நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளில் ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்ட சிறப்பு BTS காட்சிகள்! 

நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ராமாயணா’ படக்குழு ராமராக ரன்பீரின் சிறப்பு BTS காட்சிகளை வெளியிட்டுள்ளது. இந்திய புராணங்களில் மிகவும் போற்றப்படும் கதாபாத்திரங்களில் ஒன்றான ராமர் கதாபாத்திரத்திற்காக அவர் மேற்கொண்ட தயாரிப்பையும், தன்னை அந்தக் கதாபாத்திரமாக மாற்றிக்கொண்ட விதத்தையும் பார்வையாளர்கள் நெருக்கமாகக் காணும் வாய்ப்பை இந்த BTS வழங்குகிறது. இந்த BTS வீடியோவில், ‘ராமாயணா’ போன்ற திரைப்படத்திற்கு சரியான நடிகரைத் தேர்வு செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை இயக்குநர் நிதேஷ் திவாரி பேசுகிறார். இந்த இதிகாசத்தின் மீது கோடிக்கணக்கான மக்களுக்கு ஆழமான நம்பிக்கையும் உணர்வுப்பூர்வமான தொடர்பும் இருப்பதால், கதாபாத்திரத்திற்கான நடிகரைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் தேவைப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார். ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரன்பீர், ராமருக்கு உரிய மரியாதையுடன், தான் ஏற்றிருக்கும் இந்தப் பொறுப்பைச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வுடன் நடித்ததாகவும் அவர் பகிர்ந்து…

Read More

‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் 3rd Look மற்றும் டீசர் வெளியீட்டு விழா!

மகிழ் Productions சார்பில் பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’. தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. ​முன்னதாக இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது பார்வையை (Second Look) புதுச்சேரி முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். ​இதன் தொடர்ச்சியாக, கோவையில் உள்ள பிரபல ரத்தினம் கல்லூரியில் இப்படத்தின் பிரம்மாண்ட ப்ரொமோஷன் விழா நடைபெற்றது. சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அதன் மத்தியில் 3rd look போஸ்டரை வெளியிட்டனர். ​இந்நிகழ்ச்சியில் படக்குழுவைச் சேர்ந்த நடிகர் தக்க்ஷன் விஜய் மற்றும் வாழை ஜானகி அம்மா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினர்.…

Read More

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற Photoshoot நிகழ்வில் 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ரசிகர்களை சந்தித்த திரு. சூர்யா அவர்கள், ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களின் நலன் குறித்து விசாரித்ததுடன், ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி, ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் அன்புடன் அறிவுறுத்தினார். திரு. சூர்யா அவர்களின் இந்த எளிமையான அணுகுமுறையும், ஒவ்வொரு ரசிகரையும் தனிப்பட்ட முறையில் கவனித்துக்கொண்ட விதமும் அங்கு திரண்டிருந்த ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. நன்றி

Read More

நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த இளம் தலைமுறைக்கான காதல் திரைப்படம், நவீன உறவுகள்,காதல் மற்றும் அவற்றுடன் வரும் சிக்கல்களைப் பேசுகிறது

இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள மிகவும் பாராட்டப்பட்ட வெற்றித் திரைப்படங்களைத் தொடர்ந்து ரசிகர்களிடம் கொண்டு வரும் தமிழ் ZEE5, தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள Hi திரைப்படத்தைத் திரையிடத் தயாராகியுள்ளது. வழக்கமான காதல் கதைகளிலிருந்து மாறுபட்ட வகையில், நவீன உறவுகள் குறித்த புதிய பார்வையை வழங்கும் அதே நேரத்தில், இதமான உணர்வுகளைத் தரும் காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. நயன்தாரா மற்றும் கவின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள Hi, நவீன கால உறவுகளை இதமான மற்றும் உணர்வுப்பூர்வமான கோணத்தில் அணுகுகிறது. எதிர்பாராத வகையில் இணையும் இந்த இரு திறமையான நடிகர்களின் திரை இணைவு, கதைக்கு தனித்துவமான ஈர்ப்பைச் சேர்க்கிறது. நயன்தாரா, வலிமையான, சுயாதீனமான பெண்ணாகவும், தனது கொள்கைகளில் உறுதியுடன்…

Read More

பிரம்மாண்டத்தின் உச்சத்தில் யஷ் – ராவணனாக கம்பீரம், பார்வையில் அனல்!

இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ராமாயணம் திரைப்படத்தின் அடுத்த பிரம்மாண்ட அப்டேட் வெளியாகியுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ராவணனாக நடிக்கும் ராக்கிங் ஸ்டார் யஷின் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தங்கக் கிரீடம், முத்து மாலைகள், பிரம்மாண்டமான தங்க ஆபரணங்கள் என ராஜ கம்பீரத்தில் காட்சியளிக்கும் யஷ், தனது தீவிரமான பார்வையால் போஸ்டரையே ஆக்கிரமிக்கிறார். டிரெய்லர் வெளியானது முதலே யஷின் ராவணன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த புதிய போஸ்டர் அந்த எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது. வலிமை, அறிவு, அதிகாரம் மற்றும் கம்பீரம் என ராவணனின் பல்வேறு பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் யஷின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள இந்த போஸ்டர், ராமாயணம் திரைப்படம் உருவாகி வரும் பிரம்மாண்டத்தின் ஒரு சிறு முன்னோட்டமாகவே…

Read More

“எனது விருப்பப் பட்டியலில் இருந்த ஒன்று!” – சஞ்சய் லீலா பன்சாலியுடன் முதல் முறையாக இணைந்த விக்கி கௌஷல், ‘Love & War’ படத்தின் இரண்டாவது போஸ்டரில் அசத்தல்!

சஞ்சய் லீலா பன்சாலியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘Love & War’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகப் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. இந்திய சினிமாவில் புதியதொரு மைல்கல்லை உருவாக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகிய மூவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்த பிரம்மாண்டமான சஞ்சய் லீலா பன்சாலி படைப்பு, ரசிகர்களுக்கு இதுவரை காணாத ஒரு சினிமா அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் நிலையில், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு படக்குழு ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்தது. இரு போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது விக்கி கௌஷலின் ஃபர்ஸ்ட் லுக்…

Read More

நானி நடித்த தி பாரடைஸ் விமர்சனம்

கதை… இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டாலும் சவாரி என்ற இனத்தினருக்கு இந்தியர்கள் என்று அங்கீகாரம் கிடைக்கவில்லை.. ஒரு தனிப்பட்ட முதலாளித்துவத்தால் இவர்களுக்கான அங்கீகாரம் தடைப்படுகிறது.. இந்த சவாரி இனத்தில் பிறந்த நாயகன் நானி தன் இன மக்களுக்காக போராடி அவர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தந்தாரா என்பதுதான் திரைக்கதை.. நடிகர்கள்… நானி பிறக்கும்போதே இரட்டையராக தன் தங்கையுடன் பிறக்கிறார்.. ஆனால் தங்கை இறந்து விடுகிறார்.. எனவே அம்மா இவருக்கு பெண் போல நீண்ட தலை முடி வளர்த்து சடை போட்டு விடுகிறார்.. அன்று முதல் இவரை எல்லோரும் சடையன் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.. நானி ரசிகர்களுக்காகவே பல ஆக்சன் மற்றும் பாடல் காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர்.. ஆக்சன் காட்சி முடிந்து பாடல் வருகிறது… பாடல் முடிந்து ஆக்சன் வருகிறது.. இதற்கு இடையில் சில வசனங்கள் இடம் பெறுகிறது… படம்…

Read More

ஒரு புதிய நகரத்திற்கு வரும் ஐந்து நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

