தேசியம், ஆகஸ்ட் , 2026: விஜய் ஆண்டனி நடித்துள்ள உணர்வுபூர்வமான குடும்பத் திரைப்படமான நூறு சாமி, ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது. இது அதன் டிஜிட்டல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. 2026 ஆகஸ்ட் 7 அன்று தமிழ் ZEE5-இல் பிரீமியர் ஆன இந்த திரைப்படம், பார்வையாளர்களின் மனதில் ஆழமான உணர்வுப் பிணைப்பை உருவாக்கியுள்ளது. தாய்மை, துணைநிலை, குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பற்றிய மனிதநேயமிக்க கதையை பல மொழிகளில் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சென்றுள்ளது. உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு, சசி எழுதி இயக்கியுள்ள நூறு சாமி, காதல் மற்றும் குடும்பத்தை மிகவும் தனிப்பட்ட கோணத்தில் அணுகும் மனதைத் தொடும் கதையாகும். தனது வாழ்க்கையின் பல ஆண்டுகளை குடும்பத்திற்காக அர்ப்பணித்த ஒரு தாயின் பயணமே இதன் மையக் கருத்தாகும். வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை…
Read MoreCategory: சினிமா செய்திகள்
துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” ( I Am Game) செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸ் ஆகிறது – பிரம்மாண்ட உலகளாவிய வெளியீட்டுக்கு திட்டம்!
துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “ஐ ம் கேம்”’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரம்மாண்டமான உலகளாவிய வெளியீடாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் அதிகமான திரையரங்குகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் படத்தை வெளியிடுவதற்காக, ரிலீஸ் தேதி இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த பிரம்மாண்ட ஃபேண்டஸி த்ரில்லர், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து Wayfarer Films பேனரில் தயாரித்துள்ள இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா,…
Read Moreஉணர்வுப்பூர்வமான ரோலர்கோஸ்டர் பயணத்திற்கு தயாராகுங்கள்!
மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘இருமுடி’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான க்ளிம்ப்ஸ் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் திரையரங்க டிரெய்லர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் இன்று வெளியானது. ரவி தேஜா நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவராக நடித்துள்ளார். தனது மனைவி மற்றும் மகளை மிகவும் அன்புடன் கவனித்துக் கொள்ளும் அவர், தனது குடும்பத்தினரிடம் மட்டுமின்றி தனது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் தனது மகளாகவே கருதி அன்பு செலுத்துகிறார். அவர்களில் யாருக்காவது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அவர்களைப் பாதுகாக்க ஆக்ரோஷத்தின் எல்லைக்கே செல்ல தயாராக இருக்கிறார் என படத்தின் மையக்கதையை…
Read Moreஅசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீடு
அசோக் செல்வன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுத, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆர்.கே செல்வா மேற்கொள்ள, மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி- …
Read Moreதுபாயைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
சென்னை மற்றும் துபாய் திரைப்படத் துறைகளுக்கு இடையே ஆக்கப்பூர்வமான பாலத்தை உருவாக்கும் நோக்கில் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோர் ஸெனோஃபர் ஃபாத்திமா சென்னை: துபாயைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோரான ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது திரைப்படப் பயணத்தின் அடுத்த முக்கிய அத்தியாயத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறார். சென்னையில் தனது படைப்பாற்றல் சார்ந்த செயல்பாடுகளை விரிவுபடுத்துவதோடு, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) திரைப்படத் துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளையும் அவர் ஆராய்ந்து வருகிறார். சென்னையில் பிறந்து, தற்போது துபாயில் வசித்து வரும் ஸெனோஃபர், உளவியல் சார்ந்த த்ரில்லர்கள், சமூகப் பிரச்சினைகள், மனித நடத்தை மற்றும் சமகாலக் கருப்பொருட்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களின் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். Zen Film Productions நிறுவனத்தின்…
Read Moreநடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
பார்வையாளர்களை இறுதிவரை யூகிக்க வைக்கும் கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படம் ‘மாறுவேஷம்’. வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில், படம் தற்போது திரையரங்க வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்று, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லராக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தை விஜய் ஆனந்த் மற்றும் வைபவ் இணைந்து ஓநைரோமன்சி பிக்சர்ஸ் சார்பில், மன்கி மேன் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் வைபவ், திலக் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மர்மமான கொலை வழக்கு ஒன்றின் உண்மையை அவர் கண்டறிய முயலும்போது, அதில்…
Read More‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!
