நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2much படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர், நடிகைகளின் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வித்தியாசமான மற்றும் கவனம் ஈர்க்கும் காணொலி வடிவிலும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹாட் ஸ்பாட் 2much எனும் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர், ரக்சன், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை யூ. முத்தையன் மேற்கொள்ள கலை இயக்கத்தை சண்முகம்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை பார்த்த இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி திரையரங்கில் தான் ஒரு குழந்தையாக மாறி குதூகலித்ததாக கூறினார்!
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும் ராஜமௌலியின் ஃபிலிம் செட் பார்வையிட விருப்பம் தெரிவித்துள்ளார்! சினிமாவின் போக்கை மாற்றிய முக்கிய ஜாம்பவான்களான ஜேம்ஸ் கேமரூன் மற்றும் எஸ்.எஸ். ராஜமெளலி ஆகிய இருவரின் பார்வையில் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் பற்றிய கலந்துரையாடல். உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு மிகப்பிடித்த இயக்குநர்களான ஜேம்ஸ் கேமரூன் மற்றும் எஸ்.எஸ். ராஜமெளலி இருவரும் இணைந்து ‘அவதார்’ திரைப்படத்தின் அடுத்து வெளிவரவிருக்கும் பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ பற்றி கலந்துரையாடினர். கதைசொல்லலின் நுணுக்கங்கள், தனிப்பட்ட படைப்பாற்றல் திறன் மற்றும் பட வெளியீட்டின்போது ஏற்படும் பதற்றம் ஆகியவை குறித்து இரண்டு இயக்குநர்களும் வெளிப்படையாக உரையாடினர். உலகளாவிய அரங்கில் சினிமாவின் எல்லைகளை மறுவரையறை செய்யும் இரண்டு அற்புதமான இயக்குநர்களின் மனநிலையை புரிந்து கொள்ள இந்த உரையாடல் உதவியது. காட்சிகளின் பிரம்மாண்டத்தை இன்னும் விரிவாக்கி உணர்வுப்பூர்வமான கதை…
Read Moreதென்னிந்தியாவின் இசை தலைவராக அசோக் பர்வானியை வார்னர் மியூசிக் இந்தியா நியமித்துள்ளது!
சென்னை, டிசம்பர் 16, 2025: தென்னிந்தியாவின் இசைத் தலைவராக அசோக் பர்வானியை நியமித்ததாக வார்னர் மியூசிக் இந்தியா இன்று அறிவித்துள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி டிஜிட்டல் மீடியா மற்றும் இசை நிறுவனங்களில் ஒன்றான டிவோவை வார்னர் மியூசிக் இந்தியா பெரும்பான்மையாக கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. பிராந்திய பட்டியல் விரிவாக்கத்தை விரைவுபடுத்துதல், படைப்பாளர் மற்றும் பார்ட்னர் உறவுகளை வலுப்படுத்துதல், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியை விரைவுபடுத்துதல் போன்றவற்றில் வார்னர் மியூசிக் இந்தியாவும் டிவோவும் இணைந்து கவனம் செலுத்துகின்றன. இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் நாற்பது வருடங்களுக்கும் மேலான தொழில்துறை அனுபவத்தை கொண்டுள்ளார் பர்வானி. குறிப்பாக, சோனி மியூசிக் இந்தியாவில் தனது இருபது வருடகால பதவிக்காலத்தில், பிராந்தியத்தில் சோனி மியூசிக் சவுத்…
Read Moreகொலையில் முடிந்த பேஸ்புக் காதல்! “ரகசிய சினேகிதனே”
சென்னையில் கணவன் சந்தோஷ் உடன் வசிக்கும் சந்தியாவுக்கு பேஸ்புக்கில் பாண்டிச்சேரியில் மனைவியுடன் வசிக்கும் பல் டாக்டர் பரமேஷ் நட்பு கிடைக்கிறது. இருவரும் வாட்ஸ்ஆப்பில் மணிக்கணக்கில் சாட் செய்து, பொழுதை கழிக்கின்றனர். இவர்களது சாட் ஒரு வருடம் கழித்து சந்தோஷ்க்கு தெரியவர, சந்தியாவை கண்டிக்கிறான். அவனிடம் சாட் செய்வதில்லை என்று பொய் சொல்லி, அவனுக்கு தெரியாது என்று நினைத்து கொண்டு, அவன் வேலைக்கு சென்றதும் பரமேஷ் உடன் சாட்டிங்கை தொடர்கிறார் சந்தியா. அதை கண்டு பிடித்து சந்தோஷ் அடித்து கண்டிக்க, ஒரு நாள் திடீரென்று மர்மமான முறையில் சந்தியா இறந்து போகிறாள். போலீஸ் சந்தோஷை அடித்து விசாரிக்க, இறுதியில் சந்தியாவை யார் எதற்காக கொன்றார்கள் என்ற விளக்கத்துடன் படம் நிறைவடைகிறது. வேல்முருகன், ஸ்வேதா ஸ்ரீம்டன், குரு பிரகாஷ், பாக்கியராஜ், பிரதீபா, பிரசாந்தினி, நிஷா, கந்தவேலு ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை,…
Read Moreகுடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக மாறி உள்ளது மகா சேனா.
மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில், நடிகர் விமலின் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் உருவான மகா சேனா திரைப்படம் 12.12.2025 அன்று உலகெங்கும் வெளியானது. இயற்கையையும் தெய்வத்தையும் வணங்கும் ஒரு மனித குலம், அதை அழிக்க நினைக்கும் இன்னொரு கூட்டம் என்று ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் காடு சார்ந்த ஆக்சன் திரில்லர் படமான மகாசேனா திரைப்படம், திரையிட்ட திரையரங்குகளி லெல்லாம் குடும்பங்களின் பேராதரவுடன் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 264 திரையரங்குகளில் மகா சேனா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் விமல் நடித்து வெளியான ஒரு படம், இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறை. மேலும் குலதெய்வ வழிபாடு, சமத்துவம், மனிதம் ஆகிய பல கருத்துக்களை முனைப்பில் வைத்து திரைக்கதையாக தொடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஸ்ருஸ்டி…
Read Moreபார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’ – Sun NXT-இல் டிசம்பர் 19 முதல் நேரடியாக ஸ்ட்ரீமிங் ஆகிறது !
தென் இந்தியாவின் முன்னணி OTT தளமான Sun NXT, தனது பிரபலமான Direct-to-Sun NXT பிரீமியர் பட்டியலில் அடுத்ததாக ஒரு அதிரடியான திரில்லரை சேர்த்துள்ளது. டிசம்பர் 19, வெள்ளிக்கிழமை முதல், நடிகை பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் ஜானரில் உருவான ‘உன் பார்வையில்’ படத்தை, Sun NXT-இல் மட்டும் நேரடியாக கண்டுகளிக்கலாம். இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமிக்க உணர்ச்சிகரமான பாத்திரத்தில், நடிகை பார்வதி நாயர் அசத்தியுள்ளார். கணவர் மற்றும் இரட்டை சகோதரியின் மர்மமான திடீர் மரணங்களைத் தொடர்ந்து, உண்மையை தேடும் அவரது பயணம், ரகசியங்களும் திருப்பங்களும் நிரம்பிய ஒரு மர்ம உலகுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. தன்னுடைய வலுவான நடிப்பால் படத்தை முழுவதுமாக தாங்கிச் செல்லும் பார்வதி நாயரின் நடிப்பு, படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. திரைக்கதையின் மர்ம மரணங்களின் விசாரணை பக்கத்தில், முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்…
Read Moreமாண்புமிகு பறை – திரை விமர்சனம்
மாண்புமிகு பறை — திரை விமர்சனம் பறை இசைக்கலைஞர்களான லியோ சிவகுமாரும், ஆரியனும், ஆதிபறை என்ற பெயரில் இசைக் குழு ஒன்றை நடத்தி வருகிறார்கள். அதோடு மற்றவர்களுக்கு அந்த கலையை கற்றுக்கொடுத்தும் வருகிறார்கள். அதே சமயம், பறை இசைக் கலைஞர்களை இழிவாகப் பார்க்கும் சிலரால் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதில் இருந்து மீண்டு அவர்கள் நினைத்ததை சாதித்தார்களா ? இல்லையா ?, என்பதை சொல்வதே ‘மாண்புமிகு பறை’. நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவகுமார் வெற்றி என்ற கேரக்டரில் வருகிறார். பேதம் பார்க்கும் மேல் தீட்டு மக்களிடமிருந்து வரும் இன்னல்களை பொருட்படுத்தாமல் அந்த கேரக்டரில் வாழ்ந்து காட்டி இருக்கிறார். கோவில் திருவிழாவுக்கு சென்ற தனது நண்பன் மிஸ்சிங் என தெரிய வந்ததும் அவரது துடிப்பும் துயரமும் தேர்ந்த நடிகருக்கான முத்திரையை அவருக்குப் பெற்றுத் தருகின்றன.…
Read Moreவேல்ஸ் வர்த்தக கூட்ட அரங்கம், பிரமாண்ட திரைப்பட நகரம் திறப்பு!!
