ஜனவரியில் வெளியாகிறது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘தி பெட்’

வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்..மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்’. இப்படத்தினை ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் தயாரித்துள்ளார். வரும் ஜனவரியில் தமிழகமெங்கும் வெளியாக உள்ள இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா என முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தினை கோவையைச் சேர்ந்த ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் எனும் புதிய நிறுவனம் வெளியிடுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியிலும் தேயிலைத் தோட்டங்களிலும் இப்படத்தினை படமாக்கி உள்ளனர். இதுவரை வெளிவந்துள்ள பெரும்பாலான படங்களில் கதாநாயகனோ, கதாநாயகியோ அல்லது வேறு ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் வழியாகவோ கதை சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட அம்சமாக ஊட்டியில் உள்ள ஒரு காட்டேஜில் இருக்கும் பெட்டின்…

Read More

“அங்கம்மாள் கதாபாத்திரமாக மாறுவதற்கு பயமில்லாத நேர்மை தேவைப்பட்டது”- நடிகை கீதா கைலாசம்!

நஜாய் பிலிம்ஸ் & ஃபிரோ மூவி ஸ்டேஷனுடன் இணைந்து, ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்கும் ’அங்கம்மாள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திறமையான நடிகர்கள் கீதா கைலாசம், சரண் சக்தி மற்றும் ’நாடோடிகள்’ புகழ் பரணி ஆகியோர் இடம்பெற்றுள்ள டிரெய்லரும் படம் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று வெளியாகும் இந்தப் படத்திற்கு ரசிகர்களுடன் படக்குழுவினரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். தைரியம், கருணை மற்றும் தாய்மையின் சொல்லப்படாத நம்பிக்கைகள் ஆகியவற்றை அங்கம்மாள் கதாபாத்திரம் மூலம் தனது நடிப்பில் பிரதிபலித்திருக்கிறார் நடிகை கீதா கைலாசம். தமிழ்நாட்டு கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்தக் கதைக்களத்தில் ரவிக்கை உடுத்தாத பழக்கம் கொண்டவர் அங்கம்மாள். அவரது மகன் திருமணம் முடிந்த பின்னர் தன்னுடைய மனைவி தாயின் ரவிக்கை அணியாத பழக்கத்தை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று…

Read More

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கு ஐமேக்ஸ் திரையரங்குகள் தயாராகிறது! டிசம்பர் 5 ஆம் தேதி முதல் முன்பதிவுகள் தொடங்குகின்றன!

உலகின் மிகப்பெரிய திரைப்படமான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை ஐமேக்ஸின் சிறந்த இருக்கைகளில் அனுபவித்து பார்க்கும் வாய்ப்பைப் பெறுங்கள். மேலும், டால்பி விஷன் சினிமாவில் முதல் முறையாக வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய திரைப்படமான ‘அவதார்’ வெளியீட்டை ஒட்டி இந்த மாதம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகமாகத் தொடங்கியுள்ளது. ஐமேக்ஸ் மற்றும் டால்பி விஷன் திரையரங்குகளில் சிறப்பு சலுகையுடன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்திற்கான முன்பதிவு டிசம்பர் 5 ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்குகிறது. ’அவதார்’ திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் சிறந்த இருக்கைகள், பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் தரமான ஒலியுடன் படத்தை சிறந்த முறையில் கண்டு களிக்க ஐமேக்ஸ் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. முன்பதிவு தொடங்கும் வேளையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவதார் தீமுடன்…

Read More

ZEE5 இல் வெளியான ‘ரேகை’ திரில்லர் சீரிஸ், 100  மில்லியன் பார்வை  நிமிடங்களை கடந்து சாதனை படைத்தது !!

இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 இல் நவம்பர் 28 ஆம் தேதி வெளியான “ரேகை” சீரிஸ், ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய க்ரைம் உலகின் கருவை மையமாக வைத்து, இயக்குநர் தினகரன் M, இந்த சீரிஸை உருவாக்கி – எழுதி – இயக்கியுள்ளார். இந்த சீரிஸை S.S Group Production சார்பில் S. சிங்காரவேலன் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர் உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது? S.I. வெற்றி (பாலஹாசன்) மற்றும் காவலர் சந்தியா (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்க…

Read More

அம்மாவுடன் இணைந்து  ‘வா வாத்தியார்’  பட பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன் !!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து டீசர், பாடல்கள், ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை உற்சாப்படுத்தி வருகிறது. இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் சேர்ந்து பாடிய பாடல் வீடியோ வைரலாகி வருகிறது. புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை தனது அம்மாவுடன் சேர்ந்து ரீமிக்ஸ் செய்து பாடிய பாடல் தான் இப்போது இணையம் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வீடியோவில் நடிகர் கார்த்தி சந்தோஷ் நாரயாணனின்…

