டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும், நாகேந்திரனின் “ஹனிமூன்ஸ்” – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது! டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது மலையாள வெப்சீரிஸ், நாகேந்திரனின் ஹனிமூன்ஸ் சீரிஸை, விரைவில் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் வகையில் அதிரடி திருப்பங்களுடன் உருவாகியுள்ள ஹனிமூன்ஸ் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸில், சுராஜ் வெஞ்சரமுடு முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கிரேஸ் ஆண்டனி, ஷேவ்தா மேனன், கனி குஸ்ருதி, ஆல்பி பஞ்சிகரன், நிரஞ்சனா அனூப், பிரசாந்த் அலெக்சாண்டர், அம்மு அபிராமி, ஜனார்த்தனன், கலாபவன் ஷாஜோன் & ரமேஷ் பிஷாரடி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். MGC(P) Ltd உடன் இணைந்து நிதின் ரஞ்சி பணிக்கர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிரஞ்சன் ரஞ்சி பணிக்கர் இந்த சீரிஸை எழுதி, இயக்கி,…
Read MoreCategory: சினிமா செய்திகள்
எதிர்பார்ப்பை எகிற வைத்த கல்கி 2898 AD டிரைலர் தொடர்பான அறிவிப்பு
கல்கி 2898 கிபி திரைப்பட டிரெய்லர் ஜூன் 10, 2024 இல் வெளியாகிறது!! இந்தியாவெங்கும் ரசிகர்கள் பேராவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் கல்கி படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் & திஷா பதானி ஆகியோர் நடித்துள்ள “கல்கி 2898 கிபி” சயின்ஸ் பிக்சன் படத்தின் அதிரடியான டிரெய்லர் ஜூன் 10, 2024 அன்று வெளியிடப்படவுள்ளது. அமேசான் பிரைமில் புஜ்ஜி & பைரவா என்ற தலைப்பில், படத்தின் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் அனிமேசன் வீடியோ வெளியான பிறகு, உலகம் முழுவதிலும் இப்படத்தின் மீதான அறிவிப்பு அதிகரித்துள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கம், புதன்கிழமை காலை டிரெய்லர் வெளியீட்டு செய்தியைப் பகிர்ந்து கொண்டது: “ஒரு புதிய உலகம் காத்திருக்கிறது #Kalki2898AD டிரெய்லர் ஜூன் 10 முதல்.” https://x.com/kalki2898ad/status/1798210288849940678?s=46&t=td36fd1VqvQ20yDywt6_9Q டிரெய்லர் வெளியீட்டு…
Read Moreகிராண்ட் ப்ரிக்ஸ் விருதை வென்ற பாயல் கபாடியாவின் ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படம்,
பாயல் கபாடியாவின் ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படம், வரலாற்றில் முதல் முறையாக ஒரு இந்திய திரைப்படமாக, கேன்ஸில் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றுள்ளது. நமது பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஜி, கேரளா மற்றும் பல மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பல முன்னணி திரையுலகப் பிரபலங்கள் #PayalKapadia பாயல் கபாடியா மற்றும் படத்தில் பங்குகொண்ட நடிகர்களான கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, ஹிருது ஹாரூன், சாயா கதம் மற்றும் அஜீஸ் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில், ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படத்தின் நடிகர்களில் ஒருவரான ஹிருது ஹாரூன் இது குறித்து கூறுகையில்… இயக்குநர் #PayalKapadia, தயாரிப்பாளர்கள் மற்றும் குழுவினர், எனக்கு வழிகாட்டியாக விளங்கிய அனைவருக்கும், ஆதரவு மற்றும் வாழ்த்துக்களை…
Read Moreஇசை வெளியீடு மேடையை இசையால அலங்கரித்த ஸ்ருதிஹாசன்
இசைக் கலைஞரும், முன்னணி பாடகியும், முன்னணி நட்சத்திர நடிகையுமான ஸ்ருதிஹாசன் அண்மையில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, அவருடைய தந்தை கமல்ஹாசனை கொண்டாடும் விதமாக அவரது ஹிட்டான பாடல்களை தொகுத்து ஒரு இசை நடன நிகழ்வை அரங்கேற்றினார். ஸ்ருதிஹாசன் தனது தந்தையின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாடல்களை, தொகுத்து அதை தன் இசை மற்றும் நடனத்தால் மெருகேற்றி பார்வையாளர்களை கவர்ந்தார். அவரது குழுவுடன் அவர் இணைந்து பாடி நடனமாடியது.. இசை வெளியீட்டு விழாவை மேலும் மிளிரச் செய்தது. இந்த தருணத்தை தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக, காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில் ஸ்ருதிஹாசன் தன் தந்தை கமல்ஹாசனின் பாதங்களை தொட்டு வணங்கி அவரது ஆசீர்வாதத்தை பெறுகிறார். அதே தருணத்தில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசனை ஆரத்தழுவி…
Read Moreஇயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்ட பயமறியா பிரம்மை பட பர்ஸ்ட் லுக்
புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், தயாரிப்பாளரும், தமிழ் திரையுலகின் படைப்புலக ஆளுமையுமான பா. ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நந்தா- வி. பிரவீண் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். சதீஷ் கலை இயக்கத்தை கவனிக்க, படத்தின் படத்தொகுப்பு பணிகளை அகில் பிரகாஷ் மேற்கொண்டிருக்கிறார். ஒலி வடிவமைப்பை விஜய் ரத்னமும், ஒலி கலவையை…
Read Moreசெஃப் கௌசிக்கின் இணையற்ற உணவுத்தயாரிப்பை மறுஉருவாக்கம் செய்யும் முனைப்பில் ஹோம் குக்ஸ்!
மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சி அதன் மாபெரும் இறுதி நிகழ்வை நோக்கி மிக நெருக்கமாக நகர்ந்து வரும் நிலையில், எதிர்கொள்கின்ற சவால்கள் வெறுமனே கடுமையானதாக மட்டும் மாறவில்லை; முழு மூச்சுடன் இப்போட்டியில் பங்கேற்கும் ஹோம் குக்ஸ், திறனை வளர்த்துக் கொள்பவர்களாகவும் தங்களை மாற்றிக்கொண்டு வருகின்றனர். இந்த அரையிறுதிப் போட்டி வாரமானது, பரபரப்பிற்கு பஞ்சமில்லாத நிகழ்வாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சியின் மதிப்பிற்குரிய நடுவர் செஃப் கௌசிக் சங்கர் தீர்மானித்திருக்கின்ற பிரஷர் டெஸ்ட் இந்த வாரம் நடைபெற்றதால், ஆர்வமும், பரபரப்பும் உச்சத்தை தொட்டதில் வியப்பில்லை. இந்த கடுமையான பிரஷர் டெஸ்ட்டில், செஃப் கௌசிக் அவர்களின் முத்திரை பதித்த சமையல் தயாரிப்பான “மேட் செஃப் ஆன் ய பிளேட்” என்பதனை அதேபோல மறுஉருவாக்கம் செய்யும் மிகக் கடுமையான சவாலை ஹோம் குக்குகள் எதிர்கொண்டனர். ஆனால்,…
Read Moreமகளையும் பேத்தியையும் சந்திக்க செல்லும் அமண்டாவின் பயணம் தான் Calcutta I’m Sorry
Calcutta I’m Sorry Banner- Pepper Watcher Productions Multiple Sclerosis, என்பது ஒரு விசித்திரமான நோயாகும். இது முதுகுத் தண்டு மற்றும் மூளையின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இது தனிநபரின் வாழ்க்கையை மிகக் கடுமையான அளவிற்கு பாதிக்கிறது. ஒரு சிலர் மட்டுமே நிலைமையை ஏற்றுக்கொண்டு முன்னேறுகிறார்கள். Multiple Sclerosis Society of India பாதிக்கப்பட்டவர்களுக்கு மகத்தான சேவையை செய்து வருகிறது, மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த எல்லா முயற்சியையும் எடுக்கிறது; பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குகிறது! மிகவும் பாராட்டப்பட்ட திரைப்படமான Calcutta I’m Sorry, Harry MacLure திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. Conoor – இல் இசை ஆசிரியையாகப் பணிபுரியும் Amanda Wright என்ற ஆங்கிலோ-இந்தியப் பெண்ணுக்கு Multiple Sclerosis இருப்பது கண்டறியப்பட்டது. ! Multiple Sclerosis நோயினால் பாதிக்கப்பட்ட அத்தகைய நபர்கள்…
Read Moreடிஸ்னி ஹாட் ஸ்டாரில் புதிய வடிவில் பாகுபலி
பாகுபலி மற்றும் மகிழ்மதி உலகில் கேள்விப்படாத, கண்டிராத மற்றும் சாட்சியமில்லாத பல நிகழ்வுகளும் கதைகளும் உள்ளன. டிஸ்னி + ஹாட்ஸ்டாரும் கிராஃபிக் இந்தியாவும் சமீபத்தில் இந்திய ரசிகர்களின் விருப்பத்திற்குரிய திரைப்பட ஃப்ராஞ்ச்சைஸான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸின் ‘பாகுபலி: கிரீடம் ஆஃப் ப்ளட்’ என்ற அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்தின. இது பாகுபலியும் பல்வாழ்தேவனுவும் கைகோர்த்து மாபெரும் சாம்ராஜ்யம் மகிஸ்மதியையும் அதன் சிம்மாசனத்தையும் அதன் மிகப்பெரிய அச்சுறுத்தலான, மர்மமான போர்வீரன், ரக்ததேவனிடமிருந்து பாதுகாக்கும் கதையாகும். கிராஃபிக் இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் தயாரிப்பான