VELS கல்விக் குழுமம் மற்றும் நிறுவனங்களின் சார்பாக சென்னை, செம்பரம்பாக்கத்தில் VELS வர்த்தக மற்றும் மாநாட்டு மையம், VELS திரைப்பட நகரம் மற்றும் VELS திரையரங்குகளுக்கான திறப்பு விழா, கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்ட, பத்ம பூஷண் டாக்டர் கமல்ஹாசன், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை) அவர்களின் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. டாக்டர் கமல்ஹாசனின் வருகை இந்த நிகழ்விற்கு மிகுந்த முக்கியத்துவத்தை அளித்தது. சினிமா, கலைகள் மற்றும் அறிவு சார்ந்த தொழில்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், தன்னை “சினிமாவின் குழந்தை” என்றும், தனது அடையாளத்தையும் சாதனைகளையும் வடிவமைத்ததற்காக சினிமாவிற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர், சென்னை, பான்-இந்திய சினிமா உருவாக்கத்திற்கான பிறப்பிடமாகவும், உண்மையான மையமாகவும் வரலாற்றுப் பங்களிப்பு செய்ததாக தெரிவித்தார். VELS குழுமத்திற்கு, இந்த தொடக்க…
Read More142 வேலம்மாள் நெக்ஸஸ் மாணவர்களின் கைப்புத்தக வெளியீடு – எழுத்தாளர் சேதன் பகதின் சிறப்பு வருகை
வேலம்மாள் வித்யாலயா ஆவடி மற்றும் பருத்திபட்டு பள்ளி – இன்று 142 மாணவர்கள் தங்களால் எழுதப்பட்ட கைப்புத்தகங்களை வெளியிடும் அற்புதமான விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. சேதன் பகத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களின் புத்தகங்களை வெளியிட்டு வாழ்த்தினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மாலை அணிவித்து ஆசீர்வதித்த உணர்ச்சி பூர்வமான தருணம் நிகழ்வின் சிறப்பை மேலும் உயர்த்தியது. விழா, வேலம்மாள் நெக்ஸஸ் மாணவர்கள் அளித்த மிகுந்த வரவேற்புடன் தொடங்கியது. அவர்களின் ஒழுங்கு, ஒற்றுமை மற்றும் கலாசார நிகழ்வுகள் அனைவரையும் கவர்ந்தன. உரையாடல் அமர்வில், மாணவர்கள் பல ஆர்வமுள்ள கேள்விகளை முன்வைத்தனர். அவற்றிற்கு சேதன் பகத் அவர்கள் மகிழ்ச்சியுடன் பதிலளித்து, சிறிது தமிழிலும் உரையாடி அனைவரையும் ஈர்த்தார். அவர் வழங்கிய முன்னேற்றப் பேச்சில், ஒவ்வொரு மாணவரிலும் தனித்துவமான படைப்பாற்றல் உள்ளது என்பதை வலியுறுத்தி, தொடர்ந்து…
Read Moreஅசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகும் ரொமாண்டிக் திரில்லர் பட படப்பிடிப்பு நிறைவு பெற்றது !!
அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தரமான வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனலுடன் இணைந்து தயாரிக்கும் புதிய பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு தற்போது இனிதே நிறைவடைந்துள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், யுவராஜ் கணேசன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக நிமிஷா சஜயனும் நடித்துள்ளனர். அசோக் செல்வனின் திரைப்பயணத்தில் மிக அதிக பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், ரொமாண்டிக் திரில்லாராக உருவெடுத்துள்ளது. கதைக்களத்திற்கு ஏற்ப பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கியுள்ளார். ‘சித்தா’, ‘கனா’ ஆகிய படங்களில் வெற்றிப் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்…
Read More