டிஜிட்டலில் வெளியாகி வசூலை அள்ளும் விஜயகாந்த் நடித்த மாநகர காவல் .!  

விஜயகாந்த் உதவி கமிஷனராக நடித்த ” மாநகர காவல் ” திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்து 1991 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ரிலீஸ் செய்தது. இதில் நம்பியார், சுமா ரங்கநாத், நாசர் , லட்சுமி, ஆனந்தராஜ் , ஆகியோர் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். எம். தியாகராஜன் டைரக்ட் செய்திருந்தார். மாநகர காவல் திரைப்படம் அன்று 25 வாரங்கள் திரையரங்குகளில் ஓடி வசூலில் சாதனை படைத்தது. 32 வருடங்கள் கடந்த பின் குரு ராஜா இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் திரையிட ஏவிஎம் நிறுவனத்திடமிருந்து உரிமை பெற்று கடந்த வாரம் ரிலீஸ் செய்தது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள குறிப்பிட்ட திரையரங்குகளில் டிக்கட் கட்டணத்தை குறைத்து திரையிட்டனர். டிக்கட் கட்டணம் குறைந்து இருந்ததால் மக்களிடம் படம் பார்க்கும் ஆர்வம் அதிகரித்து திரையிட்ட தியேட்டர்களில்…

Read More

ஏபிசி டாக்கீஸ் நிறுவனத்தின் பிராந்திய விளம்பரத் தூதர் சாக்ஷி அகர்வால்

சுயாதீன திரைப்பட இயக்குனர்களுக்கு ஆதரவளிக்கும் வெளிப்படையாக அணுகக் கூடிய ஓடிடி (OTT) திரைப்பட ஸ்ட்ரீமிங் தளமான ஏபிசி டாக்கீஸ், முன்னணி நடிகையும் மாடலுமான சாக்ஷி அகர்வாலை தனது ஆலோசனைக் குழுவில் இணைத்துக் கொண்டதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இதற்கு மேலாக, சாக்ஷி அகர்வால் பிராந்திய விளம்பரத் தூதராகவும் செயல்படுவார், இளம் திறமைகளை ஆதரிக்க ஏபிசி டாக்கீஸ் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல் படுவதை மேலும் வலுப்படுத்துவார். தென்னிந்திய திரைப்படத்துறையில் பிரபலமான நடிகையும் மாடலுமான சாக்ஷி அகர்வால், பல்வேறு திறமைகளைக் கொண்டவர். அவர் ஆலோசனைக் குழுவில் இணைந்தது, சினிமாவில் படைப்பாற்றல் மற்றும் புதுமையை ஊக்குவிக்க ஏபிசி டாக்கீஸ் முன்னணி தொழில்முனைவோர்களுடன் இணைந்து செயல்படும் எண்ணத்தை பிரதிபலிக்கிறது. இரட்டை பதவியில், சாக்ஷி அகர்வால் ஏபிசி டாக்கீஸ் நிறுவனத்திற்குத் தூரநோக்கு வழிகாட்டியாக இருந்து அதன் திட்டங்கள் மற்றும் முயற்சிகளை வடிவமைக்க உதவுவார். கேளிக்கை துறையில்…

Read More

‘கியாரா கியாரா’ தமிழ் மற்றும் தெலுங்கில் செப்டம்பர் 20 முதல் ZEE5 இல் !!!

~ கரண் ஜோஹர் மற்றும் குனீத் மோங்கா தயாரிப்பில் உருவான, “கியாரா கியாரா” சீரிஸில், ராகவ் ஜூயல், கிருத்திகா கம்ரா மற்றும் தைர்யா கர்வா ஆகியோர் நடித்துள்ளனர் ~ ZEE5 தளத்தில் வெளியான கியாரா கியாரா சீரிஸ் பெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த சீரிஸின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப்பதிப்புகளை வெளியிட்டுள்ளது. கிருத்திகா கம்ரா, ராகவ் ஜூயல் மற்றும் தைரிய கர்வா ஆகியோரின் நடிப்பில், வித்தியாசமான கதைசொல்லல் மற்றும் தனித்துவமான நடிப்பிற்காகக் கொண்டாடப்படும், இந்த அற்புத சீரிஸ், தற்போது அதன் பல மொழி வெளியீட்டின் மூலம், புதிய பார்வையாளர்களை வசீகரிக்கத் தயாராக உள்ளது. குனீத் மோங்கா கபூரின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் கரண் ஜோஹரின் தர்மா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், திறமை மிகு இயக்குநர் உமேஷ் பிஸ்ட்டால் இயக்கத்தில், உருவான ‘கியாரா கியாரா’ ஏற்கனவே…

