KGF, காந்தாரா மற்றும் சலார் போன்ற சினிமா மைல்கற்களை வழங்கியபின் ஹொம்பாலே பிலிம்சின் சிறப்புத்தன்மையின் பாரம்பரியம் பாகீராவுடன் தொடர்கிறது. தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டவுடன் இப்படம் 2024 ஆண்டின் மிக அதிக வசூலை பெற்ற கன்னட படமாக மாறியது. இந்த சமூக காவலன் திரில்லர், உலகெங்கிலுமுள்ள ரசிகர்களுக்காக தனது உலகளாவிய டிஜிட்டல் பிரவேசத்தின் மூலம் ஹிந்தியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 25 டிசம்பரிலிருந்து அரங்கேறவிருக்கிறது. டாக்டர் சூரியால் இயக்கப்பட்டு பிரஷாந்த் நீல்-ஆல் எழுதப்பட்ட பாகீரா படம், தங்கப்பதக்கம் வென்ற மற்றும் நீதித்துறையின் வரம்புகளினால் மனமயக்கமுற்று சமூக காவலராகும் IPS அதிகாரியான வேதாந்தின் (ஸ்ரீமுரளி) கதையை கூறுகிறது. வேதாந்த் பாகீராவின் முகமூடியை அணிந்த பின் அவர் மிக சக்திவாய்ந்த வில்லனையும் (கருடா ராம்) அயராத ஒரு CBI அதிகாரியையும் (பிரகாஷ் ராய்) நீதிக்கான போர்க்களத்தில் எதிர்கொள்கிறார். அதிரடி காட்டும் ஆக்ஷன்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
புதிய திறமைகளை கண்டறிவதற்கும், காலத்தால் அழிக்க முடியாத கதைகளை சொல்லவதற்குமான ‘ஆஹா ஃபைண்ட்’ முன்முயற்சியை தொடங்கியுள்ள ஆஹா தமிழ், முதல் வெளியீடு ‘பயாஸ்கோப்’
உலகளாவிய தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்கள் விரும்பும் முன்னணி ஓடிடி தளமான ஆஹா, துணிச்சலான மற்றும் புதுமையான உள்ளடக்கத்தை தொடர்ந்து வழங்க உறுதிபூண்டுள்ளது. ஆஹா ஃபைண்ட் எனும் புதுமையான முன்னெடுப்பை இன்று அறிவிப்பதில் ஆஹா பெருமிதம் கொள்கிறது. புதிய திறமைகளை கண்டறிவதற்கும், காலத்தால் அழிக்க முடியாத கதைகளை சொல்லவதற்குமான சாளரமாக ‘ஆஹா ஃபைண்ட்’ திகழும். வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் சொல்லப்படாத கதைகளுக்கு உலகளாவிய அரங்கை ‘ஆஹா ஃபைண்ட்’ முன்முயற்சியின் வாயிலாக வழங்குவதன் மூலம் தமிழ் சினிமாவின் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதை ஆஹா தமிழ் நோக்கமாகக் கொண்டுள்ளது. திரைப்பட உரிமத்திற்கான நம்பகமான சந்தையான புரொடியூசர் பஜார் உடன் இணைந்து ‘ஆஹா ஃபைண்ட்’ அதன் பயணத்தை தொடங்கி உள்ளது. ஆஹா ஃபைண்ட்டின் முதல் வெளியீடான பிரபல இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பயாஸ்கோப்’ கிராமிய வாழ்க்கை வரலாற்று…
Read MoreKVN Productions கேடி – தி டெவில் படத்திலிருந்து “சிவ சிவா” என்ற தெய்வீகமான நாட்டுப்புற பாணி வகையிலான பாடலை வெளியிட்டுள்ளது !!
