சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

நடிகர் செளந்தரராஜா, தன்னுடைய மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மரங்கள் நடுதல், ஏரி மற்றும் குளங்களை தூர்வாருதல், தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கடந்த இரு வாரங்களாக மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் வடபழனி மற்றும் விருகம்பாக்கம் பகுதிகளில் உள்ள சாலையோரங்கள் மற்றும் தெருக்களில் வளர்க்கப்பட்டு வரும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும்…

Read More

மாண்புமிகு இந்தியத் துணைத் குடியரசுத் தலைவருக்கு திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பு

தனது இலக்கியப் படைப்புகள் மற்றும் திரைப்படக் கல்விக் கொள்கை முன்மொழிவைப் பாராட்டிய மாண்புமிகு இந்தியத் துணைத் குடியரசுத் தலைவருக்கு திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பு சென்னை — இந்தியத் துணைத் குடியரசுத் தலைவரிடமிருந்து வரப்பெற்ற அதிகாரப்பூர்வ பாராட்டுச் கடிதத்தையடுத்து, தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநரும் சமகாலக் கவிஞருமான சீனு ராமசாமி தனது ஆழமான நன்றியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். துணைத் குடியரசுத் தலைவர் தனது அதிகாரப்பூர்வ கடிதத்தில், கலை, சமூகம் மற்றும் இலக்கிய உலகிற்கு இயக்குநர் சீனு ராமசாமி ஆற்றிவரும் பன்முகப் பங்களிப்பைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, அவரது ‘சில பூக்கள்’ கவிதையை வெகுவாகப் புகழ்ந்துள்ள அவர், எவ்விதப் புகழையோ அங்கீகாரத்தையோ எதிர்பாராமல், தங்களது நற்செயல்களால் நறுமணம் பரப்பி, அமைதியான தார்மீகக் குணத்துடனும் சுயநலமின்றியும் வாழும் மனிதர்களை இக்கவிதை…

Read More

மாகிபூரில் வகுப்புகள் தொடங்கினாலும் கேள்விகள் பாடத்திட்டத்திற்கு அப்பால் உள்ளது!

காலை வணக்கம், மாணவர்களே! செய்தி தெரியுமா? மாகிபூருக்கு ஒரு புதிய ஆசிரியர் வருகிறார்! *15 ஜூன் 2026:* மணி அடிக்கும் முன்பே ஒரு கேள்வி மாகிபூர் முழுவதும் பேசுபொருளாகும் சுப்பு சாரின் வகுப்புக்கு உங்களை வரவேற்கிறோம். இயக்குநர் மாலிக் ராம் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சந்தீப் கிஷன், மிதிலா பால்கர் மற்றும் முரளி ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர். ‘சூப்பர் சுப்பு’ ஜூலை 2 அன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’, சுப்பிரமணியம் சில்லுகுரி ராவ் (சுப்பு) என்ற நேர்மையான இளைஞரின் வாழ்க்கையை காட்டுகிறது. மாகிபூர் என்ற கிராமத்தில் செக்ஸ் எஜூகேஷன் ஆஃபிசராக வேலை கிடைத்ததும் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. அனுபவமின்றி பாடத்திட்டத்தையும், கிராம மக்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்ற சூழலில் அங்கு செல்கிறார் சுப்பு. ஆனால் ஆர்வம்,…

Read More

ஃபீல் குட் படமான ‘சின்ன சின்ன ஆசை’யில் தம்பி ராமையா, காளி வெங்கட் சுவாரசியமான வேடங்களில் நடிக்கின்றனர்

பாபுஜி புரொடக்ஷன்ஸ் பேனரில் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமான ‘சின்ன சின்ன ஆசை’ திரையரங்குகளில் ஜுன் 19 அன்று வெளியாகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் ஜூன் 19 அன்று தமிழகம் எங்கும் வெளியிடுகிறது. காசி நகரில் எதிர்பாரா விதமாக சந்திக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் தருணங்களை உணர்வுப்பூர்வமாக திரையில் காட்டும் ‘சின்ன சின்ன ஆசை’ படத்தில் பிரபல மலையாள நடிகரும் சமீபத்தில் ‘கருப்பு’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவருமான இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா மற்றும் சாய் ஜனனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஃபீல் குட் படமான ‘சின்ன சின்ன ஆசை’யில் இதுவரை ஏற்றிராத பாத்திரத்தில் இந்திரன்ஸ் மற்றும் மதுபாலா நடிக்க,…

Read More

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி. அந்த வகையில், ஒவ்வொரு படத்திற்கும் அதன் தன்மைக்கு ஏற்ற இசையை வழங்கி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளவர் இசையமைப்பாளர் சாம் CS. நேற்று வெளியாகியுள்ள இரண்டு வித்தியாசமான திரைப்படங்களான “ஹபிபீ” மற்றும் “டபுள் ஆக்குபன்ஸி” படங்கள், சாம் CS-ன் இசை திறனின் இரண்டு வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்தியுள்ளன. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள “ஹபிபீ”, மனித உணர்வுகள், வலி, நம்பிக்கை மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை இன்னும் ஆழமாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், மனதை வருடும் இசையையும் உணர்வுப்பூர்வமான பின்னணி இசையையும் சாம் CS வழங்கியுள்ளார். காட்சிகள் முடிந்த பிறகும் அதன் தாக்கம்…

Read More

‘அறுவடை’ படப்பிடிப்பு நிறைவு மகிழ்ச்சியில் பிறந்தநாள் கொண்டாடிய தயாரிப்பாளர்!

ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் கொண்டாடும்போது மகிழ்ச்சியான மனநிலை வேண்டும்.ஏதோ ஒரு காரியத்தை செய்து முடித்து ஏதோ ஒரு நல்ல செயல் நிறைவு பெற்ற அந்த திருப்தியும் நிறைவும் இருந்தால் அந்த பிறந்தநாள் கொண்டாட்ட மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிடும்.அப்படி இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் தயாரிப்பாளர் M.கார்த்திகேசன். ‘லாரா’ திரைப்படத்தைத் தயாரித்த இவர், தொடர்ந்து எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் இரண்டாவது தயாரிப்பாக ‘அறுவடை’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். ஒரு தயாரிப்பாளராக நடிகராக அறிமுகமான M. கார்த்திகேசன் முதன் முறையில் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கத்தில் உருவாகும் இந்த ‘அறுவடை’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக அவரே நடிக்க, அவருடன் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு பிரேம்குமார்…

Read More

அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

அபிஷேக் நாமாவின் பிரம்மாண்டமான கனவுத் திரைப்படமான “நாகபந்தம்” ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது. NIK ஸ்டூடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்துள்ள இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வாக, ஹைதராபாத்தில் அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையை படக்குழுவினர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய நாயகன் விராட் கர்ணா, கனமழையையும் பொருட்படுத்தாமல் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். “கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் முழுக்குழுவும் இந்தப் படத்திற்காக இடைவிடாமல் உழைத்துள்ளது. ஜூலை 3ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து, இந்த நிகழ்வுக்கு நீங்கள் வழங்கிய அதே அன்பையும்  ஆசீர்வாதத்தையும் எங்கள் படத்திற்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன். இந்த ரதயாத்திரையின் ஒரு பகுதியாக பல நகரங்களுக்கு பயணம் செய்ய…

Read More

மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!

மதுரையின் மண்ணில் பிறந்து வளர்ந்த ஈசா, விளையாட்டு உலகில் சாதனைகள் படைத்த இளைஞராக இருந்து தற்போது தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள “ஹபீபி” திரைப்படம் மூலம் அவர் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். சிறுவயதிலிருந்தே தடகளப் போட்டிகளில் தீவிர ஆர்வம் கொண்ட ஈசா, தமிழ்நாடு மாநில அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும் சென்னை கல்லூரி வாழ்க்கையில் உயரம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் போட்டிகளில் பல இடைக்கல்லூரி தங்கப் பதக்கங்களை கைப்பற்றி, இந்திய அளவிலான பல்கலைக்கழகப் போட்டிகளிலும் தொடர்ந்து இறுதிச்சுற்றை எட்டியுள்ளார். விளையாட்டுத் துறையில் பெற்ற ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் மன உறுதியுடன் சினிமா துறையிலும் தனது பயணத்தைத் தொடங்கிய ஈசா, நடிகர் அமீர் நடித்த இயக்குநர் ஆதம் பாவா இயக்கிய…

Read More

‘கருடன்’, ‘மாமன்’ போன்ற தரமான வெற்றிப்படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜீவா தற்போது மதுரை மண்ணின் மண்வாசனையை மையமாகக் கொண்ட ஒரு புதிய கதையில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் இயக்குகிறார். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், அப்பா – மகன் உறவின் உணர்வுகளையும், அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்டு உருவாகிறது. குடும்ப உறவுகளின் ஆழத்தையும், வாழ்க்கையின் நுணுக்கமான உணர்வுகளையும் பேசும் இந்தக் கதை, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கே. குமார் தயாரிக்கிறார். ஒளிப்பதிவை பிரபல ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை கணேஷ் சிவா மேற்கொள்கிறார். அனுபவம் மிக்க தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகும் இந்த திரைப்படம்,…

Read More

சாம் சி.எஸ். இசையில் மீனாட்சி இளையராஜா பாடல் வரிகள் மற்றும் குரலில் உருவாகியுள்ள ‘ராசாதி ராசா’ பாடலை சோனி மியூசிக் வெளியிட்டுள்ளது

பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ திரைப்படங்களுக்கு பிறகு ‘கராத்தே பாபு’ திரைப்படத்திற்காக  மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ளது.. சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கும் பரபரப்பான அரசியல் கதையான ‘கராத்தே பாபு’ படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘ராசாதி ராசா’ இன்று வெளியிடப்பட்டது. ‘கராத்தே பாபு’ படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ள சோனி மியூசிக் நிறுவனம் சாம் சி.எஸ். இசையில், மீனாட்சி இளையராஜா பாடல் வரிகள் மற்றும் குரலில் உருவாகியுள்ள ‘ராசாதி ராசா’ பாடலை வெளியிட்டுள்ளது. அழுத்தமான அரசியல் பாடலாக இது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்படத்தின் இதர…

Read More