Read More

சமுத்திரக்கனி நடிக்கும் ‘திரு.மாணிக்கம்’

சமீபகாலமாக தமிழ் சினிமா சந்தித்திருக்கும் மாபெரும் ஒரு சவால்தான் OTT மற்றும் SATELLITE வியாபாரம். கடந்த வருடங்கள் போல் இல்லாமல் மிகக் கடினமான சூழ்நிலையில் தமிழ்த் திரைப்படங்கள் இந்த வியாபாரத்தில் போராடிக் கொண்டிருக்கிறது. ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய பிறகே OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம் முடிவாகும் என்ற சூழல் இப்போது உருவாகியுள்ளது. இந்த காலக் கட்டத்தில் திரைக்கு வரும் முன்னரே திரு.மாணிக்கம் திரைப்படத்தை பார்த்து இதயம் கரைந்து இந்தப் படம் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற படமாகவும் மனதை நெகிழவைக்கும் படமாகவும் இருக்கும் என்பதை உணர்ந்து ஜீ தமிழ் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் OTT மற்றும் SATELLITE உரிமையை வாங்கி உலகமெங்கும் வெளியிடவிருக்கிறார்கள்… மிக விரைவில் வெள்ளித் திரைக்கு வரவிருக்கிற திரு.மாணிக்கம் படத்தில் சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனன்யா, நாசர், தம்பி ராமையா, இளவரசு, ஸ்ரீமன், வடிவுக்கரசி,…

Read More

‘All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

பாயல் கபாடியாவின் ’ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் செப்டம்பர் 21, 2024 முதல் கேரளாவில் குறிப்பிட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இப்படம் இந்திய திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறையாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படம் வரலாறு படைத்தது. அங்குள்ள மதிப்புமிக்க கிராண்ட் பிரிக்ஸை வென்ற முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை இது பெற்றது. ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இந்தப் படத்தின் இந்திய விநியோக உரிமையைப் பெற்றுள்ளது. ஜிகோ மைத்ரா, சாக் அண்ட் சீஸ் பிலிம்ஸ் மற்றும் ரணபீர் தாஸ், அனதர் பர்த் ஆகிய படங்களைத் தயாரித்தவர்களே இந்தப் படத்தையும் தயாரித்துள்ளனர். இந்த படம் வரும் வாரத்தில் இந்திய மொழிகளில் ஒன்றான மலையாளத்தில் வெளியாகிறது. கேரளாவில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே படத்தை…

Read More

ARR ஃபிலிம் சிட்டி – சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

முழுமையான தொழில்நுட்பப்பணிகளை வழங்கும் மெய்நிகர் தயாரிப்புக்கூடமான uStream, சென்னை ARR ஃபிலிம் சிட்டியில் தன் புத்தெழுச்சியான பயணத்தைத் 22nd September 2024 அன்று தொடங்குகிறது. ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் மற்றும் தொழில்துறை முன்னோடி ஸ்ரீதர் சந்தானம் கூட்டணியில் uStream உருவாகிறது. இந்திய சினிமாவின் புதிய யுகத்தை வரவேற்க வழிவகுப்பதாய் இது வடிவம் எடுத்திருக்கிறது. வியப்பூட்டும் LED திரை அமைப்புகள் கொண்ட இந்த ஸ்டூடியோவில், கலைஞர்கள் கணினி காட்சியமைப்புகளுடன் கற்பனை செய்ததை, நேரடியாக அந்தக்கணத்திலேயே கண் முன் காட்சிப்படுத்த முடிகிறது. இந்த நவீன டிஜிட்டல் நுட்பத்தைக் உலகப்பதிவுகள், அக்கணத்தின் கற்பனைக்காட்சிப்படுத்துதல், செயல்திறன் பதிவு, பல மெய்நிகர் காட்சிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் simulcam நுட்பம், கேமராவினுள்ளேயே செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் (ICVFX) கொண்டு உலகின் மெய்நிகர் தயாரிப்புத்துறையில் முன்னணியில் இருக்கிறது uStream. நவீன அம்சங்கள் மற்றும் விரிவுபடுத்தக்கூடிய…