மாப்பிள்ளை மணமகள் வீட்டுக்கு வருகிறார்… காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்! திருமணத்துக்குப் பிறகு மணமகள் புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், மணமகளுக்குப் பதிலாக மாப்பிள்ளை தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு மணமகள் வீட்டுக்குச் சென்றால் என்ன ஆகும்? இந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லரை Netflix இன்று வெளியிட்டுள்ளது. இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் இப்படம், வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி Netflix-ல் வெளியாகிறது. டிரெய்லரில், பவி கதாபாத்திரத்தில் சான்வி மேக்னா நடித்துள்ளார். தன்னம்பிக்கையும் தனித்துவமான சிந்தனையும் கொண்ட பவி, தான் வளர்ந்த வீட்டை விட்டு வெளியேற விரும்பாத ஒரு இன்ஃப்ளூயன்சர். இதனால், திருமணத்திற்குப் பிறகு அவரது கணவரான இளன், பவியின் வீட்டிற்கே குடியேறுகிறார். அங்கிருந்து தொடங்குகிறது ஒரு வித்தியாசமான குடும்ப வாழ்க்கை. புதிய வீட்டில் முதல் சந்திப்பு முதல், குடும்பத்தினருடனான…
Read Moreஅட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’.Star Studio18 மற்றும் பிரபல இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை, A for Apple Studios மற்றும் Cine 1 Studios Production இணைந்து தயாரிக்கிறது இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பத்தா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். ஏற்கனவே இருவரது கூட்டணியில் வெளியான “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” மற்றும் “சீதக்காதி” திரைப்படங்கள் ரசிகர்களிடம் தனித்துவமான வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின்…
Read MoreBirla Studios & Applause Entertainment தயாரிப்பில், இயக்குநர் ஹன்சல் மேத்தாவின் ‘Scam 2010’ விரைவில் Sony LIV-ல் வரவுள்ளது.
இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாராட்டப்பட்ட தொடர்களில் ஒன்றான Scam Franchises அடுத்த அத்தியாயம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி இருக்கிறது.Sony LIV, Birla Studios மற்றும் Applause Entertainment இணைந்து Scam 2010 தொடரின் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் ஹன்சல் மேத்தா இத்தொடரை இயக்குகிறார். சிறு சேமிப்பு திட்டங்கள் மூலம் தனது பயணத்தைத் தொடங்கி பின்னர் மிகப்பெரிய நிதி சமராஜ்ஜியத்தை Create செய்து ஒரு மனிதரின் எழுச்சி முதல் அதன் மூலமாக அவர் எதிர்கொண்ட விமர்சனங்ககள் போன்றவற்றையும் வாழ்க்கைப் பயணத்தை சுவாரஸ்யமாகப் பதிவு செய்கிறது இத்தொடர். இத்தொடர் குறித்து இயக்குநர் பேசுகையில்.., “Scam 2010 என்பது லட்சியம், செல்வாக்கு மற்றும் அந்த இரண்டிலிருந்தும் உருவாகும் ஆணவம் பற்றிய கதை.இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யங்களில் ஒன்று எவ்வாறு நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அமைந்தது என்பதையும்…
Read More‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா
தமிழ் ஹிப்ஹாப் இசையின் தனித்துவமான குரல்களாகவும், நீண்டகால நண்பர்களாகவும் விளங்கும் கில்லா கே மற்றும் பால் டப்பா ஒன்றிணைந்து தங்களின் புதிய ‘அடடா’ பாடலை டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ் இந்தியா மூலம் வெளியிட்டுள்ளனர். தங்களின் தனித்துவமான இசைப் பாணியில், உள்ளூர் கலாச்சாரம், நகைச்சுவை மற்றும் தமிழ் மொழியின் தனித்துவத்தை வெளிப்படுத்தி வரும் இருவரும், இந்தப் பாடல் மூலம் தமிழ் கலாச்சாரத்தை சமகால ஹிப்-ஹாப்புடன் கொண்டாடுகின்றனர். கூர்மையான வரிகள், மனதில் பதியும் ஹூக்ஸ் மற்றும் துடிப்பான இசை ஆகியவற்றுடன் உருவாகியுள்ள ‘அடடா’, தமிழ் அடையாளம், சினிமாவின் பழைய நினைவுகள் மற்றும் தொடர்ந்து பரிணமித்து வரும் பிராந்திய ராப் இசை ஆகியவற்றை உற்சாகமாகக் கொண்டாடுகிறது. புகழ்பெற்ற தமிழ் திரைப்படமான ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்திலிருந்து உருவாகியுள்ள ‘அடடா’, அந்தப் படத்தின் பிரபலமான காட்சியமைப்பை இன்றைய தலைமுறைக்கேற்ற வகையில் மாற்றி வடிவமைத்துள்ளது. பாடலின்…
Read More
