சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாண்புமிகு பறை” திரைப்படம், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழா (Cannes Film Festival)–யில் மே 2025-இல் சிறப்பாக பங்கேற்று, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்று, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இத்திரைப்படம் மீண்டும் அதே கேன்ஸ்–ல் நடைபெறும் World Film Festival–இல் கலந்து கொண்டு, இம்மாதம் நடைபெற்ற Official Selection–இல் Best Social Justice Film (சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம்) என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. இதற்கான வெற்றி அறிவிப்பு வரும் நவம்பர் 27 அன்று வெளியாக உள்ளது. அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற Othismos Film Festival–இல் Culture, Heritage and Local Identity (கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் அடையாளம்) என்ற பிரிவில் விருதைப்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!
BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திரம் அருண் விஜய் நடிப்பில், “மான் கராத்தே” இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்டைலிஷ் ஆக்ஷன் படம் “ரெட்ட தல”, வரும் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் அறிவிப்பு வெளியாகிய தருணத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டீசர், திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் அபாரமான வரவேற்பைப் பெற்றது. தற்போது, படக்குழு அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. முழுக்க முழுக்க ஸ்டைலிஷ் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தில், அருண் விஜய் மாறுபட்ட இரண்டு விதமான கதாப்பாத்திரங்களில் இரட்டை வேடத்தில் மிரட்டியுள்ளார். அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ்…
Read Moreலாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியத்தில் பிப்ரவரி 12, 2026 அன்று திரையிடப்படும் இந்திய திரைப்படம் ‘பிரமயுகம்’!
நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ராகுல் சதாசிவம் இயக்கத்தில் உருவான ‘பிரமயுகம்’ (மலையாளம்- 2024) திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியூம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸில் திரையிடப்பட உள்ளது. இந்தப் படத்தின் திரையிடல் பிப்ரவரி 12, 2026 அன்று அகாடமி அருங்காட்சியகத்தில் ஜனவரி 10 – பிப்ரவரி 12 வரையிலும் நடைபெறும் நிகழ்வில் திரையிடப்படும். ராகுல் சதாசிவன் எழுதி இயக்கிய ‘பிரமயுகம்’ திரைப்படம் கேரள நாட்டுப்புறக் கதைகளின் இருண்ட காலங்களின் பயம், சக்தி மற்றும் மனித பலவீனம் பற்றிய கதையாகும். கருப்பு & வெள்ளையில் (Black & White) வெளியான இந்தத் திரைப்படம் அதன் ஆளுமைத்திறன், கதைசொல்லல் ஆகியவற்றிற்காகப் பாராட்டப்பட்டது. ‘பிரமயுகம்’ திரைப்படத்தில் கொடுமோன் போட்டி கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் நடிகர் மம்முட்டி. அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ்…
Read Moreடான் டிராக்டன்பெர்க்கின் ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படம் ராட்டன் டொமேட்டோஸில் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது!
’பிரிடேட்டர்’ திரைப்படத்தின் அடுத்த பாகம் மிகச்சிறப்பாக வந்திருப்பதை இயக்குநர் டான் டிராக்டன்பெர்க் உறுதிபடுத்தியுள்ளார். அவரது சமீபத்திய படமான ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ ராட்டன் டொமேட்டோஸில் விமர்சகர்களின் 90% மதிப்பெண்களுடன் பாராட்டுகள் பெற்றது. அறிவியல் புனைக்கதையான இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் புதுமையான அறிவியலும் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும். டிராக்டன்பெர்க்கின் ’பிரே அண்ட் பிரிடேட்டர்: கில்லர் ஆஃப் கில்லர்ஸி’ன் வெற்றியைத் தொடர்ந்து, ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படமும் புதுமையான கதையாக்கம், அதிரடி ஆக்ஷன் ஆகியவற்றிற்காக விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதில் பிரிடேட்டர் முதன்மை கதாநாயகனாகக் காட்டப்படுகிறது. இந்தப் படத்தில் எல்லே ஃபேன்னிங் மற்றும் டிமிட்ரியஸ் ஸ்கஸ்டர்-கோலோமடங்கி ஆகியோருடன் திறமையான பல நடிகர்களும் நடிகத்துள்ளனர். படம் பற்றி நடிகர் டிமிட்ரியஸ் ஸ்கஸ்டர்-கோலோமடங்கி பகிர்ந்து கொண்டதாவது, “ரசிகர்கள் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பிரிடேட்டர் ஃபிரான்சைஸின் இந்தப் படத்தைப் பார்த்து…
Read Moreகிடாக்கறி விருந்து வைத்து பைசன் படத்தின் வெற்றியை ஊர் மக்களோடு கொண்டாடிய இயக்குனர் மாரிசெல்வராஜ்
பைசன் படம் வெற்றியை படத்தில் பணியாற்றிய ஊர் மக்களோடு கொண்டாடிய இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்க்கத்தில் துருவ், அனுபமா, ரெஜிஷா, அமீர் நடிப்பில் வெளியான பைசன் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு பிடித்த படமாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் லாபகரமான படமாகவும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் நன்றி அறிவிப்பு விழா சமீபத்தில் படக்குழுவினர் நடத்தினார்கள். அதனை தொடர்ந்து இந்த படம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்றது உதவிய, பணியாற்றிய விளையாட்டுவீரர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருநெல்வேலியில் இயக்குனர் மாரிசெல்வராஜ் கலந்துகொண்டு கிடா விருந்து உபசரிப்போடு , ஊர்மக்களோடு படத்தின் வெற்றியை கொண்டாடினார். மாரிசெல்வராஜின் படங்களில் தனது ஊர் மற்றும் கிராமத்து அசல் மனிதர்களை தனது திரைக்குள் கொண்டுவருவதை வழக்கமாகக்கொண்டுள்ளர். அந்த வகையில் பைசனின்…
Read Moreசூப்பர் ஸ்டாரின் பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் அனந்தா!