KVN Productions நிறுவனம், தொலைநோக்கு படைப்பாளி பிரேம் இயக்கத்தில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா திரைப்படம் கேடி – தி டெவில் படத்திலிருந்து, “சிவ சிவா” என்ற கன்னட நாட்டுப்புற கீதத்தைப் பெருமையுடன் வெளியிட்டுள்ளது. மனதை வசீகரிக்கும் இந்தப் பாடல், கன்னட நாட்டுப்புற இசையின் துடிப்பான சாரத்தை, பாரம்பரியத்தை, கொண்டாடுகிறது. இப்பாடலைப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யாவால் இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவாளர் வில்லியம் டேவிட், காட்சிக்கு உயிரூட்டியுள்ளார். இந்தப் பாடல் இந்திய நாட்டுப்புற இசையின் கலாச்சார ஆழத்தையும் கலையின் ஆழத்தையும் எடுத்துக் காட்டுகிறது. முன்னணி பாடகர்கள் கைலாஷ் கெர் மற்றும் பிரேம் (கன்னடம்), விஜய் பிரகாஷ் (தமிழ் மற்றும் தெலுங்கு), பிரணவம் ஷஷி (மலையாளம்), மற்றும் சலீம் மாஸ்டர் (இந்தி)- ஆகியோர் பாடியுள்ளனர். ஒவ்வொரு பதிப்பும் பாடலின் ஆத்மார்த்தமான மையத்தை, அதன் மொழியியல் சாரத்தோடு பிரதிபலிக்கிறது. முன்னணி பாடலாசிரியர்கள்…
Read More”அலங்கு” படக்குழுவினரை வெகுவாக பாராட்டிய தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களம் கொண்ட பல திரைப்படங்கள் வரும் வரிசையில் “அலங்கு “ திரைப்படமும் இணைந்து பல பாராட்டுகளையும், பல சினிமா நட்சத்திரங்களின் ஆதரவையும் பெற்று வருகிறது. அந்த வகையில் அலங்கு படக்குழுவினர் தளபதி விஜய் அவர்களை காண சென்றுள்ளனர். படத்தின் முன்னோட்டத்தை பார்த்த தளபதி விஜய் அவர்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டினார். மேலும் படத்தின் Release Glimpse-யும் வெளியிட்டுள்ளார். இத்திரைப்படத்தை DG FILM COMPANY சார்பில் D.சபரிஷ் , MAGNAS PRODUCTIONS சார்பில் சங்கமித்ரா சௌமியா அன்புமணி இருவரும் முறையே இணைந்து தயாரித்திருக்கின்றனர். SP சக்திவேல் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக குணாநிதி நடித்திருக்கிறார். அவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத் , காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர். அலங்கு திரைப்படத்தை, உலகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி…
Read Moreசினிமா குறித்து எந்த அறிமுகமும் இல்லாத கிராமத்து மக்கள் எப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்கினார்கள் என்பதை கலகலப்பாக சொல்லும் உண்மைக் கதை
பெரிதும் பாராட்டப்பட்ட ‘வெங்காயம்’ திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள படம் ‘பயாஸ்கோப்’. 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 3 அன்று வெளியாகிறது. டீசரை நடிகர்கள் ஆர்யா மற்றும் சசிகுமார் வெளியிட்டனர். சினிமா குறித்து எதுவும் தெரியாத கிராமத்து மக்கள் திரைப்படம் எடுக்கும் கலகலப்பான உண்மைக் கதையை திரையில் சொல்லும் ‘பயாஸ்கோப்’ திரைப்படத்தில் சத்யராஜ் மற்றும் சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் முக்கிய பாத்திரங்களில் தோன்றுகின்றனர். மேலும், இந்த உண்மைக் கதையில் அசலான கதை மாந்தர்களே அவரவர் வேடங்களை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘பயாஸ்கோப்’ குறித்து பேசிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், “ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து நான் ‘வெங்காயம்’ திரைப்படத்தை எப்படி…
Read More. “கிராவனின் உண்மை முகம்: ஜே.சி. சன்டோரின் ‘ஆர்’ ரேட்டட் படத்தால் மிகச்சிறந்த கதைக்களம்”
“கிராவனின் பயணத்தின் கதையை நேர்மையாகச் சொல்ல இதுவே ஒரே வழி.” – ‘கிராவன் தி ஹண்டர்’ ஏன் ‘ஆர்’ என மதிப்பிடப்பட்டது என்பது குறித்து ஜே.சி. சன்டோர்! மிகவும் எதிர்பார்க்கப்படும் ’கிராவன் தி ஹண்டர்’ இன்னும் 2 வாரங்களுக்குள் அதாவது 2025 ஆம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சோனியின் சூப்பர் ஹீரோ படங்களில் ஒன்றான ஸ்பைடர் மேனின் மிகவும் அச்சுறுத்தும் எதிரிகளில் ஒருவரான கிராவனுடன், ’ஆர்’ ரேட்டட் ஆக்ஷன்-பேக் என்டர்டெய்னர் படமாக வெளியாகிறது. படத்திற்கு ‘ஆர்’ ரேட்டட் சரியானது என்றும் இதன் மூலம் கிராவனைப் பற்றி இன்னும் சரியான வழியில் கதை சொல்ல முடிந்தது என்றும் இயக்குநர் ஜே.சி. சன்டோர் தெரிவித்துள்ளார். கிராவனின் கதையை அழுத்தமான, நம்பத்தகுந்த வகையில் சொல்ல வேண்டும் என்பதற்காக சன்டோர் எந்த சமரசமும் இல்லாமல் படமாக்கியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பது,…
