில் உள்ள வேலம்ம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடந்தது… தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கர்னல். பேராசிரியர் (டாக்டர்) என். எஸ். சந்தோஷ் குமார், வேலம்மாள் நெக்சஸ் குழுமத்தின் தாளாளர் திருமிகு. எம். வீ. எம். வேல்மோகன், மாற்று ஊடக மையத்தின் நிறுவனர் பேராசிரியர் (டாக்டர்)…
Read Moreதண்டேல் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது !!
இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், பன்னி வாஸ் தயாரித்து அல்லு அரவிந்த் வழங்கும், இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் நடந்து வருகிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும், இந்தப்படத்தின் முதல் சிங்கிள் “புஜ்ஜி தல்லி” ஒரு பரபரப்பான ஹிட் ஆனது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது சிங்கிள் “நமோ நம சிவாய” பாடல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிவசக்தி பாடல், நடனம், பக்தி மற்றும் கம்பீரத்தை ஒரு இணையற்ற ஆடியோ-விஷுவல் அனுபவமாகக் கலந்து தந்து, ஒரு தலைசிறந்த படைப்பாக மஹாதேவனின் மகிமையைப் போற்றுகிறது. இந்தப் பாடலானது ஒரு தெய்வீகத் தன்மையுடன், நம்முள் ஒரு…
Read Moreசினிமாவில் அரசியல் இருக்கலாம் அரசியலில் சினிமா இருக்கக் கூடாது – இயக்குநர் ஆர் வி உதயகுமார் !!
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் More 4 Production தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ” கண்நீரா “. மாறுப்பட்ட களத்தில் வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்…. கதையாசிரியர் கௌசல்யா நவரத்தினம் பேசியதாவது… இந்த தருணம் மிக மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை மாதிரி வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு இத்தனை ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி. உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் கதிரவென் ஆகியோருக்கு நன்றி. என்னை நம்பி நான் எழுதிய கதையை, இத்தனை பெரிய படைப்பாக, இங்கு கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி. இந்தப்படம் வெற்றியடைய வேண்டுமெனக் கடவுளை வேண்டிக்கொள்கிறேன். நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது… கண்நீரா படக்…
Read More