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அனந்தா. வலியை அமைதியாக மாற்றும் நம்பிக்கையை மையமாகக கொண்ட ஐந்து ஆழமான, மனதை நெகிழ வைக்கும் கதைகளை இப்படம் வழங்குகிறது. பா. விஜய் வசனம் மற்றும் பாடல்களை எழுத, தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார். இப்படம் ஒவ்வொரு மனித வாழ்விலும் வழிகாட்டும் கண்ணுக்கு தெரியாத அருளை படம்பிடித்து காட்டுகிறது. ஜெகபதி பாபு, சுஹாசினி மணிரத்னம், ஒய். ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், ஸ்ரீ ரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம் மற்றும் பலர் நடித்துள்ள அனந்தா ஒரு வழக்கமான பக்தி படம் அல்ல..! இது வாழ்க்கை, அன்பு மற்றும் இறைவனின் காணமுடியாத கிருபையை கொண்டாடும் ஒரு திரைக்காவியம். யதார்த்தம், உணர்ச்சி மற்றும் தெய்வீக ஆற்றல் ஆகியவற்றை கலந்து, இப்படம் ஐந்து இதயப்பூர்வமான…
Read More‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம், உலகமெங்கும் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!
ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் சமீபத்தில் வெளியான டீசர் படத்தின் மீது பெரும் ஆவலைத் தூண்டிய நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை வெளியிட்டு, படக்குழு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் திரில்லராக…
Read Moreஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!
ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் சமீபத்தில் வெளியான டீசர் படத்தின் மீது பெரும் ஆவலைத் தூண்டிய நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை வெளியிட்டு, படக்குழு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் திரில்லராக…
Read More“என் முழு உடலையும் ஆக்கப்பூர்வமான ஏதோவொன்றில் ஈடுபடுத்துவதை நான் ரசிக்கிறேன் “- ‘பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படத்திற்கான ஸ்டண்ட் காட்சி பயிற்சி பெற்றது பற்றி நடிகை எல்லே ஃபான்னிங்!
தனது வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து விலகி, மிகவும் எதிர்பார்க்கப்படடும் அதிரடி திரில்லர் படமான ‘பிரிடேட்டர்: பேட்லேண்ட்’ஸில் தனது முன்னணி கதாபாத்திரத்திற்காக நடிகை எல்லே ஃபான்னிங் ஒரு மாத காலம் கடினமான ஸ்டண்ட் பயிற்சிகளை கற்றுக்கொண்டார். அத்லெட்டான எல்லே உடல் ரீதியாக தேவைப்படும் அனைத்து உழைப்பையும் அர்ப்பணிப்பையும் இந்த ஸ்டண்ட் பயிற்சிக்கு கொடுத்துள்ளார். ‘Never-done-before’ எனப்படும் இதற்கு முன்பு செய்திடாத பல ஆச்சரியமூட்டும் ஸ்டண்ட் காட்சிகளை திரையில் கொண்டு வந்துள்ளார். தான் பயிற்சி பெற்ற ஸ்டண்ட் காட்சிகள் பற்றி எல்லே பகிர்ந்து கொண்டதாவது, “நிறைய ஸ்டண்ட் மற்றும் வொயர் வொர்க் பயிற்சிகள் செய்ய வேண்டியிருந்தது. அடிப்படையில் நான் ஒரு அத்லெட் என்பதால் வளரும்போதே நிறைய விளையாட்டுகளில் பங்கேற்று இருக்கிறேன். என் முழு உடலையும் ஏதோவொன்றில் ஈடுபடுத்துவதை நான் ரசிக்கிறேன். ஸ்டண்ட் பயிற்சி என்பதையும் தாண்டி கடந்த ஒரு மாதம்…
Read Moreகன்னடம் – தமிழ் என்ற வேற்றுமையை நான் இங்கு கண்டதில்லை – இயக்குனர் தயாள் பத்மநபான்
“கொன்றால் பாவம்” திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் தயாள் பத்மநாபன். விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழரான இவர், கன்னடத்தில் 19 படங்களையும், தெலுங்கில் ஒரு படத்தையும், தமிழில் கொன்றால் பாவம், மாருதிநகர் காவல்நிலையம் (ஆஹா ஒரிஜினல்) ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். பழம்பெரும் கன்னட நாடகமொன்றைத் தழுவி, இவர் 2018-ஆம் ஆண்டு தயாரித்து-கதை, திரைக்கதை எழுதி இயக்கிய கன்னட படம் “ஆ கராள ராத்திரி”. பின்னர் இதனை “அனகனகா ஒ அதித்தி” என்ற பெயரில் தெலுங்கிலும், “கொன்றால் பாவம்” என்ற பெயரில் தமிழிலும் இயக்கினார். 2018-ம் ஆண்டுக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதுக்காக, “ஆ கராள ராத்திரி”. சிறந்த படம், சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டது. பரிசீலனைப்பட்டியலில் கே.ஜி.எப்-1 போன்ற படங்களும் இருந்தன. 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கோவிட் தொற்று காரணமாக…
Read More