‘பிக் பாஸ் சீசன் 3’ வெற்றியாளரும், ‘வேலன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஜின் – தி பெட்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜின் -தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்’ ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை தீபக் கவனிக்க கலை இயக்கத்தை வி. எஸ். தினேஷ்குமார் மேற்கொண்டிருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும்…
Read MoreCategory: Uncategorized
விண்வெளி அறிவியல் கண்காட்சியை ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் ரஜினிகாந்த் – லதா ரஜினிகாந்த் பார்த்தார்கள்.!
ஸ்பேஸ் டெஸ்க் கிரியேஷன்ஸ் என்ற அமைப்பின் சார்பில் வேளச்சேரியில் உள்ள தி ஆஸ்ரம் பள்ளி யில் ” விண்வெளி அறிவியல் பாடம்” தொடர்பான கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இதனை திரு. ரஜினிகாந்த் மற்றும் திருமதி. லதா ரஜினிகாந்த் இருவரும் பார்வையிட்டு வாழ்த்தினார்கள். இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கண்டு களிக்கலாம். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. முற்றிலும் அனுமதி இலவசமாகும் . அடுத்த மாதம் (ஜூன்) 10 ஆம் தேதி வரை பார்த்து ரசிக்கலாம். இந்த கண்காட்சியில் ராக்கெட் மற்றும் தொலை நோக்கி உருவாக்கம், திறந்தவெளி திரையரங்கம், நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பகுதியின் மாதிரி அறை , நிலா வடிவிலான பலூன், வான் பொருட்களை காணுதல், கோளரங்கம், கோள்களின் கண்காட்சி என ஏராளமான விண்வெளி அதிசயங்கள்…
Read Moreவிஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் இயக்குநர் நித்திலன் வெளியிட்ட ஆரி அர்ஜுனனின் “4த் ஃப்ளோர்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !!
முன்னணி நட்சத்திரங்கள் MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும், பரபர திரில்லர் திரைப்படம் “4த் ஃப்ளோர்”. தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் இயக்குநர் நித்திலன் ஆகியோர் இப்படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக்கை சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளனர். ஆரி அர்ஜுனனின் நடிப்பில் வித்தியாசமான களத்தில் அதிரடியாக வெளியாகியிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர்…
Read Moreஸ்ரீகாந்த் – புஜிதா பொன்னாடா நடித்த ” கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” மார்ச் 14ஆம் தேதி வெளியாகிறது
ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் MY INDIA மாணிக்கம் தனது முதல் தயாரிப்பாக தயாரிக்கும் படத்திற்கு ” கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” என்று பெயரிட்டுள்ளனர். உன்னை நான் சந்தித்தேன்,உதயகீதம் ,உயிரே உனக்காக, நினைவே ஒரு சங்கீதம் போன்ற சில்வர் ஜூப்ளீ திரைப்படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் K.ரங்கராஜ் இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, கதாநாயகியாக புஜிதா பொன்னாடா நடித்துள்ளார். இரண்டாவது நாயகனாக பரதன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேல் நடித்துள்ளார். மற்றும் பார்கவ் , நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்னவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மை இண்டியா…
Read Moreபிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இசை ஆல்பத்தை வெளியிட்டது
இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, பெரிதும் பாராட்டப்பட்ட அதன் தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2 தொடரின் மர்மம் நிறைந்த காட்சிகளை பார்வையாளர்கள் கண்டு ரசித்து மகிழும் அனுபவத்தை தீவிரப்படுத்தும் வகையில் மிக அற்புதமாக உருவாக்கப்பட்ட 18 பாடல்கள் அடங்கிய சீசன் இரண்டின் இசை ஆல்பத்தை இன்று வெளியிட்டது. காளிபட்டணத்தின் பெரும் புதிரான சமூகக் கட்டமைப்பை சீர்குலைத்து பாதிப்பை விளைவிக்கக் கூடிய ஒரு ஒரு மரணத்தை மையமாகக் கொண்ட மனதை திடுக்கிடச்செய்து பதைபதைக்க வைக்கும் இந்த சஸ்பென்ஸ் த்ரில்லரின் , இரண்டாவது சீசன், அதன் மர்மத்தை விடுவிக்கும் அதே வேளையில் அதன் அடி ஆழத்தில் மறைந்திருக்கும் சமூகத்தின் கண்ணுக்குப் புலப்படாத பிளவுகளை வெளிக்கொண்டுவருகிறது. . சூழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2 திரைப்படத்தின் முழுமையான…
Read Moreஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் பிரம்மாண்ட ஆக்சன் படமான “மதராஸி” பட ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது !!
ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் N. ஶ்ரீ லக்ஷ்மி பிரசாத் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க, பிரம்மாண்டமாக உருவாகும் “மதராஸி” படத்தின், டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று வெளியாகியுள்ளது. தமிழில் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தந்து வரும் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளில், ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிறப்பு வீடியோ ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு, புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முறையாகக் கூட்டணி அமைத்துள்ள இப்படத்தின் மீது, அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போதைய டைட்டில் லுக்…
Read Moreஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”
ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி” கதை, திரைக்கதை எழுதி, கதையின் நாயகனாக நடித்து, இயக்குகிறார் வீர அன்பரசு. இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் சிவராமன் இசை அமைத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தங்கை இஸ்ரத் காதரி இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். பழநி பாரதி, தேன்மொழி, பொன்னடியான் ஆகியோர்கள் பாடல்கள் எழுதி உள்ளனர். இஸ்ரத் காதரி, ஹரிஷ் ராகவேந்தர், கார்த்திக், ஸ்வேதா, தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் பாடியுள்ளனர். நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரரின் காதல் கதை தான் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி” கதையின் நாயகனாக வீர அன்பரசு நடிக்கிறார். ஜோடியாக மும்பை நடிகை ஏஞ்சல் நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், பிருத்திவிராஜ் பப்லு, சூப்பர் குட் சுப்பிரமணி, வாழை ஜானகி, முல்லை, மதுமிதா, பாய்ஸ் ராஜன், இயக்குனர் அரவிந்தராஜ், ஒஏகே சுந்தர்,…
Read Moreசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய, “திரு மாணிக்கம்” திரைப்படம், ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது !
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, புத்தம் புதிய ப்ளாக்பஸ்டர், திரு மாணிக்கம், திரைப்படம் 24 ஜனவரி 2025 முதல், ஓடிடி தளத்தில் ப்ரீமியர் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. . ஐந்தாம் வேதம், ரகுதாதா மற்றும் டிமாண்டி காலனி போன்ற வெற்றிப் படைப்புகளைத் தொடர்ந்து, ZEE5 மீண்டும் ஒரு அற்புதமான ஃபேமிலி டிராமா திரைப்படத்துடன் ரசிகர்களை அசத்தவுள்ளது. 2024 ஆம் வருடத்தில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகப் பாராட்டப்பட்ட, “திரு மாணிக்கம்” திரைப்படத்தை, இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அனன்யா, பாரதிராஜா மற்றும் ஜசீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நல்லவனாக இருப்பதற்கே, பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டாலும், இறுதியில் நாயகனின் மனிதநேயம் எப்படி வெற்றி பெறுகிறது என்பதைக் காட்டும் இப்படம், ஜனவரி 24…
Read Moreலண்டனில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு அடுத்த வருடம் வேலுநாச்சியார் பிறந்த நாளுக்கு வாழ்க்கை வரலாற்று திரைப்படம் வெளியாகிறது
டிரண்ட்ஸ் சினிமாஸ் ஜெ எம் பஷீர் தயாரிப்பில் ஆர் அரவிந்தராஜ் இயக்கத்தில் ஆயிஷா நடிக்கும் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ டீசர் வேலுநாச்சியார் பிறந்தநாள் அன்று வெளியீடு* லண்டனில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு அடுத்த வருடம் வேலுநாச்சியார் பிறந்த நாளுக்கு வாழ்க்கை வரலாற்று திரைப்படம் வெளியாகிறது இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையும் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்ட ஒரே அரசியுமான வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ எம் பஷீர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஆர் அரவிந்தராஜ் இயக்க, வேலுநாச்சியாராக முதன்மை வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆகிறார் ஆயிஷா. ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ திரைப்படத்தில் முக்கிய பாத்திரமான பெரிய மருதாக இப்படத்தின் தயாரிப்பாளரும், ‘தேசிய தலைவர்’ திரைப்படத்தில் பகம்பொன் முத்துராமலிங்க தேவராக…
Read Moreமழையில் நனைகிறேன் -திரை விமர்சனம்
பட்டப்படிப்பை முடிக்காமல் நண்பர்களுடன் வெட்டியாக ஊர் சுற்றி வரும் பணக்கார இளைஞன் அன்சன் பால்.அமெரிக்கா சென்று மேற்படிப்பை முடிக்க அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபடும் நாயகி பிரபா ஜான்.ஒரு மழை நேர பொழுதில் நாயகியை சந்திக்கும் நாயகனுக்கு பார்த்ததுமே காதல் பற்றிக்கொள்ள, அவள் கண்ணில் படும் போதெல்லாம் காதலை சொல்ல முற்படுகிறான், அதற்காக அவளை விடாமல் துரத்துகிறான். ஒரு கட்டத்தில் நாயகனின் அணுகுமுறை பிடிக்காத நாயகி எதற்காக இந்த தொடரல் என்று விசாரிக்கிறாள்.நாயகன் காதலை சொல்ல, நாயகியோ தன் அமெரிக்க கனவை சொல்லி என்னை மறந்து விடு என்கிறாள். ஆனால் நாயகனோ, நீ என் காதலை ஏற்றுக் கொள்ளும் வரை உன்னை தொடர்வது நிற்காது என்று அடம் பிடிக்க…ஒரு கட்டத்தில் நாயகியும் காதலுக்கு ஓகே சொல்ல முடிவு செய்கிறாள். அதற்காக அவனுடன் குறிப்பிட்ட இடத்திற்கு பைக்கில் பயணம்…
Read More