Read Moreசங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜையில் கலந்து கொண்ட நடிகர் சௌந்தரராஜா
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் இவர், மரம் நடுவது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த சேவைகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற தவத்திரு டி.டி. சங்கரதாஸ் சுவாமிகளின் 102-வது குருபூஜை விழாவில் நடிகர் சௌந்தரராஜா கலந்து கொண்டார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் துணை தலைவர் திரு. பூச்சி முருகன் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் நடிகர் சௌந்தரராஜா கலந்து கொண்டனர். சங்கரதாஸ் சுவாமிகளின் குருபூஜை விழாவில் மதுரை நாடக நடிகர் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர்…
Read Moreபூமிகா சாவ்லா – யோகி பாபு – கே எஸ் ரவிக்குமார் இணைந்து நடித்துள்ள ” ஸ்கூல் “
Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் தயாரித்திருக்கும் படம் ” ஸ்கூல் “ இந்த படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள் மற்றும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஸ்கூல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு : ஆதித்யா கோவிந்தராஜ். எடிட்டிங் : ராகவ் அர்ஸ் கலை : ஶ்ரீதர் ஸ்கிரிப்ட் கன்சல்ட்ண்ட் : V. நிவேதா விளம்பர வடிவமைப்பு : சதீஷ் J மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ் இணை தயாரிப்பு : K. மஞ்சு தயாரிப்பு : Quantum Film Factory R.K.வித்யாதரன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் R.K.…
Read Moreசுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் “தி ஸ்மைல் மேன்” (The Smile Man) டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது!!
மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது “தி ஸ்மைல் மேன்” (The Smile Man)திரைப்படம். இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவலதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான, மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், எட்டு தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் மெமரீஸ் படத்தினை இயக்கிய ஷ்யாம் – பிரவீன் வெற்றிக்கூட்டணி இப்படத்தை உருவாக்கியுள்ளது. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ்,…
Read Moreபட முன் வெளியீட்டு நிகழ்வில், மாஸ்டர் & கேம் சேஞ்சர் இணைந்து தோன்றவுள்ளனர்
குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன், கேம் சேஞ்சர் படத்திற்காக முதல்முறையாக இணைந்துள்ளார். இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இம்மாதம் 21ஆம் தேதி அமெரிக்காவின் டல்லாஸ் நகரில், வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த முன் வெளியீட்டு நிகழ்ச்சியில், மாஸ்டர் ஃபிலிமேக்கர் சுகுமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சுகுமார் மற்றும் ராம் சரண் கூட்டணி கடந்த காலத்தில் “ரங்கஸ்தலம்” எனும் கிளாசிக் பிளாக்பஸ்டரை வழங்கினார்கள். கிராமப் பின்னணியில் உருவாகியிருந்த, இந்த ஆக்சன் படம், அனைத்து தரப்பிலும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. இந்தக் கூட்டணி விரைவில் தங்கள் இரண்டாவது படமான RC 17 க்காக இணையவுள்ளனர். இப்போதே இது இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகியுள்ளது. “கேம் சேஞ்சர்” அமெரிக்காவில் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வைக்…
Read More