Read More

ரேகை – இணையத் தொடர் விமர்சனம்

பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் மர்ம நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எம்.தினகரன் உருவாக்கிய வெப் சீரீஸ் ‘ரேகை.’ யூகிக்க முடியாத திருப்பங்களோடு, அதிர்ச்சிகரமான சம்பவங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு புதிய புலனாய்வு திரில்லர் அனுபவத்தை கொடுத்திருக்கிறார். 6 எபிசோட்களையும் ஒன்றாக பார்த்தாலும், நேரம் போனதே தெரியாதவாறு விறு விறு கதையமைப்பு இ தன் சிறப்பம்சம். ஒவ்வொரு எபிசோட்டிலும் ஒரு திருப்பம், அதன் மூலம் நகரும் கதையின் அடுத்த கட்டம் ஏழாவது எபிசோடு வரை திரில்லருக்கு குறையாத கதை அமைப்பு இதன் சிறப்பம்சம். கதையில் நிகழும் கொலை சம்பவங்களை அறிவியலோடு இணைத்து காட்சிகளை வடிவமைத்த விதம் இன்னும் ஸ்பெஷல். சரி, விமர்சனத்திற்கு வருவோம். ஆண்கள் விடுதி குளியல் அறையில் இளைஞன் ஒருவன் செத்துக் கிடக்கிறான். குளியலறை உள்ளே தாழ்ப்பாள் போட்டு இருக்கும் நிலையில் அது தற்கொலையாகத் தானே…

Read More

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ அம் கேம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதிரடி அவதாரத்தில், துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக்கை, படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் (Jom Varghese) Wayfarer Films  சார்பில்  பெரும் பொருட்செலவில் தயாரிக்கும்  இப்படத்தை, நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) இயக்குகிறார். இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா (Sajeer Baba) , இஸ்மாயில் அபூபக்கர் (Ismail Aboobacker), பிலால் மொய்து (Bilal Moidu ) எழுத, வசனங்களை – ஆதர்ஷ் சுகுமாரன் (Adarsh Sukumaran) , ஷஹபாஸ் ரசீத் (Shahabas Rasheed) ஆகியோர் எழுதியுள்ளனர் ‘RDX’ படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த முயற்சியாக உருவாகும் இந்த படத்துக்கான மற்ற நடிகர்களின் போஸ்டர்கள் முன்பே வெளியிடப்பட்டிருந்தன. இப்போது துல்கர் சல்மானின்…

Read More

இயக்குனர்கள் வெங்கட் பிரபு, கணேஷ் கே பாபு வெளியிட்ட “அனலி” ஃபர்ஸ்ட் லுக்

சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “அனலி”. இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை  தல, தளபதி இருவரையும் வைத்து மிரட்டல் படங்களைக் கொடுத்த  இயக்குனர் திரு.வெங்கட் பிரபு மற்றும் டாடா, கராத்தே பாபு படங்களின் இயக்குனர் திரு.கணேஷ் கே பாபு ஆகியோர் வெளியிட்டனர். இயக்குனர் தினேஷ் தீனா அனலி படத்தை பற்றி கூறியதாவது, “இந்தப் படத்தின் கதை ஒரே இரவில் நடக்கக் கூடியது. மூன்றாம் உலகப்போர், கடத்தல் மன்னன் லால் சேட்டா, கான் பாய் மற்றும் ரங்கராவ் ரெட்டி இவர்களிடம் மாட்டிக்கொள்ளும் ஜான்சி மற்றும் அவளது பத்து வயது குழந்தை ஆகியவற்றைப் பற்றி பேசுகிறது. காட்டு மிருகங்களை விட மிகவும் மோசமானவன் மனிதன் அதில் மிகவும் முக்கியமானவன் இந்த லால்…

Read More

கே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் “ரோஜா மல்லி கனகாம்பரம்”படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில்,தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் B. E. தயாரிப்பில், இயக்குநர் கே. பி. ஜெகன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் மூன்று வெவ்வேறு கதைகள் தான், இப்படத்தின் மையம். வாழ்வின் வினோதங்களையும் அன்பையும் பேசும் படைப்பாக, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் அம்சங்களுடன், ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ மற்றும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன், இப்படத்தை எழுதி இயக்குவதுடன் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளில் ஒரு கதையின் நாயகனாக நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற எம் எஸ் பாஸ்கர் முக்கியமான…

Read More

டிஸ்னியின் சிறந்த அனிமேஷன் படமாக 93% ராட்டன் டொமேட்டோஸ் மதிப்பெண்களுடன் ‘ஜூடோபியா 2’ திரைப்படம் உள்ளது!

வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸின் பில்லியன் டாலர் ஃபிரான்சிஸில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீக்வலான ‘ஜூடோபியா 2’ திரைப்படம் உலகளவில் விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ராட்டன் டொமேட்டோஸில் 93% விமர்சகர்களின் மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது மட்டுமல்லாது கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் டிஸ்னி அனிமேஷன் வெளியீட்டில் சிறந்த படமாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் ‘ஜூடோபியா’ திரைப்படம் பல மொழிகளில் வெளியாக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் படத்தின் புத்திசாலித்தனமான, வேடிக்கையான மற்றும் உணர்ச்சிபூர்வமான கதை களத்திற்காக விமர்சன ரீதியாக பாராட்டுகள் பெற்று வருகிறது. படம் குழந்தைகளுக்காக மட்டுமல்ல, அதன் உள்ளடக்கம் பெரியவர்களுக்கும் பொருந்தும் என்பதையும் நிரூபித்துள்ளது. நேர்மறையான விமர்சனங்கள் மற்றும் இணையவெளியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க, 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய அனிமேஷன் வெற்றிப் படங்களில் ஒன்றாக ‘ஜூடோபியா’ இருக்கும். வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் நவம்பர் 28 ஆம் தேதி…

Read More