சொந்த ஊரின் பரிச்சயமான சூழலை விட்டு வெளியேறி, தங்களுக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்கும் கனவுகளுடன் புதிய நகரத்திற்குள் அடியெடுத்து வைக்கும் இளைஞர்களின் கதைகள் எப்போதுமே உற்சாகம் தரக்கூடியவை. வாழ்வாதாரம், நட்பு மற்றும் சிறந்த எதிர்காலத்தைத் தேடி பெங்களூரு செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர்கள் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’. பெங்களூருவின் எனர்ஜி, இளமை, நட்பு, அன்பு மற்றும் எதிர்பாராத சந்திப்புகள் என இவர்கள் வாழ்க்கை மாறும் விதத்தை இந்த கதை பேசுகிறது. அறிமுகமில்லாத நகரத்தில் வாழ்வாதாரத்தைத் தேடி பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் ஐந்து நண்பர்கள் ‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படத்தின் மையம். ஆரம்பத்தில் அவர்கள் எதிர்பார்த்ததைவிட முற்றிலும் மாறுபட்ட சூழல்களுக்குள் அவர்களின் பயணம் அழைத்துச் செல்கிறது. படத்தின் கதைக்களம் குறித்து அதிகம் வெளிப்படுத்தாமல், இளமை துள்ளல், நட்பு, லட்சியம் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவற்றை சமகாலப் பின்னணியில் சுவாரஸ்யமான கதையாக…

Read More

சிவகார்த்திகேயனின் புதிய அவதாரம் – மிரட்டலான போஸ்டருடன் வெளியான SK27 அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக தொடர்ந்து ஜொலித்து வரும் சிவகார்த்திகேயன், வித்தியாசமான புதிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து தனது நடிப்புத் திறமையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்று வருகிறார். தற்போது முற்றிலும் புதிய அவதாரத்தில் நடிக்கும் திரைப்படம் SK27. இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சித்தார்த் தயாரிக்கின்றனர்.இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மிரட்டலான போஸ்டருடன் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் ஒவ்வொரு படமும் அவரை ஒரு புதிய பரிமாணத்தில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. ‘அமரன்’ படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கிய அவர், தொடர்ந்து மாறுபட்ட கதைக்களங்களையும் ஜனரஞ்சங்கமான திரைப்படங்களையும் தேர்வு செய்து வருகிறார். அந்த வரிசையில் SK27 படமும் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் புதிய களத்தை அறிமுகப்படுத்தும் படைப்பாக…

Read More

மூன்று சமையல் ஜாம்பவான்கள். ஒரே பிரம்மாண்ட சமையலறை,விரைவில்

சமையலறை தயாராகிவிட்டது. ஏப்ரன்கள் அணியப்பட்டுவிட்டது.இனி Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் சமையலுடன் சேர்ந்து பரபரப்பாக இருக்க போகிறது. Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் இந்த புதிய சமையல் நிகழ்ச்சி, சுவையான உணவுகளுடன் எதிர்பாராத திருப்பங்களையும், சுவாரஸ்யமான போட்டிகளையும் வழங்க இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக புகழ்பெற்ற Chef, உணவக உரிமையாளர், Hospitality துறை நிபுணர் மற்றும் தொலைக்காட்சியில் பிரபலமான Chef Venkatesh Bhat, MasterChef Australia Season 10 வெற்றியாளர் Chef Sashi Cheliah, மேலும் கோயம்புத்தூரில் உள்ள The French Door நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சமையல் நிபுணரான Chef Shreeya Adka ஆகியோர் இடம்பெறுகின்றனர். மூவரும் தங்களது தனித்துவமான சமையல் அனுபவம், சர்வதேச அனுபவம் மற்றும் உணவின் மீதான ஆர்வத்துடன் போட்டியாளர்களுக்கு வழிகாட்டி அதில் சவால்களை வழங்கி, அவர்களின் திறமையை…

Read More