பாகுபலி: கிரௌன் ஆஃப் ப்ளட், தொலைநோக்குப் பார்வையுள்ள S.S. ராஜமௌலி, ஷரத் தேவராஜன், ஷோபு யார்லகட்டா ஆகியோரால் தயாரிக்கப்பட்டது, ஜீவன் ஜே. காங், நவின் ஜான் ஆகியோரால் இயக்கித் தயாரிக்கப்பட்டது. பெரிதும் விரும்பப்படும் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேசுவது அதற்கே உரிய சவால்களைக் கொண்டதாகும். அத்தகைய ஒரு பாத்திரமான…
Read Moreதெருக்கூத்து கலைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் பெற்றுத்தந்த இயக்குநர் சங்ககிரி ராச்குமார்
கடந்த சில வருடங்களுக்கு முன் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘வெங்காயம்’ திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது. இயக்குநர் சங்ககிரி ராச்குமார் இயக்கிய இப்படத்தில் தெருக்கூத்து கலை பிரதான இடம் பிடித்திருந்தது. பாரம்பரிய தெருக்கூத்து குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர் என்பதால், தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை இதில் அழுத்தமாக சொல்லி இருந்தார் இயக்குநர் சங்ககிரி ராச்குமார். மேலும் அதனை மெருகேற்றி முதன்முதலாக கம்போடியா அங்கோவார்ட் கோயில் முன்பாக நிகழ்த்தி அந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது இருப்பினும் கோவில் திருவிழாக்களில் மட்டுமே நடத்தப்படுகிற கலையாக இல்லாமல் இன்னும் பெரிய அளவில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் இந்த கலை சென்று சேரவேண்டும் என விரும்பினார் இயக்குநர் சங்ககிரி ராச்குமார். அந்தவகையில் தமிழ்நாடு அறக்கட்டளையின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவை சிறப்பாக கொண்டாடும் நோக்கில் ஒரு…
Read More6 மொழிகளில் 100 மில்லியன் பார்வைகள் பெற்று சாதனை படைத்த புஷ்பா 2 பாடல்
இந்திய சினிமா ரசிகர்களின் அபிமான ஜோடி புஷ்பா & ஸ்ரீவள்ளி இருவரும் ’புஷ்பா2’ படத்தில் இருந்து ‘தி கப்புள் சாங்க்’ என்ற அழகான பெப்பி பாடலான ‘சூசேகி’யுடன் வந்துள்ளனர்! தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜூன் புஷ்பாராஜாகவும், சார்மிங் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளியாகவும் நடித்திருக்கும் ‘புஷ்பா 2’ படத்தில் இருந்து ‘தி கப்புள் சாங்’ என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. முதல் சிங்கிள் ‘புஷ்பா புஷ்பா’ பாடலும் படத்தின் டீசரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது சிங்கிளும் ரசிகர்களைக் கவந்துள்ளது. இந்த வீடியோ பாடல் படத்தின் பிரம்மாண்ட செட்டில் இருந்து எப்படி உருவாகிறது என்ற காட்சிகளோடு வெளியாகியுள்ளது. இது நிச்சயம் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவத்தைக் கொடுக்கும். இந்த காட்சிகளில் படக்குழுவினரிடையே இருக்கும் நட்பும் தெளிவாக தெரிகிறது. மேஸ்ட்ரோ இயக்குநர் சுகுமார் இந்த பாடலை படமாக்குவதையும், மற்ற…
Read More