Read More

ஜாக்கி சான் நடிக்கும் ‘எ லெஜன்ட்’ (‘தி மித் 2’) திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது

உலகெங்கும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருப்பவர் ஜாக்கி சான். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரது சமீபத்திய ‘எ லெஜன்ட்’ (‘தி மித் 2’) திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் விரைவில் வெளியிடுகிறது. ஸ்டான்லி டாங் இயக்கியிருக்கும் இத்திரைப்படம், ‘தி மித்’ சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். பரபர சண்டைகள், விறு விறு சாகசங்கள், உள்ளத்தை தொடும் உணர்வுகள், கற்பனைக்கு எட்டாத காட்சிகள் என கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜாக்கி சான், லே சாங், நா ஜா, ஆரிஃப் லீ, லி சென், பெங் சியோவ்ரான் மற்றும் ஜெங் யெச்சென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் தற்கால அகழ்வாராய்ச்சி நிபுணர் மற்றும் முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இளம்…

Read More

எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் ‘#நானிஓடெல்லா 2’

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில், எஸ் எல் வி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் ‘#நானிஓடேலா 2’ படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது . ‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் தனித்துவமான நடிப்பால் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். ‘#நானிஓடேலா 2 ‘ அறிவிப்பு மூலம் மீண்டும் இருவரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். ‘தசரா’ படத்தின் மூலம் நூறு கோடிக்கு மேல் வசூலித்த வெற்றி கூட்டணியான நானி- ஓடேலா மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ‘தசரா’ படத்தை விட மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் என உறுதியளிக்கும் வகையில் புதிய திரைப்படத்தில் இந்த இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். குறிப்பாக ‘தசரா படத்தினை விட நூறு மடங்கு அதிகமாக பார்வையாளர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய படம் உருவாகும்’ என…

Read More

அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி ‘பேச்சி’ வெளியாகிறது!

அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி இயக்கத்தில், வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் வெருஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், பாலசரவணன், காயத்ரி, தேவ் ராம்நாத் ஆகியோரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ’பேச்சி’ வித்தியாசமான கதைக்களம் மட்டுமின்றி மாறுபட்ட கோணத்தில் சொல்லப்பட்ட திகில் ஜானரால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. திரையரங்குகளில் இரவுக் காட்சிகள் கூட ஹவுஸ் புல்லாகும் அளவுக்கு ‘பேச்சி’ திரைப்படம் மக்களிடம் வரவேற்பு பெற்றதோடு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்த படமாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்று 25 நாட்களை கடந்து ஓடிய ‘பேச்சி’ விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. படம் வெளியாவதற்கு முன்னரே திரையிடப்பட்ட சிறப்பு காட்சியில் படம் பார்த்த பத்திரிகையாளர்கள் இயக்குநர் ராமச்சந்திரன்.பி அவர்களை மட்டுமின்றி ஒளிப்பதிவாளர்,…

Read More

நிதிக்குற்றத்தை சொல்லும் பான் இந்திய ஃபைனான்ஸியல் திரில்லர் திரைப்படம் “ஜீப்ரா” !!

ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜீப்ரா”. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் 2024 அக்டோபர் 31 ஆம் தேதி பான் இந்திய வெளியீடாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகிறது. தமிழில் முதல் ஓடிடி திரைப்படமான பெண்குயின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான திரில்லர் திரைப்படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். ZEE தமிழ் தொலைக்காட்சியில், பெரும் வெற்றிபெற்ற “செம்பருத்தி” சீரியலின் தயாரிப்பாளர்கள், தங்களது முதல் திரைப்படமாக இப்படத்தினை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். அரசின் அதிகாரமிக்க உலகில் நிகழும், நிதிக்குற்றங்களை ஆராயும் இப்படத்தின் கதைக்களம், ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்.…

Read More